நீங்க நான் வெஜ் பார்ட்டியா?
இல்ல ப்யூர் வெஜிடேரியனா?
இல்ல ரெண்டுமே சாப்பிடறவங்களா?
அப்ப மேல படிங்க... ஹி... ஹி... இதை தவிர வேற கேட்டகிரியே இல்லைனு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது. நமக்கு எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க நல்லா வரும். அதைதான் பண்றேன்.
சரி சரி... கமிங் டு த பாயிண்ட்... ஃபிஷ் ஃப்ரை மாதிரியே வெஜிடேரியன்ல எப்படி பண்றதுனு என் ஆபிஸ்ல வேல செய்யற ஒரு பொண்ணு சொல்லிக் குடுத்தா. அதை நான் ரெண்டு தடவை சக்சஸ்ஃபுலா செஞ்சுட்டேன். அதான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் தான் நம்ம கொள்கைனு உங்களுக்கே தெரியுமில்ல... ஹி... ஹி...
ஓகே... இனி வெஜிடேரியன் ஃபிஷ் ஃப்ரை செய்யற செய்முறை.
தேவையான பொருட்கள்:
பச்சைக் கலர்ல வாழைக்காய் - உங்களுக்கு வேணுங்கிற அளவு
உப்பு - இதுவும் உங்களுக்கு வேணுங்கிற அளவு
மிளகாய் பொடி - இதுவும் உங்களுக்கு வேணுங்கிற அளவுதானுங்க
இந்த வாழைக்காய்க்கும் மீனுக்கும் ரொம்ப ஒற்றுமை இருக்கு. வாழைக்காய் எப்படி ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி லைட்டா தோல் சீவறோமோ அதே மாதிரி மீனையும் தலையும் வாலும் கட் பண்ணி செதில் சீவுவோம். இந்த ஒற்றுமையே சாமுராய் படத்துல விக்ரம் நாசரோட மனைவிக்கு சொல்லித் தந்தப்போதான் எனக்கும் தெரிஞ்சது. ஓ மை காட்! செய்முறை சொல்ல வந்துட்டு எங்கேயோ போயிட்டேன். சாரி சாரி...
செய்முறை:
வாழைக்காய நல்லா கழுவிட்டு ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி தூக்கி டஸ்ட் பின்ல போட்டுடுங்க. அப்றம் வாழைக்காய அப்டியே ரவுண்டு ரவுண்டா கட் பண்ணிக்கங்க. ரொம்ப ஸ்லைஸா வேணாம். அதுக்காக ரொம்ப மொத்தமாவும் வேணாம். கட் பண்ணினத எல்லாம் எடுத்து குக்கர்லப் போட்டு தண்ணி ஊத்தி கொஞ்சம் சால்ட் போட்டு அடுப்புல வச்சு மூணு விசில் விடுங்க. ப்ரெஷர் அடங்கினதும் எடுத்து தண்ணிய வடிச்சுட்டு ஒரு தட்டுல பரப்பி ஃபேன்க்கு அடில வச்சு நல்லா ஈரம் ஆற விடுங்க. அப்றம் மிளகாய் பொடியோட சால்ட், தண்ணி கலந்து அந்த வாழைக்காய் துண்டு ஒவ்வொண்ணுலயும் ரெண்டு பக்கம் தடவி மறுபடியும் தட்டுல பரப்பி ஈரம் காய விடுங்க. ஈரம் காயலைனா நிறைய எண்ணை இழுக்கும். ஈரம் காய்ஞ்சதும் எடுத்து தோசைக்கல்ல கொஞ்சம் நல்லா எண்ணை விட்டு அதுல போட்டு பொரிச்சு எடுங்க. அப்றம் தட்டுல அழகா அடுக்கி உங்களுக்கு தெரிஞ்ச டெக்கரேஷன் எல்லாம் செஞ்சு சர்வ் பண்ணுங்க. சுவையான வெஜிடேரியன் ஃபிஷ் ஃப்ரை ரெடி.
Value added: மிளகாய் தூள் உப்போட கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்தும் பண்ணலாம்.
வாழைக்காய் ரவுண்ட் ரவுண்டா கட் பண்ணி செஞ்சா ரொம்ப நேரம் எடுக்குதேனு வருத்தப்படற என்னைய மாதிரி சுடு சோம்பேறிங்களுக்காக: வாழைக்காய் பஜ்ஜிக்கு சீவற மாதிரி நீளமாவும் சீவிப் போடலாம்.
புரட்டாசி மாசம், அமாவாசை அந்த நாளு இந்த நாளுன்னெல்லாம் சாப்பிட முடியாம கஷ்டப்படறவங்களுக்காக என்னுடைய இந்தப் பதிவு சமர்ப்பணம். சீக்கிரம் வெஜிடேரியன் சில்லி சிக்கனோட வரேன்.
பி.கு: ஒரு குடும்ப ஸ்தீரியா மாறிட்ட தேஜஸ் என் பதிவுல தெரியுதானு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க மக்கா... :)))
Wednesday, October 15, 2008
ஃபிஷ் ஃப்ரை பிரியர்களுக்கு - சைவம்
Posted by இம்சை அரசி at 12:23 PM
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
குறிப்பு பலமா இருக்கு.. செய்திவிட வேண்டியது தான்.. நன்றி.
நல்லா இருக்கு.
நானும் செஞ்சி பாத்திருக்கேன்.
சீக்கிரமா சைவ சிக்கனோட வாங்க.
காத்திட்டு இருக்கேன்.
ஒளிர்ஞர்
//பி.கு: ஒரு குடும்ப ஸ்தீரியா மாறிட்ட தேஜஸ் என் பதிவுல தெரியுதானு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க மக்கா... :)))//
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடாஇத்
குவளையுண் கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்
றெண்ணுதன் முகனே"
:)
கோனார் நோட்ஸ் இங்கே - http://kaipullai.blogspot.com/2008/02/blog-post_12.html
ஆமா...உங்க ரெண்டு பேருல யாரு சைவம்? குடும்ப ஸ்திரீயா? இல்ல குடும்ப புருஷரா?
:)
//வாழைக்காய நல்லா கழுவிட்டு ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி தூக்கி டஸ்ட் பின்ல போட்டுடுங்க. அப்றம் வாழைக்காய அப்டியே ரவுண்டு ரவுண்டா கட் பண்ணிக்கங்க. //
என்ன ல்ஸ்ட் பின்ல இருந்து எடுத்தா???
:-)))...
வாழைக்காய் வறுவலுக்கு இது சூப்பர் பில்டப்பு !!
உங்க சமையல் செய் முறையை விட பில்ட் டப் சூப்பரா இருக்கு! ;)
இன்னும் ஒரு ஐட்டத்த சேர்தீங்கனா இத விட சூப்பரா இருக்கும். என்னுடைய அனுபவத்தில் தெரிஞ்சிகிட்டது.
ஃபிஷ் மசாலானு கடையில விக்கும் (விஜிடேரியன் தாங்க). அதையும் மிளகாய் பொடியோட சேர்த்து தடவி பாருங்க. நிஜமாலுமே ஃபிஷ் ஃப்ரை மாதிரி இருக்கும்.
பி.கு. இது நான்வெஜிடேரியன் மக்களுக்கு மட்டும். :)
பிஷ் ப்ரை பாத்திருக்கேன் சாப்பிட்டதே இல்ல.. செய்துபார்க்கலாமா? இல்ல செய்து சாப்பிடலாமா? :)
//எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க நல்லா வரும். அதைதான் பண்றேன்.//
:)
குக்கர்+dry பண்றதுக்கு பதிலா, microwave பண்ணிடவேன்டியது தானே!
//வாழைக்காய நல்லா கழுவிட்டு ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி தூக்கி டஸ்ட் பின்ல போட்டுடுங்க.
//
பின்ன எப்படி ஃபிஷ் ஃப்ரை செய்றது?
வாழைக்காயை ரவுண்டா கட் செய்றத விட பஜ்ஜிக்கு சீவுறமாதிரி செய்தாத்தான் மீன் பொறியல் மாதிரியே இருக்கும்.
படிச்சா நல்லாத்தான் இருக்குற மாதிரி இருக்கு.. சோதனை செஞ்சி பாத்தாச்சா.. (என்னாது யார்க்கு குடுத்தா? அதுக்குன்னே ஒரு ஜீவன் இருக்கணுமே உங்க வீட்ல.. ஹி..ஹி.. எங்க வீட்ல நாந்தான்).. :)))
நமக்கு எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க நல்லா வரும். அதைதான் பண்றேன்.
Super copy from Jodi No 1 Thivyadharshini.
//ஒரு குடும்ப ஸ்தீரியா மாறிட்ட தேஜஸ் என் பதிவுல தெரியுதானு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க மக்கா... :)))//
நல்லாவெ தெரியுது.
//ஃபிஷ் ஃப்ரை மாதிரியே வெஜிடேரியன்ல எப்படி பண்றதுனு /
அப்போ கேட்டு இருந்தா பதில் "யாராவது செஞ்சா புடிங்கி சாப்பிட்டுக்கொள்ளவும்"னு இருந்திருக்கும்.அதால ஸ்திரீயா மாறிட்டுவர்றது தெரியுது.
ஆனாலும், இதோட ரெசிப்பி தர வேலைய நிப்பாட்டிக்குங்க.
வாழைக்காய் பஜ்ஜிக்கு இப்படி ஒரு பேரா, உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல :-) இருந்தாலும் பரவால ட்ரை பண்ணி பார்க்கிறேன், தேங்க்ஸ்கா.... அப்படியே நல்லா சாம்பார் எப்படி வைக்கறதுன்னு ஒரு பதிவு போடுங்க-க்கா, சொந்த சமையல்,,, உப்புமா, சப்பாத்தி செஞ்சு வெறுத்து போயிட்டேன் .... சாம்பார் பதிவிற்காக காத்திருக்கும்,
- சக்தி :)
//பி.கு: ஒரு குடும்ப ஸ்தீரியா மாறிட்ட தேஜஸ் என் பதிவுல தெரியுதானு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க மக்கா... :)))//
ரொம்பவே தெரியுதுங்க..கிகிகி
\\நீங்க நான் வெஜ் பார்ட்டியா?
இல்ல ப்யூர் வெஜிடேரியனா?//
தெரியலேம்மா...
//என் பதிவுல தெரியுதானு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க மக்கா... :)))
//
ஒ.கே!
லாப்ல எக்ஸ்பரிமெண்ட்ஸ்! ஸ்டார்ட் பண்ணியாச்சா
பாவம் அயித்தான் :)))))))
இம்சை அரசி,
உங்களை சினிமா தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரமிருப்பின் தொடருங்கள்.
http://boochaandi.blogspot.com/
-பூச்சாண்டியார்
நல்ல குறிப்பு. ட்ரை பண்ணிடலாம். :-)
அப்ப மேல படிங்க... ஹி... ஹி... இதை தவிர வேற கேட்டகிரியே இல்லைனு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது. நமக்கு எது நல்லா வருமோ அதைதான் பண்ணனும். நமக்கு பில்ட் அப்புதானுங்க //
இங்கயும் கேம் பிளட் ஹி...ஹி...ஹி...
Ithai saapitavanga ippa eppadi irukaanga nu konjam sonneenga na naangalum senji paathukkuvom la
ஹாய் குடும்ப இஸ்திரி...
அதோட லேசா கொஞ்சம் அரிசி மாவை தூவி வறுத்தா இன்னும் மொறு மொறுப்பு வரும்..
//பி.கு: ஒரு குடும்ப ஸ்தீரியா மாறிட்ட தேஜஸ் என் பதிவுல தெரியுதானு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க மக்கா... :)))
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................ கலக்கிட்ட போ மக்கா...:))))))))))))
எங்க இம்சை அரசியின் சமையல் பரிசோதனைகளுக்கெல்லாம் உட்பட்டு பொறுமை காக்கும் மாப்பிள்ளைக்கு பாராட்டுக்கள்||:)
படித்ததில் பிடித்து .....
வாழைக்காய நல்லா கழுவிட்டு ரெண்டுப் பக்கமும் கட் பண்ணி தூக்கி டஸ்ட் பின்ல போட்டுடுங்க.
in the mathri pagakk kai kethavarangai cheppank kilangu ithuglam pannalam.
like this we can cook in bitter gaurd kethavarangai and cheppank kilangu also
Enga Imsai....
Romba yosippeengalo? I read your samaiyal kuripu.
Unga better half romba pavamungo....!!!!!!
Murali, Nairobi, Kenya.
Hi! imsai arasi your tips is very good.you are jolly women.
நல்லா இருக்கு.
நானும் செஞ்சி பாத்திருக்கேன்.
சீக்கிரமா சைவ சிக்கனோட வாங்க.
காத்திட்டு இருக்கேன்.
by balu
Post a Comment