Thursday, November 6, 2008

அவள் முடிவு சரியானதா?!!

அவள் - ஒரு நல்ல ரசிகை. எதைக் கண்டாலும் ரசிப்பவள். எப்பொழுது பார்த்தாலும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள். அம்மா, அப்பா, தம்பி மற்றும் நல்ல நண்பர்கள் என்று அழகான உலகம் அவளுடையது. புத்தகங்களுக்குள் புதைந்துப் போக விரும்புவாள். அம்மாவின் மடியில் தலை வைத்து அம்மாவுடன் கதை பேசிக் கொண்டே இருக்க ஏங்குவாள். தம்பியுடனான செல்ல சண்டைகளை ரசிப்பாள். உணவு உண்பதை விட தூங்குவதை வாழ்வின் அத்தியாவசிய ஒன்றாக கொண்டவள். எழுத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவள். தனக்கென்று ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து மனம் தளராமல் மொக்கைப் போட்டவள். காதல் கதைகள் ஓரளவு நன்றாக எழுதுபவள். கதை என்ற ஒன்று இல்லாமலே நாலு பாகங்கள் ஐந்து பாகங்கள் என்று எழுதும் அதீத திறனுடையவள். இவ்வாறு ஒன்றுமில்லாமலே வலையுலகில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவள்.



காதல் கவிதைகள், காதல் கதைகள் என்று எழுதி காதலை காதலித்துக் கொண்டிருந்தவளை ஏனோ காதலுக்குப் பிடிக்கவில்லைப் போலும். அவளுக்கு அவள் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவளது அந்த அழகான உலகில் காதல் விதையூன்றினான் அவன். அவளது கனவுகளை அவன் வசம் செய்தான். அவளது ஒவ்வொரு நொடியையும் கொள்ளை கொண்டான். இவ்வாறாக அவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாய் ஆரம்பித்தது. யார் கண்பட்டதோ என்னவோ அவளுக்கு வேலை மாற்றம் கிடைக்கவில்லை. அவள் பெங்களூரிலும். அவன் சென்னையிலும். மூன்று மாதங்கள் இடைவிடாமல் போராடி வேலை மாற்றம் பெற்றாள். அந்த மூன்று மாத இடைவெளியில் நூற்றுக்கணக்கான மைல்கள் அப்பாலிருந்த அவனை எண்ணி எண்ணி சோகத்தில் ஆழ்ந்திருப்பதையே தொழிலாய் கொண்டிருந்ததில் அவளது வலைப்பதிவை கவனிக்க இயலவில்லை. சென்னை வந்ததும் உங்க ஊர் மொக்கை இல்லை. எங்க ஊர் மொக்கை இல்லை. அந்த அளவு படுபயங்கரமாய் மொக்கைப் போட்டுக் குவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னையில் வலது கால் எடுத்து வைத்தாள்.



மறுபடியும் யார் கண்பட்டதோ என்னவோ அவளால் எழுத இயலவில்லை. அவளில் எண்ணவோட்டமே இன்று இரவு டிபன் என்ன செய்யலாம், நாளை காலை என்ன செய்யலாம், வீடு துடைக்க வேண்டுமே, அழுக்குத் துணிக்கூடை நிரம்பி வழிகிறதே, எப்பொழுது துவைப்பது? வாஷிங்மெசினுக்கு கவர் வாங்கிப் போட வேண்டுமே, அடுத்த மாதம் கவிதாயினி கல்யாணத்திற்கு என்ன உடை உடுத்தலாம் என்றவாறே மாறிப் போனது. இவற்றை எல்லாம் மீறியும் வேலை நேரத்திற்கிடையில் எதாவது எழுதலாமென்று எடுத்து வைத்தாலும் எழுதுவதற்குத் தோன்றுவதில்லை.



காலையில் எழுந்து அரக்கப் பரக்க காலை மற்றும் மதிய உணவு செய்து, கணவருடன் ஆபிஸ் கிளம்பி, சாயந்திரம் திரும்பும்பொழுது MTC பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி எவரேனும் எழுகிறார்களா என்று கண்கொட்டாமல் பார்த்து எவரேனும் எழுந்தால் ஓடிச் சென்று அந்த சீட்டில் அமர்ந்து நிறுத்தத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்தை சுற்றியுள்ள மரம், பூச்செடிகள், வேடிக்கைப் பேசியபடி சைக்கிளில் சுற்றும் பள்ளி மாணவர்கள் இப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஜாலியாய் வீட்டிற்கு நடந்து சென்று இரவு உணவிற்கான வேலையை துவங்கியபடியே பெற்றோருடனும் மாமியார், நாத்தனாருடனும் கதைகள் பேசிக்கொண்டிருந்து, கணவர் வந்ததும் இரவு உணவை முடித்துக் கொண்டு கம்ப்யூட்டரில் சண்டைப் போட்டுக் கொண்டு விளையாடுவது என்று இந்த வாழ்க்கையை அவள் மனம் வெகுவாய் ரசிக்கலாயிற்று. கொஞ்ச காலத்திற்கு இந்த வாழ்க்கையை முழுதாய் அனுபவிக்க வேண்டும். ஆனால் பதிவெழுத ஆரம்பித்தால் மனம் அதைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்து விடும். இரவு வந்ததும் கணினியையே நோண்டிக் கொண்டிருக்க வேண்டும். அதனால் சிறிது காலத்திற்கு வலைப்பதிவிற்கு விடுமுறை அளித்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டாள். அவள் முடிவு சரியானதா என்று கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன் :-)



பி.கு: அப்பாடா! என்னை ஹீரோயினா வச்சு ஒரு கதை எழுதணும்னு நெம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிடுச்சு :)))

49 comments:

சென்ஷி said...

//"அவள் முடிவு சரியானதா?!!"//

பதிவ படிச்சுட்டு சொல்றேன் :)

Sanjai Gandhi said...

இது எந்த சினிமா கதை? :)

Sanjai Gandhi said...

ஒல்லியம்மா.. இத ”என்னைப் பற்றி”ன்னு ஒரு ஏரியா இருக்கே.. அங்கிட்டு போட்டிருக்கனும்..

நீ.. கண்டிக்க ஆளில்லாம வளர்ந்துட்டு இருக்க.. :))

Vijay said...

முதல் பராகிராஃப் படித்த உடனேயே அது நீங்க தான்னு தெரிஞ்சு போச்சு.

வாழ்க்கையில் நிறைய அத்தியாயங்கள் இருக்கின்றன. இப்போது நீங்கள் ஒரு புது அத்தியாயத்தை தொட்ங்கி இருக்கிறீர்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் முந்தைய அத்தியாயத்தின் முக்கியத்துவங்கள் மாறலாம், மாறும். Priorities do Change. அந்தந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, சந்தோஷமாக வாழ்க்கையை வாழ வேண்டும். வாழ்க்கையில் இந்த அத்தியாயத்தில் உங்களது நேரத்தை உங்கள் கணவரும் குடும்பமும் எடுத்துக் கொள்வது மிக இயல்பு. திருமணமான முதல் ஒரு வருடம் ரொம்பவும் முக்கியமானது. It is like a probation period in an organization. ஒருவரையொருவர் புரிந்து கொள்வது இப்போது தான். அதற்கு நீங்கள் உங்கள் கணவருடன் அதிக நேரம் செலவழிக்க நேரிடும். அவருக்கும் அப்படியே. மணமான புதிதில் நிறைய கருத்து வேறுபாடுகள் வரும். நிறைய சண்டைகள் வரும். ஆனால் ஒவ்வொரு சண்டையும், ஒவ்வொரு கருத்து வேறுபாடும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளத்தான் என்பதை புரிந்து கொண்டால், சண்டையைக் கூட ரசித்துக் கொண்டே சந்திக்கலாம். ஏதோ ஃபிலாசஃபி பேசரேன்னு நினைக்காதீங்க. இது என்னுடைய சொந்த அனுபவமும் கூட.

உங்கள் எழுத்துக்களை ரொம்பவே ரசிக்கிறவன் நான். என்னடா இவங்க கிரிஜாவுக்கு அடுத்த ஆச்சுன்னு எழுதலியேன்னு பல தடவை யோசிச்சிருக்கேன். இந்த பிளாக்ஸ்பாட் எங்க போயிடப்போகுது, உங்கள் வாசகர்களாகிய நாங்கள் எங்கே போகப் போகிறோம். உங்கள் மண வாழ்க்கையை சந்தோஷமாகக் கழியுங்கள். சில நாட்களில் உங்கக் கணவரே "என்ன ஒண்ணும் எழுதலியா? என்னல்லாமோ எழுதுவேன்னு சொன்ன, ஒண்ணையும் காணோமே"ன்னு கேட்கப் போகிறார் :)

Once Again, Wish you a Happy Sweet Married Life!!

வாழவந்தான் said...

ஏய் இம்சை
ஏன் இந்த குழப்பம்..
வாழ்க்கைய எவ்ளோ முடியுமோ அவ்ளோ அனுபவி...
இது கடவுள் நமக்கு குடுத்த கிஃப்ட்.

இதுல ஒரு அட்வாண்டேஜ் இருக்கு..
நம்ம எவ்ளோ இந்த வாழ்கைய ரசிச்சு, உணர்வு பூர்வமா அனுபவிக்கறோமோ அவ்ளோ விஷயம் கிடைக்குமே உன் பிளாக்-ல பதியரதுக்கு..

ஆனா ஒன்னு, ரொம்ப பெரீய்ய்ய்ய விடுமுறைய இல்லாம மாசத்துக்கு ரெண்டு மூணு பதிவாவது எழுதலாம்...

ஜியா said...

பதிவுலகத்துக்கு விடிவுகாலம் பொறந்திடிச்சு... ;)))

உண்மைத்தமிழன் said...

//அதனால் சிறிது காலத்திற்கு வலைப்பதிவிற்கு விடுமுறை அளித்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டாள். அவள் முடிவு சரியானதா என்று கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்:-)//

நூற்றுக்கு நூறு சரிதான் தங்கம்.. மொதல்ல வீடு, குடும்பம், தொழில் இதுதான் முக்கியம்..

ஓய்வும், நேரமும், சமயமும் ஒன்றாகக் கிடைத்தால்தான் தனி உடைமைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த கணினியும், பிளாக்கும் எங்கேயும் ஓடிப் போகாது.. அப்புறமா வந்து படிச்சுக்கலாம்.. எழுதிக்கலாம்..

இடையிடையே ஏதேனும் தோன்றினால் சிறிய சிறிய குறிப்புகளாக மட்டும் எழுதி வைக்கவும். பின்னாளில் அதனையே பெரிதாக எழுதிக் கொள்ளலாம்..

வாழ்க வளமுடன்

Anonymous said...

Best wishes.

Divyapriya said...

நீங்களும் லீவா? அப்ப, அந்த கதைய முடிக்க போறதில்லையா :(

Divyapriya said...

எங்கிருந்தாலும் வாழ்க :)

rapp said...

இல்லை:(:(:(

கைப்புள்ள said...

//அவள் முடிவு சரியானதா என்று கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன் :-)

//

தப்பே இல்லை...ரொம்ப சரியான முடிவே. ரசிச்சி படிச்சேன். ரொம்ப சூப்பரா எழுதிருக்கீங்க.

புதுகை.அப்துல்லா said...

அவள் முடிவு சரியானதா என்று கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன் :-)

//


ஏதாவது ஆகுற கதயா சொல்லு தாயி. முடியாத விஷயத்துகெல்லாம் ஏன் மண்டைய குழப்பிக்கிற?? :)))

வெண்பூ said...

//
சிறிது காலத்திற்கு வலைப்பதிவிற்கு விடுமுறை அளித்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டாள். அவள் முடிவு சரியானதா என்று கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்
//

சரியான முடிவு.. (எங்கள் நன்மையை கருதி) மாற்றிக்கொள்ள வேண்டாம்.. ஹி..ஹி..

Anonymous said...

நேரம் கிடைக்கும்போது எழுதுங்க. கல்யாணமான முதல் வருஷம் ரொம்ப முக்கியம். கல்யாண வாழ்க்கைக்கு அடித்தளமாய் இருக்கும். அதை எஞ்சாய் பண்ணுங்க

கோபிநாத் said...

\\ஜி said...
பதிவுலகத்துக்கு விடிவுகாலம் பொறந்திடிச்சு... ;)))
\\

ரீப்பிட்டிக்கிறேன் ;))))

FunScribbler said...

haahaa..ஏதோ பாலசந்தர் கதை மாதிரி இருக்கு.இந்த கதையையும் ரசித்து படித்தேன்.

(இத கதை இல்ல என் சரித்திரம் அப்படின்னு நீங்க அஜித் voiceல பேசுறது கேட்குது)

ஒகே ஒகே உண்மை நிலவரம் தான். it's ok. கல்யாணம் ஆச்சுன்னு இத்தன பொறுப்பா... ம்ம்ம்... யோசிக்க வச்சிட்டீங்களே! :)

Anonymous said...

வாழ்த்துகள் இம்சை.! ரசிப்பதாக இருந்தால் ரசியுங்கள், மெதுவாக திரும்பி வாருங்கள், அவசரமில்லை. ஆனால் இந்தப்பதிவு, கட்டற்றிருந்த ஒரு இளம்பெண்ணின் வாழ்வு குடும்பச்சிறைக்குள் சிக்கியது என்பது குறித்ததாகவே இருக்கிறது. அதையே பெண்கள் எப்படி பெண்ணியத்துக்கெதிராக தன்னை ஏற்புடையதாக்கி ஏமாற்றிக்கொள்கிறார்களோ அந்த ஆயிரமாயிரம் பெண்களில் ஒருவராகவே நீங்களும் உள்ளீர்களோ என்று சந்தேகிக்கத்தோன்றுகிறது. சொந்த வாழ்க்கையும், அதன் சந்தோஷங்களும் முக்கியம்தான். ஆண்களும் தங்கள் சுயவிருப்பங்களை சமரசம் செய்து கொள்கிறார்கள்தான். ஆனால் தராசில் வைக்கும்போது...

Anonymous said...

உங்களது முடிவு சரியானதே.
உங்க முடிவ ஒரு ரெண்டு நாளைக்கு தள்ளிவெச்சிட்டு " உன்னோடுதான் என் ஜீவன்" கதைய மட்டும் முடிச்சிருங்க please.

CVR said...

சினிமாத்தனம் இல்லாத எதார்த்தமான முடிவு....
:P

அமெரிக்காவில் இருந்து 25 பையில் டாலர் எடுத்துக்கொண்டு இந்தியா வந்து (சிவாஜி கதை இல்லீங்கக்கா)பின்பு ஆணிகளின் படையெடுப்பால் பதிவுன்னா என்ன என்ற நிலைமைக்கு ஆளான ஒருவனது கதை வேணுமா??? ;)

ஜே கே | J K said...

அப்பாடா.

ஆனா அந்த ஒரு ஜீவன நெனச்சாதான் பாவமா இருக்கு...

Anonymous said...

i think u will find time somewhere keep writing,never stop what u like.then u will feel something is missed.

காயத்ரி சித்தார்த் said...

//இந்த வாழ்க்கையை அவள் மனம் வெகுவாய் ரசிக்கலாயிற்று. கொஞ்ச காலத்திற்கு இந்த வாழ்க்கையை முழுதாய் அனுபவிக்க வேண்டும். ஆனால் பதிவெழுத ஆரம்பித்தால் மனம் அதைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்து விடும். இரவு வந்ததும் கணினியையே நோண்டிக் கொண்டிருக்க வேண்டும். அதனால் சிறிது காலத்திற்கு வலைப்பதிவிற்கு விடுமுறை அளித்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டாள்.//


ஹை!!! சேம்ம்ம்ம் பின்ச்ச்ச்ச்.. :))

காயத்ரி சித்தார்த் said...

//அடுத்த மாதம் கவிதாயினி கல்யாணத்திற்கு என்ன உடை உடுத்தலாம் //

மொதல்ல இதை முடிவு பண்ணு செல்லம்.. மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். ;)

Anonymous said...

//தப்பே இல்லை...ரொம்ப சரியான முடிவே. ரசிச்சி படிச்சேன். ரொம்ப சூப்பரா எழுதிருக்கீங்க.

ennai rasischinga sir imsaiyoda pulambalaiya:):)

Anonymous said...

antha unnodu yehn jeevam mudichitunga kilambungapa

Anonymous said...

பதிவுலகத்துக்கு விடிவுகாலம் பொறந்திடிச்சு... ;)))

November 6, 2008 9:26:00 PM IST

jiiiii parthi imsaiyoda rasigargal unagala chumma vida porathilla

Sundar சுந்தர் said...

நீங்க சொல்ற கதைய பார்த்தா அடுத்த பாரால ஒரு திருப்பம் வரும் போல தெரியுதே!

Unknown said...

ஆத்துல விசேஷமா. நானும் எங்காத்து மாமியும், வந்து அட்சத போட்டுவிட்டு போறோம்.ந்ன்னா இருங்கோ.

கோவிச்சுக்கப்படாது.

கமெண்ட் போடும்போது, பக்கத்தில்,சென்ஷியின் நாகேஷ் போட்டோ,பார்த்துண்டே போட்டேன். அவர் பாஷை வந்துடுத்து.

நீங்கள் நேரத்தை பிளான் செய்து தினமும் ஒரு மணி நேரம்
பதிவிட ஒதுக்கலாம் .முடியவில்லை என்றால் விட்டால் தனி குடித்தனம் போகலாம் .
(அது என்ன..அம்மணி கைல எதோ எடுத்திட்டு வாரங்க ......எஸ்கேப்)

மோகன் said...

நல்ல முடிவு...
மனம்போல் மணவாழ்வை மகிழ்வுடன் கழிக்க மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

gayathri said...

பி.கு: அப்பாடா! என்னை ஹீரோயினா வச்சு ஒரு கதை எழுதணும்னு நெம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிடுச்சு :)))

me they 30 pa innum kathai padikala padichitu vanthu sollren commetns box pakum pothu ithu than first threnjithu.kathai padichitu
அவள் முடிவு சரியானதா?!!"nu sollren ok

gayathri said...

enna solrathune thereyala konjam sari konjam thappu eranthum kalantha kalavai

Anonymous said...

Excellent Decession . Wishing you all the Best and Enjoy every moment of your life at this Stage

விசு said...

முதல் பராகிராஃப் படித்த உடனேயே அது நீங்க தான்னு தெரிஞ்சு போச்சு...

சிறிது காலத்திற்கு வலைப்பதிவிற்கு விடுமுறை அளித்து விட்டு, அதன்பின் அனுபவித்த/ரசித்த விசியத்தை பிளாக்-ல பதிவு பண்ணுங்க!!! (உங்கள் சொந்த அனுபவங்கள், எங்களுக்கு பாடமாக கூட அமையும்!!!)
வாழ்க்கை அனுபவிக்கவே!!!

Wish you a Happy Sweet Married Life!!

Anonymous said...

comments boxsa pakkum pothu first ithan thereunhthu

பி.கு: அப்பாடா! என்னை
ஹீரோயினா வச்சு ஒரு கதை எழுதணும்னு நெம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிடுச்சு :)))

me they 30 pa

ok naan padichitu vanthu "அவள் முடிவு சரியானதா?!!"nu sollren ok

Anonymous said...

kandipa eluthanum ,eluthuvathai niruthathinga.....

நாகை சிவா said...

அப்பாடா!

கிளம்புங்க காத்து வரட்டும்... :)

விடை கிடைத்தா உங்க கேள்விக்கு...

நான் சொல்லுறது சரி தானே...

gayathri said...

Anonymous said...
comments boxsa pakkum pothu first ithan thereunhthu

பி.கு: அப்பாடா! என்னை
ஹீரோயினா வச்சு ஒரு கதை எழுதணும்னு நெம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிடுச்சு :)))

me they 30 pa

ok naan padichitu vanthu "அவள் முடிவு சரியானதா?!!"nu sollren ok

enna than copy panni paste pannalum ippadiya

me they 30 pa .ithachi change panni irukalam pa me they 36 nu enna naan sollrethu sari thana

MSK / Saravana said...

உங்கள் முடிவு தவறென்று சுயநலமாய் யோசித்தாலும்..........

"தற்காலிகமாக விடைபெறுகிறேன்" அப்படின்னு ஒரு பதிவ போட்டுட்டு போங்க.. போய் வாழ்க்கையை அனுபவிங்க.. அப்பறமா வந்து எழுதலாம்..


ஆனா தொடர்கதையை முடிச்சிட்டு போங்க..

நித்தி .. said...

noooooooooooooooooooo nooooooooooooooo
noooooooooooo....
ipadithan katha thonuthu imsai..
but ipo ethu mukiyamo athai than seiyanum...
ungal piriyamanavar kooda time spend panrathu very essential rite now..
so keep going aanaaaa...
apo apo thalai kaminga illaina ungal rasigar kootam rombave kasta padum...
tke cre sweetheart....
my best wishes for ur alagana natkal...

gayathri said...

enna than copy panni paste pannalum ippadi ya pa
Anonymous said...
comments boxsa pakkum pothu first ithan thereunhthu

பி.கு: அப்பாடா! என்னை
ஹீரோயினா வச்சு ஒரு கதை எழுதணும்னு நெம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிடுச்சு :)))

me they 30 pa

ok naan padichitu vanthu "அவள் முடிவு சரியானதா?!!"nu sollren ok

me they 36 nu sollanum ok

gayathri said...

enna than copy panni paste pannalum ippadi ya pa
Anonymous said...
comments boxsa pakkum pothu first ithan thereunhthu

பி.கு: அப்பாடா! என்னை
ஹீரோயினா வச்சு ஒரு கதை எழுதணும்னு நெம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிடுச்சு :)))

me they 30 pa

ok naan padichitu vanthu "அவள் முடிவு சரியானதா?!!"nu sollren ok

me they 36 nu sollanum ok

gayathri said...

enna than copy panni paste pannalum ippadi ya pa
Anonymous said...
comments boxsa pakkum pothu first ithan thereunhthu

பி.கு: அப்பாடா! என்னை
ஹீரோயினா வச்சு ஒரு கதை எழுதணும்னு நெம்ப நாளா ஆசை. இன்னைக்கு நிறைவேறிடுச்சு :)))

me they 30 pa

ok naan padichitu vanthu "அவள் முடிவு சரியானதா?!!"nu sollren ok

me they 36 nu sollanum ok

kavidhai Piriyan said...

kandippa life enjoy pannuga....indha time inimel ungaluku kandippa kedaikadhu..aana Blog yeppa venumnalum Eluthalam :-) So ensaiiiiiiii.Unga moodovu sariyanadhu dhan :-)

Anonymous said...

its good u better stop writing,

atleast one another fantasy/dreamy creature is gonna start learn reeality !!

Anonymous said...

its not surpising that
"oneanother fantasy creature" is not even capable of accepting a small critic from an enthusiast ))>>>>

Anonymous said...

நினைத்தெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...

Muthu said...

appada...
naan thaan 50th comment...
Nalla style...
Keep blogging..
ithu thaan naan padicha first post of yours... will do rest as soon...

Regards,
Muthu
http://muthumalla.blogspot.com/

SUBA said...

Pls read this and try to do something

http://ambalrsm.blogspot.com/2009/08/blog-post_14.html


- Suba