ஹி... ஹி... அப்படி என்ன மூணு மிஸ்டேக்ஸ் பண்ணினேன்னு பாக்கறீங்களா? மூணே மூணு மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் கஞ்சம் பிடிச்சவ இல்ல. எண்ண முடியாத அளவுக்கு சராமரியா மிஸ்டேக்ஸா பண்ணிக் குவிப்போமில்ல... ;))) சரி மேட்டருக்கு வருவோம்.
லாங் லாங் அகோ... ஒன்ஸ் அப்பான் அ டைம் எப்போ பாத்தாலும் புக்கும்(ஒன்லி ஸ்டோரி புக்ஸ்) கையுமாதான் இருப்பேன். சாப்பிடறப்போ படிக்காதனு எங்கம்மாட்ட டெய்லியும் திட்டு வாங்குவேன். அப்படி இருந்த நான் காலெஜ் முடிச்சிட்டு வேலைல சேர்ந்ததும் ஆபிஸ்ல வாங்குற ஆப்புகளுக்கு நடுலயும் என் பணி ப்ளாக் எழுதிக் கிடப்பதே-னு சபதம் எல்லாம் போட்டு என்னை முழுசா ப்ளாக்குக்கு அர்ப்பணிச்சிட்டதால(யாரு அங்க உன்னோடுதான் என் ஜீவன் பார்ட் III எங்கனு கேக்கறது?) புத்தகம் படிக்கறப் பழக்கத்த விட்டுட்டேன். எனக்கே ஷேம் ஷேமாதான் இருக்கு. என்ன பண்றது? இந்த ப்ளாகுக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ண வேண்டியதா போயிடுச்சு.... ஓகே ஓகே... பேக் டு தி மேட்டர்...
இது ரொம்ப காலத்துக்கு அப்புறமா நான் படிச்ச ஒரு புக். Chetan Bagat-ன்றவரு எழுதின புக். என் டீம்மேட்கிட்ட(ஒரு போஸ்ட்டுக்கு கவிதை எழுதி தந்தாரில்ல. அவரு) இருந்து சுட்டுட்டுப் போய் படிச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்சது. உங்களோட ஷேர் பண்ணலாம்னுதான் இந்த போஸ்ட்.
அவருக்கு வர தற்கொலை மெயிலோட ஸ்டார்ட் ஆகுது கதை. அந்த மெயில் அனுப்பின பையனைத் தேடிப் போய் ஹாஸ்பிட்டல்ல அவனைக் கண்டுபிடிச்சு அவன்கிட்ட கதையக் கேட்டு எழுதற மாதிரி நாவலை ஃப்ரேம் பண்ணி இருக்காரு. அவனை மீட் பண்ணினதுக்கப்புறம் அவனே கதைய நேரேட் பண்றான்.
அப்பா வேற ஒரு பெண்ணோட போயிட ஸ்நேக்ஸ் பிசினஸ் பண்ற அம்மாவோட ஒரே பையனான கோவிந்த் பட்டேல் தான் கதையோட ஹீரோ. ஆஸ்ட்ரேலியா பீச் அழகிகளைப் பாக்கும்போது கூட மேத்ஸ் கால்குலேஷன்தான் வருதேனு அவனே நொந்துக்கற அளவுக்கு ஒரு maths lover. அவனோட கனவு ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆகணும்ன்றது. அவனோட உயிர் தோழர்களான இஷானையும் ஓமியையும் கூட்டா வச்சிக்கிட்டு ஒரு கடை திறக்கறான். கிரிக்கட் பைத்தியத்தால மிலிட்டரி வேலையை விட்டுட்டு ஓடி வந்த இஷானோட திருப்திக்காகவும் சில பல பிசினஸ் கால்குலேஷன்ஸாலயும் ஸ்போர்ட்ஸ் கடை ஆரம்பிக்கறாங்க. பிஸினெஸ்-ல வர பணத்தை பெருசா எடுக்காத இஷான், ஓமி, ஓமியோட மாமா கொண்டு வர அரசியல், குஜராத் நிலநடுக்கம், குஜராத் ரயில் குண்டுவெடிப்பு, மேத்ஸ் டியூஷன் எடுக்கப் போயி இஷானோட தங்கைகிட்ட வர காதல், அதனால இஷானோட வர பிரச்சினைகள் இப்படி பல பல காரணங்களால அவனும் அவன் பிஸினெஸும் என்ன ஆகுதுன்றதுதான் கதை. தங்கையோட தனக்கிருந்தக் காதல் தெரிஞ்சதுல இருந்து மூணு வருஷமா இஷான் பேசாம இருந்து ஒரு கட்டத்துல இஷான் "dishonest"-னு இவனை சொன்னதால ரொம்ப மனசு உடைஞ்சுப் போய் தற்கொலை பண்ணிக்கப் போயிடறான். கடைசில நம்ம Chetan அவனைக் கண்டுபிடிச்சு அவனோட ஃப்ரெண்டையும் காதலியையும் அவனோட சேர்த்து வைக்கறார். இதான் கதை.
ரொம்ப நல்லா நகருது. ஆன நடுவுல ஒரு விசிட்டிங் கார்ட காட்டி எல்லாரையும் ஏமாத்திட்டு ஆஸ்ட்ரேலியன் கிரிக்கெட் ப்ளேயர் ஒருத்தரை மீட் பண்றது, அவரோட தயவுல ஆஸ்ட்ரேலியா போயிட்டு வரது, கசமுச மசாலா காதல்னு கொஞ்சம் சினிமாத்தனம். என்னக் காரணத்துக்காக வித்யா அவனை லவ் பண்ண ஆரம்பிக்கறானே தெரியல. அவ அண்ணன் அம்மா அப்பா எல்லாரும் அவன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தா அவன் ரூம் கதவ லாக் பண்ணிட்டு டியூஷன் எடுக்கறதுக்கும் ஒண்ணும் சொல்லாம இருந்திருப்பாங்க. ஆனா நம்ம ஹீரோவுகும் குற்ற உணர்ச்சி ரொம்பவே இருக்கும். எந்த ஒரு உணர்வுக்கும் இடம் குடுக்காம இருந்த நம்ம கோவிந்த எப்படி லவ் பண்ன வச்சுடறா வித்யா. அதான். பொண்ணுங்க நினைச்சா என்ன எதை வேணாலும் சாதிக்க முடியும்.
இந்தக் கதைல என்னைப் பொறுத்தவரைக்கும் கோவிந்த் விட இஷான் தான் ஒரு நல்ல பிஸினஸ்மேன். அக்கவுண்ட்ஸ்லாம் பாத்துக்காட்டியும் கஸ்டமர்ட்ட திறமையாப் பேசி பிஸினஸ் பண்றானில்லையா? அவங்க சொல்ற விலைக்கு இறங்கிப் போய் சேல்ஸ முடிக்கறதை விட நாம சொல்ற விலைக்கு அவங்களை வாங்க வைக்கறதுதான் திறமையான பிசினஸ். என்ன சொல்றீங்க?
சரி. டைம் இருந்தாப் படிங்க. என் வாழ்க்கைல நான் பண்ணின பெரிய மிஸ்டேக் இந்த புக்கப் படிச்சதுதானு நினைக்கறேன். இல்லைனா Chetan-ஓட Five point someone and One night @ the Call center கண்டிப்பாப் படிக்கணும்னு முடிவுப் ப்ண்ணிருப்பேனா?? ;)))
Tuesday, August 19, 2008
The 3 mistakes of my life...
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
Me the firstt??
//ஆபிஸ்ல வாங்குற ஆப்புகளுக்கு நடுலயும் என் பணி ப்ளாக் எழுதிக் கிடப்பதே-னு சபதம் எல்லாம் போட்டு என்னை முழுசா ப்ளாக்குக்கு அர்ப்பணிச்சிட்டதால(யாரு அங்க உன்னோடுதான் என் ஜீவன் பார்ட் III எங்கனு கேக்கறது?) //
நீங்களே சொல்லி எஸ் ஆகலாமுன்னு பார்க்காதீங்க.. எங்கே அந்த தொடர்கதை ??
//நான் பண்ணின பெரிய மிஸ்டேக் இந்த புக்கப் படிச்சதுதானு நினைக்கறேன். இல்லைனா Chetan-ஓட Five point someone and One night @ the Call center கண்டிப்பாப் படிக்கணும்னு முடிவுப் ப்ண்ணிருப்பேனா?? ;)))///
அக்கா!
நாங்க பண்ணின மிஸ்டேக்கும் கூட இந்த பதிவை படிச்சதுதான்!
இல்லேன்ன் அடுத்தவரப்போற Chetan-ஓட Five point someone and One night @ the Call center புக் பத்தின பதிவ படிக்க ரொம்ப ஆர்வாமாயிட்டு இருக்க முடியுமா ?
சரி அத்தானை நலம் விசாரிச்சதா சொல்லுங்க அக்கா?
Me the Firstuu.....???
//இல்லைனா Chetan-ஓட Five point someone and One night @ the Call center கண்டிப்பாப் படிக்கணும்னு முடிவுப் ப்ண்ணிருப்பேனா?? ;)))
//
Kandippaga padikkavum. One night at the call center padithuvittu Five point Something Padikkavum .
Because i felt Five point Something is better than One night at call center
Anbu
முதல் மிஸ்டேக் ……………?
Title mattumthaane englishla irunthathu?? ;)))
//என்னக் காரணத்துக்காக வித்யா அவனை லவ் பண்ண ஆரம்பிக்கறானே தெரியல.//
sila periya kaathaasiriyar kathaiyoda heroine maathirinnu sollunga ;)))
இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. one night @ call... ஐ சினிமாவா எடுத்துக்கிட்டு இருக்காங்க.
(யாரு அங்க உன்னோடுதான் என் ஜீவன் பார்ட் III எங்கனு கேக்கறது?) We Are all Waiting for The Story for a longer while. So Next Post Must be that only.
இது ரொம்ப காலத்துக்கு அப்புறமா நான் படிச்ச ஒரு புக். Chetan Bagat-ன்றவரு எழுதின புக்
சரி. டைம் இருந்தாப் படிங்க
அதெல்லாம் சரி அக்கா
புத்தகத்தோட பெயர் என்ன
The 3 Mistakes of my Lifeவை விட FPS ம், ON@TCC ம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
தலைப்பு புத்தகத்தின் பெயரா? இல்ல நீங்க படிக்க போற அடுத்த இரண்டு புத்தகங்களோட சேர்த்து மூன்று பிழைகள் செய்ய போறதா சொல்றீங்களா? :) புத்தகம் ஆன்லைன்ல இருக்கா?? ;)
இந்த 3 mistakes னால, எங்கே என் ஜீவனே III இன்னும் லேட் ஆகும்னு சொல்றீங்களா :-))
Chetan Bhagat is a very good story teller. Read all his books. I too have become a fan of him now :)
நீங்க சொல்லிட்டீங்க இல்ல படிச்சிடலாம் :)
ஆங் சொல்ல மறந்திட்டேனே
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இம்சை அரசி (aka) ஜெயந்தி !
//The 3 mistakes of my life...//
"The Only One Mistake of My Life"னு என் நண்பர் மோகன்ப்ரபு ஒரு மெயில் அனுப்பி இருக்கார். ஆர்வம் இருந்தா சொல்லுங்க. அத உங்களுக்கு அனுப்பறேன். அதையும் நீங்க படிக்கலாம். :))
முழுசா ப்ளாக்குக்கு அர்ப்பணிச்சிட்டதால(யாரு அங்க உன்னோடுதான் என் ஜீவன் பார்ட் III எங்கனு கேக்கறது?) புத்தகம் படிக்கறப் பழக்கத்த விட்டுட்டேன்.
Naan daanga kekkuren......
Happy Birthday to you....
good story.. i am the last.. tell tu saravanan and anbu... ok..
Madem....
It's a small remainder..!!!
vl post "Unnoduthaan en jeevan - III" soon
Madem....
It's a small remainder..!!!
vl post "Unnoduthaan en jeevan - III" soon
ந்ல்ல விமர்சனம்.சீக்கிரம் இந்த புக் படிக்க முயற்சிக்கிறேன்.
அடுத்து உன்னோடுதான் என் ஜீவன் பார்ட் III எதிர்பார்த்துக்கிட்டுருக்கேன்.
FPS ரொம்ப நாளைக்கு முன்னாடி படிச்சது. நல்லா இருக்கும்.
hello madam eppa paru am opening ur blogspot and yemanthu poiduren unnodu thaan yehn jeevan poduveengala mattengala
கேவலமான சலுகைகள்
ஆகா, மத்திய அரசு உலகிலேயே மகாப் பெரிய புரட்சி சட்டத்தை இயற்றி விட்டது.
ஆமாம், கேவலத்திலும் மகாப்பெரிய கேவலமான சலுகையை அரசுப் பெண் ஊழியர்களுக்குக் கொடுத்து, ஏழைகளின் வயித்தெரிச்சலையும் பாவத்தையும் கட்டிக் கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு பிரசவ விடுமுறை மூன்று ஆண்டுகளாம். அதுவும் முழு சம்பளத்துடன். இதைவிடக் கேவலமான சட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது.
இதை எந்த ஊடகமும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது. இனி அரசு ஊழியைகள் பணியில் சேரும் 21 வயது முதல் தாங்கள் ஓய்வு பெறும் 65 வயது வரை ஏறக்குறைய 45 ஆண்டுகள் மூன்றாண்டுகளுக்கு ஒரு குழந்தை வீதம் பெற்றுக் கொள்வார்கள்.
அப்படியெனில் ஒரு அரசு ஊழியை தனக்கென 15 குழந்தைகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பெற்றுப் போட்டால் போதும், ஓய்வுபெறும் வயது வரை தொடர் விடுமுறை கிடைத்து விடும்.
தனியார் நிறுவனங்களிலும், நாள்கூலி வேலை செய்யும் வேலை செய்பவர்களின் வரிப்பணத்தில், அரசு ஊழியைக்கு முழு ஊதியமும் கிடைத்து விடும்.
ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் பாலையும் வைக்கும் அரசுக்கு என்னே பெரிய கருணை.
ஜமின்தார் முறை ஒழிந்து விட்டது என எவன்டா சொன்னது? இப்போது அரசு ஊழியர்களின் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,
இதனால் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும் அல்லவா? ஓய்வு வயதின் உச்சவரம்பையும் அரசு விரைவில் அதிகரிக்கப் போகிறது.
அப்படியெனில் பெண்ணின் தாய்மைக்கு மதிப்பில்லையா என அவர்கள் கேட்பார்கள். இருக்கிறது. அதற்கு ஒரு அளவும் இருக்கிறது.
நாட்கூலி வேலை செய்யும் அப்பாவிப் பெண்கள், பிரசவத்திற்கு முந்திய நாள் வரை உழைக்கிறார்கள். வயலில் உழைத்துக் கொண்டிருக்கும் போது பிரசவம் ஆன கூலிப் பெண்களும் உண்டு.
கூலிப் பெண்கள் பெறுவது மனிதக் குழந்தைகள்தானே?! ஆனால் அரசு ஊழியைகளுக்குப் பிறக்கப் போவது தெய்வக் குழந்தைகள் அல்லவா? அதுங்களை வளர்க்க மூன்றாண்டுகள் கூட போதாது.
இனி இப்படி கூட நம் மத்திய அரசு சட்டம் போடலாம். திருமணம் முடித்து முதலிரவு முடிந்தவுடன், குழந்தைகளை வளர்க்கும் விடுமுறையை இரட்டை மடங்கு சம்பளத்துடன் கொடுக்கத் தொடங்கி விடலாம்.
அந்தக் குழந்தை பிறந்து, வளர்ந்து, பள்ளியில் படித்து, கல்லூரியில் முடித்து, வேலை கிடைத்து, திருமணம் முடிந்து, அந்தக் குழந்தைக்கும் குழந்தை, அதாவது அந்த அரசு ஊழியைக்கு பேரன் பேத்திகள் பிறக்கும் வரை இந்த ஆயுட்கால விடுமுறையை நீட்டிக்கலாம்.
இவர்களுக்கு சம்பளமாகப் போவப் போவது, அப்பாவி கூலிக்காரர்களின் வரிப்பணம்தானே? இனி மாநில அரசுகளும் இந்த கேவலமான சட்டத்தைப் பின்பற்ற தொடங்கி விடும்.
ஏற்கெனவே அரசு ஊழியர்கள் வேலை செய்து கிழிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நீண்டகால விடுமுறை வேறு.
இதே விடுமுறையை குழந்தை பெறும் பெண்ணுக்கு மட்டுமல்லாமல், ஆணுக்கும் கொடுக்கலாமே? ஆமாம், அரசு ஆண் ஊழியர்கள் செயற்கையைகக் கருத்தரித்துக் குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.
இப்படி எழுதுவதால், நான் அரசு ஊழியர்களுக்கு எதிரி என எண்ண வேண்டாம். எனக்கும் பல அரசு ஊழியர்களில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த சட்டம் அந்த நண்பர்களுக்குக் கூட பிடிக்கவில்லை.
இந்த சட்டம் இன்னும் பலரை சோம்பேறியாக்கி விடும் என அவர்களே கவலைப்பட்டார்கள்.
எப்படியோ, நாடு உருப்படாத பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அப்பாவி கூலித் தொழிலாளர்களே... தனியார் நிறுவன ஊழியர்களே... நீங்கள் அய்யோ, பாவம்.
Post a Comment