Wednesday, June 18, 2008

மேக்-அப்

நம்ம முகத்துக்கு மேக்-அப் அவசியமானு எப்பயாச்சும் யோசிச்சிருக்கிங்களா? நான் பல தடவை யோசிச்சிருக்கேன். சின்ன வயசுல எல்லாம் இந்த Fair & Lovely, Fairever விளம்பரம் எல்லாம் பாக்கும்போது இது என்னம்மா-னு எங்கம்மாட்ட கேப்பேன். எங்கம்மா அது வெள்ளையாவறதுக்கு போடற க்ரீம்-னு சொன்னாங்க. அப்போ எனக்குனு கேட்டதுக்கு நீ ஏற்கனவே ரொம்ப வெள்ளையா இருக்கற கண்ணு. அதை போட்டு இன்னும் வெள்ளையானா எல்லாரும் உன்ன வித்தியாசமா பாப்பாங்க அப்டி இப்டினு சொல்லி சமாளிச்சிட்டாங்க. அப்புறம் ஒரு எட்டாவது படிச்சப்போ என் ஃப்ரெண்ட் ஒருத்தி நல்லா பளபளனு வருவா. நான் எண்ணை வடிஞ்சு பாவம்போல போவேன். ஒருநாள் அவட்ட உன் அழகோட ரகசியம் என்னடி-னு கேட்டேன். Fair & Lovely தானு சொன்னாளே பாக்கலாம். எனக்கு எங்கம்மா மேல வந்த கடுப்புக்கு அளவே இல்ல. அப்புறம் நானும் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்.

இங்கதான் எங்கம்மாவோட திறமைய நான் எடுத்து சொல்லணும். எதாவது அவங்க வேண்டாம்னு சொல்லி நான் வேணும்னு அடம்பிடிச்சா என்னைத் திருப்பி கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா இது பண்ணினா இப்படி ஆகும் அப்படி ஆகும்னு சொல்லி நானே பயந்து போயோ இல்ல வெறுத்துப் போயோ தானா நிறுத்திடுவேன். ப்யூட்டி பார்லர் வச்சா கண்டவங்க முகத்த க்ளீன் பண்ணனும். காலை எல்லாம் தொடணும். நீயே பயங்கரமா சுத்தம் பாப்ப. நீ எப்படி இதையெல்லாம் செய்வ-னு கேட்டு என்னோட ப்யூட்டி பார்லர் கனவை என்ன வச்சே தகர்த்து எரிஞ்சுட்டாங்க. அப்பேற்பட்டவங்க என் Fair & Lovely மேட்டர சும்மா விடுவாங்களா? Fair & Lovely போட்டா இப்போ நல்லா இருக்கும். ஆனா சீக்கிரமாவே சுருக்கம் வந்து முகம் கிழவியாட்டம் ஆயிடும்னெல்லாம் பயமுறுத்தி அதுக்கப்புறம் Fair & Lovely என்ன பவுடரே வேணாம்னு நிறுத்திட்டேன். அதுக்கப்புறம் வாழ்க்கைல முகத்துக்கு எதுமே போட்டதில்ல. யாராவது இதைப் பத்திக் கேட்டா நாங்கெல்லாம் நேச்சுரல் ப்யூட்டிப்பா. எனக்கெதுக்கு இதெல்லாம்-னு சொல்லி சிரிப்பேன்.

கல்யாணம் முடிவானதும் எங்கக்கா கல்யாண மேக்-அப்க்காக ஒரு பார்லர் கூட்டிட்டுப் போனாங்க. எங்க ஊருல அவங்கதான் நம்பர் ஒன். நிறைய கல்யாணத்துல அவங்க பண்ணி விட்ட மேக்-அப் பாத்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். மூணு கோட் நாலு கோட்னு இல்லாம ரொம்ப சிம்பிளா ஆனா அதே சமயம் ரொம்ப அழகா பண்ணி இருப்பாங்க. அவங்ககிட்ட போனதும் கல்யாண தேதி எல்லாம் கேட்டுட்டு மூணு தடவை ஃபேஷியல் பண்ணிக்கோனு சொல்லிட்டாங்க. சரி கல்யாணத்துக்காகதானனு நானும் சரி சொல்லிட்டேன். மொத தடவை ஃபேஷியல் பண்ணப் போனப்போ என்ன முகம் இவ்ளோ ரஃப்-பா இருக்கு? என்ன க்ரீம் போடுவனு கேட்டாங்க. நான் பெருமையா எதுமே போட மாட்டேனு சொன்னேன். எதும் போடலைனா இப்படி தான் ரஃப் ஆகும்னு சொன்னாங்களே பாக்கலாம். தாய்க்குலத்து மேல தீராத கோபம். வீட்டுக்குப் போய் சண்டையான சண்டை போட்டேன். அவங்க எல்லாம் அப்படிதான் சொல்லுவாங்க. ஆன நீ எதும் போடாதனு அப்பவும் அம்மா அதையே சொன்னாங்க.சரி-னு சொல்லிட்டு அப்புறமா வாங்கி போட ஆரம்பிச்சிடலாம்னு விட்டுட்டேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி ஃபேஷியல்-ன்ற பேருல முகத்த தேச்சு தேச்சு எடுத்தாங்க. எல்லாரும் பாத்துட்டு அட! கல்யாண களை வந்துடுச்சே... அப்டினு சொன்னப்போ எல்லாம் மனசுல அது எப்டினு எனக்குதான தெரியும். பார்லர்ல அந்த அளவுக்கு தேச்சு எடுத்தா வராமலா இருக்கும்னு நானா நினைச்சுக்கிட்டு சிரிச்சு வச்சேன். அப்றமா மூணாவது தடவையா பண்ண போனப்போ கோல்டன் ஃபேஷியல் பண்ணிக்கிறயா? அப்போதான் முகத்துல ஒரு glow வரும். நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சரி கல்யாணத்தப்போ நம்மள சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியும். தக தக-னு மின்னுவோம் போலனு நினைச்சுட்டு சரி-னு சொன்னேன். அதுக்கு தண்டமா ஒரு ஆயிரம் ரூபாய அழுது வச்சிட்டு வந்தேன். பண்ணிட்டு வந்ததுக்கப்புறம் கண்ணாடி முன்னாடி நின்னு நின்னு பாத்தேன். ஒரு glow-யும் காணோம்.

கல்யாணத்தப்போ எல்லாரும் அழகா இருக்க அழகா இருக்க-னு சொன்னப்போ அப்படியே சந்தோஷம் பொங்குச்சு. நாம பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போகலை போலனு சந்தோஷப்பட்டுக்கிட்டேன். அப்புறம்தான் தோணுச்சு. அட! எத்தன கல்யாணத்துல சுமாரா இருந்தவங்களையெல்லாம் நாமளே ரொம்ப அழகா இருக்கீங்கனு சொல்லிட்டு வந்தோம்னு ஞாபகம் வந்து ஒரே சோகம் சோகமா போயிடுச்சு. இருந்தாலும் எல்லாரும் சொல்லும்போது சந்தோஷமாதான் வந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் சொன்ன விஷயம் என்னனா உனக்கு மேக்-அப் ரொம்ப நல்லா பண்ணி விட்டிருந்தாங்க. நீயும் ரொம்ப அழகா இருந்த. ஆனா எந்த மேக்-அப்ம் இல்லாம எப்பவும் ஸ்மைலோட இருந்த உன் வீட்டுக்காரர் உன்னை விட அழகா இருந்தார்னு சொன்னாங்க. ஃபோட்டோஸ் வந்ததும் எங்க வீட்டுலயும் இதே கமெண்ட்தான் குடுத்தாங்க.

இப்போதாங்க நல்லா புரியுது. தலைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது. என்ன சொல்றீங்க?

28 comments:

கருணாகார்த்திகேயன் said...

yes you are correct immsai....

me the 1st...... He heheheheh

anbudan
karunakarthikeyan

Anonymous said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா அலப்பரைய!!!!!!!!!!!!!111

Vijay said...

\\தலைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது. என்ன சொல்றீங்க?\\

முற்றிலும் உண்மை. பெண்களுக்கு புன்னகையிருக்கப் பொன் நகை எதற்கு??

Divyapriya said...

yen neenga ssmila pannalayaa :-)
happy returns for ur first month anniversary ;-) just noticed today is june 18th...

Anonymous said...

Nice finishing touch. Adhu sari, oru kalyana photo upload pannalam illa??? vunga rasigar naanga paarpom illa - Guru

Anonymous said...

சரி கல்யாணத்தப்போ நம்மள சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியும். தக தக-னு மின்னுவோம் போலனு நினைச்சுட்டு சரி-னு சொன்னேன்ethukkunga kalyanam mudinjale thana olivattam vanthurume!!!!thangamaniya parunga vanthurukum
-isthripotti thangamani

Vetirmagal said...

மிகவும் அழகாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிறீர்கள். இயற்கை பொருட்களை உபயோகித்தாலே அழகு நீடித்து இருக்கும். நமது skin tone வெளி நாட்டுப் பெண்களை ஆச்சர்யப்படுத்துவது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

காசை கரி ஆக்கி தோலை புண்ணாக்கும் சிவப்பழகு தேவையா? இளம் பெண்கள் இதை உணர வேண்டியது மிகவும் முக்கியம்.

Ramya Ramani said...

\\நம்ம முகத்துக்கு மேக்-அப் அவசியமானு எப்பயாச்சும் யோசிச்சிருக்கிங்களா? நான் பல தடவை யோசிச்சிருக்கேன்.\\

யோசிக்காத பெண் இல்லை :)

\\எத்தன கல்யாணத்துல சுமாரா இருந்தவங்களையெல்லாம் நாமளே ரொம்ப அழகா இருக்கீங்கனு சொல்லிட்டு வந்தோம்னு ஞாபகம் வந்து ஒரே சோகம் சோகமா போயிடுச்சு.\\

;)LOL!!

\\தலைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது. என்ன சொல்றீங்க?\\

கரீட்டு அம்மணி நீங்களே சொல்லிடீங்க இல்ல, அனுபவம் பேசுது :)

arul said...

what u said is correct? buthusband -kku nalla ice vakkeerangalaa??

Anonymous said...

ஆத்துக்காரருக்கு ரொம்ப ஐஸ் வைக்கிறீங்கன்னு மட்டும் புரியுது :)

pudugaithendral said...

ponnagaiyai vida punnagai siranthathunnu solvanga.

athuthan alaguku alagu serkum.

Ithuku 100% repeatungo

CVR said...

//ஆனா எந்த மேக்-அப்ம் இல்லாம எப்பவும் ஸ்மைலோட இருந்த உன் வீட்டுக்காரர் உன்னை விட அழகா இருந்தார///
ரிப்பீட்டேய்....


//லைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது.////
டபுள் ரிப்பீட்டேய்....

MyFriend said...

:-)

அழகு + அழகு = அழகுதானே

உங்களையும் மாமாவையும்தான் சொல்றேன். :-)

மங்களூர் சிவா said...

ஜெயந்தி பதிவெல்லாம் போடுவியா???

மங்களூர் சிவா said...

ஜெயந்தி பதிவெல்லாம் போடுவியா???

ரிட்டய்ர் ஆகீட்டதா பெங்களூர் FM ல சொன்னாங்களே!!

:))))

மங்களூர் சிவா said...

/
Anonymous said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா அலப்பரைய!!!!!!!!!!!!!
/

ஹிஹி

ரிப்பீட்டேய்ய்ய்ய்

(யாருப்பா அண்ணா அனானி ஜீவ்ஸா இல்ல ராமா!?!? கலக்குற போ)

மங்களூர் சிவா said...

CVR said...

//ஆனா எந்த மேக்-அப்ம் இல்லாம எப்பவும் ஸ்மைலோட இருந்த உன் வீட்டுக்காரர் உன்னை விட அழகா இருந்தார///
ரிப்பீட்டேய்....

மங்களூர் சிவா said...

CVR said...

//லைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது.////
டபுள் ரிப்பீட்டேய்....

M.Rishan Shareef said...

இப்போ எதுக்கு வீட்டுக்காரர்க்கு இவ்ளோ ஐஸ் வைக்குறீங்கன்னு தெரியலையே? :P

வெண்பூ said...

அந்த கடைசிவரி ....ம்ம்ம்ம்ம்ம் ... 100% சரி

ஆயில்யன் said...

இது 1 பின்னூட்டம் :))

ஆயில்யன் said...

//நம்ம முகத்துக்கு மேக்-அப் அவசியமானு எப்பயாச்சும் யோசிச்சிருக்கிங்களா?/

எப்பவாச்சும் இல்ல எப்பவுமே யோசிச்சிக்கிட்டே இருக்கறது மாதிரியான மனிதர்களின் கேரக்டர்களோடு என் கேரக்டரும் ஒத்துப்போகும்! (நேரா மேட்டருக்கு வந்தா அப்புறம் சிக்கலு!)

ஆயில்யன் said...

//இந்த Fair & Lovely, Fairever விளம்பரம் எல்லாம் பாக்கும்போது இது என்னம்மா-னு எங்கம்மாட்ட கேப்பேன்.//

நானெல்லாம் எனக்கும்மா அப்படின்னு கேட்டு வளர்ந்த புள்ளையாக்கும்!

ஆயில்யன் said...

//அப்புறம் ஒரு எட்டாவது படிச்சப்போ//

ஒ.கே பட் என்னோட விசயத்தில இது கான்பிடன்ஷியல் :)

ஆயில்யன் said...

// நாங்கெல்லாம் நேச்சுரல் ப்யூட்டிப்பா. எனக்கெதுக்கு இதெல்லாம்-னு சொல்லி சிரிப்பேன்//

நானெல்லாம் சிரிக்கமாட்டேன்க்கா சமாளிப்பேன்! :))

ஆயில்யன் said...

//ஆனா எந்த மேக்-அப்ம் இல்லாம எப்பவும் ஸ்மைலோட இருந்த உன் வீட்டுக்காரர் உன்னை விட அழகா இருந்தார்னு சொன்னாங்க//

அட..! உண்மையையும் சொல்லியிருக்காங்கள்ல :))

ஆயில்யன் said...

//முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது. என்ன சொல்றீங்க?//

தாங்க்ஸ்க்கா!

பட் என்கிட்ட எல்லாரும் ஏண்டா தேவையில்லாத சமயத்தில கூட சிரிச்சுக்கிட்டு இருக்கான்னு கேட்கறாங்களே அதுக்கு என்ன சொல்றது???

O said...

Ena koduma saravanan sir... ooc'la kudutha ipdi than ukanthu eluthuvangaalo???