Monday, June 9, 2008

உன் பேர் சொல்லி வாழ்த்துக் கூற...
ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்துக் கூற நீயும் சேயில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை

(ஆராரோ)

மார்பிலே போட்டு நான் பாட வழிதான் இல்லையே
மடியிலே போட்டுதான் பார்க்க நினைத்தால் தொல்லையே
வயதில் வளர்ந்த குழந்தையே வம்பு கூடாது
சிரித்து மயக்கும் உன்னையே நம்பக் கூடாது
மேலாடைப் பார்த்துதான் நீ சிரித்தால் ஆகுமா
மேனியே கூசுதே ஆசை வேர் விடுதே

(ஆராரோ)

தோளிலே நாளெல்லாம் சாய்ந்து இருந்தால் போதுமே
வாழ்விலே ஆனந்தம் மேலும் நிறைந்தே கூடுமே
இதயம் எழுதும் இனிமையே... இன்பம் வேறேது
கனவில் வளர்ந்த கவிதையே... என்றும் மாறாது
நீ என்றும் தேனென்றும் வேதங்கள் ஏதம்மா
நினைத்ததும் இனித்திடும் காதல் பூமழையே

(ஆராரோ)

*************
இன்று பிறந்த நாள் காணும் என் இனிய அன்பு கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.


ஒரு பெரிய கவிதை எழுதியிருக்க வேண்டிய நான் ஏன் இப்படி செய்தேனென்றால்

"உன்னுள் முழுமையாக
என்னை தொலைத்தால்
வெட்கி சிவந்து
உன்னுள்ளேயே
ஓடி ஒளிந்து கொண்டன
எனது வார்த்தைகளும்"
(ஸ்ஸ்ஸ்.... அப்பாடா.... எப்படியோ சமாளிச்சாச்சு ;)))))

28 comments:

ஆயில்யன் said...

என் வாழ்த்துக்களையும் சொல்லிட்டீங்கள்தானே :))))இன்னொருதபா சொல்லிக்கிறேன்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அத்தான் :)))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஐ.. மீ தி ஃபர்ஸ்ட்டூ. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஆயில்யன் said...

என் வாழ்த்துக்களையும் சொல்லிட்டீங்கள்தானே :))))இன்னொருதபா சொல்லிக்கிறேன்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அத்தான் :)))))))))//

என்ன அவசரம்? நான் வந்து "மீ தி ஃபர்ஸ்ட்டூ" போடுவேன்னு தெரியும்ல? ;-)))))

விஜய் said...

நல்ல பாட்டு தேர்வு. உங்கள் கணவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்,
விஜய்

விஜய் said...

உங்களுடைய மற்ற் பதிவையெல்லாம் படிச்சப்புறன் தான் தெரியுது, நீங்க திருமதி. மோகன் பிரபு ஆன பிறகு எழுதும் முதல் பதிவு என்று.
முதல் பதிப்பிலேயே கணவருக்கு ஐஸா??

SweetJuliet said...

hey u back..
My birthday wishes to ur hubby

ஆயில்யன் said...

//மை ஃபிரண்ட் ::. said...
ஐ.. மீ தி ஃபர்ஸ்ட்டூ. :-)
//

இல்லையேஏஏஏஏஏ!!!!

நாந்தானே பர்ஸ்ட்டு :))))

இனியவள் புனிதா said...

என்ன படத்துல இந்த பாட்டு வருதுங்க... நல்ல பாட்டு :)

இனியவள் புனிதா said...

//வயதில் வளர்ந்த குழந்தையே
வம்பு கூடாது
சிரித்து மயக்கும் உன்னையே
நம்பக் கூடாது// இந்த வரிகள் அருமை ....
ஆனாலும் வீட்டுக்குப் போகாம ஆபிஸ்லயே உட்கார்ந்து இந்தப் படத்தை கண்டுப் பிடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்....
பொண்டாட்டி தேவை இல்லையா?

இனியவள் புனிதா said...

இது வரைக்கும் இந்த பாடலை
17வது முறை கேட்டாச்சு.. மீண்டும் நாளைக்கு ....

Dreamzz said...

:)

Dreamzz said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் //
from me too.

G3 said...

என் வாழ்த்துக்களையும் சொல்லிட்டீங்கள்தானே :))))

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் மாப்பள ;))

Selvakumar T said...

வாழ்க வளமுடன்
http://selvakumart.blogspot.com/
http://selvavibes.blogspot.com/

CVR said...

உங்கள் கணவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்!! :-)

ஜி said...

:))))

vaazthukkal... ungalukkum ungal kanavarukkum :)))

கார்த்திகேயன் . கருணாநிதி said...

வாழ்த்துக்களையும் மோகன்.....
என்ன இம்சை ஜஸ்ஸா....
நடத்துங்க....

அன்புடன்
கார்த்திகேயன்

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

"Gud4Nothin" Rags said...

akkaa... kalyanathuku apaala paatelaam elutha aarmbichiteengalonu thideernu thappa nenachiten.. apaala thaan mela oru clip load aagaama irunthatha paathen..

தஞ்சாவூரான் said...

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் :)
திருமணத்துக்குத்தான் வர முடியவில்லை. அதற்கும் சேர்த்து வாழ்த்துக்கள்...

வளரட்டும் உங்கள் ஐஸ் பணி :)

Thamizhmaangani said...

யக்கோவ், மாமாவுக்கு என்னுடைய belated birthday wishes சொல்லிடுங்க. :))

கவிதை சூப்பர்ர்ர்ர்!! கவிதைய எழுதும்போது, முகம் வெட்கத்தால் சிவந்திருக்குமே!! ஹாஹா..

கல்யாண வாழ்க்கைல இதலாம் சகஜம்மப்பா!! :))

மங்களூர் சிவா said...

belated b'day wishes to Prabhu

Mangalore Siva

மங்களூர் சிவா said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா. :-)
/

:))))))))))))

repeateyyyyyyyyyyy


:)))))))))))))

மங்களூர் சிவா said...

வளரட்டும் உங்கள் ஐஸ் பணி :)

Anonymous said...

இந்த மாதிரி எல்லா கவிதைகளும் கதைகளும் சுட்டது தானா? தெரியாம போச்சே...(ஜோக்) இருந்தாலும் வாழ்த்துக்கள்...:) - பிளேடு பக்கிரி

Ramya Ramani said...

belated Wishes for your successful married life and wishes for your husband too :)