எனக்கு படம் பார்த்து விமர்சனம் எழுத வராது. அதனால் எழுதுவதில்லை. இப்பொழுதும் தசாவதாரம் படத்திற்கு விமர்சனம் எழுத வரவில்லை. ஜி.ரா-வின் பதிவைப் பார்த்ததும் அவரிடமே சென்று சண்டையிட்டேன். சரி பதிவே எழுதி விடலாம் என்றெண்ணியதால் இப்பதிவு.
தசாவதாரம் சுமார்தான் என்று பலர் சொல்லியதால் ரொம்ப பெரிய எதிர்பார்ப்புடன் செல்லவில்லை நான். என்றாலும் படம் பார்த்ததும் எனக்கு நிறைவாகவே இருந்தது. பெரியவர்களை எறும்பை விட சிறியதாக்கும் மெஷின்களை கண்டுபிடிப்பதும், கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களை உருவாக்குவதும், கட்டிடங்களின் மேல் சிலந்தியைப் போல் ஏறும் மனிதனாய் மாறுவதுமாய் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களை அமெரிக்கர்கள் செய்வதை ஏற்றுக் கொள்ளும் மக்கள் ஒரு தமிழன் உலகை அழிக்க வல்ல கிருமியை உருவாக்குவதையும் அதனிடமிருந்து உலகைக் காப்பாற்றப் போராடுவதையும் ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறார்கள் எனபதுதான் புரியவே இல்லை :-S
சில பாத்திரங்கள் (ஜப்பானியராய், கலிஃபுல்லா கானாய்) தேவையற்றது என்று முதலில் நினைத்த போதும், எப்படியும் அந்த ஜப்பானிய கமல் இல்லாவிடில் ப்ளெட்சர் கோவிந்தை கொன்று விடுவான், கலிஃபுல்லா இல்லாவிடில் கோவிந்தால் தப்பித்திருக்க முடியாது என்றபோது அந்த பாத்திரங்கள் அவசியமாகிப் போகின்றன. எப்படியும் யாரோ நடித்திருக்க வேண்டிய பாத்திரத்தை கமலே நடித்து விட்டார் போல என்று நினைத்துக் கொண்டேன்.
கமலின் நடிப்பிற்கு தீவிர ரசிகை நான். சலங்கை ஒலி படத்தில் கமலின் நடிப்பை அணு அணுவாய் ரசித்து அந்த ஒரு காரணத்திற்காகவே ரசிகையானேன். ஒன்றை கவனியுங்கள். நான் "கமலின் நடிப்பிற்கு"-தான் தீவிர ரசிகை. "கமலுக்கு" அல்ல. அதனால் கமலை யார் எது சொன்னாலும் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. என்றாலும் ஜி.ராவின் பதிவில் சில விஷயங்களுக்கு மனம் ஒப்பவில்லை.
கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கமல் (ரங்கராஜ நம்பி) வைணவத்தை ஆதரித்தும் சைவத்தை எதிர்த்தும் நடித்திருப்பதுதான் இங்கு பிரச்சினையே. கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இப்படி செய்தது ரங்கராஜ நம்பிதானே ஒழிய கமல் இல்ல. அந்த காலகட்டத்தில் சைவர்களும் வைணவர்களும் தத்தம் சமயம்தான் உயர்ந்தது என்று உறுதியாய் நம்பியதும், மற்றதை அழிக்க முயன்றதையும் நான் பல சரித்திரக் கதைகளில் படித்திருக்கிறேன். ஒரு மலையடிவாரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு சைவ அடியாரின் தலையில் மலையிலிருந்த விஷ்ணு கோவில் இடிந்து அதிலிருந்து உருண்டு வந்த கல் விழுந்து மண்டை உடைந்து ரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாமல் வைணவக் கோவில் இடிந்துவிட்டதற்காய் ஆனந்தக் கூத்தாடினாராம். இந்த கதையை சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த ரங்கராஜ நம்பி ஐந்தெழுத்தை சொல்ல மனமின்றி உயிர்விட்டது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்த இடத்தில் "ரங்கராஜ நம்பி"-யாய்தான் பார்க்க வேண்டுமே தவிர கமலாய் பார்க்கதீர்கள்.
இப்படத்தில் ரங்கராஜ நம்பியை ராமானுஜரின் சீடர் என்று சொல்வார்கள். இவரைப் பற்றியும் படித்திருக்கிறேன் (பா.விஜய்-இன் உடைந்த நிலாக்கள் இரண்டாம் பாகத்தில் முதல் கதையில்). இதே போல் சாமி சிலையை வெளியே எடுக்க விடாமல் கதவை சாத்திக் கொண்டதாயும் பின் யானையை வைத்து கதவை உடைத்து திறந்தனர் என்பதையும் எங்கோப் படித்திருக்கிறேன். கடலில் போட்டதாய் கூட படித்த ஞாபகம். But I am not sure. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த பாத்திரத்தை உள்ளது உள்ளபடியே சொன்னதால் கமலை ஏன் குறை சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. "பொன்னியின் செல்வன்" கதையைப் படித்தவர்களுக்கு "ஆழ்வர்க்கடியான்" பாத்திரம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். வைணவப் பித்தராய் சைவர்களைக் கண்டால் கையில் வைத்திருக்கும் கட்டையால் சைவரின் தலையிலேயே அடிப்பாராம். அதற்காகதான் அந்த கட்டையை எப்போதும் கையிலேயே வைத்திருப்பாராம். இப்படிப்பட்ட பாத்திரத்தைப் படைத்த கல்கி-யை குறை சொல்வதுப் போல இருக்கிறது கமலை நீங்கள் குறை சொல்வது.
முதலில் கடவுளை நம்பும் வைணவப் பித்தராய் வரும் "ரங்கராஜ நம்பி" கமலின் மீது கோபமென்றால் இறுதியில் கடவுள் நம்பிக்கை பெரிதும் இல்லாமல் அசினோடு சண்டை போடும் கமலை தூக்கி வைத்து கொண்டாட வேண்டுமல்லவா? அதை ஏன் யாரும் செய்யவில்லை?
கமலிற்காக பரிந்துப் பேச இதை எழுதவில்லை. ஆனால் ரங்கராஜ நம்பி பாத்திரத்தின் மூலம் வைணவத்தை சொல்கிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடவுள் நம்பிக்கை பெரிதும் உண்டு எனக்கு. டி.டி-யில் போடும் "ஓம் நமச்சிவாய" சீரியலில் நெருப்பு உருவத்தில் நடனமாடும் சிவனை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும் சிலிர்த்துக் கொள்ளும். அதே சமயம் அரங்கநாதரைப் பார்க்கும்பொழுது விழிகள் மூட மனமில்லாமல் திருவுருவத்தை கண்களுக்குள்ளேயே கடத்தி வைத்துக் கொள்ளும் ஆசை எழும். ஆனால் பலமுறை யோசித்த ஒரு விஷயம் உலகையே ஆளும் கடவுளர்கள் இவர்கள். இவர்களுக்கு உலக மக்கள் அனைவரும் சமம் தானே. ஆனால் ஏன் தமிழரை மட்டுமே காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தமிழ்நாட்டிற்கு மட்டுமேயான மொழியை வளர்க்க பாடுபட்டனர் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அப்பொழுது அவர்களுக்கு ஆங்கில, ப்ரெஞ்ச், ஜெர்மன் மக்களெல்லாம் முக்கியமில்லையா என்று பல கேள்விகள் எழுகிறது. யோசிக்க யோசிக்க விடை கிடைக்காமல் நீண்டு செல்கிற விஷயம் இது. யோசிப்பதை விட்டுவிட்டு வணங்குவதோடு நிறுத்திக் கொள் பெண்ணே எனறு எனக்கு நானே சொல்லிக் கொண்டு விட்டேன் :)))
தசாவதாரம்...
பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சுத்தமான வைணவனாய், ஒரு இளம் விஞ்ஞானியாய், அக்மார்க் அமெரிக்க வில்லனாய், அமெரிக்க அதிபராய், காமெடியில் கலக்கிய பலராம் நாயுடுவாய், சித்தசுவாதீனமற்ற குறும்புக்கார பாட்டியாய், தங்கையின் கொலைக்கு பழிவாங்கத் துடிக்கும் ஒரு ஜப்பானியனாய், மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடும் நேர்மையான மனிதனாய், பாடுவதை வாழ்க்கையாய் நினைக்கும் அவதார் சிங்காய், அப்பாவியான கலிஃபுல்லாவாய் கமல் என்னைப் பொறுத்தவரை மீண்டும் ஒருமுறை அவரை நிருபித்திருக்கிறார்.
"லைட்டப் போடுங்கய்யா இங்கென்ன ஃபர்ஸ்ட் நைட்டா நடக்குது" என்றபோது, "Sir can speak five languages in Telugu" என்று சொல்லும்போது பெருமையாய் சிரிக்கும்போது, ராவ் பெயரைக் கேட்டதும் பொங்கி வழிந்த பாசத்தோடு தெலுக்குவாடா என்று கேட்கும்போது இப்படி பல இடங்களில் பல்ராம் நாயுடுவைப் பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
Big kudos Kamal!!!
ஏதேனும் உங்களை வருத்தப்படும் செய்யும் வகையில் எழுதி இருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் ஜி.ரா அண்ணா.
பி.கு: எனக்கு ஆபிஸில் blogger access இல்லையென்பதால் எந்த ஒரு பின்னூட்டத்திற்கும் பதிலளிக்க இயலாமல் இருக்கிறேன். தயவு செய்துப் பொறுத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து பின்னூட்டமிடும் அன்பு உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் :)))
Tuesday, June 24, 2008
தசாவதாரம் - ஜி.ரா-வின் பதிவிற்காக!
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
me the firstuu??
ஹீஹீஹீ.. நீங்களும் போட்டாச்சா தசவதாரம் பதிவை? ;-)
//நான் "கமலின் நடிப்பிற்கு"-தான் தீவிர ரசிகை. "கமலுக்கு" அல்ல. அதனால் கமலை யார் எது சொன்னாலும் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை.//
Same Blood... But Neenga Romba safety-ya post pottirukkeenga...
//தமிழன் உலகை அழிக்க வல்ல கிருமியை உருவாக்குவதையும் அதனிடமிருந்து உலகைக் காப்பாற்றப் போராடுவதையும் ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறார்கள் எனபதுதான் புரியவே இல்லை//
இதுக்கு காரணம் நம்ம படங்கள்ல உள்ள தரம் தான் காரணம். " "கை பார்த்து அதை ஒரு சின்ன தொட்டிக்குள் பொம்மை கப்பலை வைத்து எடுத்தார்கள் என்று அவர்களே சொல்லியும் நம்ப முடியவில்லை. ஆனால் நம்ம ஆட்கள் அது போல் எடுப்பதில்லையே!
//எப்படியும் யாரோ நடித்திருக்க வேண்டிய பாத்திரத்தை கமலே நடித்து விட்டார் போல என்று நினைத்துக் கொண்டேன்.//
இதே தான் நானும் எல்லாரிடமும் சொல்லிக்கிட்டு இருக்கேன். யாரையே ஒருத்தர அந்த வேடத்துல போடறதுக்கு கமலே நடிச்சிருக்கார். இதில் என்ன தப்பு?
//யோசிப்பதை விட்டுவிட்டு வணங்குவதோடு நிறுத்திக் கொள் பெண்ணே எனறு எனக்கு நானே சொல்லிக் கொண்டு விட்டேன் :)))//
ஆமாம்! ரொம்ப யோசிக்காதீங்க. அன்பே சிவம்!
சபாஷ் ;-)
//பெரியவர்களை எறும்பை விட சிறியதாக்கும் மெஷின்களை கண்டுபிடிப்பதும், கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களை உருவாக்குவதும், கட்டிடங்களின் மேல் சிலந்தியைப் போல் ஏறும் மனிதனாய் மாறுவதுமாய் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களை அமெரிக்கர்கள் செய்வதை ஏற்றுக் கொள்ளும் மக்கள் ஒரு தமிழன் உலகை அழிக்க வல்ல கிருமியை உருவாக்குவதையும் அதனிடமிருந்து உலகைக் காப்பாற்றப் போராடுவதையும் ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறார்கள் எனபதுதான் புரியவே இல்லை :-S//
நல்ல கேள்வியா சும்மா நச்சுனு கேட்டீங்க!
"ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு... புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்! -அப்துல் கலாம்"
I like it the above line immsai
puduvai siva.
அருமையான அலசல்....
அருமையான அலசல்....
அருமையான அலசல்....
ஸ்ஸப்ப்பா இந்த படம் பாத்த கொடுமைய விட பெரும் கொடுமையா இருக்கு இந்த விமர்சனம் பதிவு.
:)))
ஆஹா எங்கு காணினும் தசாவதாரம் பற்றிய பதிவு..ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து
//கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்களை அமெரிக்கர்கள் செய்வதை ஏற்றுக் கொள்ளும் மக்கள் ஒரு தமிழன் உலகை அழிக்க வல்ல கிருமியை உருவாக்குவதையும் அதனிடமிருந்து உலகைக் காப்பாற்றப் போராடுவதையும் ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறார்கள் எனபதுதான் புரியவே இல்லை :-S//
:) :)
:-)
//
ஏதேனும் உங்களை வருத்தப்படும் செய்யும் வகையில் எழுதி இருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் ஜி.ரா அண்ணா. //
இப்பிடி எழுதுனதுலதான் வருத்தம் வந்துருச்சு. :D ஆனாலும் தையைய கூர்ந்து மன்னிச்சாச்சு :)
சரி. பதிவுக்கு வருவோம். படம் எனக்குப் பிடிச்சிருந்தது. நானும் பாத்தேன். ஆனால் அதில் பிடிக்காத அம்சங்களைக் குறிப்பிட்டும் எழுதியிருந்தேன்.
சரிம்மா கமலை விட்டுர்ரேன். அந்த ரெங்கராஜ் நம்பியை எடுத்துக்கிருவோம். அந்தக் குலோத்துங்கனத்தான் வில்லனாக்கியாச்சே. அதுனால அவன் நல்லவனா கெட்டவனா... அல்லது நல்ல சைவனா.. கெட்ட சைவனான்னு பாக்கத் தேவையில்லை. படத்துல அவன் மட்டும் இல்லை...எல்லாச் சைவர்களையும் வில்லனாக் காட்டியாச்சு. ஆகையால... சைவர்களையும் விட்டுருவோம்.
ஆனால் ரங்கராஜ் நம்பி. அந்தப் பாத்திரம் நல்லவரா கெட்டவரா? அதான் கேள்வி. ஏன்னா..... கல்லை மட்டும் கண்டால்னு கேள்வி கேக்குறவரு... அஞ்சுல எட்டு போகாதுன்னு சொல்றத எப்படி எடுத்துக்கிறது? ஒருவேளை ரங்கராஜ நம்பியும் வைணவமே பெரிது. விஷ்ணுவே பெரிய கடவுள்னு சொல்றவரா இருந்தா... அஞ்சுல எட்டு போகாதுன்னு சொல்றதும்....அறிவோமை ஹரி ஓம்னு மாத்துறதும்...ஒப்புக்கொள்ளலாம். ஒருவேளை அந்த ரங்கராஜு உண்மையிலேயே ஆத்ம பக்தியில் இருந்தால்...நமச்சிவாயன்னு சொல்றது அவருக்குப் பெரிய விஷயமாகவே இருக்காது. ஏன்னா ஆழ்வார்கள்ல யாரோ ரெண்டு பேரும் நாயன்மார்கள்ள ஒரு பத்துப் பன்னிரண்டு பேரும்...இந்த அருணகிரி மாதிரி ஆளுங்களும் சிவாய முருகாய கிருஷ்ணாயன்னு சொல்லீருக்காங்களாம். ஆனால் அவரை உத்தமராக் காட்டி...well...கருணாநிதிகிட்ட இந்தப் பாத்திரத்தின் மனவுறுதியைக் குறிப்பிட்டு அதைச் சிறப்பாகச் சொன்னாரம் கமல். அதையும் கருணாநிதி பாராட்டியிருக்காரம். ஆனா குலோத்துங்கனோட உறுதிக்கும் நம்பியோட உறுதிக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியலை. என்ன குலோத்துங்கன் மன்னன். அதுனால கடல்ல தூக்கிப் போட்டான். நம்பி அப்படியில்லை. ஆகையால செத்தாலும் சிவன் பேரைச் சொல்லக் கூடாதுன்னு நெனைச்சான். அப்புறமென்ன ரெண்டு பேருக்கும் வித்யாசம்? ஒருவேளை சிவன் பேரைச் சொல்றதுல வருத்தமே இல்லை. ஆனா நீ சொல்லி நான் செஞ்சுட்டா உன்னோட ஆணவம் வெற்றி பெற்றதா இருக்கும்..அதுனால சொல்லலைன்னு சொல்லீருக்கலாம். ஆனால் அஞ்சு எட்டு டயலாக்கு எல்லாம் வெச்சிப் பாத்தா... நம்பி அப்படியெல்லாம் நெனைக்கிறவர்னு தோணலை.
அப்படி இருக்குறப்போ அந்தப் பாத்திரத்தின் மனவுறுதியை முதல்வரிடம் சிலாகித்துக் கமல் பேசியதை வெச்சுப் பாக்குறப்போ....நம்பி நல்லவன்னு அவர் சொல்ல வர்ரதாத்தான் எனக்குத் தோணுது. அதைத்தாம்மா நான் கேள்வி கேட்டேன். உனக்காவது நம்பி நல்லவனா? கெட்டவனா? நல்ல வைணவனா? கெட்ட வைணவனான்னு புரிஞ்சதா?
எனக்கு வைணவத்தின் மேல வெறுப்பெல்லாம் கிடையாது. தமிழ்ச் சொல்லாண்டு ஆண்டாள் பாடிய பாவும் பல்லாண்டாய் கோயிலில் நின்றாண்டு வரும் பல்லாண்டும் எனக்கும் பிடிக்கும். ஆனா அந்தக் கேள்விகள் கேள்விகளாத்தானே இருக்கு. நீயாச்சும் பதில் சொன்னா இந்த அண்ணனுக்கு ஏதாச்சும் புரிஞ்சாலும் புரியலாம். :-)
//எனக்கு ஆபிஸில் blogger access இல்லையென்பதால் எந்த ஒரு பின்னூட்டத்திற்கும் பதிலளிக்க இயலாமல் இருக்கிறேன். தயவு செய்துப் பொறுத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து பின்னூட்டமிடும் அன்பு உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் :)))//
http://anonymouse.org/anonwww.html
இந்த websiteக்கு போய் இலகுவாக நீங்கள் தடுக்கப்பட்ட வலைத்தளங்களை browse பண்ணலாம்
//ஏன் மறுக்கிறார்கள் எனபதுதான் புரியவே இல்லை :-S//
அலோ...படத்துல பாஸ்கர் :-S போட்டாரு!
நீங்க பதிவுல போடறீங்களா??
:-)))
//உலக மக்கள் அனைவரும் சமம் தானே. ஆனால் ஏன் தமிழரை மட்டுமே காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தமிழ்நாட்டிற்கு மட்டுமேயான மொழியை வளர்க்க பாடுபட்டனர் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது//
ஹிஹி
புதுப் பொண்ணு இப்படி எல்லாமா யோசிச்சிக்கிட்டு இருக்கறது? அட என்னம்மா நீயி! :-)
நடராசனும் சரி, ரங்கராசனும் சரி...
தமிழரை மட்டுமே காத்துக்கிட்டு இல்லை!
சில தமிழர்கள் தான் ஏதோ, தாங்கள் மட்டுமே நடராசனையும் ரங்கராசனையும் காத்துக்கிட்டு இருக்குறதா நெனச்சிக்கிட்டு இருக்காய்ங்க! அதான் உன்னுடைய புரியாத புதிரின் விடை! :-))
//லைட்டப் போடுங்கய்யா இங்கென்ன ஃபர்ஸ்ட் நைட்டா நடக்குது" என்ற போது, "Sir can speak five languages in Telugu" என்று சொல்லும்போது... இப்படி பல இடங்களில் பல்ராம் நாயுடுவைப் பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை//
தெலுங்கல அந்தப் பாத்திரம் பலராம் நாடாராமே! Sir can speak five languages in Tamizhன்னு வருதா என்ன?
அங்கு பலராம் நாடாரைப் பார்த்தும் நல்லாச் சிரிக்கறாங்களாம்!
ஆயிரம் நிறை குறைகளைத் தாண்டி, தமிழ்ச் சினிமாவில் எல்லையைத் தாண்டிச் சிந்திக்கவும் முடியும்,
அதன் மூலம் மக்களைச் சந்திக்கவும் முடியும் என்பதைக் கமல் செய்து காட்டுவது ஒன்றே மகத்தானது!
குறைகள் இருக்கட்டும். கலைஞனின் நிலவில் கறைகளும் அழகு தான்! :-)
"Hero shines, but there is no story" இது நான் சொல்லலிங்க அம்மிணி Business Line 26ம் தேதி பேப்பர் 24ம் பக்கம் பெரிய் ஆர்டிகிள் வந்திருக்கு பாருங்க!!
:)))))
/
மங்களூர் சிவா said...
"Hero shines, but there is no story" இது நான் சொல்லலிங்க அம்மிணி Business Line 26ம் தேதி பேப்பர் 24ம் பக்கம் பெரிய் ஆர்டிகிள் வந்திருக்கு பாருங்க!!
:)))))
/
என்னது விடிஞ்சாதான் பேப்பர் கிடைக்குமா????
:((((
//
ஏதேனும் உங்களை வருத்தப்படும் செய்யும் வகையில் எழுதி இருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் ஜி.ரா அண்ணா.//
ஜெ... தமிழரசி சொன்ன உங்க அண்ணா இவர் தான் போல.. நான் அங்க அபி அப்பானு நினைச்சிட்டேன். :(
//பி.கு: எனக்கு ஆபிஸில் blogger access இல்லையென்பதால் எந்த ஒரு பின்னூட்டத்திற்கும் பதிலளிக்க இயலாமல் இருக்கிறேன். தயவு செய்துப் பொறுத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து பின்னூட்டமிடும் அன்பு உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் :)))//
அட மோகன் பிரபு என்று ஒருவர் என்ன செய்கிறார். சமையல் செய்வதும் துனி துவைப்பதும் மட்டுமே அவர் வேலை அல்ல.. இதையும் பயன்படுத்த அனுமதியுங்கள் தோழியே. :P
கமலை பார்த்து ஏன் தான் இப்படி மக்கள் காண்டாகறாங்கனு தெரியலை. அவர் எவ்வளவு உழைத்திருக்கிறார்... நம்ம கிட்ட எப்போவும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. ரொம்ப புத்திசாலி அல்லது திறமைசாலியை எதிர்த்து எதாவது சொல்வது தான் நம் திறமை அல்லது புத்திசாலித்தனத்தை காட்டும் வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஹ்ம்ம்ம்.. இட்ஸ் ஆல் இன் த கேம் யார்.. :P
:))
Post a Comment