Tuesday, June 24, 2008

காதல் நீதானா?!! - I

காலை ஆறு மணி. "துதிப்போர்க்கு வல்வினைப்போம்..." அன்று ஆரம்பித்த மொபைல் ஃபோனை தலையணையடியில் கைவிட்டு துழாவி எடுத்த மைதிலி கண் திறக்காமலே அலாரத்தை நிறுத்தினாள். ஒரு பத்து நிமிடங்கள் புரண்டு புரண்டுப் படுத்தவளுக்கு அன்று ஒன்பது மணிக்கு ஆன்சைட்டுக்கு பண்ண வேண்டிய கால் நினைவுக்கு வர வேகமாக எழுந்தாள். படபடவென்று காலை வேலைகளை முடித்து குளித்து கிளம்பியவள் ஆபிஸ் பஸ்ஸை பிடிக்க வேண்டுமென்று அறைத் தோழியுடன் வேகமாக தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். வழியில் இருந்த ஒரு கடையில் அவள் தோழி ஏதோ வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று சென்றதால் தெருவை வேடிக்கைப் பார்த்தபடி காத்திருக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுதுதான் அவளது தோழிக்கு அவள் நன்றிக்கடன் பட வேண்டிய சூழ்நிலை உண்டானது. வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் விழிகள் சற்றுத் தள்ளி விரிந்திருந்த ஒரு மரத்தையும் அதிலிருந்து உதிர்ந்து தரையெங்கும் சிதறிக் கிடந்த ஊதா நிறப் பூக்களையும் ரசித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பூக்களை மிதிக்க மனமில்லாமல் அதன் நடு நடுவே இருந்த இடைவெளியில் கவனமாய் நடந்து வந்த அவனை கவனித்தாள். இதே மாதிரி காதல் தேசம் படத்துல தபு நடந்து வருவா இல்ல- என்று ஒரு நொடி நினைத்தவள் பொதுவாக பெண்களுக்கு இருக்கிற மென்மை முதன் முதலாய் ஒரு ஆணிடம் பார்க்கிறாள். ஏனோ சொல்லமுடியாத சந்தோஷத்தில் மனம் விசிலடிக்க அவனை தொடர்ந்து செல்ல முடிவு செய்தாள். அவளை அவன் கடக்கையில் அவளது தோழி வந்து சேர்ந்து கொள்ள அவளை இழுத்துக் கொண்டு வேகமாய் அவன் பின்னாலே நடந்தாள். அவனும் அவளது நிறுத்தத்திலேயே போய் நிற்க அவனருகில் சற்று தள்ளி நின்று கொண்டாள். அவன் கழுத்தில் இருந்த ஆபிஸ் ஐடி கார்டைப் பார்த்து அவன் அவளது அலுவலகம் இல்லையென்பதை உறுதி செய்து கொண்டாள்.

படிய வாரிய தலையில் காற்றுக்கு லேசாய் முன்புறம் கலைந்த முடி, கருப்புமின்றி வெள்ளையுமின்றி ஒரு கலவையான நிறம், அங்கும் இங்குமாய் அலைபாயாத விழிகள், எடுப்பான நாசி, அளவான உடல், நல்ல உயரம் என்று அவனையே வைத்தக் கண் வாங்காமல் அளந்துக் கொண்டிருந்த அவளை அவன் கவனிக்கவேயில்லை. எப்படியாவது அவனிடம் பேசி அவனையும் பேச வைத்து விட வேண்டும் என்று எண்ணியவளுக்கு திடீரென்று வந்த யோசனையால் கைப்பையினுள் கைவிட்டுத் துழாவி ஒரு சிறிய துண்டு பேப்பரை எடுத்துக் கொண்டு அவனருகில் சென்றாள். அவனோ அவளை கவனிக்காமல் காதில் மாட்டியிருந்த ஹெட்ஃபோனில் கேட்டுக் கொண்டிருந்த பாட்டிலேயே கவனமாயிருந்தான். அவனது காலிடம் கையிலிருந்த பேப்பரை போட்டவள் அவனிடம் மெதுவாய் "எக்ஸ்க்யூஸ் மி" என்றாள். வெகு அருகில் நிழலாட திரும்பியவன் அவளைக் கண்டு ஒரு நொடி புரியாமல் விழித்து காதிலிருந்த ஃஹெட்போனைக் கழட்டி "யெஸ்" என்றான்.

"பேப்பர் மிஸ் ஆயிடுச்சு" என்று ஒரு இனம் புரியாத உணர்ச்சியில் உளறினாள்.

"எந்த பேப்பர்?" என்று அவன் புரியாமல் கேட்க ஹையா! தமிழ்ப் பையன் தான் என்று உள்ளம் குதூகலிக்க வார்த்தைகள் மடை திறந்த வெள்ளமாய் கொட்டின.

"என் கைல வச்சிருந்த பேப்பர் மிஸ் ஆகி உங்க கால்கிட்ட விழுந்துடுச்சு. கொஞ்சம் தள்ளிக்கிட்டிங்கனா எடுத்துக்குவேன்"

"ஓ! சாரி. எடுத்துக்குங்க" என்று கொஞ்சம் தள்ளியவன் அவள் எடுக்க வருவதற்குள் அவனே குனிந்து எடுத்து அவளிடம் தந்தான்.

"பேப்பர மிதிச்சிட்டேனுங்களா?" என்று கேட்டவனைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள்

"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. ரொம்ப தேங்க்ஸ்" என்று புன்னகைத்தாள். பதிலுக்கு அவனும் புன்னகைக்க அய்யோ! என்று அந்த புன்னகையில் அலைபாய்ந்த மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்.

"நீங்க கோயமுத்தூருங்களா?" கேட்ட அவளை ஆச்சரியமாய் பார்த்தவன்

"இல்லைங்க. ஈரோடு. எப்படி கண்டுபிடிச்சீங்க?" என்றான்.

"இதுல என்னங்க இருக்கு? அதான் உங்க பேச்சேக் காட்டிக் குடுக்குதே. நான் திருச்செங்கோடுதான்"

"அட! நம்மூருங்களா நீங்க" என்று குதூகலித்தவன் "பை த வே நான் மகேஷ்" என்றான்.

"நான் மைதிலி...." என்று ஆரம்பித்து பேசி மொபைல் நம்பரை பரிமாறிக் கொண்டவர்கள் அவரவர் பேருந்து வரவும் விடை பெற்றனர்.

அதன் பிறகு சொல்லவா வேண்டும்? ஆருயிர் ஏழுயிர் எட்டுயிர் நண்பர்களாகி அவன் வீட்டிற்கு "ஹலோ ஆன்ட்டி! எப்படி இருக்கீங்க?" என்று இவள் வாரத்திற்கு ஒருமுறை ஃபோன் செய்வதும் "கோவிலுக்கு போகணும்னு சொன்னதால இந்த வாரம் வீட்டுக்கு வர மாட்டென்றாளா? நான் சொல்றேன் அங்கிள். அடம் பிடிச்சா பார்சல் பண்ணி அனுப்பிடறேன் கவலைப்படாதீங்க" என்று அவன் அப்பா இவனிடம் சிபாரிசுக்கு வருமளவிற்கு ஆகி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஒரு வருடம் கழித்து...

"ஹே மைத்தி!"

"சொல்..லு..டா... மணி ஒண்ணாச்சு. தூங்கலையா நீ?"

"தூக்கம் வரலைடி. உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு"

"எருமை! உனக்கு தூக்கம் வரலைனா என்னையும் தூங்க விடாம பண்ணனுமா? ஒரு மணிக்கு என்னடா உனக்கு பேசணும் போல இருக்கு?"

"ஒரு மணிக்கு மட்டு இல்லடி... ஒரு நாளுல 24 மணி நேரமும், வாரத்துல ஏழு நாளும், வருஷத்துல 365 நாளும்..."

"டேய்ய்ய்ய்ய்.... என் பொறுமைய சோதிக்காத... நானே அரைத் தூக்கத்துல பேசிட்டு இருக்கேன். நீ புள்ளி விவரம் சொல்லிட்டு இருக்காத... சீக்கிரமா சொல்லு"

"இருடி... சொல்ல விடு... ஒரு நாளுல 24 மணி நேரமும், வாரத்துல ஏழு நாளும், வருஷத்துல 365 நாளும், என் ஆயுசுல எல்லா வருஷமும் ஐ மீன் என் ஆயுசு முழுக்க உன்னோடவே இருக்கணும் போல இருக்குடி" - இறுதியா சொல்லும்போது அவன் குரல் ஒரு வித அச்சம் கலந்த சந்தோஷத்தில் குழைந்தது. அவனது வார்த்தைகளில் திடுக்கிட்டு தூக்கம் மொத்தமாய் தொலைத்து விருட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

"என்னடா சொல்ற?" அவள் குரலில் ஆச்சரியம் அதிர்ச்சி எல்லாம் அப்பட்டமாய் தெரிந்தது.

"எனக்கு கொஞ்ச நாளாவே அப்படியேதாண்டி தோணுது. என்ன பண்றதுனு தெரியலை. எனக்கு எதுனாலும் நீதான ஐடியா குடுப்ப. அதான் உன்கிட்டயே கேக்கலாம்னு சொன்னேன். என்ன பண்ணட்டும் நான்?"

இரண்டு நிமிடங்கள் பதிலில்லாமலே இருக்க அதற்கு பொறுமையிழந்தவனாய்

"ப்ளீஸ்! கோபம்னா நல்லா திட்டிக்கோ. பேசாம மட்டும் இருந்துடாதடி. ப்ளீஸ்...." என்றான். அதற்கும் பதில் பேசாமலே அவள் இருக்க

"எதாவது சொல்லு. நான் என்ன பண்ணட்டும்?"

"ம்ம்ம்ம்...." என்று இழுத்தாள். அதற்குள் என்ன சொல்வாளோ என்று அவனது இதயம் வேகமாய் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

"வீட்டுல கேட்டு கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவள் சொல்லவும் அவன் காதுகளையே அவனால் நம்ப முடியவில்லை.

"ஹே! நிஜமாதான் சொல்றியா?"

"நிஜம்னு எப்படி ப்ரூவ் பண்ணனும் உனக்கு?"

"ஹே! தேங்க்ஸ்டி செல்லம்.... நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன். யு நோ ஒன்திங்க்? எனக்கு லாஸ்ட் த்ரீ மன்த்ஸாவே ஒரு மாதிரி வித்தியாசமா ஃபீல் பண்ணினேன். இப்போதான் அது காதல்னு கண்டுபிடிச்சேன்" என்று ஏதோ சாதித்துவிட்ட பெருமையில் சொல்லிக் கொண்டிருந்தான்.

"ஹ்ம்ம்ம்... உனக்கு லாஸ்ட் த்ரீ மன்த்ஸாதான் அப்படி... எனக்கு உன்னை ஃபர்ஸ்ட் பாத்தப்பவே ஒரு டிஃபரண்ட் ஃபீலிங்" என்று அவள் மெதுவாய் சொல்லி நிறுத்த

"ஹே ரியலி??? என்னால நம்பவே முடியலை. என்கிட்ட வந்து பேசினப்பவா?"

"இல்ல. அதுக்கு முன்னாடியே அந்த தெருல நீ நடந்து வந்தப்போ உன்னைப் பார்த்தேன். உன்னைப் பிடிச்சதாலதான் நானா பேப்பர கீழ போட்டுட்டு வந்து பேசினேன்" என்று அவள் சிரிக்க

"அடிப் பாவி! என்னை ஏமாத்திட்டியா நீ?" என்று செல்லக் கோபம் காட்டியவன்

"எதனால உனக்கு என்னை அப்போ பிடிச்சது?" என்று ஆர்வமாய் கேட்டான்.

"அதெல்லாம் சொல்ல மாட்டேன்"

"ப்ளீஸ்டி... சொல்லு"

"அதை நமக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் சொல்றேன். ப்ளீஸ் கேக்காத..."

"ஓகே... ஓகே..."

"இந்த வீக் எண்ட் ஊருக்கு போறோம் இல்ல. நான் எங்க வீட்டுல கேக்கறேன். நீ உங்க வீட்டுல கேளு...." என்று வீட்டில் பேசுவதைப் பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.


மூன்று மாதங்கள் கழித்து...

"ஹலோ! எங்க இருக்க?"

"நான் உன்னைப் பாத்துட்டேன். அப்படியே ரைட் சைடுல திரும்பி நாலாவது டேபிள்ல பாரு"

CCD-யினுள் அவளுக்காக காத்திருந்த மகேஷின் இருப்பிடத்தை கண்டுபிடித்த மைதிலி நேராக அவனிடம் சென்று எதிர்புறமிருந்த சேரினில் அமர்ந்தாள்.

"வந்து ரொம்ப நேரமாச்சா?"

"இல்லடி... இப்பதான்... ஒரு ஃபைவ் மினிட்ஸ்தான் ஆகுது"

அமைதியாய் அவளது பையிலிருந்து இன்விடேஷனை எடுத்து அவன் முன் நீட்டினாள்.

"இந்தா என் வெட்டிங்க் கார்ட்" என்று அவள் நீட்டியதும் வாங்கி அதைப் பிரித்துப் பார்த்தான். படித்து முடித்து மடித்து வைத்தவன் எவ்வித சலனமுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் முன் அவனும் ஒரு கார்டை நீட்டினான்.

"இந்தா என்னோட இன்விடேஷன்"


(தொடரும்...)

31 comments:

FunScribbler said...

யக்கா am the first!

யப்பா இப்படி first என்ற எழுதனும்னு எவ்வளவு நாளா ஆசை தெரியுமா! ஹஹ...

யக்கா, கதை சூப்ப்ப்பர்ர்ர்ர்!!!

FunScribbler said...

//மரத்தையும் அதிலிருந்து உதிர்ந்து தரையெங்கும் சிதறிக் கிடந்த ஊதா நிறப் பூக்களையும் ரசித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பூக்களை மிதிக்க மனமில்லாமல் அதன் நடு நடுவே இருந்த இடைவெளியில் கவனமாய் நடந்து வந்த அவனை கவனித்தாள்//

ம்ம்ம்..என் வீட்டு பக்கத்தலயும் மரம் இருக்கு. அங்கயும் பூ கீழே விழுது. ஆனா.. :((
:))

FunScribbler said...

//படிய வாரிய தலையில் காற்றுக்கு லேசாய் முன்புறம் கலைந்த முடி, கருப்புமின்றி வெள்ளையுமின்றி ஒரு கலவையான நிறம், அங்கும் இங்குமாய் அலைபாயாத விழிகள், எடுப்பான நாசி, அளவான உடல், நல்ல உயரம் என்று அவனையே வைத்தக் கண்//

கற்பனை செய்து பார்த்தேன்.. நானே கொஞ்சம் நேரம் அசந்துபோயிட்டேன். very lovely description!:)

FunScribbler said...

//நீ புள்ளி விவரம் சொல்லிட்டு இருக்காத... சீக்கிரமா சொல்லு"//

பையன் விஜய்காந்த ரசிகரோ??:))

FunScribbler said...

//இந்தா என்னோட இன்விடேஷன்"


(தொடரும்...)//

வாவ், சூப்பரான இடத்தில் பிரேக் போட்டீங்க, நல்லா interestingஆ போகுது. அடுத்த பாகத்த சீக்கிரம் போடுங்க!

நான் அப்பவே சொன்னேன், கவிதை, கதை எல்லாம் கல்யாணத்துக்கு அப்பரம் கண்டிப்பா வரும்னு! ஹாஹா.. வந்துட்டாங்கய்யா!!

Ramya Ramani said...

ஆஹா நல்ல தொடக்கம்!
\\படிய வாரிய தலையில் காற்றுக்கு லேசாய் முன்புறம் கலைந்த முடி, கருப்புமின்றி வெள்ளையுமின்றி ஒரு கலவையான நிறம், அங்கும் இங்குமாய் அலைபாயாத விழிகள், எடுப்பான நாசி, அளவான உடல், நல்ல உயரம் என்று அவனையே வைத்தக் கண் வாங்காமல் அளந்துக் கொண்டிருந்த அவளை அவன் கவனிக்கவேயில்லை.\\

இது நல்லா இருக்கே :)

இவன் said...

கதை எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ஏன் இப்படி காதலர்களைப்பிரிக்கிறதிலேயே இருக்கிறீங்க??

//மரத்தையும் அதிலிருந்து உதிர்ந்து தரையெங்கும் சிதறிக் கிடந்த ஊதா நிறப் பூக்களையும் ரசித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பூக்களை மிதிக்க மனமில்லாமல் அதன் நடு நடுவே இருந்த இடைவெளியில் கவனமாய் நடந்து வந்த அவனை கவனித்தாள்//

நானும்தான் வருசக்கணக்ககா பூக்களை மிதிக்காம நடக்கிறேன் எவளாவது அதப்பாக்கிறாளா என்ன கொடுமை இவன் இது??

கருணாகார்த்திகேயன் said...

இந்த காதல் கதைக்கு நல்ல முடிவு
தந்த இம்சை பேருக்கு கோயில்ல
அர்ச்சனை பன்றண்டா சாமிய்ய்ய்ய்யி....
கவுத்துடாததிங்க காதல்அரசி.. sorry இம்சைஅரசி...

அன்புடன்
கார்த்திகேயன்

Vijay said...

ஒரு தடவை பைக்கில் செல்லும் போது கீழே விழுந்து கிடந்த கொடியை பக்கத்திலிருக்கிற மரம் மேல் படர விட்டுட்டுப் போயிருக்கேன். நம்மளால பைக்கை எல்லாம் கொடிக்குக் கொடுக்க முடியாது. ஒரு Aunty கூட திரும்பிப் பார்க்கல. ஹ்ம் அதுக்கெல்லாம் தலையில நல்லா எழுத்தாணியால செதுக்கியிருக்கணும்.நம்ம தலையில பிரம்மா கிறுக்கி விட்டுட்டாரு :(

கதை பிரமாதம்.

Vijay said...

திருமதி.இம்சை அரசி,
உங்கள் கதைகளில் வரும் கதாபாத்திரம் எல்லாம் விக்ரமன் படத்துல எல்லோரும் நல்லவங்களா வருவாங்களே அது போல், எல்லோரும் ஒரு மென்மையான பாத்திரங்களாக இருக்கிறார்கள்?

அதே மாதிரி கதாநாயகிகள் எல்லோரும் ரொம்ப சீக்கிரமா மனதை பரி கொடுத்துடறாங்களே. இந்த பாத்திரங்கள் யாவும் உங்களுடை character'ன் பிரதிபிம்பமா?
சாரி, நீங்க திருமதியான பிறகு, நான் இந்த கேள்வியைக் கேட்கக்கூடாது தான். இருந்தாலும், கேட்காமல் இருக்க முடியவில்லை.

இருந்தாலும் கதைகள் யாவும் அருமை. நம்ம கற்பனைக்குதிரை இந்தளவுக்குப் பாயாது.

அன்புடன்,
விஜய்

MyFriend said...

சஸ்பன்ஸ் தூக்கலா இருக்கு. :-)

Sen22 said...

//@இவன் said...
நானும்தான் வருசக்கணக்ககா பூக்களை மிதிக்காம நடக்கிறேன் எவளாவது அதப்பாக்கிறாளா என்ன கொடுமை இவன் இது??//

Athukkellam Oru luck venumungoo..
antha luck namma rendu perukkum ILLA, ILLA...

Same Blood...
:(((((

Sathiya said...

எப்படி இந்த மாதிரி எல்லாம் எழுதறீங்க. அருமையான நடை! ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. மனதில் இருக்கும் பழைய நினைவுகளை எல்லாம் கடைந்து வெளியே எடுக்கறீங்க. சுபமான முடிவாதான் இருக்கும்னு நினைக்கிறேன். ஏமாத்திடாதீங்க!

//பெண்களுக்கு இருக்கிற மென்மை முதன் முதலாய் ஒரு ஆணிடம் பார்க்கிறாள்//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. நாங்களெல்லாம் என்ன நிழல்கள் படத்துல வர ராஜசேகர் மாதிரி ரோஜா பூவுல சிகரெட்டை அனைப்போம்னு நினைச்சீங்களா? அழகான பூக்களை நசுக்க எங்களுக்கும் மனசு வராது. இன்னும் சொல்ல போனா நீங்க ரோஜாவை பிரித்து தலையில் வைத்து கொள்ள ஆசை படுவீர்கள், நாங்க செடியிலேயே வைத்து அழகு பார்க்க ஆசை படுவோம்.

தமிழன்-கறுப்பி... said...

///காலை ஆறு மணி. "துதிப்போர்க்கு வல்வினைப்போம்..." அன்று ஆரம்பித்த மொபைல் ஃபோனை தலையணையடியில் கைவிட்டு துழாவி எடுத்த மைதிலி கண் திறக்காமலே அலாரத்தை நிறுத்தினாள்.///

கதையொன்றின் ஆரம்பத்திற்கேயான அம்சமான வாசிக்கத்தூண்டுகிற வரிகள்...

தமிழன்-கறுப்பி... said...

///இதே மாதிரி காதல் தேசம் படத்துல தபு நடந்து வருவா இல்ல- என்று ஒரு நொடி நினைத்தவள் ///

ஏன் நீங்க நடந்ததில்லையா...:)

தமிழன்-கறுப்பி... said...

///பொதுவாக பெண்களுக்கு இருக்கிற மென்மை முதன் முதலாய் ஒரு ஆணிடம் பார்க்கிறாள். ஏனோ சொல்லமுடியாத சந்தோஷத்தில் மனம் விசிலடிக்க அவனை தொடர்ந்து செல்ல முடிவு செய்தாள். அவளை அவன் கடக்கையில் அவளது தோழி வந்து சேர்ந்து கொள்ள அவளை இழுத்துக் கொண்டு வேகமாய் அவன் பின்னாலே நடந்தாள்.///

ஓ... இது மாதிரி இருந்தா பிடிக்குமா...

தமிழன்-கறுப்பி... said...

///படிய வாரிய தலையில் காற்றுக்கு லேசாய் முன்புறம் கலைந்த முடி, கருப்புமின்றி வெள்ளையுமின்றி ஒரு கலவையான நிறம், அங்கும் இங்குமாய் அலைபாயாத விழிகள், எடுப்பான நாசி, அளவான உடல், நல்ல உயரம்///

இப்படி இருந்தாதான் பாப்பாங்களா பொண்ணுங்க..என்னை மாதிரி உயரம் கொஞ்சம் கம்மியா உடம்பு கொஞ்சம் ஒல்லியா இருந்தா பாக்க மாட்டாங்களா...:)

தமிழன்-கறுப்பி... said...

///அவனோ அவளை கவனிக்காமல் காதில் மாட்டியிருந்த ஹெட்ஃபோனில் கேட்டுக் கொண்டிருந்த பாட்டிலேயே கவனமாயிருந்தான். அவனது காலிடம் கையிலிருந்த பேப்பரை போட்டவள் அவனிடம் மெதுவாய் "எக்ஸ்க்யூஸ் மி" என்றாள்///

அட இப்படில்லாம் வேற டெக்னிக் இருக்கா சொல்லவே இல்ல...

தமிழன்-கறுப்பி... said...

///எனக்கு கொஞ்ச நாளாவே அப்படியேதாண்டி தோணுது. என்ன பண்றதுனு தெரியலை. எனக்கு எதுனாலும் நீதான ஐடியா குடுப்ப. அதான் உன்கிட்டயே கேக்கலாம்னு சொன்னேன். என்ன பண்ணட்டும் நான்?"///

இது நல்லாருக்கு அவங்ககிட்டயே கேக்கலாமா? :) இப்படி ஒரு புரிந்துணர்வு இருந்தா பிரச்சனையே இருக்காதே...

மங்களூர் சிவா said...

:)

தமிழன்-கறுப்பி... said...

திரும்பவும் அதே உற்சாகத்துக்கு வந்துட்டிங்க..... சூப்பர...

வெகு இயல்பான நடை தொடர்ந்து கலக்குங்க...:))

Anonymous said...

excellent story... please post the next part soon.. really waiting for it.

இம்சை அரசி said...

// திருமதி.இம்சை அரசி,
உங்கள் கதைகளில் வரும் கதாபாத்திரம் எல்லாம் விக்ரமன் படத்துல எல்லோரும் நல்லவங்களா வருவாங்களே அது போல், எல்லோரும் ஒரு மென்மையான பாத்திரங்களாக இருக்கிறார்கள்? //

விக்ரமன் பட காரெக்டர்கள் மாதிரி அவ்ளோ சென்டியாவா இருக்கு என் கதைல வர காரெக்டர்ஸ்??!!!

// அதே மாதிரி கதாநாயகிகள் எல்லோரும் ரொம்ப சீக்கிரமா மனதை பரி கொடுத்துடறாங்களே. //

ஹா... ஹா.... என்ன பண்றது??? எல்லாம் ரொம்ப சாஃப்ட் ஹார்ட்டட்டா இருக்காங்களே... ;)))

// இந்த பாத்திரங்கள் யாவும் உங்களுடை character'ன் பிரதிபிம்பமா?
சாரி, நீங்க திருமதியான பிறகு, நான் இந்த கேள்வியைக் கேட்கக்கூடாது தான். இருந்தாலும், கேட்காமல் இருக்க முடியவில்லை.
//

நான் உருவாக்கற காரெக்டர்ஸ் எல்லாம் என் character பிரதிபிம்பமா இருந்தா எனக்கு எவ்ளோ கேரக்டர்ஸ் இருக்கணும்??? யம்மாடி....

என்னோட "அவள் அப்படித்தான்" கதை படிச்சிருக்கீங்களா? அப்போ ஏன் உங்களுக்கு அந்த தயா காரெக்டர் உங்களோடதானு கேக்க தோணலை?? அது கூட என் காரெக்டரா இருக்கலாம் இல்ல??

என்னோட முதல் வருட நிறைவு பதிவுலயே சொல்லி இருந்தேன். என் ப்ளாக் படிக்கறவங்க அந்த பத்து நிமிஷம் அவங்க கவலையெல்லாம் மறந்து மனசு லேசான மாதிரி ஒரு ஃபீலோட அட்லீஸ்ட் ஒரு சின்ன ஸ்மைலோடயாவது க்ளோஸ் பண்ணனும்-ன்றது என்னோட ஆசை. ஏன் பேராசைனு கூட சொல்லலாம்.
அந்த அளவுக்கு இல்லாட்டியும் ஓரளவுக்காவது அதை பண்றேனு நினைக்கறேன்.

அதுமில்லாம எல்லாரும் எப்போமே சந்தோஷமா இருக்கணும். கதைல நான் படைக்கிற காரெக்டர்ஸ் கூட எப்போமே சந்தோஷமா இருக்கணும்னு நான் நினைப்பேன். அதனாலதானோ என்னவோ கதையெல்லாம் இப்படியே வருது.

"மைதிலி"-னா மைதிலியா பாருங்க. இம்சை அரசியோ-னு நினைச்சுப் படிக்காதீங்க. இதுவரைக்கும் நான் எழுதின எந்த கதையுமே என் கதை கிடையாது. என் கேரக்டரோட பிரதிபிம்பமோ கிடையாது. என்னோட ரசனைகள் வேணா வந்திருக்கலாம்.... :)))

btw, நான் ரமணி சந்திரனோட பயங்கர ஃபேன். அவங்களை மாதிரியே எழுத ட்ரை பண்றேனோனு எனக்கே இப்போல்லாம் சந்தேகம் வருது. அப்படி இருந்தா கொஞ்சம் எடுத்து சொல்லுங்க. சேஞ்ச் பண்ணிக்கறேன்.

// இருந்தாலும் கதைகள் யாவும் அருமை. நம்ம கற்பனைக்குதிரை இந்தளவுக்குப் பாயாது. //

நன்றி நன்றி :)))

நான் கொஞ்சம் ஓவராவே கற்பனை பண்ணுவேன். ஆக்சுவலா நான் இருக்கற தெருவுல அந்த மாதிரி ஒரு மரம் இருக்கும். ஒரு நாள் பஸ்-க்கு வேக வேகமா போனப்போதான் கீழ ஊதா கலர் பூவா கொட்டிக் கிடந்ததைப் பார்த்ததும் காதல் தேசம் படத்துல தபு நடந்து வருவா இல்ல. அப்போதான வினித் அவள ஃபர்ஸ்ட் பாத்து உடனே லவ் பண்ண ஆரம்பிச்சிடுவானு நினைச்சுட்டே வந்தேன். டக்குனு நாம ஏன் ஒரு பையன் நடந்து வர மாதிரியும் அதை பாத்து ஒரு பொண்ணுக்கு புடிச்சு போற மாதிரியும் எழுத கூடாதுனு நினைச்சேன். அதோட என் கல்யாணப் பத்திரிக்கை கதையையும் சேர்த்தேன். கதை வந்துடுச்சு. தட்ஸ் ஆல் :)))

இம்சை அரசி said...

Thamizhmaangani, Ramya Ramani, Anu, விஜய், தமிழன், இவன், கார்த்திகேயன். கருணாநிதி, sen22, sathiya, மங்களூர் சிவா அல்லாருக்கும் இம்சை அரசியாகிய நான் சொல்லிக்கிறது என்னன்னா ரொம்ப நன்றி... ரொம்ப நன்றி... ரொம்ப நன்றி... :))))

Proxy கண்டுபிடிச்சுட்டோமில்ல... ;))))) ஆன ஒரு பின்னூட்டம் போடறதுக்கு அரைமணி நேரம் வெயிட் பண்ண வேண்டியதாயிருக்கு :((((

Vijay said...

ஹாய் இம்சை, (இம்சை அரசிக்கு ஷார்ட் ஃபார்மா வச்சுக்கலாமா?)
என்னுடைய பின்னூட்டத்திற்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்தற்கு ரொம்ப நன்றி.
உங்களுடைய எல்லா படைப்புகளையும் படிக்கணும்னா 2 நாள் லீவு போட்டுத் தான் படிக்கணும். நான் படித்த சில கதைகளில் உங்கள் நாயகிகள் எல்லோருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தது. அதனால் தான் அப்படிக் கேட்டுத் தொலைச்சேன்.
நான் ரமணி சந்திரன் படித்ததில்லை. உங்களுடைய பதிப்புகளைப் படித்த பிறகு அவருடைய நாவல்கள் படிக்க ஆர்வம் வந்திருக்கு.
அன்புடன்,
விஜய்

இம்சை அரசி said...

// ஹாய் இம்சை, (இம்சை அரசிக்கு ஷார்ட் ஃபார்மா வச்சுக்கலாமா?) //

பரவால்ல ஜெயந்தி-ன்னே சொல்லலாம் :)))

// என்னுடைய பின்னூட்டத்திற்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்தற்கு ரொம்ப நன்றி. //

welcome welcome...

// உங்களுடைய எல்லா படைப்புகளையும் படிக்கணும்னா 2 நாள் லீவு போட்டுத் தான் படிக்கணும். //

சும்மா கதை விடாதீங்க. நான் எழுதி இருக்கறதே கொஞ்சம்தான். ஐ மீன் நிறைய நாலு வரி ஐஞ்சு வரி பதிவுகள்தான் இருக்கும்.

// நான் படித்த சில கதைகளில் உங்கள் நாயகிகள் எல்லோருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தது. அதனால் தான் அப்படிக் கேட்டுத் தொலைச்சேன். //

பரவால்ல.... no probs... :)))

// நான் ரமணி சந்திரன் படித்ததில்லை. உங்களுடைய பதிப்புகளைப் படித்த பிறகு அவருடைய நாவல்கள் படிக்க ஆர்வம் வந்திருக்கு. //

படிங்க படிங்க... கொஞ்சம் கதைகள் படிச்சதுக்கப்புறம் கதைய நீங்களே கெஸ் பண்ண ஆரம்பிச்சிடுவீங்க. ஹீரோ-ன்னா இப்படிதான். ஹீரோயின்னா இப்படிதான்னு எல்லா கதைகள்லயும் ஒரே மாதிரிதான் இருப்பாங்க. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை கண்ணே கண்மணியே.

FunScribbler said...

//டக்குனு நாம ஏன் ஒரு பையன் நடந்து வர மாதிரியும்//

ஓ... இப்படி வந்ததா? ஒகே, நானும் கிளம்புறேன். என் வீட்டு பக்கத்துல ஏகப்பட்ட மரம் இருக்கு. நானும் கற்பனை பண்ணுறேன்.. atleast ஒரு வினித் மாதிரி ஆளாச்சு வருதானு பாக்குறேன்! கிளம்பிட்டாள் இந்த தமிழ்மாங்கனி!:)

Divya said...

கதை சூப்பர் தொடக்கம் இம்சை:))

இவன் said...

Sen22 said...

//@இவன் said...
நானும்தான் வருசக்கணக்ககா பூக்களை மிதிக்காம நடக்கிறேன் எவளாவது அதப்பாக்கிறாளா என்ன கொடுமை இவன் இது??//

Athukkellam Oru luck venumungoo..
antha luck namma rendu perukkum ILLA, ILLA...

Same Blood...
:(((((


நீ என் ஜாதிய்யா என் ஜாதி
தமிழன் படத்தில விவேக் சொல்லுற மாதிரி சொல்லிப்பாருங்க

Unknown said...

என் ப்ளாக் படிக்கறவங்க அந்த பத்து நிமிஷம் அவங்க கவலையெல்லாம் மறந்து மனசு லேசான மாதிரி ஒரு ஃபீலோட அட்லீஸ்ட் ஒரு சின்ன ஸ்மைலோடயாவது க்ளோஸ் பண்ணனும்-ன்றது என்னோட ஆசை. ஏன் பேராசைனு கூட சொல்லலாம்.
அந்த அளவுக்கு இல்லாட்டியும் ஓரளவுக்காவது அதை பண்றேனு நினைக்கறேன்.

Unga Aasai Niraiverivittadu... i feel like that only.

ஜி said...

naangalumthaan ellaa bus standlaiyum nikkiroam... aana oru ponnu kooda papera poda maatengraalunga :(((