Thursday, May 8, 2008

அது ஏன்?!!

அது ஏன்?!!

சோப்பு விளம்பரத்துல வர பாட்டிங்க எப்போ பாத்தாலும் எதாவது இலை தழை வச்சு அரைச்சுக்கிட்டே இருக்காங்களே அது ஏன்??!!

************************************

எல்லா சோப்புக்கும் பொண்ணுங்களை வச்சு விளம்பரம் பண்ணும்போது லைஃப்பாய் சோப்புக்கு மட்டும் ஆண்களை வச்சு விளம்பரம் பண்றாங்களே அது ஏன்?

************************************

தமிழ் படத்து ஹீரோயின் தலைமுடில ஒண்ணு கூட கருப்பா இல்லைனாலும் பாட்டுல கார்மேக கூந்தல், கரிசல் காடுகள் இப்படி எழுதறாங்களே(உதாரணத்துக்கு "ஒரு ஊரில் அழகே உருவாய்" பாட்டுல வர "தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்" வரிகள் - காக்க காக்க) அது

ஏன்?!!!!

************************************

பாக்கவே பிடிக்காத அளவுக்கு இருக்கற ரவுடியயும் இந்த தமிழ்படத்து கதாநாயகிகளால மட்டும் காதலிக்க முடியுதே அது ஏன்?!!

************************************

நல்லா neatஆ போனா BMTC பஸ்ல டிக்கட்டுக்கு சில்லறை தர மாட்டேன்றாங்க... சில தனியார் பஸ்ல டிக்கட்டே தர மாட்டேன்றாங்களே அது ஏன்?!!

************************************

ப்ளாக்குக்கு லீவு விட்டுட்டா மக்களே மனசாட்சியே இல்லாம மறந்துடறீங்களே அது ஏன்?!!

************************************

ஹி... ஹி... ச்சும்மா இப்படி ஒருத்தி இருக்கேனு ஞாபகப்படுத்தரதுக்காக இந்த பதிவு... ;)))

18 comments:

இலவசக்கொத்தனார் said...

நீங்களுமா? இப்போதான் பெனாத்தல் (http://penathal.blogspot.com/2008/05/07-may-08.html) அவரைத் தொடர்ந்து நான் (http://elavasam.blogspot.com/2008/05/08-05-2008.html) இப்படி உள்ளேன் ஐயா பதிவு போட்டோம். :))

ஆயில்யன். said...

//தமிழ் படத்து ஹீரோயின் தலைமுடில ஒண்ணு கூட கருப்பா இல்லைனாலும் பாட்டுல கார்மேக கூந்தல், கரிசல் காடுகள் இப்படி எழுதறாங்களே(உதாரணத்துக்கு "ஒரு ஊரில் அழகே உருவாய்" பாட்டுல வர "தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்" வரிகள் - காக்க காக்க) அது//

குட் கொஸ்டீன்

நானும் கேட்க நினைச்சுக்கிட்டே இருக்கறது

.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க இன்ன்னும் ஊரப்பார்த்து பொட்டியை கட்டிக்கிட்டு கெளம்பலையா???

.:: மை ஃபிரண்ட் ::. said...

கெளம்புங்க கெளம்புங்க.. காத்து வரட்டும்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஒருத்தவங்க 9-இல் ஊரூக்கு போறேன். பதிவுக்கு கொஞ்ச நாள் லீவு விட்டாச்சுன்னு சொல்லிட்டு திரும்ப பதிவு போட்டிருக்காங்களே.. அது ஏன்? ;-)

அக்காவோட தம்பிக்கு அக்காவோட தங்கச்சி said...

//அது ஏன்?!!

சோப்பு விளம்பரத்துல வர பாட்டிங்க எப்போ பாத்தாலும் எதாவது இலை தழை வச்சு அரைச்சுக்கிட்டே இருக்காங்களே அது ஏன்??!!

************************************

எல்லா சோப்புக்கும் பொண்ணுங்களை வச்சு விளம்பரம் பண்ணும்போது லைஃப்பாய் சோப்புக்கு மட்டும் ஆண்களை வச்சு விளம்பரம் பண்றாங்களே அது ஏன்?

************************************

தமிழ் படத்து ஹீரோயின் தலைமுடில ஒண்ணு கூட கருப்பா இல்லைனாலும் பாட்டுல கார்மேக கூந்தல், கரிசல் காடுகள் இப்படி எழுதறாங்களே(உதாரணத்துக்கு "ஒரு ஊரில் அழகே உருவாய்" பாட்டுல வர "தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்" வரிகள் - காக்க காக்க) அது

ஏன்?!!!!

************************************

பாக்கவே பிடிக்காத அளவுக்கு இருக்கற ரவுடியயும் இந்த தமிழ்படத்து கதாநாயகிகளால மட்டும் காதலிக்க முடியுதே அது ஏன்?!!

************************************

நல்லா neatஆ போனா BMTC பஸ்ல டிக்கட்டுக்கு சில்லறை தர மாட்டேன்றாங்க... சில தனியார் பஸ்ல டிக்கட்டே தர மாட்டேன்றாங்களே அது ஏன்?!!

************************************

ப்ளாக்குக்கு லீவு விட்டுட்டா மக்களே மனசாட்சியே இல்லாம மறந்துடறீங்களே அது ஏன்?!!

************************************

ஹி... ஹி... ச்சும்மா இப்படி ஒருத்தி இருக்கேனு ஞாபகப்படுத்தரதுக்காக இந்த பதிவு... ;)))//

இப்படி கொலைவெறியோட திரியுதே உந்த அக்கா

அது ஏனாம் ?

Sen22 said...

இந்த மாதிரி இம்சையை
கொஞ்ச நாள் தாங்கித்தான் ஆகணும்...
அதுக்கப்புறம் உங்களையே இம்சை
பண்ணுறதுக்கு ஒருத்தர் வந்துடுவாரில்லே....Senthil,
Bangalore

கயல்விழி முத்துலெட்சுமி said...

இம்சையை யாராவதுமறக்கமுடியுமா.. ஏன்பா இப்படி மனசாட்சி அது இதுன்னு..

ஆனா ஒன்னு எல்லா பாட்டியும் நிஜம்மாவே நாலு பூந்திக்கொட்டை கருவேப்பிலைன்னு அதை இதை போட்டு தலைக்கு வீட்டு சாம்பூவும்...கடலைமாவும் பயத்தமாவும் சேர்ஹ்த்டு முக சோப்புத்தூளும் செய்யறது தானே வழக்கம் அதனால யா இருக்கலாம்.. இம்சை இதுமட்டும் தான் ஏன்னு தெரியுது...
அப்பறம் கடைசியா யாரோ வந்து அக்காவோட தம்பின்னு பின்னூட்டம் போட்டிருக்காங்களே அதுக்கு பதில் சொல்லுப்பா...ஏன்னு

ILA said...

ippadi ellam pathivu pottE avanuma?
En?

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
நீங்க இன்ன்னும் ஊரப்பார்த்து பொட்டியை கட்டிக்கிட்டு கெளம்பலையா???
\\

ரீப்பிட்டே.........

KRP said...

// பாக்கவே பிடிக்காத அளவுக்கு இருக்கற ரவுடியயும் இந்த தமிழ்படத்து கதாநாயகிகளால மட்டும் காதலிக்க முடியுதே அது ஏன்?!! //

இப்ப சினிமால மட்டுமல்ல
நிஜ வாழ்க்கையிலும், நிறைய நடக்குது

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

ரசிகன் said...

இனி இதையெல்லாம் கேட்டு கொடுமைப்படுத்த தான் ஒருத்தர் மாட்டிக்கிட்டாரே:P

//எல்லா சோப்புக்கும் பொண்ணுங்களை வச்சு விளம்பரம் பண்ணும்போது லைஃப்பாய் சோப்புக்கு மட்டும் ஆண்களை வச்சு விளம்பரம் பண்றாங்களே அது ஏன்?//

கரையாத கடினமான் சோப்புக்களை பெண்கள் விரும்புவாங்களா? என்ன?

Anonymous said...

இந்த பதிவு நீங்க போட்ட மாதிரியே இல்லை... பிளேடு பக்கிரி

SanJai said...

//ஹி... ஹி... ச்சும்மா இப்படி ஒருத்தி இருக்கேனு ஞாபகப்படுத்தரதுக்காக இந்த பதிவு... ;)))//

இப்படி ஒருத்தி இருக்கிறது தெரியுது. ஆனா இது யார்னு தான் தெரியலை. ஆமா... நீங்க யாரு?

ஜி said...

:))))

கார்த்திகேயன் . கருணாநிதி said...

Blog முழுவதும் படித்தேன் !
ஒரு படி தேன் !

அன்புடன்
கார்த்திகேயன்

புகழன் said...

//எல்லா சோப்புக்கும் பொண்ணுங்களை வச்சு விளம்பரம் பண்ணும்போது லைஃப்பாய் சோப்புக்கு மட்டும் ஆண்களை வச்சு விளம்பரம் பண்றாங்களே அது ஏன்?//

ஏன்னா அது “பாய்” சோப்பு “கேர்ள்” சோப்பு இல்லை

"Gud4Nothin" Rags said...

இவ்வளவு அறிவு பூர்வமா யோசிக்கற நீங்க ஏன் இன்னும் அரசியல்ல சேரல? இங்க உங்கள கலாச்சிருகர எல்லாத்துக்கும் உங்க மேல பொறாமை.. ஆணி புடுங்கர பொண்ணுக்கு இவ்ளோ அறிவாண்ணு போராமைங்கோ!!!