Thursday, March 13, 2008

காதலியும் சிம்பன்ஸியும்!!!




சாரதி... பார்ப்பதற்கு கம்பீரமான வாட்டசாட்டமான இருபத்தைந்து வயது இளைஞன். இருபத்தைந்து வயதானாலும் மாறாதிருந்த குழந்தைத்தனமும், குறும்புத்தனமும் முகத்திற்கு இன்னும் ஒரு களையை சேர்த்தது.

அன்பான அப்பா, நெருங்கிய தோழியாய் அம்மா. இதை விட ஒருவனுக்கு வேறென்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க? சாரதி ஜெயித்துக் கொண்டிருப்பவன். நன்குப் படித்தான். படித்து முடித்த கையோடு சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தான்.

வேலையிலும் சுட்டி என்று அனைவரிடமும் பெயரெடுத்தாயிற்று. எழுத்தார்வத்தில் சிறு வயதிலிருந்தே செய்த முயற்சிகளின் விளைவாய் இன்று ஒரு நல்ல எழுத்தாளராய் அடையாளம் பெற்று விட்டான். எழுத்துலகில் கூடிய விரைவில் பெரிய இடத்திற்கு வருவான் என்று எல்லோராலும் நம்பப்படுகிற நம் சாரதி இதோ இங்கு பெருமாள் கோவில் பிராகாரத்தில் அமர்ந்திருக்கிறான்.

கற்பூர வாசனையும் துளசி கலந்த தீர்த்த மணமும் நாசியை இதமாய் வருடிச் செல்ல சாரதி அதனை இழுத்து நுகர்ந்து ரசித்தபடி தரையில் விரல்களால் ஏதேதோ வரைந்தபடி அமர்ந்திருந்தான். எவ்வளவுதான் இருந்தாலும் இந்த வாசனையை உள்வாங்கும்போது மனது அமைதியாகி லேசாகிப் போகிறதே என்று எண்ணி மெலிதாய் புன்னகைத்தவன் பார்வையில் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒரு காதல் ஜோடி பட தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.


ஹ்ம்ம்ம்... எத்தனையோ காதல் கதைகள், கவிதைகள் எழுதியாயிற்று. அப்பொழுதெல்லாம் இது போல் ஓர் எண்னம் வந்ததில்லையே. ஆனால் சில நாட்களாய் மட்டும் மனதில் ஒரு வெறுமை படர்கிறதே. எனக்கே எனக்கென்று ஒரு உறவு வேண்டுமென்று மனம் ஏங்குகிறது. எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இதுவரை கிடைக்கவில்லை? அதற்கான தகுதி எனக்கு இல்லையா? இந்தக் கேள்வியிலேயே மனமுடைந்து அதன் வெளிப்பாடாய் முகம் சுருங்கவும் அன்னிச்சையாய் நிமிர்ந்து நவக்கிரகங்களை சுற்றிக் கொண்டிருந்த நந்தினியைப் பார்த்தான்.


நந்தினி... சாரதியின் ஆருயிர் தோழி. ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாய் கூடப் படித்தவள். கல்லூரியிலும் ஒன்றாய் படித்து இன்று சென்னையில் ஒரே நிறுவனத்தில் வேலை. ஆறாம் வகுப்பில் ஒரு சிறு சண்டையில் ஆரம்பித்த அவர்கள் நட்பு இன்று வரை தொடர்ந்தது இருவரும் செய்த புண்ணியமாகவே அவர்களுக்குத் தோன்றும். அப்பொழுதே அவனது அம்மாவை பள்ளிக்கு அழைத்து வந்து அவளை அறிமுகப்படுத்தினான்.

ஆனால் அவளால் செய்ய முடியாதப் போன விஷயம் அது ஒன்றுதான். அவள் பெற்றோருக்கு இப்படி ஒரு ஆண்பிள்ளையின் நட்பு இருப்பது தெரிந்திருந்தால் அத்துடன் அவளது பள்ளி வாழ்க்கை முடிந்துப் போயிருக்கும். பள்ளியில் ஆரம்பித்து இன்று வேலை செய்யும் இடம் வரை பலமுறை எதிர்கொண்ட கேள்வி நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? முதல் முறை இந்த கேள்வியை எதிர்கொண்டபோது பதில் பேசமுடியாது திணறித்தான் போனாள்.

இப்பொழுதெல்லாம், என் அம்மா மேல எனக்கிருக்கற பாசத்துக்குப் பேரு காதல்னா நான் அவனைக் காதலிக்கிறேன்தான் என்று சிரித்துக் கொண்டே சொல்வாள். அவனும் அன்பாய் அவளை பப்பு என்றே அழைப்பான். அது அவனது பெண் குழந்தையை அழைப்பதற்கென்று தேர்ந்தெடுத்து வைத்திருந்தப் பெயராம். இதோ அவனது பப்பு என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்.

அவன் முகவாட்டத்தைக் கண்டதும் கடைசி இரண்டு சுற்றுகளையும் வேகமாய் முடித்துக் கொண்டு அவனை நோக்கி வருகையிலேயே அவனிடத்தில் புன்னகை வந்தமர்ந்தது. உன்னை விட என்னை யாரால பப்பு புரிந்துக் கொள்ள முடியும்? என் முகத்தை வைத்தே நான் என்ன மனநிலையில் இருக்கிறேனென்று கண்டுபிடித்து விடுவாயே. அவனையும் மீறி கண்கள் லேசாய் துளிர்த்தது.

"என்னடா? என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு சோகம்" என்று அவள் கேட்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறினான். திணறியவன் கண்கள் தற்செயலாய் அந்த காதல் ஜோடியிடம் போய் திரும்ப அவனதுப் பார்வை சென்ற இடத்தை வைத்தே அவனது மனக்கவலையை யூகித்தாள்.

"பப்பு உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். நீதான் பெரிய எழுத்தாளராச்சே. பதில் சொல்லுவியானு பாப்போம்" என்று அவள் பீடிகையுடன் ஆரம்பிக்க என்னவாய் இருக்கும் என்று ஒருவித ஆர்வத்துடன் அவள் முகம் பார்த்தான்.

"இந்த உலகத்தோட முதல் மனிதர்கள் யார்?" - இது ஒரு கேள்வியா என்றப் பொய்க் கோபத்துடன் அவன் போலியாய் முறைக்க

"இரு இரு... இன்னும் என் கேள்விக்கே வரலை. இதுக்கு மொதல்ல பதில் சொல்லு" என்றாள்.

"ஆதாம் ஏவாள்"

"ஹ்ம்ம்ம். குட். ஆதாம் ஏவாளைப் பார்க்கறதுக்கு முன்ன வேற யாரை காதலிச்சிருப்பான்னு நீ நினைக்கற?" இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் தெரியாது என்பதுப் போல் தலையை இடவலமாய் அசைத்தான்.

"வெல். கடவுள் மொதல்ல ஆதாமைதான் படைச்சார். அவன் உலகத்துக்கே அதிபதியா அவனோட ராஜ்ஜியத்துல சந்தோஷமா இருந்தான். ஆனா அவனுக்கு விலங்குகள் எல்லாம் அதது அதோட துணையோட இருக்கறதப் பாத்துட்டு நமக்கு இப்படி ஒரு துணை இல்லையேனு தனிமைய உணர ஆரம்பிச்சான். அப்போ அவனுக்கான துணைய அவனே தேட ஆரம்பிச்சான்.

மனிதர்களே இல்லாத அந்த உலகத்துல அவனுக்கு ஒரு நல்ல துணையா தோணினது ஒரு அழகான சிம்பன்ஸி குரங்குதான். அந்த குரங்கை துணையா ஏத்துக்கிட்டா அதைக் கட்டிப் பிடிச்சிட்டு டூயட் பாடியிருப்பான். அதுக்காக மானே தேனே-ன்னு காதல் கவிதைகள் எழுதி இவ்வுலகில் உன்னைப் போல் அழகுண்டோ உன் குரலைப் போல் ஒரு இசையுண்டோனு உளறியிருப்பான். அதுதான் அவனோட வாழ்க்கைனு அதுக்கு புரிய வைக்க முயற்சிப் பண்ணியிருப்பான்.


ஆனா அவவ்ளவும் சுத்த வேஸ்ட். அந்த சிம்பன்ஸி குரங்குக்கு என்னப் புரிஞ்சிருக்கும்? இவன் சொல்ற எதும் புரியாம இருக்கற அதுகிட்ட இவனால எந்த சந்தோஷத்தையும் காதலையும் வாங்கி இருக்க முடியாது. அதுக்கு பதிலா அவன் என்ன பண்ணினான் தெரியுமா? அவனைப் படைச்சக் கடவுள் அவனுக்கான துணையைத் தருவார்னு நம்பினான்.


அதே மாதிரி கடவுள் அவனுக்கு அழகான யுவதி ஏவாளைக் கொடுத்தார். அவனுக்கு வேண்டியக் காதலை ஏவாள் கொடுத்தா. ரெண்டுப் பேரும் சந்தோஷமா இருந்தாங்க"- அவள் முடித்ததும் அவன் முகத்தில் வழக்கமான ஒரு புன்னகை அரும்பியது. சற்றுத் தெளிந்தாற் போல இருந்தான்.


தனது மனக்கவலை அவளுக்குத் தெரிந்து விட்டதே என்ற வெட்கமும் சொல்லாமலே தன்னைப் படிக்கிறாளே என்ற பெருமையும் சேர்ந்து மிளிர "என்ன சொல்ல வர இப்போ நீ?" என்று அவளை சீண்டினான்.


"டேய்! உன்னைப் படைச்சக் கடவுளுக்கு உனக்கான பெண்னை அனுப்பவும் தெரியும். சரியா? சும்மாக் கண்டதப் போட்டு குழப்பிட்டு இருக்காத"
"சும்மா ஆதாம் ஏவாள்னு எல்லாம் கதை விடாத. அப்போ காதலிக்கறது தப்புனு சொல்ல வரியா?"

"நான் தப்புனு சொல்லலைடா. ஆனா காதல் இல்லைனு ஃபீல் பண்ணாதனு சொல்றேன்"

"எனக்கென்ன இல்லை? ஏன் நான் காதலிக்கக் கூடாது?" - சிறுப் பிள்ளையைப் போல அடம்பிடிக்கும் அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது.

"சரி உன்கிட்ட இன்னொரு கேள்வி. இந்த அம்மா அப்பாவுக்கு பிறக்கணும், இந்தக் கலர்ல பிறக்கணும், இந்த அப்பியரன்ஸ் வேணும்னு நீயாவா எல்லாம் தேர்ந்தெடுத்த?"

"தலைவர் பாட்ட காப்பி அடிக்காத"

"கேட்டதுக்கு பதில சொல்லுடா வெண்னை"

"இல்ல"

"ஆனா உனக்கு பெஸ்ட்டான அம்மா அப்பாவக் கடவுள் கொடுத்தார் இல்ல. என்ன கொஞ்சமாச்சும் அழக கொடுதிருக்கலாம்" அவள் உதடு சுழிக்க

"நீ சைக்கிள் கேப்ல டேங்கர் லாரியே ஓட்டுவடி" என்று தலையில் குட்டினான்.

"சரி பேக் டு த டாபிக். இப்படி அம்மா அப்பாவுக்கு பிள்ளையாப் பொறந்ததுக்கு கர்வப்படறேனு சொல்லுவியே. இதையெல்லாம் உனக்கு பெஸ்ட்டா கடவுள் கொடுத்தார் இல்லையா?"

துளசி, வில்வ இலையெல்லாம் மருந்து மாதிரி. உடம்புக்கு ரொம்ப நல்லது. அதை சொன்னா எல்லாரும் சாப்பிட மாட்டாங்கனுதான் கடவுளுக்கு உகந்ததுனு சொல்லி கோவில்ல கொடுக்க ஆரம்பிச்சாங்க. கடவுளோட பிராசதம்னா எல்லாரும் கண்டிப்பா சாப்பிடுவாங்க இல்ல. அதான் - பால்ய வயதில் கோவிலுக்கு சென்ற பொழுது சொன்ன அம்மாவின் முகம் கண்முன் வந்தது. அம்மாவிற்கு எப்பொழுதும் பொறுமையாய் விளக்கி சொல்லும் குணம். அதே குணம் நந்துவிடமும் என்றெண்ணியபடியே அவளதுப் பேச்சை கவனித்தான்.

"அதே மாதிரி உனக்கான துணையைவும் பெஸ்ட்டாக் குடுப்பார். அதுக்கு முன்னாடி ஒரு சிம்பன்ஸியத் தேடிப் பிடிச்சுக்காத"

"சரி என்னை விடு. உனக்கு கடவுள் என்ன பெஸ்ட்டாக் குடுத்துட்டார்? எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படற அம்மா. உன் சம்பளத்த வாங்கி வச்சுக்கிட்டு செலவுக்குக் கூட பத்தாம பணம் தர அப்பா. ரெண்டு பேருக்கும் பாசம்னா என்னன்னே தெரியாது. இப்படி உனக்கு எல்லாமே வொர்ஸ்ட்டாக் குடுத்த கடவுள் உன் லைஃப் பார்ட்னர் மட்டும் பெஸ்ட்டாக் குடுப்பார்னு நம்பறியா?"

"ஹ்ம்ம்ம்ம். இப்போ உன் க்ளையன்டுக்கு ப்ராஜக்ட் டெலிவர் பண்ற. அதுல எக்கச்சக்க பக்ஸ். அதை நீ ஃபிக்ஸ் பண்ற வரைக்கும் அவங்க பொறுத்துக்கிட்டாங்க. அதே க்ளையண்டுக்கு அடுத்த தடவை ப்ராஜக்ட் பண்ணும்போது எப்படி பண்ணுவ?"

"எந்த பக்ஸ்ம் இல்லாம பக்காவா அனுப்பனும்னு நினைப்பேன்"

"அதே மாதிரிதான். எல்லாமே பெஸ்ட்டாக் கொடுத்த உனக்கே பெஸ்ட்டா ஒரு பொண்னைக் குடுக்கறார்னா வொர்ஸ்ட்டாக் குடுத்த எனக்கு எப்படிக் குடுப்பார்னு நீயே திங்க் பண்ணிப் பாரு"

இதற்குள் கவலையெல்லாம் விலகி தெளிவாகியிருந்தவன் அட! எவ்வளவு புத்திசாலித்தனமாய் சிந்தித்தாலும் இவள் முன் ஒன்றும் அறியா சிறுவனாகி விடுகிறோமே என்று வியந்தான்.

"கடவுள் எனக்கு எல்லாமே வொர்ஸ்ட்டாக் குடுக்கலைடா. பெஸ்ட்லயும் பெஸ்ட்டா உன்னை எனக்கு ஃப்ரெண்டா குடுத்திருக்கார் இல்ல" என்று அவள் அன்பாய் புன்னகைக்கவும் உலகின் மொத்தக் கவலையும் மறந்து ஆதரவாய் அவள் கையைப் பற்றி எழுப்பி அழைத்து சென்றான். "தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே" என்று அவளது உதடுகள் அவனுக்கான பாடலை தானாய் முணுமுணுத்தன.


பி.கு: இந்தக் கதையை எழுதத் தூண்டிய கதை. உங்க்ளுக்காக தமிழில் மாற்றி கொஞ்சம் நட்பும் சேர்த்து எழுதி இருக்கிறேன்.

17 comments:

Anonymous said...

அருமையாக இருந்தது...வாழ்த்துகள்

கதிர் said...

//எழுதத் தூண்டிய கதை. உங்க்ளுக்காக//
Not Found
Error 404

மங்களூர் சிவா said...

இந்த பாராக்ராப் நடுவில இடம் விட்டு எழுதறது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க!?!?!?

கண்ணை கட்டுது :((

மங்களூர் சிவா said...

வாழ்க்கை பெஸ்ட்டா குடுத்த கடவுள் பெஸ்ட்டாதான் குடுப்பார்

நம்பிக்கைதானே வாழ்க்கை.

மங்களூர் சிவா said...

சிம்பன்ஸின்னு சொல்றீங்களே அது யாரு?

கதிர் said...

பயங்கர இண்டலிஜெண்டலியா பதில் சொல்லிருக்கா அந்த பொண்ணு.

சூப்பர் கதைங்க.

கதிரவன் said...

காதலிக்கறவங்க எல்லாருமே சிம்பன்ஸியத்தான் தேடிப்பிடிச்சுக்கறாங்கன்றீங்க ??

பாவங்க, சிம்பன்ஸிக்குத்தெரிஞ்சா கோவிச்சுக்கப்போகுது ;-)

கடவுள் நல்லதா தருவார்ன்னு காத்திருந்தவங்க பலர்,தங்களுக்கு கிடைச்ச ஜோடியை விட, சிம்பன்ஸியே பரவாயில்லன்னு சொல்றாங்க :-)

Dreamzz said...

இதுக்கு தான் நான் ஆதாம் ஏவாள் கதைய நம்பறதில்லை..

ஆனா கதை என்னமோ நல்லா தாங்க இருக்கு :)

ரசிகன் said...

//அதே மாதிரிதான். எல்லாமே பெஸ்ட்டாக் கொடுத்த உனக்கே பெஸ்ட்டா ஒரு பொண்னைக் குடுக்கறார்னா வொர்ஸ்ட்டாக் குடுத்த எனக்கு எப்படிக் குடுப்பார்னு நீயே திங்க் பண்ணிப் பாரு"//

எப்டி இம்சை..இப்டியெல்லாம்.. ? கலக்கலா இருக்கு.. வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

\பி.கு: இந்தக் கதையை எழுதத் தூண்டிய கதை. உங்க்ளுக்காக தமிழில் மாற்றி கொஞ்சம் நட்பும் சேர்த்து எழுதி இருக்கிறேன்.\\


நன்றாக மாற்றி இருக்கிங்க..அருமையாக இருக்கு...;)

புகழன் said...

சிம்பன்ஸி கதை சூப்பர்.
காதல் பற்றியும் காதலி பற்றியும் ஒரு புதிய அறிமுகம் உங்கள் கதையில்.
தொடர்ந்து எழுதுங்கள்

நிஜமா நல்லவன் said...

///எல்லாமே பெஸ்ட்டாக் கொடுத்த உனக்கே பெஸ்ட்டா ஒரு பொண்னைக் குடுக்கறார்னா வொர்ஸ்ட்டாக் குடுத்த எனக்கு எப்படிக் குடுப்பார்னு நீயே திங்க் பண்ணிப் பாரு"///


எப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் திங்க் பண்ண தோனுது?

Anonymous said...

Jeyanthi,

Very good thinking..
Also spiritual....
Good keep it up...

Anonymous said...

Thanks...

எழில்பாரதி said...

அருமையான கதை

வாழ்த்துகள்!!!!!!!

ஆயில்யன் said...

//மங்களூர் சிவா said...
இந்த பாராக்ராப் நடுவில இடம் விட்டு எழுதறது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க!?!?!?

கண்ணை கட்டுது
//
கண்ணை கட்டுதா?
அதுக்கு பேர்தான் ஃபீலிங்க்ஸ்ப்பா!

பதிவு நல்லாயிருக்கு!

ஆயில்யன் said...

//கடவுள் எனக்கு எல்லாமே வொர்ஸ்ட்டாக் குடுக்கலைடா. பெஸ்ட்லயும் பெஸ்ட்டா உன்னை எனக்கு ஃப்ரெண்டா குடுத்திருக்கார் இல்ல"//

நல்லா இருக்கு :)