கவிதை எனக்கு அறிமுகமானது சின்ன வயசுலயே. புத்தகம் வாசிக்கறப் பழக்கம் இருந்தா சீக்கிரம் எதையும் கிரகிச்சிக்கற திறமை வரும்னு வீட்டுல என்னை சின்ன வயசுல இருந்து சிறுவர்மலர் குடுத்துப் படிக்க சொல்லுவாங்க. அதுக்கும் இவ்வளவு நேரத்துக்குள்ளப் படிக்கணும்னு deadline வேற(என்ன கொடுமை சார் இது???) அப்போ புத்தகம் படிக்க ஆரம்பிச்சப் பழக்கம்தான் இங்க வரைக்கும் கொண்டு வந்து உங்களையெல்லாம் இம்சை பண்ண வச்சிருக்குன்றதுல எனக்கு எந்த டவுட்டும் இல்ல. உங்களுக்கு??? :)))
ஆங்... மறந்துட்டேன். கவிதைப் பத்திப் பேச ஆரம்பிச்சோம் இல்ல. சின்ன வயசுல சிறுவர்மலர்ல கவிதைகள் எல்லாம் படிச்சிருக்கேன். அப்போ எல்லாம் நம்மள மாதிரி மக்கள்ஸ் எழுதறதுதானு எனக்குத் தெரியாது. அதுக்காகவே பிறந்து வளர்ந்தவங்க எழுதறாங்கன்னு நினைச்சுக்குவேன். புள்ளைக்கு இவ்ளோ திறமை இருக்குனு எங்கம்மா அப்பாவுக்கு அப்போத் தெரியலை. இல்லைனா அப்போ இருந்தே எழுதி ஒரு பெரிய கவிஞர் ஆகி இருப்பேனாக்கும். தமிழ் கூறும் நல்லுலகம் எங்கம்மா அப்பவோட அறியாமையால ஒரு நல்ல அறிவாளிக் கவிஞரை மிஸ் பண்ணிடுச்சு :(((
அப்படியே சிறுவர்மலர்ல இருந்து வீட்டுக்குத் தெரியாம வாரமலர் படிக்க ஆரம்பிச்சு அதுலயும் கவிதைகள் புரியாட்டியும் ரசிச்சுட்டு இருந்த நான் பத்தாவது படிச்சப்போ JCsல இருந்து வந்து ஏதோ லீடர்ஷிப் க்ளாஸ் எல்லாம் எடுத்தாங்க. அப்போ ஒரு நாள் கவிதைப் போட்டி வச்சாங்க. மலை/மழை பத்தி கவிதை எழுதி தரணும். நானும் எங்கயாவது படிச்சோமான்னு யோசி யோசின்னு யோசிச்சேன். ஞாபகம் வந்தா அப்படியே எழுதிக் கொடுத்துடலாம்னு தான். அன்னைக்குனு பாத்து நம்ம குருவி மூளைக்கு எதுமே எட்டலை :(((
அதுல மொதல் பரிசு என் தோழி ஒருத்தி வாங்கினா. அந்த வயசுலயே ரொம்ப நல்லா எழுதி இருந்தா. ஆனா ரொம்ப நாளா அவ எங்கேயோ படிச்ச கவிதைய நல்லா ஞாபகம் வச்சு எழுதிட்டானுதான் நினைச்சுட்டு இருந்தேன். ஹி... ஹி... நம்மளைப் போலவேதான எல்லாரையும் நினைக்கத் தோணுது ;))) அன்னைக்கு வீட்டுக்குப் போனதும் எங்கம்மாட்ட இதுப் பத்தி சொல்லி எனக்கு மட்டும் எழுத வர மாட்டென்றதுனு ஃபீல் பண்ணிட்டு இருந்தப்போதான் அம்மாவுக்குப் புரிஞ்சதுப் போல புள்ளைக்கு இருக்கற திறமை. அப்போ சொன்னாங்க. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது. எடுத்ததுமே எழுத வராது. எழுத எழுததான் நல்லா ப்ராக்டிஸ் ஆகும். அதுக்கு நிறைய கவிதை புக்ஸ் படிக்கணும். சுத்தி நடக்கறத அப்சர்வ் பண்ணனும். அதை வச்சு கவிதை எழுதணும்னு ஒரே அட்வைஸ்.
அப்போதான் எனக்குள்ள இருந்த கவிதாயினி கண்ணு முழிச்சா. உடனே வேகமா நோட்ட எடுத்துட்டு உக்காந்துக்கிட்டேன். வேற எதுக்கு? சுத்தி நடக்கரத அப்சர்வ் பண்ணத்தான். நோட்டு தேடிப் பிடிச்சு எழுதறதுக்குள்ள மறந்துப் போயிட்டா. அதான் முன்னெச்செரிக்கையா நோட்டும் கையுமா உக்காந்தாச்சு. நானும் சுத்திப் பாக்கறேன். ஒண்ணுமே நடக்க மாட்டேன்றது. செவுத்துல பல்லி ஒண்ணுதான் நடந்துச்சு. ச்சே! என்ன கொடுமைடா சாமினு வீட்டுக்கு வெளில சேர் போட்டு உக்காந்து எதாவது நடக்குதான்னு பார்த்தேன். ரொம்ப நேரம் கழிச்சு ரெண்டு எருமை மாடுதான் நடந்துப் போச்சு. நான் கவிதை எழுதறேன்னு பொறாமைலதான் எதுமே நடக்க மாட்டென்றதுனு எனக்கு வந்ததே கோபம். என்ன வாழ்க்கை இது? எதிர்பார்த்ததே நடக்க மாட்டேன்றது-ன்னு சலிச்சுட்டப்பதான் எனக்கு பொறித் தட்டுச்சு. வாழ்க்கை!!!! இதைப் பத்தி ஏன் கவிதை எழுதக் கூடாதுனு எனக்குள்ள ஒரு பல்பு எரிஞ்சது. உடனே உக்காந்து பயங்கரமா யோசிச்சு என் வாழ்க்கையோட சில மணி நேரங்களை மோட்டுவளையப் பாத்தே செலவிட்டு நான் மொத மொத எழுதின அரும் பெரும் கவிதை
"வாழ்க்கை சர்க்கரையாய்
இனிக்க வேண்டும்
ஆனால்
சர்க்கரை நோயாய்
மாறி விடக் கூடாது"
ஹி... ஹி... எப்படி ஒரு அரும் பெரும் தத்துவத்த அஞ்சு வரில சொல்லிட்டேனு பெருமையா எங்கம்மாட்ட தூக்கிட்டுப் போய் காட்டினேன். எங்கம்மாவுக்கு அதைப் பாத்ததும் சிரிப்பு வந்துடுச்சு. அப்போ ஒரு கவிஞரைப் பெத்த பெருமைல சிரிக்கறாங்கனு நினைச்சுக்கிட்டேன். இப்போதான் தெரியுது :((( அப்போ சொன்னாங்க எதாவது மெசேஜ் சொல்ற மாதிரி இருக்கணும். இல்ல வர்ணனையா இருக்கணும். அது சந்தோஷமா இருக்கலாம். இல்ல துக்கமாவும் இருக்கலாம். அந்த மாதிரி எழுத ட்ரை பண்ணுனு சொன்னாங்க. என் கவிதை சூப்பரா இருக்குனு சொல்லலையேனு ஒரே கோபம். அதுக்கப்புறம் பத்தாவதுல கவிதை எழுத ட்ரை பண்ணவே இல்ல. பதினொண்ணாவது ஹாஸ்டல்ல போய் தள்ளினதும்தான் வீட்டைப் பிரிஞ்ச துக்கத்துல கவிதையா உள்ளுக்குள்ள ஊறுச்சு. அம்மாவுக்கு அப்பாவுக்குன்னு கவிதையா எழுதி தள்ளினேன். எங்க செட்டுலயே நான் தான் பெரிய கவிஞர்னு பேரெடுத்தேன்னா பாத்துக்கங்களேன். அப்புறம் பன்னிரெண்டாவது முடிக்கப் போறப்போ எங்க பிரிவுக்காக எழுதின கவிதைதான் எனக்கு பேர் வாங்கித் தந்துச்சு.
"எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த
நாம் இங்கே
பள்ளியென்னும் தூணில்
நட்பென்னும் கயிற்றால்
ஒன்றாய் பிணைக்கப்பட்டுள்ளோம்
புறத்தில் வேறுபட்டாலும்
அகத்தில் ஒன்றாகி
நட்பு வானில்
சிறகடித்திருக்கும் இவ்வேளையில்
பிரிவென்னும் வேடன்
நம்மைப் பிரிப்பதேனோ...
என்ன செய்ய?
காலமென்னும் கூட்டில்
அடைந்துதானே ஆகவேண்டும்"
இன்னும் கொஞ்சம் நல்லாவே இருந்துச்சு. எனக்கு சில வார்த்தைகள் மறந்துப் போயிடுச்சு. அந்த வயசுல்ல இது ரொம்ப பெரிய இலக்கிய கவிதை ரேஞ்சுக்குத் தெரிஞ்சது. அப்புறம் காலேஜ் சேந்ததுக்கப்புறம் இப்படிதான் தத்துப் பித்துனு எதாவது எழுதிட்டு இருப்பேன். ஒருநாள் எங்க தமிழ் சார் கவிதைப் பத்தி எடுக்கும்போது ஒரு கேள்விக் கேட்டார்.
"மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?"-ன்னுக் கேட்டார்.
நிறையப் பேர் நிறைய பதில் சொன்னாங்க. நான் சொன்னேன் "எல்லாருக்கும் ஐ மீன் படிக்காதவங்களுக்குக் கூட ஈஸியாப் புரியற மாதிரி எழுதறது புதுக் கவிதை. மரபுக் கவிதைன்னா தமிழ் புலமை நல்லா இருக்கறவங்களுக்கு மட்டும்தான் புரியும்"-னு. உடனே அவர்
"கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது- இது உங்களுக்கு புரியுதா?"-ன்னார். நான் ஆமாம்னு தலையாட்டினேன்.
"சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தப்போ பாமர மக்களுக்கும் புரியணும்னு நாமக்கல் கவிஞர் எழுதின இது சுத்தமான மரபுக் கவிதை"-னு சொன்னார். அதுக்கு மேல யோசிக்க விருப்பப்படாம அமைதியா உக்காந்துக்கிட்டேன். அப்போ அவர் கொடுத்த விளக்கம்
"தமிழ் கவிதைக்கான சுத்தமான இலக்கணத்தோட எழுதப்படறதுதான் மரபுக் கவிதை. எந்தவித இலக்கணங்களுக்கும் உட்படாம எழுதறது புதுக் கவிதை. இது யார் வேணும்னாலும் எழுதலாம். எப்படி வேணும்னாலும் எழுதி அதை கவிதைனு சொல்லிக்கலாம்"-னு அவர் சொன்னப்போதான் புதுக் கவிதைக்கான இலக்கணமே எனக்குப் புரிஞ்சது. ஹைய்யா! அப்போ நான் எழுதறதும் கவிதைதான் அன்னைக்கு மனசுல ஊன்றிய விதை இன்று மரமாக வளர்ந்து உங்கள் முன் அப்பப்போ வந்து பூப்பூத்துட்டு இருக்கு :)))
நான் எழுதறது கவிதை இல்ல கவுஜன்னு சிலர் சொல்லி இருக்காங்க. யார் என்ன சொன்னாலும் எனக்கு தோணுவதை மட்டுமே செய்யும் நான் என்னுடையவை கவிதைகள் என்றே இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆஹா! தமிழ் நல்லாவே வருது :P
என் டீம்மேட் ஒரு பையன் ஒருநாள் காலைல நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன். எப்படி இருக்குனு சொல்லுனு சொன்னான். சரி சொல்லுனு சொன்னதுக்கு கிடைச்சக் கவிதை
"தலைக் கட்டாமலிருந்தால்
கொத்துமாம் பாம்பு!
உண்மைதான்...
உனது விழிகளும்
இமைகளால் கட்டப்படாமல்
இருந்தன"
எனக்கு இது ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. சும்மா இருக்க மாட்டாம சூப்பரா எழுதி இருக்கனு அவனப் புகழப் போயி அவன் "நான் முன்னாடியெல்லாம் சூப்பரா எழுதுவேன் தெரியுமா. காலேஜ் போய் தான் வேஸ்ட்டாப் போயிட்டேன். கவிதைக் கூட சும்மா திட்டற மாதிரியே வருது like
சட்டில சுடணும் தோசை
உனக்கு வைக்கப் போறேன் பூசை
ஏய் டண்டனக்கா டணக்குணக்கா"-ன்னு TR ஸ்டைல்ல சொன்னான். என்னால சிரிப்பு அடக்க முடியலை. சரி ஒரு கவிதை எழுதிக் குடுனு நான் கேட்டுக்கிட்டதுக்காக அவன் எழுதித் தந்தக் கவிதை இங்க... இதுல மொதல்ல 'சை'ன்னு முடியற மாதிரி வார்த்தைகள் தேடிப் பிடிச்சு அடுத்தடுத்த வரில எழுதிட்டு அப்புறமா முன்னாடி இருக்கற வார்த்தைகள் எழுதினான்.
"மனசுக்குள்ள ஆசை
நடத்தவேணும் பூசை
சம்பாதிக்கல காசை
நமக்கெதுக்கு மீசை
சட்டில கிடக்குது தோசை
தின்னுப்புட்டு தூங்குடா சூசை"
அவனோட இந்தக் கவிதைய எழுதறதுக்கு முன்னாடியே என் ப்ளாக்ல போடறதா தெரியாத்தனமா ப்ராமிஸ் பண்ணிக் கொடுத்துட்டேன். அதான்....... :)))
Wednesday, March 5, 2008
கவிதை... கவித... கவுஜ...
Posted by இம்சை அரசி at 7:06 PM
Labels: அனுபவம், கவிதை, சும்மா... லுலுலா...
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
இம்சையக்கா உங்களால மட்டும் எப்படி இப்படி எல்லாம் முடியுது :))
ஒரு கவிதைக்குப் பின்னாடி இவ்வளவு கலவரமா!?
யாருங்க அந்த டீம் மேட்.. பிளாக் எழுதுறாரா!?
பெங்களூரிலும் வெயில் கொடுமை ஆரம்பித்து விட்டதா? :))
//எங்க செட்டுலயே நான் தான் பெரிய கவிஞர்னு பேரெடுத்தேன்னா பாத்துக்கங்களேன். //
இதத்தான் அன்னிக்கே பிரபு, ரஜினிகிட்ட சொன்னாரு..
என்ன கொடும சரவணன் இது :)))
இதுக்கு சென்ஷி எழுதுன கவிதையே பரவாயில்லை..
சுயபுராணம்
இம்சை தாங்க முடியலை :(
as usual ஹீரோ டயலாக் சூப்பர்
aandavaa... aandavaa :)
naan edhum sollala :)
\\மனசுக்குள்ள ஆசை
நடத்தவேணும் பூசை
சம்பாதிக்கல காசை
நமக்கெதுக்கு மீசை
சட்டில கிடக்குது தோசை
தின்னுப்புட்டு தூங்குடா சூசை"\\
;)))
இப்படி கவிதை எழுதும் நண்பனை தமிழ் சினிமாவுக்கு கவிதை எழுதச்சொல்லலாம். இன்றைய படஙளில் இப்படித்தான் பாடல்கள் வருகின்றன. ஆசிகள்
Jeyanthi,
Still i am laughing by reading your friend's kavithai..
சிரிப்பு தாங்க முடியல. ஆனா நீங்க எப்படித்தான் ரொம்ப சரளமா எழுதுறீங்க?
அக்கா அக்கா,
நானும் என்னோம்மோ எழுதினேன்.அது கவிதையா,கவிதயா இல்லை கவுஜயா?வந்து படிச்சுட்டு சொல்லுங்க யக்கா
//ILA(a)இளா said...
இதுக்கு சென்ஷி எழுதுன கவிதையே பரவாயில்லை..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... என்னைய யாருமே இப்படி பாராட்டுனது இல்ல தெரியுமா.... இளா! நீ இங்க போட்டுருக்கறது பின்னூட்டம் இல்லப்பா.. எனக்கான முன்னோட்டம் :))))
"வாழ்க்கை சர்க்கரையாய்
இனிக்க வேண்டும்
ஆனால்
சர்க்கரை நோயாய்
மாறி விடக் கூடாது"
ultimate lines..adhuvum mudhal kavidhai sollumbodhu, innum paarattukkal
"எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த
நாம் இங்கே
பள்ளியென்னும் தூணில்
நட்பென்னும் கயிற்றால்
ஒன்றாய் பிணைக்கப்பட்டுள்ளோம்
புறத்தில் வேறுபட்டாலும்
அகத்தில் ஒன்றாகி
நட்பு வானில்
சிறகடித்திருக்கும் இவ்வேளையில்
பிரிவென்னும் வேடன்
நம்மைப் பிரிப்பதேனோ...
என்ன செய்ய?
காலமென்னும் கூட்டில்
அடைந்துதானே ஆகவேண்டும்"
edhaarthamaana lines...kalakkunga
marabuk kavidhai ellam solli kavidhai pathi superaa solli irukkeenga.
மனசுக்குள்ள ஆசை
நடத்தவேணும் பூசை
சம்பாதிக்கல காசை
நமக்கெதுக்கு மீசை
சட்டில கிடக்குது தோசை
தின்னுப்புட்டு தூங்குடா சூசை"
T.R kavidhayum asathal.
Super post imsai arasi :)
//அப்போதான் எனக்குள்ள இருந்த கவிதாயினி கண்ணு முழிச்சா. உடனே வேகமா நோட்ட எடுத்துட்டு உக்காந்துக்கிட்டேன். வேற எதுக்கு? சுத்தி நடக்கரத அப்சர்வ் பண்ணத்தான். நோட்டு தேடிப் பிடிச்சு எழுதறதுக்குள்ள மறந்துப் போயிட்டா. அதான் முன்னெச்செரிக்கையா நோட்டும் கையுமா உக்காந்தாச்சு. நானும் சுத்திப் பாக்கறேன். ஒண்ணுமே நடக்க மாட்டேன்றது. செவுத்துல பல்லி ஒண்ணுதான் நடந்துச்சு. ச்சே! என்ன கொடுமைடா சாமினு வீட்டுக்கு வெளில சேர் போட்டு உக்காந்து எதாவது நடக்குதான்னு பார்த்தேன். ரொம்ப நேரம் கழிச்சு ரெண்டு எருமை மாடுதான் நடந்துப் போச்சு. நான் கவிதை எழுதறேன்னு பொறாமைலதான் எதுமே நடக்க மாட்டென்றதுனு எனக்கு வந்ததே கோபம். //
ஹா..ஹா...:))))))
:))
அச்சு பிழைக்கு வருந்துகிறேன். திருத்தம் அளித்தமைக்கு நன்றி !!!
அந்த " வாழ்கை சக்கரை -- சக்கரை நோய் " கவிதையும் எனக்கு பிடித்திருந்தது . .
நான் அதிகமா blogging பண்றதில்ல . . உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே உங்க பெயர் தான் . . அருமையான selection . .
----------------------------------
1 comments:
இம்சை அரசி said...
ஹலோ சார் :)))
அது என்ன "ஆன்புள்ள இம்சை அர்சியே"???
ஒண்ணும் புரியலையே :))))
March 6, 2008 6:22 AM
:))))))))))))))))))))))
////
உடனே வேகமா நோட்ட எடுத்துட்டு உக்காந்துக்கிட்டேன். வேற எதுக்கு? சுத்தி நடக்கரத அப்சர்வ் பண்ணத்தான். நோட்டு தேடிப் பிடிச்சு எழுதறதுக்குள்ள மறந்துப் போயிட்டா. அதான் முன்னெச்செரிக்கையா நோட்டும் கையுமா உக்காந்தாச்சு. நானும் சுத்திப் பாக்கறேன். ஒண்ணுமே நடக்க மாட்டேன்றது. செவுத்துல பல்லி ஒண்ணுதான் நடந்துச்சு. ச்சே! என்ன கொடுமைடா சாமினு வீட்டுக்கு வெளில சேர் போட்டு உக்காந்து எதாவது நடக்குதான்னு பார்த்தேன். ரொம்ப நேரம் கழிச்சு ரெண்டு எருமை மாடுதான் நடந்துப் போச்சு. நான் கவிதை எழுதறேன்னு பொறாமைலதான் எதுமே நடக்க மாட்டென்றதுனு எனக்கு வந்ததே கோபம்.////
கவித கவித! எ டண்டனக்க எ டனகுனக்க
பெங்களூரிலும் வெயில் கொடுமை ஆரம்பித்து விட்டதா? :))
//எங்க செட்டுலயே நான் தான் பெரிய கவிஞர்னு பேரெடுத்தேன்னா பாத்துக்கங்களேன். //
இதத்தான் அன்னிக்கே பிரபு, ரஜினிகிட்ட சொன்னாரு..
என்ன கொடும சரவணன் இது :)))
இன்னோரு முறை சொல்லுங்க...
//ILA(a)இளா said...
இதுக்கு சென்ஷி எழுதுன கவிதையே பரவாயில்லை..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... என்னைய யாருமே இப்படி பாராட்டுனது இல்ல தெரியுமா.... இளா! நீ இங்க போட்டுருக்கறது பின்னூட்டம் இல்லப்பா.. எனக்கான முன்னோட்டம் :))))------
))))நல்லா சமாளிக்கிறாய்ங்கப்பா...
இருந்தாலும் கலக்குறிங்க...
மகளிர் தின வாழ்த்துக்கள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...
//
இம்சை அரசி said...
ஹலோ சார் :)))
அது என்ன "ஆன்புள்ள இம்சை அர்சியே"???
ஒண்ணும் புரியலையே :))))//
ஹா..ஹா..செம காமெடி:))))))))))))))))))))))
ungalidam enakku pidichathe ungaloda intha kaamedy than.....
arimugam seithu vaitha Aananda Vikatanaaruku nandri.........
Post a Comment