Thursday, March 20, 2008

கவிதையே தெரியுமா?!


"இதுக்கெல்லாம் நான் பயந்த ஆளில்ல. உங்களுக்கு சூப்பரா சீட்டு பிடிச்சுத் தரேனா இல்லையானு பாருங்க" என்று சவால் விட்ட நித்யாவை பரிதாபமாய் பார்த்த தோழிகளில் ஒருத்தி சொன்னாள்

"டேய்! வேண்டாம்டா. இப்போ யாரும் இருக்க மாட்டாங்க. ஆனா பஸ் வந்ததும் எங்க இருந்துதான் எல்லாரும் வருவாங்கன்னு தெரியாது. நீ கீழ விழுந்தாக் கூட தூக்கி விட மாட்டாங்க. ஏறி மிதிச்சிட்டு பஸ்ஸுக்குள்ள ஏறத்தான் பார்ப்பாங்க. அதுமில்லாம கேர்ள்ஸ் இந்தக் கூட்டத்துல சிக்கினா அதோ கதிதான். நாங்க ஒரு தடவை எக்ஸ்பீரியன்ஸ் ஆனதால சொல்றோம். சொன்னாக் கேளு"

"நோ நோ... என்னோட தைரியத்தை ப்ரூஃப் பண்ணப் போறேன் உங்களுக்கு" என்று சொல்லி முடிப்பதற்குள் ஒரு பஸ் வந்தது. பஸ்ஸின் சாத்தியிருந்த கதவின் முன் அதற்குள் கூடியக் கூட்டத்தில் முண்டியடித்து முன்னே சென்று நின்றாள். முடியாது என்ற சொன்னத் தோழிகளை ஒருவிதப் பெருமிதத்தோடு திரும்பிப் பார்த்தவள் பார்வை பாத்தீங்களா! முன்னாடி வந்துட்டேன். கதவை ஓப்பன் பண்ணினதும் உள்ள ஏறி சூப்பரா சீட்டு பிடிச்சிடுவேன் என்று சொன்னது.

சில நிமிடங்களிலேயே அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. திடீரென்று பஸ்ஸின் கதவு திறக்காமலே நகர்த்த ஆரம்பித்தார்கள். கதவருகிலிருந்த அனைவரும் அசுரத்தனமாக முன்னோக்கி நகர உள்ளுக்குள் சிக்கியவள் கூட்டத்தில் நசுக்கப்பட்டு நகரவும் முடியாமல் வெளியே வரவும் முடியாமல் திணறினாள். "ஹலோ! ப்ளீஸ்... தள்ளாதீங்க" என்ற அவளது குரலை யாரும் சட்டை செய்யவே இல்லை. செருப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் சிதறியது. என்ன செய்வதென்று யோசிக்கக் கூட முடியாமல் திணறி கீழே விழ இருந்தவள் தோளை ஒரு கரம் ஆதரவாய் வளைத்துப் பிடித்தது. ஹே! என்று தட்டி விட நினைத்தவள் அவன் பிடிக்கவில்லையென்றால் நிச்சயம் கீழே விழுந்து செருப்புக் கால்களால் மிதிப்படுவோம் என்று தெளிவாக தெரிந்தபடியால் அப்படியே விட்டு விட்டாள். ஐந்து நிமிட போர்க்களம் முடிந்து கூட்டத்திலிருந்து பாதுகாப்பாய் வெளியே கொண்டு வரப்பட்டவள் ஒரு நிமிடம் எதுவும் யோசிக்கக் கூட முடியாமல் நின்றாள். தோளிலிருந்து நழுவி முழங்கையில் தொங்கிக் கொண்டிருந்த ஹேண்ட்பேக்கை தூக்கித் தோளில் மாட்டி

"ஆர் யூ ஆல்ரைட்?" என்று அவன் கேட்டதும்தான் தெளிந்தாள்.

"யா" என்று மெதுவாக அவள் சொல்லவும் ஒரு புன்னகையை பதிலாகத் தந்து விட்டு சென்று மறைந்தான். அவன் சென்ற பின்புதான் யாரிவன்? என்ற யோசனை வந்தது. அதற்குள் அருகில் வந்த தோழிகள் அர்ச்சனையை ஆரம்பிக்க அவளோ அடச்சே! ஒரு நன்றிக் கூட சொல்லாமல் விட்டு விட்டோமே என்று வருந்திக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் காலையில் இன்னைக்கு என்ன பதிவு போடலாம் என்று யோசித்தபடி ஆபிஸினுள் சாலையில் நடந்துக் கொண்டிருந்த நித்யாவின் வெகு அருகில் ஒரு குரல்

"ஹே! யு ஹாவ் அ ஸ்பைடர் ஆன் யுவர் பேக்" என்றுக் கூறியதோடு நில்லாமல் அவளது துப்பட்டாவின் பின்புறத்தில் இருந்த சிறிய சிலந்தியை தட்டி விட்டு அவளது பதிலுக்கு நில்லாமல் வேகமாக சென்று விட்டான்.

அவன் சொன்னதை அவள் உணர்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தவள் பார்வையில் மறுபடியும் அவன். இரண்டாவது முறையும் அவனுக்கு நன்றிக் கூறவில்லை. ச்சே! என்று கடுப்பானவள் மனது ஏனோ சந்தோஷத்தில் துள்ளியது. அவனும் இதே நிறுவனத்தில் தான் பணிபுரிகிறான். இன்னொரு தடவைப் பார்க்காமலாப் போய் விடுவோம். அப்பொழுது இந்த இரண்டு நன்றிகளையும் சொல்லிக் கொள்ளலாம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அடுத்து வந்த ஒரு வாரமும் போகிற இடத்திலெல்லாம் அவன் தென்படுகிறானா என்றுப் பார்க்க ஆரம்பித்தாள். நாட்கள் செல்ல செல்ல அவள் தேடல் அவளுக்கு வேறுவிதமான மனநிலையைத் தர ஆரம்பித்தது. காண வேண்டும் பேச வேண்டும் என்ற ஆவலை அதிகரித்தது. அன்று பேருந்து நிலையத்தில் பார்த்த அவனது புன்னகை முகமே வந்து வந்துப் போனது. சில சமயங்களில் எங்கேடா செல்லம் இருக்க என்று நொந்துக் கொள்ளவும் ஆரம்பித்தாள். சில சமயங்களில் ச்சே என்ன இது? பேர் கூடத் தெரியாதவன் மேல இப்படி மனசு போகுது. கன்ட்ரோல் நித்தி கன்ட்ரோல்... என்று அவளது முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தாள். ஆனால் விதி யாரை விட்டது? இது போன்ற விஷயங்களில் மனம்தானே அறிவை வெல்கிறது. நித்யா மட்டும் விதிவிலக்கா என்ன?

எட்டு மணிக்கெல்லாம் ஆபிஸ் வந்து விடும் வழக்கமுடைய நித்யாவிற்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் அந்த நேரத்தில் இதமாய் வீசும் குளிர்காற்றை இழுத்து நுகர்ந்தபடி சைக்கிளில் இரண்டு மூன்று சுற்றுகள் சென்று வருவது. ஒரு வாரம் கழித்து ஒரு காலை நேரத்தில் இதேப் போல் சுற்ற சைக்கிள் எடுத்து அழுத்த ஆரம்பித்த பொழுது அவள் தோழி எதற்கோ அழைக்க திரும்பி திரும்பிப் பார்த்தபடி என்னடி? என்று கேட்டபடி எதிரில் வந்த சைக்கிளில் சென்று முட்டி கீழே விழுந்தாள். விழாமல் சுதாரித்து நின்ற அவன் சைக்கிளை நிறுத்தி ஓடி வந்து அவள் மேல் கிடந்த சைக்கிளை எடுத்து நிறுத்தினான். இதற்குள் ஓடி வந்த அவளது தோழி அவளை கைகொடுத்து தூக்கினாள்.

"ஆர் யூ ஆல்ரைட்?" என்று கேட்டபோதுதான் அவனைப் பார்த்தாள். ஆ என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தவள் மனது அடி லூஸுப் பொண்ணே! இந்த தடவையும் மிஸ் பண்ணிடாத என்று அறிவுறுத்த வேகமாய் அவன் கழுத்தில் தொங்கிய ஐடி கார்டைப் பார்த்து அவனது எம்ப்ளாயி ஐடியை மனனம் செய்துக் கொண்டாள். எந்த பதிலும் இல்லாதுப் போகவே அவன் ஒரு புன்னகையைத் தந்துவிட்டு சைக்கிளில் பறந்தான். அட! இப்பயும் நன்றி சொல்லலையே என்று நினைத்தாலும் அதற்காக வருந்தும் மனநிலையில் இல்லை.

வேகமாக அவளது இடத்திற்குச் சென்று employee search-ல் சென்று அவனது எண்ணைக் கொடுத்து அவனது தகவல்களை எடுத்தாள். பெயர் சுப்ரமணி... அட! தமிழ்ப்பையன். நல்லவேளை என்று மனம் குதூகலித்தது. அவனது மொபைல் நம்பரை எடுத்து உடனடியாய் அழைத்தாள். ரிங் போனபோது ஏனென்றே தெரியாமல் இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது. நாம பாட்டுக்கு ஃபோன் பண்றோம். என்னடா இந்த பொண்ணுனு தப்பா நினைச்சுட்டா... பேசாம கட் பண்ணிடுவோமா என்று நினைத்தபோது அவன் எடுத்து விட்டான். உள்ளுக்குள் இருந்த குறும்புத்தனம் தானாய் தலைதூக்கியது.

"ஹலோ!"

"சுப்ரமணி?"

"யா"

"நான் வித்யா"

"எந்த வித்யா?"

"என்னங்க இப்படி கேட்டுட்டீங்க? போன வாரம் சேலம் பஸ் ஸ்டாண்ட்ல மீட் பண்ணினோமே. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?"

"இல்லையே! போன வாரம் நான் யாரையும் புதுசா மீட் பண்ணலையே"

"போன வாரம் சேலம் பஸ் ஸ்டாண்ட் வந்தீங்க இல்ல" சும்மா அடித்து விட்டாள்.

"ஆமா"

"அப்போ ஈரோடு பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ என்கிட்ட பேசினிங்க. நீங்கதான் உங்க நம்பர் தந்தீங்க. இல்லைனா எனக்கு எப்படி தெரியும்?"

"ஹலோ! யாருங்க. விளையாடாதீங்க. இப்போ சொல்லலைனா நான் ஃபோன கட் பண்ணிடுவேன்" இந்த பதிலில் நிஜமாகவே கட் பண்ணிவிடுவானோ என்ற பயம் வந்ததால் உளற ஆரம்பித்தாள்.

"ஹலோ ஹலோ! கட் பண்ணிடாதீங்க. நான் நித்யா"

"ஓகே!"

"உங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனா எனக்கு உங்களைத் தெரியும்"

"குழப்பறீங்களே"

"ஒரு வாரத்துக்கு முன்னாடி பஸ் ஸ்டாண்ட்ல கூட்டத்துல சிக்கின ஒரு பொண்ண காப்பாத்தினிங்களே ஞாபகம் இருக்கா?"

"ஓ! ஓகே ஓகே... தெரியுதுங்க.... இப்போதான விழுந்து எழுந்துப் போனீங்க. எதும் ரொம்ப அடியா?"

"அட! என்னை ஞாபகம் வச்சிருக்கீங்களா?"

"ஹலோ! உங்களோட தீவிர விசிறிங்க நான்"

"ஆ! என்ன நடக்குது இங்க? something weird"

"weirdம் இல்ல. ஒரு மண்ணும் இல்ல. நித்யாவுடன் சில நேரம்-ன்ற ப்ளாக் நீங்கதான எழுதறீங்க?"

"ஆமா! எப்படி நான்தான் அதுனு உங்களுக்குத் தெரியும்?"

"ஹாஹாஹா... அதான் internal blogs-ல அதுக்கு link கொடுத்து இருக்கீங்க இல்ல"

"அது சரி. ஆனா அந்த நித்யா நான்தான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?"

"அய்யோ என்னங்க சிஐடி ரேஞ்சுக்கு துருவறீங்க. உங்க கதைகள் கவிதைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரெகுலராப் படிப்பேன். நல்லா எழுதறீங்கன்னு சொல்லலாம்னு உங்க ஐடிய வச்சு சர்ச் பண்ணி உங்க நம்பர் எடுத்து வச்சிருந்தேன். சரி நாமளாப் போய் சொன்னா எதும் தப்பா எடுத்துப்பாங்களோனு நினைச்சு ஃப்ரீயா விட்டுட்டேன். போதுங்களா?"

"அப்போ நான் கால் பண்ணினப்போ யாருன்னே தெரியாத மாதிரி பேசினிங்க?" கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது.

"இல்ல. நீங்க ஏமாத்த நினைச்சு ஜாலியா ஆரம்பிச்சிங்க. சரி உங்க ஜாலி மூடைக் கெடுக்க வேணாமேன்னுதான்..." என்று அவன் இழுக்கவும் அதற்குள் கோபம் காணாமல் போய் தொற்றிக் கொண்ட சிரிப்புடன்

"சரி இப்போ பிஸியா நீங்க? ஃப்ரீனா காபி சாப்பிடப் போலாம்" என்று ஏதோ ஒரு தைரியத்தில் கேட்டு வைத்தாள்.

"ஓ! ஷ்யூர். எவ்வளவு நேரங்க ஆயிடப் போகுது. போலாம்" என்று அவன் பதிலளித்ததும் அவளால் சந்தோஷம் தாள முடியவில்லை. உடனே எங்கு வருவது என்று சொல்லி விட்டு வேகமாக ரெஸ்ட் ரூமிற்குள் ஓடினாள். முகம் கழுவி லேசாக ஒப்பனை செய்துக் கொண்டு சொன்ன இடத்திற்கு விரைந்தாள். அவளுக்கு முன்பே வந்து அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தபோது இந்த மனம் ஏன்தான் இப்படி குதியாட்டம் போடுகிறதோ... ஹ்ம்ம்ம்... புதிய அனுபவம் என்றெண்ணிக் கொண்டு வந்தவள்

"சாரி சாரி..." என்றபடி அவனிடம் சென்றாள்.

"பரவாயில்லைங்க" என்று புன்னகைத்தான். இருவரும் சென்று காபி வாங்கிக் கொண்டு வந்தமர்ந்தனர். வேலையில் ஆரம்பித்து தங்கியிருப்பது, கல்லூரி என்று எங்கெங்கோ சுற்றி வந்தப் பேச்சு இறுதியாக அவளது ப்ளாக்கில் வந்து நின்றது. அதுவரை அவந்து பேச்சை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தவள் அவளது ப்ளாக்கைப் பற்றி ரசித்து சொல்ல ஆரம்பித்தாள்.

"நான்கூட எதாவது எழுத ட்ரை பண்ணலாமான்னு நினைச்சேங்க. ஆனா என்னால ரெண்டு வரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுத முடியாது. அதனால மக்களை ஏன் கஷ்டப்படுத்தணும்னு விட்டுட்டேன்" என்றவன் அவள் புன்னகைக்கவும் தொடர்ந்து

"உங்க கதை எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். படிக்கும்போது எப்படியெல்லாம் எழுதறாங்கன்னு ரொம்ப ஆச்சரியமா நினைப்பேன். உங்ககூட இப்படி உக்காந்து காபி சாப்பிடுவேனு நான் நினைச்சுப் பார்க்கவே இல்ல" அவன் சொல்ல சொல்ல அவளுக்கு பெருமையாய் இருந்தது. சாதாரணமாய் நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொன்னாலே மனம் விண்ணில் பறக்கும். அதிலும் மனதுக்கு பிடித்த ஒருவர் புகழ்ந்தால்...

"அன்னைக்கே பஸ் ஸ்டாண்ட்லயே பேசி இருப்பேன். பட் அதுக்காகதான் ஹெல்ப் பண்ணினேனு நினைச்சுட்டீங்கனா... அதான் பேசலை" ஒரு நிமிடம் அமைதியாயிருந்துப் பின்

"உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். ஆக்சுவலா உங்க நம்பர் எடுத்ததும் அதுக்காகதான். பண்ணுவீங்களா?" என்று அவன் கேட்டதும் என்னவாய் இருக்கும் என்னவாய் இருக்கும் என்று மனம் அலைபாய்ந்தது. ஒரு நிமிடம் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

"சொல்லுங்க" என்றால் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்.

"எங்க வீட்டுல எனக்கு ஒரு பொண்ணு பாத்தாங்க. கிட்டத்தட்ட உறுதி ஆயிடுச்சு. நான் அந்தப் பொண்னை ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். எங்களுக்காக ஒரு கதை எழுதி தர முடியுமா?" அவன் கேட்டதும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று வெடித்து சிதறியது. ஒரு வித தாள முடியாத துயரத்தில் கண்கள் லேசாய் துளிர்க்க ஆரம்பித்ததும் சிவக்க ஆரம்பித்த முகத்தை தாழ்த்தி கைக்கடிகாரத்தில் மணிப் பார்த்தவள்

"அச்சோ! இப்ப ஒரு மீட்டிங் இருக்கு. மறந்துப் போயிட்டேன். சாரி. கதை எழுதி அனுப்பறேன். will catch u later" என்று சொல்லி விட்டு பதிலுக்கு காத்திராமல் எழுந்து விறுவிறுவென்று சென்றாள்.

ஏதோ பல வருடங்களாய் உருகி உருகி காதலித்தவன் தன்னை விட்டுப் பிரிந்ததுப் போல் தவித்தாள். சில மணி நேரங்களாய் ஒரு பெரிய போராட்டம் நடத்தி தனது முட்டாள்தனத்தை தானே கடிந்துக் கொண்டு ஒரு வழியாய் ஓரளவு மீண்டாள். மாலையில் அவன் கேட்ட கதையை எழுதி தரலாம் என்றெண்ணி எழுத ஆரம்பித்தாள். "இதுக்கெல்லாம் நான் பயந்த ஆளில்ல...." என்று ஆரம்பித்து அவளுடன் நடந்த சம்பவங்களைக் கோர்த்தாள். பெண்ணிற்கு வித்யா என்றும் பையனுக்கு அவனது பெயரையே வைத்து எழுதினாள். அவளை புதியவளாய் அவனுக்கு அறிமுகப்படுத்தி இருவரையும் நன்குப் பழக வைத்து இறுதியில் அவர்களைக் காதலர்களாக்கினாள். எழுதி முடித்ததும் அவனுக்கு மெயிலில் அனுப்பினாள். சில நிமிடங்களிலேயே காஃபி ஷாப்பிற்கு வர முடியுமா என்ற விண்ணப்பத்துடன் அவனிடமிருந்து கால் வந்தது. இப்பொழுது முடியாது என்று மறுத்தவள் ப்ளீஸ்! இந்த கதைக்கான ட்ரீட். மாட்டேனு சொல்லாதீங்க என்று அவன் கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை. சரியென்று சென்றாள்.

"கதை சூப்பருங்க. நான் உங்களை மீட் பண்ணினத வச்சு ஆரம்பிச்சு அட்டகாசமா முடிச்சிட்டிங்க" என்று அவன் புகழ்ந்து தள்ள அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

"ஆனா ஒரு சின்ன ரெக்வெஸ்ட். இதுல ஒரு விஷயம் மாத்தி தர முடியுமா?" என்று அவன் கேட்கவும் என்ன என்பது போல நிமிர்ந்துப் பார்த்தாள்.

"அந்த பொண்ணு பேரு வித்யா இல்ல..." என்று இழுக்கவும்

"அட! நான் அந்த பொண்ணு பேரு கேக்க மறந்துட்டேன். அதான் சும்மா ஒரு பேரை வச்சேன். மாத்தி தரேன். சொல்லுங்க" என்றாள்.

"அந்த பொண்ணு பேரு நித்யா. நீங்க எழுதி இருக்கறது கதை இல்ல. நிஜம்" என்று அவன் முடிக்கவும் ஆச்சர்யமாய் நிமிர்ந்தாள். என்ன கனவு ஏதும் காண்கிறோமா என்று திகைத்து விழித்தாள்.

"எனக்கு ஒரு ரெண்டு மாசம் முன்னாடி ஒரு பொண்ணு பாத்தாங்க. ரெண்டு வீட்டுலயும் எல்லாம் ஓகே ஆயிடுச்சு. நானும் அந்த பொண்ணும் பேசி ஓகே சொன்னா முடிஞ்சது. பேசறதுக்கு முன்னாடி எதாவது தெரிஞ்சக்கணும்னு அவ அண்ணன்கிட்ட பேசினேன். அவர் சொன்னார் என் தங்கச்சிக்கு எழுதறதுனா ரொம்ப இஷ்டம். நித்யாவுடன் சில நேரம்-ன்ற பேருல ப்ளாக் கூட எழுதறானு அவ ப்ளாக் அட்ரஸ் கொடுத்தார். அப்போதான் அவ ப்ளாக் அறிமுகம். அவ எழுத்து எனக்கு ரொம்ப பிடிச்சது. அவளோட தீவிர ரசிகனானேன். அவள மீட் பண்ணப் போற நாளுக்காக காத்திருந்தப்போதான் அவ இன்னும் ஒரு வருஷம் கழிச்சுப் பண்ணிக்கறேனு பிடிவாதமா இருக்கறான்னு சொன்னாங்க. ஒரு பெரிய ஏமாற்றம். சரி ஒரு வருஷம் காத்திருப்போம்னு வெயிட் பண்ண ஆரம்பிச்சேன். யதேச்சையா அவளுக்கு ஹெல்ப் பண்ணப் போயி இன்னைக்கு என் முன்னாடி அவ" என்று மூச்சு விடாமல் அவன் சொல்ல உலகம் மறந்துக் கேட்டுக் கொண்டிருந்தவள்

"அப்போ... சரோஜா அத்தை தூரத்து சொந்தக்கார பையன் சுப்ரமணி..." என்று அவள் விழுங்கவும்

"யெஸ். நானேதான்" என்று அதே ட்ரேட்மார்க் புன்னகையை தந்தான். ஒரு நிமிடம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தவள் எதுவும் சொல்லாமல் எழுந்தாள். எதும் சொல்லவில்லை கோபமோ என்ற பார்வையைக் கொடுத்தவனிடம் எதுவும் பேசாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். சோகம் தாளாமல் அவளையே இமைக்காமல் பார்த்தபடி அவன் இருக்க சிறிது தூரம் சென்றவள் திரும்பி

"இப்போ ஊருக்கு கிளம்பறேன். இப்போ போனாதான் பஸ்ஸ பிடிக்க முடியும். வீட்டுக்குப் போங்க. போய் பேசி எங்க வீட்டுல வந்து கேக்க சொல்லுங்க" என்று புன்னகைத்தாள்.

"ஹே!" என்றபடி உலகின் மொத்த சந்தோஷத்தையும் அள்ளி நெஞ்சில் திணித்துக் கொண்டவன் எழுந்து அவளை நோக்கி வேகமாக சென்றான். அவன் கிட்டே நெருங்குவதற்குள் வேகமாக நடக்க ஆரம்பித்தவள் அவனிடம் திரும்பி

"இந்த சண்டேவே நிச்சயம் வச்சுக்க சொல்லலாமா?" என்று சிரித்தபடி நிற்காமல் நடந்தாள்.

"ஹே! நில்லு. இது ஆபிஸ். ஓடிப் பிடிச்சு விளையாடற இடமில்ல" என்று நடையிலேயே அவன் துரத்த இருவரும் நடந்துப் பிடித்து விளையாட ஆரம்பித்தனர்.

49 comments:

Anonymous said...

asdfs

Anonymous said...

Good story....ur way of writing is also excellent...

Iyappan Krishnan said...

நல்ல கதை!!!

ஆயில்யன் said...

நல்ல கதை!

சூப்பர் போட்டோ!!

Yogi said...

நல்லா இருக்குங்க கதை !!!

:)

எழில்பாரதி said...

சூப்பர்!!!!!

நல்ல கதை!!!

Anonymous said...

eppadithan yosikirangalooo...

Anonymous said...

Jayanthi,

Nicely written.
Story or real??

ILA (a) இளா said...

1. :)
2. :(
3. :|

Totally _/\_

கோபிநாத் said...

அழகான கதை...ஒவ்வொரு காதல் கதையிலும் உங்களோட எழுத்து நடை ரசிக்க வைக்குது ;)

மங்களூர் சிவா said...

பிகார்காரன் பேர் சுப்ரமணியா????

நல்லா இருக்கு கதை!!!

ரசிகன் said...

//"ஹே! யு ஹாவ் அ ஸ்பைடர் ஆன் யுவர் பேக்" என்றுக் கூறியதோடு நில்லாமல் அவளது துப்பட்டாவின் பின்புறத்தில் இருந்த சிறிய சிலந்தியை தட்டி விட்டு அவளது பதிலுக்கு நில்லாமல் வேகமாக சென்று விட்டான்.//

ஹா..ஹா..:)))))))
சிலந்திய விட்டது யாருன்னு இப்போ புரிஞ்சிருச்சில்ல..:))))))

ரசிகன் said...

//"நான்கூட எதாவது எழுத ட்ரை பண்ணலாமான்னு நினைச்சேங்க. ஆனா என்னால ரெண்டு வரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுத முடியாது. அதனால மக்களை ஏன் கஷ்டப்படுத்தணும்னு விட்டுட்டேன்"//

ரொம்ப நல்லவரா இருக்காரே உங்க ஹீரோ :P :))))

ரசிகன் said...

//அவன் ஒரு புன்னகையைத் தந்துவிட்டு சைக்கிளில் பறந்தான்//

பெட்ரோல மிச்சம் புடிக்க ,ஹீரோவுக்கு சைக்கிளை கொடுத்து ஓட்ட வைச்சு,புரடக்‌ஷன் காஸ்ட குறைச்சதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ரசிகன் said...

//உங்க ஐடிய வச்சு சர்ச் பண்ணி உங்க நம்பர் எடுத்து வச்சிருந்தேன். //

அப்டியா !!!, அது எப்டிங்க ஜடிய வைச்சு நம்பர் கண்டுப்புடிக்கறது?.. எங்களுக்கும் சொன்னா நல்லாயிருக்கும்ல்ல..:P

ரசிகன் said...

//ஹே!" என்றபடி உலகின் மொத்த சந்தோஷத்தையும் அள்ளி நெஞ்சில் திணித்துக் கொண்டவன் எழுந்து அவளை நோக்கி வேகமாக சென்றான்.//

அட்டா.. என்னே வர்ணனை.. சூப்பர்..

ரசிகன் said...

கதை ஆரம்பிச்சதிலிருந்து ,இறுதிவரை ஆர்வம் குறையவே இல்லை...
எளிமையான வார்த்தைகள், அருமையான வர்ணனை,ரசனையான காதல் கதை. முடிவும் வழக்கம் போல மனநிறைவைத் தந்தது.

நிறைய எழுதுங்க.. வாழ்த்துக்கள்.

Anonymous said...

Guru -
good story, simple and sweet. keep it up

Unknown said...

Chance a illa Imsai Arasi, super kadhai...

Indha story mattum illa, I really like all ur stories, especially ur way of writing...

Unga story padichu mudicha odane, oru blush dhaan varum...

Continue writing...

கண்ணண் said...

அருமையான கதை!!

உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி கற்பனை எல்லாம் தோனுது???/


தோனுதுவதும் நன்மைக்கே!!!

கண்ணண்

Anonymous said...

hey very goodstory and enjoyed ...ur style of writing s too good..
kavitha

muthu said...

simple story, narration is fine..if you start reading the story(ies..), can feel the characters...

good job...

இனியாள் said...

Good story, kathaiyai vida kathai sollum vitham romba azhaga irukku.
Vazhthukkal.

Natpirku Iniyal.

muthu said...

flow of story is very nice.
nice execution... good work

Dreamzz said...

:) kadhai nalla irukunga

Anonymous said...

Hi Imsai ,

I recently stared reading blogs and completed reading most of your blogs .

" KAVITHAYE THERITUMA" story is really gud.

If any one who reads your stories/blog regularly, they can guess the flow the story.

When Subramani asked Nithya about the STORY, i guessed whats Going to happen .
If a reader can guess what will happen next they will loose interest

The best thing i liked about your stories is the way you narrate them . It is really GUD.

AWaiting for your next Story .
Rasigan

ஜி said...

:))) Nice one...

மங்களூர் சிவா said...

enge en comment?????????????

Grrrrrrrrrrrrrrrrr

Anonymous said...

nice.. eppadi eppadi ungalaala mattum ippadiyellaam???? hmm....ennamoo ponga..!!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

இது நிஜமா இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்...வாழ்த்துகள்!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Nice story,excellent flow of words...
KaruArunan

Anonymous said...

Nice story,excellent flow of words...
KaruArunan

Sathiya said...

நல்ல கதை. ஒரு தமிழ் சினிமாவ இண்டர்வல் வரைக்கும் பார்த்த மாதிரி இருக்கு;)

Unknown said...

இத பாத்தா கதை மாதிரி தெரியலையே???????
ஹ்ம்ம் பாவம் அந்த சுப்பிரமணி :)))))))))
ஆனாலும் கதை சூப்பர்!!!!!!!!!! வாழ்த்துக்கள்!!!!

Anonymous said...

ஒரு தடவைக்கு மேல் வாசிக்க வைக்கும் எழுத்துநடை...மீண்டும் மீண்டும் வாசித்தேன்...அழகான கதை!!!

Cheranz.. said...

Nice story! Infy backdrop?

Anonymous said...

ok

what's your real name?

your writing style is good?

Anonymous said...

அருமை.நல்லா இருக்குங்க.எளிமையான வர்ணனை, நல்ல வொகாபுலரி. மேலும் இது போன்ற சிறுகதைகள் பெறுவெள்ளமாக உங்களிடம் இருந்து வர வாழ்த்துக்கள்... (ஆஹா ஆஹா உங்க கதை படிச்ச அப்பறம் வார்த்தைகள் அப்படியே அருவி மாதிரி பொங்குதுங்க...)
--பிளேடு பக்கிரி

Anonymous said...

By any chance, is this your own love story?

கருணாகார்த்திகேயன் said...

hooo god ...this is what we called a love story !! i dont have any words to .........

with regards
Karthikeyan

Poorni said...

hey i recently got to read you post... Wow awesome yaaar... by the terms used an all i just guessed whre you may work in Bangalore....

Vijay said...

more than the story, i liked the style. ஒரு பெண்ணோட மனசுல இடம் ரிசர்வ் செய்து, அவள் மனதில் சில பல பட்டாம்ம்பூச்சிகளைப்ப்பறக்கவிட்டு, பிரகு அவளையே கை பிடிக்கறது ஹ்ம்ம் இதெல்லாம் படிக்கத்தான் முடியுது. உங்களுடைய அடுத்த பதிப்பு எப்போ ரிலீஸ் செய்யப் போறீங்க?

த. சீனிவாசன் said...

அருமை.
ஒரே ஃபீலிங்ஸா இருக்கு.

நாமக்கல் சிபி said...

:)

நல்ல கதை!

Anonymous said...

Nalla Kathai.
Ithu kathai mattum thana ? Illa ...

Vadielan R said...

இம்சை அரசியின் வலைப்பதிவை படித்தேன் என்னை மறந்தேன்

arul said...

nalla kathai