Sunday, March 9, 2008

வெள்ளித்திரை திரைப்படமும் எனக்குப் பிடித்த ஒரு நாவலும்

இன்னைக்குதான் இந்தப் படம் பாத்துட்டு வந்தேன். வந்ததுமே சுடசுட விமர்சனம் எழுதலாம்னு வரலை. ஹி... ஹி... விமர்சனம் எழுத தெரியாதே எனக்கு... ஆனா படத்தப் பத்தி என்னோட கருத்த சொல்லனும்னு தான்...

படம் என்ன டைப் அதாவது காமெடியா, இல்ல சென்டி கதையா, ஆக்சன் கதையா அப்படின்னோ இல்ல அட்லீஸ்ட் படத்தோட கதை என்னன்னே தெரியாம போய் பாத்தா அது உண்மையாவே ஒரு நல்ல அனுபவமாதான் இருக்கும். அதாவது அடுத்து என்ன நடக்கும்னு தெரியாம பார்க்கும்போது ஆட்டோமேட்டிக்கா என்ன ஆகுமோ என்ன ஆகுமோனு ஒரு இன்ட்ரெஸ்ட் வந்துடும். அதும் ஒரு நல்ல படமா அமைஞ்சுட்டா??? சொல்லவே வேணாம். அப்படி ஒரு சீன் கூட முன்னாடியேப் பார்க்காம நான் ரசிச்சுப் பார்த்தப் படங்கள் 12B, பார்த்தேன் ரசித்தேன், கனாக் கண்டேன். அந்தப் படங்கள் எந்த அளவுக்கு ஹிட் ஆச்சுன்னோ எந்த அளவுக்கு எல்லாருக்கும் பிடிச்சுதுன்னோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. இப்பொல்லாம் திரை விமர்சனம் அது இதுனு எழுதி கதைய முன்னாடியே சொல்லிடறதால சில நல்ல கதைகள் ரீச் ஆகாம போயிடறதுன்றது என்னோடக் கருத்து. சோ இந்தப் படத்தோட கதைய நான் எழுதப் போறதில்ல.

ஆனா சில விஷயங்கள் மட்டும் சொல்லணும்னு ஆசை. அதான் எழுத வந்துட்டேன். படம் பாக்கலாமானு யோசிச்சப்ப என்னென்ன படம் ஓடுதுனு கேட்டேன். வரிசையா சொல்லும்போது வெள்ளித்திரை ப்ரகாஷ்ராஜ் படம்னு சொன்னாங்க. உடனே கண்ணை மூடிட்டு அதுக்குப் போலாம்னு சொல்லிட்டேன். அதுக்கு ரெண்டு ரீசன்ஸ். ஒண்ணு என்னோட ஃபேவரைட் ஆக்டர்(அவருக்காக ஒரு பதிவே பொடணும்னு நினைச்சுட்டு இருக்கேன். கூடிய விரைவில்...). ரெண்டாவது இது அவரோடத் தயாரிப்பு. அவரோட தயாரிப்புன்னா கண்டிப்பா ஒரு நல்லக் கதை இருக்கும்னு உறுதியா நம்பற ஆள் நான். அழகிய தீயே, மொழி ரெண்டுமே வித்தியாசமான கதைகள். அதே மாதிரி இதுவும் ரொம்பவே ஒரு வித்தியாசமானக் கதை.

குறுக்கு வழியிலாவது ஹீரோ ஆயிடணும்னு துடிக்கற ஒரு நடுத்தர வயது இளைஞன், வியாபரத்துக்காக இல்லாம ஒரு நல்லக் கதைய படமா எடுக்கணும்னு லட்சியத்தோட இருக்கற ஒரு உதவி இயக்குநர், உதவி இயக்குநரால அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு நல்ல இடத்தைப் பிடித்திருக்கற ஒரு நடிகை இவர்களை சுற்றி நகர்கிற கதை. சின்னதா ஒரு ரொமான்டிக் சீன் கூடப் படத்துல இல்ல. ஆனா கவிதை போல ஒரு அழகான காதல் ப்ளசண்டா ஒரு ஸ்மைல் வர வைக்குது. மத்த இரண்டுப் படங்களோட ஒப்பிடும்போது இதுல காமெடி ரொம்ப கம்மிதான். ரொம்ப விழுந்து விழுந்து சிரிக்கற அளவுக்கெல்லாம் எதுமே இல்ல. எனக்குப் பெரிய ஏமாற்றம் என்னன்னா மற்ற இரண்டுப் படங்கள்ல வந்த மாதிரி தலைவர் ஒரு நல்ல இண்ட்ரெஸ்டிங்கான வித்தியாசமான கேரக்டர்ல வருவார்னு ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா இதுல ஒரு வில்லத்தனமான கேரக்டர்ல வந்து ஏமாத்திட்டார் :((( ஆனா எந்த கேரக்டரா வந்தாலும் என்னோட ஸ்பெஷாலிட்டி தெரியும்ன்ற விஷயத்த மட்டும் கொஞ்சமும் குறைவில்லாம இதுல பண்ணியிருக்கார். ப்ருத்விராஜ்... ஜாலியா காமெடிப் பண்ணிட்டு வாழ்க்கைய எஞ்சாய் பண்ற ஒரு சராசரி இளைஞனா இல்லாம லட்சியம்ன்ற வார்த்தைதான் வாழ்க்கைனு வாழ்ந்துட்டு இருக்கற ஒரு அழுத்தமான கேரக்டர். ரொம்ப நல்லாப் பண்ணியிருக்கார். கடைசில கொஞ்சம் சினிமாத்தனமா போயிடுச்சு. வழக்கம்போல ஹீரோன்னா ஜெயிக்கணும்ன்ற மாதிரி.

ஒரு நல்லப் படம் பார்க்கணும்னு நினைக்கறவங்க யோசிக்காமப் போய் பார்க்க வேண்டியப் படம். முடிஞ்சாப் பாருங்க.

இந்தப் படத்தைப் பார்த்தப்போ சினிமான்னு வாழற இளைஞர்கள்னு ஆரம்பிச்சப்போ நான் எப்போவோ கண்மணிலப் படிச்ச ஒரு நாவல் ஞாபகத்துக்கு வந்துச்சு. ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடிப் படிச்சக் கதை. இன்னும் ஒவ்வொரு அத்தியாயமும் ஞாபகம் இருக்கு. படிக்கும்போது எனக்கே கண்ணீரைக் கன்ட்ரோல் பண்ண முடியலை. அவ்ளோ ஃபீல் பண்ணிப் படிச்சக் கதை. நீங்கக் கூடப் படிச்சிருக்கலாம்.

கதையோட முதல் அத்தியாயமே ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பார்ல ஒருத்தன் தண்ணியடிச்சிட்டு கத்தறதால பார் ஆளுங்க வெளில போகச் சொல்லி சண்டை போடறதுலதான் ஆரம்பிக்கும். அவன் தமிழ்நாட்டோட நம்பர் ஒன் டைரக்டர். அவனை அவனோட அசிஸ்டெண்ட் டைரக்டர் வெளியக் கூட்டிட்டு வரப்போ "எனக்கு அவ வேணும் எனக்கு அவ வேணும்"-னு அவன் கதறி அழுவான். அப்போதான் ஃப்ளாஸ்பேக் ஆரம்பிக்குது. அவன் டைரக்டராகும்னு ஒரு லட்சியத்தோட சென்னை வரான். எப்படியோக் கஷ்டப்பட்டு அசிஸ்டெண்ட் டைரக்டரா ஆயிடறான். அவனுக்கு கொஞ்ச நாள்ல ஒரு பெரியவரோட நட்புக் கிடைக்குது. அவருக்கு இவனோட எண்ணங்களும் எழுத்துக்களும் ரொம்பப் பிடிக்குது. அவன் காசில்லாமக் கஷ்டப்படும்போதெல்லாம் அவர் உதவிப் பண்றார். ரெண்டுப் பேருக்கும் இடைல ஒரு நல்ல நட்பு வளர்ந்து அவரோட வீட்டுக்கெல்லாம் அவன் வர அளவுக்கு உரிமைக் கொடுக்கறார். அவருக்கு மனைவி இல்ல. மூணுப் பொண்ணுங்க. அதுல முதல் பொண்ணுக்கும் இவனுக்கும் காதல் வருது. அவதான் தனக்கு எல்லாமே நினைச்சு ரொம்ப டீப்பாக் காதலிக்கறான். இந்த விஷயம் தெரிஞ்ச அவ அப்பா அவளை கண்டிக்கறார். சினிமாக்காரவங்களோட நட்பா பழகலாம் ஆனா லைஃப்னு வரும்போது அவங்க சரிப்படமாட்டாங்கனும் அவ அவனைக் கல்யாணம் பண்ணிட்டா தங்கச்சிங்க லைஃப் ஸ்பாயில் ஆயிடும்னும் மீறி அவ பண்ணிக்கிட்டா அவங்க மூணுப் பேரும் தற்கொலைப் பண்ணிப்பாங்கன்னும் அவளை மிரட்டறார். அதனால அவனை மறந்துடறேனு அவ சம்மதிச்சிடுறா. அவங்கப்பா அவளுக்கு வேகமா மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிக்கறார். வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லாம அவனுக்கு 'நான் இல்லைன்ற கவலைல நீங்க நொடிஞ்சுப் போயிடக் கூடாது. நீங்க கண்டிப்பா ஒரு பெரிய டைரக்டரா வரணும். அதுதான் என்னோட ஒரே ஆசை'னு லெட்டர் எழுதிட்டு தற்கொலைப் பண்ணிக்கறா. அப்போதான் அவங்கப்பாவுக்கு செஞ்சத் தப்புப் புரியுது. அவன் முன்னாடி ஒரு குற்றவாளியா நிக்கறார். அவனுக்கோ உலகமே இருண்டுப் போன மாதிரி ஆயிடுது. ஒரு மாதிரி பைத்தியம் புடிச்சவன் மாதிரி ஆயிடறான். அவளோட ஆசைய நிறைவேத்தணும்னு வெறித்தனமா உழைச்சு ஒரு பெரிய டைரக்டர் ஆயிடறான். அதுக்கப்புறம் அவ குடும்பத்தை அவன்தான் பாத்துக்கறான். அவ அப்பா அவனை இப்போ மாப்பிள்ளைனு தான் கூப்பிடறார். அவர் ரெண்டாவது பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேக்கறார். அவன் என் வாழ்க்கைனா அது அவளோட மட்டும்தான். வேற யாருக்கும் இடம் இல்லைனு சொல்லி ரெண்டு பேருக்கும் நல்ல இடத்துலப் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கறான். காலம் முழுக்க அவளை நினைச்சுட்டே வாழறான்.
இதான் கதை. நான் ஒருவேளை சொதப்பலா கதை சொல்லி இருக்கலாம். ஆனா நாவல் எழுதி இருந்த விதமும் ரொம்ப அருமையா இருந்துச்சு. யார் எழுதினதுனு நோட் பண்ணி வைக்காம விட்டுட்டேன் :((( ஒவ்வொரு பார்ட்க்கு முன்னாடியும் ஒரு குட்டி கவிதை எழுதி இருந்தாங்க. அதுல எனக்குப் பிடிச்சு இன்னமும் ஞாபகம் வச்சிருக்கற ரெண்டு கவிதைகள்

"என்
நுரையீரல் சங்கீதமே!
எங்கே சென்றாய்?
தேடியலைகிறேன்
தேடித்... தேடித்... தேடித்..."

இது அவ செத்துப் போய் அவன் அழற பார்ட்க்கு இருந்தது.

"சாதனை செய்து விட்டதாய்
பலரிட்ட மாலைகளில்
கழுத்து கனக்கிறது
யாருமற்ற ராவில்
தாஜ்மஹாலின்
யமுனை நதிக்கரையில்
மகுடம் கழற்றி
கதறியழ வேண்டும்
போலிருக்கிறது"

இது அவன் சினிமால ஜெயிச்சு அவார்ட் வாங்கற பார்ட்க்கு.

சில கதைகள் மயிலிறகு மாதிரி மனசை இதமா வருடிச் செல்லும். சிலக் கதைகள் அட்லீஸ்ட் ஒரு சில மணி நேரங்களாவது அதோடப் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த மாதிரி நான் ஒரு சில நாட்கள் இந்தக் கதையவே நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். எப்போவாவது இதை நினைப்பேன். இதுப் படிச்சப்புறம்தான் நாம காதலிச்ச உயிர் இந்த உலகத்தை விட்டேப் பிரிஞ்சுப் போனா எவ்வளவு வலி இருக்கும்னு திங்க் பண்ணிட்டே இருந்தேன். அந்த மாதிரி ஒரு கொடுமை வேற எதும் இந்த உலகத்துல இல்ல. மனசெல்லாம் படம் பாக்க சான்ஸ் கிடைச்சும் அதனாலதான் நான் பாக்கலை. என்னோட சின்ன இதயம் இதையெல்லாம் தாங்கவே மாட்டேங்குது.

சரிங்க. இதை எழுதிட்டு எனக்கே மனசு கஷ்டம் கஷ்டமா ஆயிடுச்சு. பாப்போம். பை.

17 comments:

ரசிகன் said...

//இன்னைக்குதான் இந்தப் படம் பாத்துட்டு வந்தேன். வந்ததுமே சுடசுட விமர்சனம் எழுதலாம்னு வரலை. ஹி... ஹி... விமர்சனம் எழுத தெரியாதே எனக்கு... ஆனா படத்தப் பத்தி என்னோட கருத்த சொல்லனும்னு தான்...//

இம்சை...,ஏனிந்த கொலைவெறி...???

ரசிகன் said...

//இதுப் படிச்சப்புறம்தான் நாம காதலிச்ச உயிர் இந்த உலகத்தை விட்டேப் பிரிஞ்சுப் போனா எவ்வளவு வலி இருக்கும்னு திங்க் பண்ணிட்டே இருந்தேன். //

ஹய்யோ.. தாங்கலியே.. இதுக்கு தூர்தர்ஷனே பரவாயில்லை... இவங்க ஃபீல் பண்ணறதுக்காங்க...இப்டியெல்லாம்.. அவ்வ்வ்வ்வ்வ்.... காலையிலேயே இந்த அழுகாச்சி காவியமெல்லாம் கண்ணுல படனுமா?..
ஆபிஸ்க்கு போய் வந்து படிச்சுக்கிறேன்..(எஸ்கேப்பு)..:)))))
அட,வாங்கப்பு.. எல்லாரும் வந்து கும்முங்க..:))))

ரசிகன் said...

//எனக்கு அவ வேணும் எனக்கு அவ வேணும்"-னு அவன் கதறி அழுவான்.//
தெரியாத்தனமா இதை படிச்சதுக்கு எங்களுக்கு வேணும்,எங்களுக்கு வேணும்.அவ்வ்வ்வ்வ்.....:P
இனி காலையில கூகுள் ரீடர் திறப்பே?...இனி காலையில கம்பியுட்டரையே ஆன் பண்ணப்டாது ஆமா..(ஒன்னுமில்லைங்க.. என் மனசாட்சி:)) )

ரசிகன் said...

அருமையான கதை இம்சை... அதிலும் அந்த ஹீரோவோட வசனம..அடடா.. அருமை..:)))))))

ரசிகன் said...

அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்கு..:P

அப்பாடா.. காலையிலயே ஆரம்பிச்சாச்சு.. இனி யாராவது தொடருங்கப்பா..:))

மங்களூர் சிவா said...

வெள்ளித்திரை பற்றிய விமர்சனம் இந்த லிங்க்ல கொஞ்சம் பாருங்க

//
செலவு செய்ய நிறைய நேரமும் பணமும் வைத்திருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம். என்னைக் கேட்டால் வீட்டில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்திருப்பதே மதி என்பேன்...!
//
இதை நான் சொல்லலை படமும் இன்னும் பாக்கலை @@@

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சுரேகா.. said...

ஒரு கலவையான, அழுத்தமான பார்வை!

காதலில் வாழ்வதைவிட
காதலாய் வாழ்வதுதான்...
கடவுளைக் காட்டும் ! ன்னு சொன்ன கதை!

நல்லா சொல்லியிரூக்கீங்க!!

நிஜமா நல்லவன் said...

படிச்சுகிட்டே வரும்போதே நான் என்ன கமெண்ட் எழுதனும்னு நினைச்சேனோ அதை நீங்களே கடைசி வரியில சொல்லிட்டீங்க. ஆனா ஒரு சின்ன திருத்தம். கடைசி வரியில இருக்கிற 'எழுதிட்டு' வ எடுத்திட்டு 'படிச்சிட்டு' னு மாத்திக்கணும். அவ்வளவுதான்.

Anonymous said...

ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இண்டியாவா இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

இ.அரசி,
இந்தப் படம் இப்போ ஓடிக்கிட்டு இருக்கா.
யாராவது இப்படி எழுதினத்தான் தெரியுது.

வெள்ளித்திரைனே அதுக்குப் பேரா.
உங்க விமரிசனம் ரொம்ப நல்லா இருக்கு.

ரசிகன் said...

// மனசெல்லாம் படம் பாக்க சான்ஸ் கிடைச்சும் அதனாலதான் நான் பாக்கலை. என்னோட சின்ன இதயம் இதையெல்லாம் தாங்கவே மாட்டேங்குது.//
ivlo soft hearteda?.. romba nallavangala irukkingaley :P vaazthukkalnga..:)

Anonymous said...

Yes you're ryte.. A must seen movie... Even though Prakash Raj have dissapointed me :( But he's the BEST...!!!

About the novel, really misssed..
:((((

Anonymous said...

Have u finished read Kanmani's March 01 issue "Chittirai Maatha Nilavae"? really complicated...not making a sense...but m great fan of Ramani Chandran...

Shiva said...

//எப்போவாவது இதை நினைப்பேன். இதுப் படிச்சப்புறம்தான் நாம காதலிச்ச உயிர் இந்த உலகத்தை விட்டேப் பிரிஞ்சுப் போனா எவ்வளவு வலி இருக்கும்னு திங்க் பண்ணிட்டே இருந்தேன். அந்த மாதிரி ஒரு கொடுமை வேற எதும் இந்த உலகத்துல இல்ல. //

நம்ம காதலிச்சவங்க நம்மை விட்டு பிரிஞ்சு போற வலி ரொம்பவே கொடுமை தான்.எனிக்குமே நம்மகுடையே இருந்து நம்ம கனவுல பங்கேதுகனம்னு நம்ம நினைக்க அவங்களோ நம்மைபாதியிலே தனியே விட்டு போக அவங்கள பிரிஞ்சு நம்ம இதயம் வாடுற வலி உண்மையிலே நரக வேதனைதான்.

Shiva said...

//எப்போவாவது இதை நினைப்பேன். இதுப் படிச்சப்புறம்தான் நாம காதலிச்ச உயிர் இந்த உலகத்தை விட்டேப் பிரிஞ்சுப் போனா எவ்வளவு வலி இருக்கும்னு திங்க் பண்ணிட்டே இருந்தேன். அந்த மாதிரி ஒரு கொடுமை வேற எதும் இந்த உலகத்துல இல்ல. //

நம்ம காதலிச்சவங்க நம்மை விட்டு பிரிஞ்சு போற வலி ரொம்பவே கொடுமை தான்.எனிக்குமே நம்மகுடையே இருந்து நம்ம கனவுல பங்கேதுகனம்னு நம்ம நினைக்க அவங்களோ நம்மைபாதியிலே தனியே விட்டு போக அவங்கள பிரிஞ்சு நம்ம இதயம் வாடுற வலி உண்மையிலே நரக வேதனைதான்.

உண்மைத்தமிழன் said...

இம்சை அரசியே..

இது கொஞ்சமும் நியாயமில்லை..

நான் ஒருவன் காத்திருக்கும்போது, முழுக் கதையையும் சொல்லி எனக்குப் போட்டியா இவ்ளோ நீளத்துக்குப் பதிவு போட்டு எனக்கு வேலையில்லாம செய்றது ரொம்பத் தப்பு..

நீயே முழுசையும் எழுதிட்டா இப்ப நான் என்னத்த எழுதறது..?

இனியாள் said...

Vezhzhi thirai patri innum konjam ezhuthi irukkalame neenga, novel touching a thaan irukku, aanalum romba irakka manasu thaan ungalukku, antha kathaigal urukkama irunthathoda neenga atha iththana varshangal ninaivu vachchu solrathuku parattukkal.

Natpirku Iniyal.