Thursday, November 29, 2007

இன்னைக்கு எனக்கு பிறந்த நாளுங்க!!! :)

என்ன ஆச்சர்யம்! ஒரே வருஷத்துல ரெண்டு தடவையானு பாக்கறீங்களா? எனக்குனா எனக்கு இல்லைங்க. இம்சை அரசிக்கு :)

சென்ற வருடம்... சென்ற வருடம்... சென்ற வருடம்... (எக்கோப்பா... ;))

இந்த நாள்... இந்த நாள்... இந்த நாள்... (மறுபடியும் எக்கோதானுங்க)

நான் இம்சை அரசியாக அவதரித்த நன்னாள் ;) (நன்னாளான்னு ஆச்சரியத்துல நீங்க வாயப் பொளக்கறது எனக்கு தெரியுது :))

ஆபிஸ்ல என்டரி லெவல் ட்ரெயினிங் முடிச்சு ப்ராஜக்ட்குள்ள வலது கால எடுத்து வச்சதும் அடங்கொக்கமக்கா! மறுபடியும் ட்ரெயினிங். அது முடிஞ்சு ப்ராஜக்டுக்குள்ள ஜாயின் பண்றதுக்கு முன்னாடி கொஞ்ச நாள் வெட்டியா இருந்தப்போ ஆபிஸ் personal pages மூலமா நம்ம வெட்டிப்பயல் ப்ளாக் அறிமுகம். அங்கிருந்து அப்பிடியே வ.வா.சங்கம் :) சென்னி மாநகரத்துல என் ஆருயிருங்கள விட்டு பிரிஞ்சு வந்த துக்கத்துல 7 தோசை மட்டுமே சாப்பிட்டுட்டு இருந்த நான் சங்கத்து பதிவுகள படிச்சு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சேன் (சங்கத்து மக்கள்ஸ்... நோட் திஸ் பாயிண்ட்... அதுக்கான வைத்திய செலவு பில்ல உடனடியா அனுப்பி வைக்கறேன்;))))

நாம எப்படி நம்ம கவலை எல்லாம் மறந்து சிரிக்க ஆரம்பிச்சோமோ அதே மாதிரி அட்லீஸ்ட் ஒரு ரெண்டு பேரையாவது... சிரிக்க வைக்க முடியாட்டியும் பரவாயில்ல... ஒரு சின்ன புன்னகையாவது கொண்டு வர வைக்கணும்கிற ஒரு நல்ல எண்ணத்துல தமிழச்சி-ன்னு பேரு வச்சி ப்ளாக்குக்கு ஓபனிங் செரிமனி நானே நடத்திக்கிட்டேன். ஆரம்பத்துல எதும் தெரியாம முழிச்சிட்டு இருந்த எனக்கு எல்லா உதவிகளையும் செஞ்ச வெட்டிக்கு ஸ்பெஷல் நன்றிகள். அப்புறம் வெட்டி வந்து மேடம் தமிழச்சி-ன்ற பேருல ஏற்கனவே ஒரு பெரிய பதிவர் இருக்காங்க. அதனால நீங்க கொஞ்சம் பேரை மாத்திக்கிட்டிங்கனா பரவால்லைனு சொன்னார். ஆஹா! என்ன பேரு வைக்கலாம்னு ஒரு ரெண்டு நாளா இல்லாத மூளைய.... ச்சே..... மூளைய கசக்கி கசக்கி யோசிச்சேன். ஹ்ம்ம்ம்ம்..... நாளைக்கு என் பிள்ளைக்கு பேர் வைக்க கூட இப்படி யோசிக்க மாட்டேன் போல. ரூம்ல ஃப்ரெண்ட்ஸ் என் டார்ச்சர் தாங்க முடியாம சரி நாங்க எதாவது ஐடியா தரோம்னு மத்த ப்ளாக் பேரெல்லாம் கேட்டாங்க. நான் சொன்னத வச்சு என் ஆருயிர் எதிரி... ச்சே.... தோழி பேசாம உன் கேரக்டருக்கு பொருத்தமா 'இம்சை அரசன்'-ன்னு வச்சிடேன்னு சொன்னா. உடனே இன்னொருத்தி ஹே! அது பசங்க வச்சா நல்லா இருக்கும்னு சொன்னா. அப்போதான் என் மூளைல அப்படியே ஒரு ஸ்பார்க் :))) பேரு கிடைச்சிடுச்சு... பேரு கிடைச்சிடுச்சு... ன்னு குதிச்சேன். சந்தோஷமா 'இம்சை அரசி' எப்படி இருக்குனு நான் கேட்டதும் அடுத்த நொடியே பதில் வந்துச்சு "உனக்கு ஏத்த பேரு"-ன்னு. இதுதாங்க இம்சை அரசியின் வரலாறு. நாளைக்கு உங்க பிள்ளைங்க ஹிஸ்டரில படிக்கும்போது உங்ககிட்ட சந்தேகம் கேட்டா நீங்க தெரியாம முழிக்க கூடாது இல்ல. அதுக்குதான் இவ்ளோ கதையும் ;))))

ஓகே... ஓகே.... நோ வயலென்ஸ்.... அப்படியெல்லாம் கோவமா முறைக்க கூடாது. ஏனா இன்னைக்கு நான் பர்த்டே பேபி ;)))

சரி மேடம் சீரியஸ் ஆயிட்டாங்க.......

இதுவரைக்கும் நான் எழுதியதை படிச்சு நிறை குறைகள் சொல்லி, என்னை மென்மேலும் வளர்த்துக் கொள்ள உதவிய சக பதிவர்களுக்கும், பதிவர் அல்லாத மற்ற நண்பர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் :)))

இந்த இம்சை அரசியால எனக்கு நிறைய விலை மதிக்க முடியாத பரிசுகள் கிடைச்சிருக்கு. அதாங்க அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், தங்கைகள், நட்புகள். அதுல ஒரு விலை மதிக்க முடியாத பரிசு என் பிறந்த நாளுக்காக ஒரு பரிசு கொடுத்திருக்கு. அது என்னன்னு தெரியணும்னா இங்க க்ளிக் பண்ணுங்க :)))

43 comments:

Unknown said...

இம்சை அரசிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

MyFriend said...

வாழ்த்துக்கள்..

மென்ம்மேலும் பல பல கதைகள் எழுதி புகழ் பெற வேண்டும் நீங்க. :-)

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்! கலக்குங்க :)

துளசி கோபால் said...

நாலைஞ்சு முறை கொண்டாடினாலும் தப்பே இல்லை.

இனிய வாழ்த்து(க்)கள்

நாகை சிவா said...

நல்லா இருங்க.. தொடந்து இம்சை பண்ணுங்க ...

வாழ்த்துக்கள் :)

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...தொடாரட்டும் உங்கள் இம்சை ;))

ஆயில்யன் said...

இம்சை அரசி அக்காவிற்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.....
இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்...
உங்கள் இம்சை இனிதே தொடரட்டும்..

Anonymous said...

Imsaigal menmelum thodara vazthukal...

CVR said...

Many more happy returns of the day! :-)

G3 said...

இம்சை அரசிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

தொடந்து இம்சை பண்ணுங்க :-)))

இம்சை அரசி said...

தேவ் அண்ணா, அனு, கப்பி, துளசி கோபால், புலி, கோபி அண்ணா, ஆயில்யன், ரங்கன், அமுதா, CVR, G3 உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப n ஸ்பெசல் தேங்க்ஸ் :)))

Anonymous said...

ப்ராஜக்டுக்குள்ள ஜாயின் பண்றதுக்கு முன்னாடி கொஞ்ச நாள் வெட்டியா இருந்தப்போ ஆபிஸ் personal pages மூலமா நம்ம வெட்டிப்பயல் ப்ளாக் அறிமுகம். அங்கிருந்து அப்பிடியே வ.வா.சங்கம் :) /////////

வெட்டி, நீங்கபாட்டுக்கு சாப்டுவேர் மக்கள் வேலை பார்க்குறாங்க அதுனால அவுங்க சம்பளம் நியாந்தான்ன்னு தூக்கி நிப்பாட்டிக்கிடு இருக்கீங்க, இங்க நீங்கபாத்து வளர்ந்த புள்ள என்னாடான்னா, உங்கமக்களோட வேலை பத்தி பின்னிபெடலெடுக்குது !!!! இப்படி பிறந்தநாழு, முதல்ல பல்லு வெளக்கின நாளு (பாத்திரம் வெளக்கின நாழுனெல்லாம் போடமுடியாது - அத்த பண்ணமாட்டேங்கன்னு தெரியும்) முதவாய கொப்புழ்ச்சிடு காப்பிகுடிச்ச நாழு, முதன் முதல்ல குளிச்ச வீக் என்ட்டுன்னு எல்லாம் போஷ்ட் போடும்போதே நீங்க முதன்முதலா உருப்படியா கோடு எழுதுன நாழுன்னு உங்க பாஷ் ஒரு போஷ்ட் போட போறாரு !! ஆனாலும் உங்களோட 'என் தோழி' அப்படிங்கிற ஒரு கவிதைக்காக உங்களை மன்னிக்கிறேன்.

ILA (a) இளா said...

இம்சை, நீங்க எழுதின காதல் கதைகள்தான் எனக்கு இன்னும் பிடிச்சு இருக்கு. சோ.. எது நல்லா வருதோ அதைச் செய்ங்கா.. சங்கத்து மக்கள் இருக்கீங்க,,நமக்குள்ளே பேசிக்கிறது... இருந்தாலும் வாழ்த்துக்கள்! ஹாஸ்டல் காமெடி எங்கே வரும்? நல்லா இருக்கு.

இம்சை அரசி said...

// Anonymous said...

ப்ராஜக்டுக்குள்ள ஜாயின் பண்றதுக்கு முன்னாடி கொஞ்ச நாள் வெட்டியா இருந்தப்போ ஆபிஸ் personal pages மூலமா நம்ம வெட்டிப்பயல் ப்ளாக் அறிமுகம். அங்கிருந்து அப்பிடியே வ.வா.சங்கம் :) /////////

வெட்டி, நீங்கபாட்டுக்கு சாப்டுவேர் மக்கள் வேலை பார்க்குறாங்க அதுனால அவுங்க சம்பளம் நியாந்தான்ன்னு தூக்கி நிப்பாட்டிக்கிடு இருக்கீங்க, இங்க நீங்கபாத்து வளர்ந்த புள்ள என்னாடான்னா, உங்கமக்களோட வேலை பத்தி பின்னிபெடலெடுக்குது !!!! இப்படி பிறந்தநாழு, முதல்ல பல்லு வெளக்கின நாளு (பாத்திரம் வெளக்கின நாழுனெல்லாம் போடமுடியாது - அத்த பண்ணமாட்டேங்கன்னு தெரியும்) முதவாய கொப்புழ்ச்சிடு காப்பிகுடிச்ச நாழு, முதன் முதல்ல குளிச்ச வீக் என்ட்டுன்னு எல்லாம் போஷ்ட் போடும்போதே நீங்க முதன்முதலா உருப்படியா கோடு எழுதுன நாழுன்னு உங்க பாஷ் ஒரு போஷ்ட் போட போறாரு !!
//

என்னங்க இது? ஒரு தீராத கலைத் தாகத்துல ஆபிஸ் வேலையெல்லாம் முடிச்சிட்டு ராப்பகலா உக்காந்து எழுதிப் போட்டா இவ்ளோ திட்டு திட்டறீங்க??

பெஞ்ச்ல இருந்தது என் தப்பா??? அய்யோ சாமி... என்னால முடியல... ஆராச்சும் என்ன காப்பாத்துங்களேன்...

// ஆனாலும் உங்களோட 'என் தோழி' அப்படிங்கிற ஒரு கவிதைக்காக உங்களை மன்னிக்கிறேன்.
//

எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை அது :))) இப்போ படிச்சு பாத்தா நானா எழுதினேனு ஆச்சர்யமா இருக்கு :)))

நன்றி :)))

இம்சை அரசி said...

// ILA(a)இளா said...

இம்சை, நீங்க எழுதின காதல் கதைகள்தான் எனக்கு இன்னும் பிடிச்சு இருக்கு. சோ.. எது நல்லா வருதோ அதைச் செய்ங்கா.. சங்கத்து மக்கள் இருக்கீங்க,,நமக்குள்ளே பேசிக்கிறது... இருந்தாலும் வாழ்த்துக்கள்! ஹாஸ்டல் காமெடி எங்கே வரும்? நல்லா இருக்கு.
//

வாங்க இளா... ரொம்ப தேங்க்ஸ்ங்கண்ணோவ் :)

இன்னும் நிறைய கதை ஸ்டாக்ல இருக்கு. ஒண்ணொண்ணா எழுதிடுவோம்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். அடுத்து உங்க கதைய எழுதலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன் ;)))

என்ன சொல்றீங்க??? ;)

யார்ட்டயும் சொல்லிடாதீங்க ;)))

மங்களூர் சிவா said...

///
சென்னி மாநகரத்துல என் ஆருயிருங்கள விட்டு பிரிஞ்சு வந்த துக்கத்துல 7 தோசை மட்டுமே சாப்பிட்டுட்டு இருந்த நான்
///

இப்ப எத்தினி 14 ஆ???

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

ஒரு தீராத கலைத் தாகத்துல ////
என்னங்க கலைத்தாகமா !! அதாவது, இதை ஆபிசுல பண்ணுறதால இதுவும் ஆபிஷ் வேலைதான்ங்கிறங்க!!எதுக்கும் உங்க பாஷ் இங்கிலிஷ் பிளாக் எழுதுறாறன்னு விசாரிச்சு வைங்க !!
'என் தோழி' பத்தி உங்க பதில படிச்சவுடனேதான் எனக்கு சந்தேகம் வருது, மண்டபத்தில யாரும் எழுதி கொடுக்கலையே !!! அப்படி பார்த்தாலும் பெங்களுர்ல கல்யாணமண்டபம் மட்டும்தான் இருக்கும். நல்லா யோசிச்சு சொல்லுங்க நீங்கதான எழுதினீங்க !!இது தெரியாம IT பொண்ணுங்கள்ள ஒரு 0.001% வெளிஉலகத்தை பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுருக்காங்கன்னு நண்பர்கள்கிட்ட எல்லாம் வேற அடிச்சுவிட்டுடேன், உங்க பதிலவச்சுதான் இருக்கு 0.001% அப்படியே இருக்கிறது !! IT பொண்ணுங்க சொன்னவுடனே அத்தயே பிடிச்சுகிடாதீங்க, பையங்கன்னா 0.002%. அவ்வளவுதான் (அப்படிபார்த்தாலும் 50% அதிகம்தான்ங்கிறங்க்களா)
நன்றி.

ரசிகன் said...

நல் வாழ்த்துக்கள்.. அரசி...உங்களுக்கும், பதிவுக்கும்..

நீங்க என்கிட்ட சண்டை போடணும்னே முடிவு பண்ணிட்டே வந்திருக்கீங்களோ??

என்னோட எந்த ஒரு போஸ்ட்டும் வேற யாரோ எழுதிக் கொடுத்து போட்டதில்ல. அடுத்தவங்க எழுதிக் கொடுத்தத என்னோடதுன்னு சொல்லிக்கிற பழக்கம் எனக்கில்ல.

உங்க IT, non IT சண்டையெல்லாம் இங்க கொண்டு வராதீங்க ப்ளீஸ். அப்படி வெளி உலகம் தெரியாதவங்க கூட ஏன் நீங்க சண்டை போடணும்?

இம்சை அரசி said...

// ரசிகன் said...

நல் வாழ்த்துக்கள்.. அரசி...உங்களுக்கும், பதிவுக்கும்..
//

மிக்க நன்றி ரசிகன் :)))

Anonymous said...

போச்சுடா, எழுதிகொடுத்ததுன்னு விளையாட்டுக்குதாங்க சொன்னேன். அப்படி இல்லைன்னா ஒரு மாமாங்கம் கழிச்சு எதுக்கு நினைவில இருந்து நல்லாயிருக்குன்னு சொல்லப்போறேன் !! என்னவோ போங்க.
அப்புறம் பிறந்தநாள் அன்னிக்கு எல்லாம் நம்ம ஊர்ல யாரும் சண்டை போட மாட்டாங்க !! அதனால அதுவும் ஒரு டைமிங்கா சொன்னதுதான் !!

இம்சை அரசி said...

// Anonymous said...

போச்சுடா, எழுதிகொடுத்ததுன்னு விளையாட்டுக்குதாங்க சொன்னேன். அப்படி இல்லைன்னா ஒரு மாமாங்கம் கழிச்சு எதுக்கு நினைவில இருந்து நல்லாயிருக்குன்னு சொல்லப்போறேன் !! என்னவோ போங்க.
அப்புறம் பிறந்தநாள் அன்னிக்கு எல்லாம் நம்ம ஊர்ல யாரும் சண்டை போட மாட்டாங்க !! அதனால அதுவும் ஒரு டைமிங்கா சொன்னதுதான் !!

//

:)))))

நன்றி என் கவிதை பத்தி சொன்னதுக்காக :)))

Anonymous said...

இனிய இம்சைகள் பல செய்து...

இம்சையில்லாது வாழ...

வாழ்த்துக்கள்....

Anonymous said...

இம்சைகிட்டேயிருந்து என்னை காப்பாத்தின சாமிகளுக்கு கோடி நன்றிகள். ஒரு கவிதை நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டு, நான் இம்சிக்கப்பட்ட பாடு இருக்கே !! இன்னைக்கு சில்லறையா மாத்தி நானே சூனியம் வச்சுகிட்டனோ !!

காட்டாறு said...

இம்சை அரசிக்கு இம்சையான... இல்ல...மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!! மேலும் மேலும் இம்சை பண்ணுங்க...

இராம்/Raam said...

இம்சை தொடரட்டும் எப்பிடி நாங்கலே கேட்டுக்கிறது.... என்ன கொடுமை'க்கா இது?? :)

Anonymous said...

உங்க (ரசனையான) இம்சை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Govindarajan.L.N. said...

ஒரு வருடத்தில் ஆனந்தவிகடனில் இடம் பெறும் அளவுக்கு நல்ல வளர்ச்சி. என் குழந்தைகளுக்கு இந்த link ஐ அனுப்பியுள்ளேன். வாழ்த்துக்கள். என் போன்ற senior citizensம் படித்து ரசிக்கும்படி நகைச்சுவை உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ளது. ஆசிகள்.

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இம்சை அரசி - ஆ.வி யில் இடம் பிடித்து, ( முதன் முதலாக ??) பெருமை பெற்ற பதிவு இது. நல் வாழ்த்துகள். தொடர்க இம்சையை

Divya said...

தொடரட்டும் உங்கள் இம்சை! வாழ்த்துக்கள்!

இம்சை அரசி said...

// இரண்டாம் சொக்கன் said...

இனிய இம்சைகள் பல செய்து...

இம்சையில்லாது வாழ...

வாழ்த்துக்கள்....
//

நன்றி இரண்டாம் சொக்கன் :)))

இம்சை அரசி said...

// Anonymous said...

இம்சைகிட்டேயிருந்து என்னை காப்பாத்தின சாமிகளுக்கு கோடி நன்றிகள். ஒரு கவிதை நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டு, நான் இம்சிக்கப்பட்ட பாடு இருக்கே !! இன்னைக்கு சில்லறையா மாத்தி நானே சூனியம் வச்சுகிட்டனோ !!
//

யோவ் கவிதை நல்லா இருக்குனு சொன்னதுக்கா சண்டை போட்டேன்?? நல்லா படிச்சு பாத்துட்டு சொல்லணும் :)))

இம்சை அரசி said...

// காட்டாறு said...

இம்சை அரசிக்கு இம்சையான... இல்ல...மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!! மேலும் மேலும் இம்சை பண்ணுங்க...
//

நன்றி காட்டாறு :)))

இம்சை அரசி said...

// மங்களூர் சிவா said...

///
சென்னி மாநகரத்துல என் ஆருயிருங்கள விட்டு பிரிஞ்சு வந்த துக்கத்துல 7 தோசை மட்டுமே சாப்பிட்டுட்டு இருந்த நான்
///

இப்ப எத்தினி 14 ஆ???
//

இல்ல 24 ;)))

// மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்
//

நன்றிங்க :)))

இம்சை அரசி said...

// இராம்/Raam said...

இம்சை தொடரட்டும் எப்பிடி நாங்கலே கேட்டுக்கிறது.... என்ன கொடுமை'க்கா இது?? :)
//

ஒரு கொடுமையும் இல்ல ராயலு தம்பி ;)))

இம்சை அரசி said...

// Bharath said...

உங்க (ரசனையான) இம்சை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
//

ரொம்ப நன்றிங்க Bharath :)))

இம்சை அரசி said...

// Govindarajan.L.N. said...

ஒரு வருடத்தில் ஆனந்தவிகடனில் இடம் பெறும் அளவுக்கு நல்ல வளர்ச்சி. என் குழந்தைகளுக்கு இந்த link ஐ அனுப்பியுள்ளேன். வாழ்த்துக்கள். என் போன்ற senior citizensம் படித்து ரசிக்கும்படி நகைச்சுவை உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ளது. ஆசிகள்.
//

மிக்க நன்றி அப்பா :)))
(அப்பா-னே கூப்பி்டலாம் இல்ல)

இம்சை அரசி said...

// cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இம்சை அரசி - ஆ.வி யில் இடம் பிடித்து, ( முதன் முதலாக ??) பெருமை பெற்ற பதிவு இது. நல் வாழ்த்துகள். தொடர்க இம்சையை
//

ரொம்ப நன்றிங்க சீனா :)))

இம்சை அரசி said...

// Divya said...

தொடரட்டும் உங்கள் இம்சை! வாழ்த்துக்கள்!
//

ரொம்ப நன்றி திவ்யா :)))

karthykeyan said...

ohhh..nee bench ah?...nee soldra kathaya vache nee entha companyaa irupanu theriyuthu