Tuesday, July 24, 2007

அத்தை மகனே! அத்தானே!! - II


ப்ரதாப் அவனது கம்ப்யூட்டரில் ஏதோ வேலையாயிருக்க அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்த சுதா "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கிறது" என்று அவனைப் பார்த்து பாடியபடியே வந்தாள். சத்தம் கேட்டு அவன் திரும்பி பார்த்த போது அவசர அவசரமாய் வேறுபுறம் பார்வையை திருப்பினாள். அவன் கையில் காபியை கொடுத்தவள் அவனுக்கு எதாவது புரிந்திருக்குமோ என்ற ஆசையாய் அவனைப் பார்த்தால் அவனோ எதையும் சட்டை செய்யாமல் அவனது வாழ்க்கையின் சந்தோஷமே அந்த காபியை குடிப்பதில்தான் இருக்கிறது என்பது போல காபியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான். சற்றே எரிச்சலுற்றவள் இன்று எப்படியாவது சொல்லி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். எவ்வளவுதான் தைரியமான பெண்ணாயிருந்தாலும் காதல் கோழையாக்கி விடுவது இயல்புதானே. அதற்கு சுதா மட்டும் விதிவிலக்கா என்ன? எப்படி ஆரம்பிப்பதென்று யோசித்தவள் மீண்டும் பாடலின் துணையையே நாடினாள்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவி நான்" என்று அவனுக்கு நேராய் ஜன்னலில் சாய்ந்து நின்றபடி பாடினாள். இம்முறை அவளது பாடலுக்கு செவி சாய்த்தவன் நிமிர்ந்து பார்த்தான். இப்பொழுதாவது புரிந்து விட்டதா? இதயம் படபடவென்று வேகமாய் அடிக்க கண்களில் காதல் ததும்ப அவனை ஆவலாய் பார்த்தாள்.

"ஏன்டி..... ஏழாங்கிளாஸ்லயே ஏழு தடவ உக்காந்து உக்காந்து வந்த..... நீயெல்லாம் எங்க ஒரே அட்டம்ப்ட்ல பாஸ் பண்ண போற?" என்று சத்தம் போட்டு சிரித்த சிரிப்பு அவளுள் இருந்த சுயமரியாதையை தட்டி எழுப்ப

"ட்வெல்த்லயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.... இதுவரைக்கும் எல்லா செமஸ்டர்லயும் ஃபர்ஸ்ட் மார்க்... என்ன பாத்தாடா ஏழாங்கிளாஸ்லயே ஏழு தடவ ஃபெயிலுனு சொல்ற" என்றபடியே அவன் தலையில் அடித்தாள். அவன் சிரித்தபடியே தடுக்க கோபம் பொங்கியவளாய் அறையை விட்டு வெளியேறினாள்.

நேராக வீட்டிற்கு வெளியே சென்றவள் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தாள். கோபத்தில் இதழ்கள் துடிக்க ஒரு ஐந்து நிமிடம் அமைதியாய் இருந்தாள். ச்சே. எப்பவும் போல விளையாட்டுக்குதான பேசினான். ஏன் இப்படி கோபப்பட்டு வந்தேன் என்று தன்னைதானே கடிந்து கொண்டவளுக்கு இது அவனது கிண்டலினால் வந்த கோபம் அல்ல. அவளது காதலை அவன் புரிந்து கொள்ளாததால் வந்த கோபம் என்று தெளிவாக புரிந்தது. ப்ச்.... பாவம் அவனை வேறு அடித்து விட்டோமே என்று வருந்தியவள் எழுந்து அவனது அறைக்கு சென்றாள். அவன் யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததால் அமைதியாய் பின்னால் நின்றாள்.

"டேய்! ப்ளீஸ்டா செல்லம். நாளைக்கு உன்னை கண்டிப்பா ஷாப்பிங் கூட்டிட்டு போறேன். இதுக்காக எல்லாம் பேச மாட்டேனு சொல்லாத.... நீ பேசாம என்னோட யார் பேசுவாங்கன்னு சொல்லு.... செல்லம் இல்ல.... தங்கம் இல்ல.... என் புஜ்ஜி இல்ல....." என்று அவன் பாட்டுக்கு கொஞ்சி கொண்டிருக்க அவளுக்கு ஏதோ சுறுசுறுவென்று ஏறியது. சிறிது நேரத்தில் அவன் வைத்து விட அவன் முன் போய் நின்றவள்

"யாருகிட்ட மாமா இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்த?" என்றாள்.

"இப்போதான் பெரிய இவளாட்டம் கோவிச்சிக்கிட்டு போன? இப்ப மட்டும் எதுக்குடி பேசற?"

"நீ மொதல்ல சொல்லு.... யார்ட்ட பேசிட்டு இருந்த?"

"என் ஃப்ரெண்டுடி.... கூட வொர்க் பண்றா...."

"அதுக்குனு இப்படி கொஞ்சிட்டு இருக்கற"

"ஏய்! அவ எனக்கு ரொம்ப க்ளோஸ். இன்னைக்கு ஷாப்பிங் போகணும்னு சொல்லியிருந்தா. என் டேமேஜர் அதுக்குள்ள வேலைய குடுத்து உக்கார வச்சுட்டாரு. அதான் கோவிச்சிக்கிட்டு பேச மாட்டென்றா" என்றவாறு அவன் எழுந்து வெளியே செல்ல அவன் சட்டையை பிடித்து உள்ளிழுத்தாள். அவனை சுவறோடு சாய்த்து அவன் சட்டை காலரைப் பிடித்து

"இங்க பாரு. இனிமேல் ஃப்ரெண்டு அவ இவனு யார்கூடயாவது சுத்திட்டு இருந்த...... என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது...... சரியா?" என்றாள். அவன் திகைத்து விழிக்க

"இங்க பாரு மாமா உன்னைதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன். ஐ லவ் யூ"

அவன் விழிகள் அதிர்ச்சியில் அப்படியே உறைய
"இங்க பாரு உனக்கு ரெண்டே ரெண்டு சாய்ஸ்தான். ஒண்ணு மி டூன்னு சொல்லு. இல்லைனா எப்போ கல்யாணத்த வச்சுக்கலாம்னு கேளு".
அவன் மௌனமாய் இருக்கவே

"நீ எனக்கு தாலி கட்டறியா இல்ல உன்னை தூக்கிட்டு போய் நான் கட்டவா?" என்று அவள் பொறுமையிழந்து கேட்கவும் நினைவு வந்தவனாய் அவள் கையை எடுத்து விட்டவன்

"என்னடி விட்டா ரொம்ப பேசிட்டே போற?" என்று மீண்டும் சேரில் அமர்ந்தான்.

"உன் பதில் என்னன்னு சொல்லு"

எவ்வித உணர்ச்சியுமின்றி ஒரு நிமிடம் அவளையே இமைக்காமல் பார்த்தான்.
"ஏன்டி உனக்கு இப்படியெல்லாம் தோணுது? இதுவரைக்கும் எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்ல. இனிமேலும் வருமோனு தெரியாது" என்று அவன் சொன்னதை கேட்டதும் அவளால் அங்கே நிற்க முடியவில்லை. எதோ இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது. அப்படியே தலையை பிடித்துக் கொண்டு பெட்டில் அமர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடம் பொறுத்து அவன் எழுந்து அவளருகில் வந்தான்.
"என்னடி ஆச்சு?" என்றபடி அவள் தலையில் கைவைக்க அவனது கைகளை பட்டென்று தட்டி விட்டாள். வேகமாய் எழுந்தவள்

"இங்க பாரு. இனிமேல் நீயா வந்து கேட்டா ஏன் காலைப் பிடிச்சு கெஞ்சினா கூட நான் உன்னை நிச்சயமா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று அவனை நேராக பார்த்து சொல்லி விட்டு விடுவிடுவென்று அறையை விட்டு வெளியேறினாள்.
தொடரும்......

15 comments:

குசும்பன் said...

"நீ எனக்கு தாலி கட்டறியா இல்ல உன்னை தூக்கிட்டு போய் நான் கட்டவா?"

அடங்கொக்கா மக்கா இப்ப இப்படி எல்லாம் வேற கிளம்புறாங்களா, இருக்கட்டும் இருக்கட்டும்.

இம்சை ராணி ஏங்க காதலர்கள பிரிச்சு வைக்கிறீங்க ?

அபி அப்பா said...

ஆஹா தங்கச்சி! இந்த பாகத்துல கதாநாயகி டயலாக் சூப்பர்டா செல்லம்!

Osai Chella said...

kalakkal kannu! Sema suuda pokuthu!

G.Ragavan said...

அவனா சொன்னான்
இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நம்ப முடியவில்லை இல்லை இல்லை இல்லை...

ஆனாலும் அடுத்து என்னாகுதுன்னு பாப்போம்.

Anonymous said...

nalla irukkunga...
daily publish pannunga...
vazthukkal...

MyFriend said...

என்ன கமேண்டுறதுன்னே தெரியல.. சூப்பரா வந்திருக்கு! அடுத்து என்ன நடக்குமோனு ரொம்ப எதிர்ப்பார்க்க வச்சிருக்கு. வாழ்த்துக்கள் அக்கா. :-)

Anonymous said...

சூப்பர் அடுத்து என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவாலா இருக்கு சீக்கிரம் அடுத்த பாகத்தப் போடுங்க

Anonymous said...

உங்களோட இந்த தொடர படிச்சு பாத்துட்டு உடனே மத்த எல்லாத் தொடரையும் படிச்சேன் எல்லாமே ரொம்ப நல்லாருக்கு

அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுங்க

மேலும் பல தொடர்களை எதிர்பார்க்கிறேன்

Unknown said...

உங்கள் கதையை இப்போதுதான் படிக்க ஆரம்பித்தேன். என் பதினாலாவது காதலி பூஜா இப்போதுதான் கணினியை அணைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினாள். ஆனாலும் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கிறது உங்கள் கதையை படிக்கும்போது.

CVR said...

யக்கோவ்!!
நீங்க நடத்துங்க!!!

அர்வமுடன் அடுத்த பகுதியை எதிர் நோக்கி!! :-)

கப்பி | Kappi said...

கலக்கல்!

சீக்கிரம் அடுத்த பாகம் ரிலீஸ் பண்ணுங்க!

Anonymous said...

கதாநாயகி வில்லி ஆகப்போறாங்களா?
ஆர்வமா இருக்கு படிக்க

ஜே கே | J K said...

என்ன இப்படி பண்ணிட்டீங்க.

//இனிமேல் ஃப்ரெண்டு அவ இவனு யார்கூடயாவது சுத்திட்டு இருந்த...... என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது...... சரியா?" என்றாள். அவன் திகைத்து விழிக்க
"இங்க பாரு மாமா உன்னைதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன். ஐ லவ் யூ"
அவன் விழிகள் அதிர்ச்சியில் அப்படியே உறைய"இங்க பாரு உனக்கு ரெண்டே ரெண்டு சாய்ஸ்தான். ஒண்ணு மி டூன்னு சொல்லு. இல்லைனா எப்போ கல்யாணத்த வச்சுக்கலாம்னு கேளு".
அவன் மௌனமாய் இருக்கவே
"நீ எனக்கு தாலி கட்டறியா இல்ல உன்னை தூக்கிட்டு போய் நான் கட்டவா?" //

இதுக்கு பேர் லவ்வுங்களா?

ஒரே ரவுடிஸிசம்.

அப்பப்பா...

அடுத்த பாகத்தை எதிர் நோக்கி.

பித்தனின் வாக்கு said...

amma iffdi ellam eluthi enga engala alla viduringa ungalaukku niyama- 40 vayasulum kalyanam akatha engala konjam nichu parunga madam

Sreeram said...

General ah aangal thaan kadhal la adiradiya irupangaa; but avanga minjura pengalum iruka thaan seiyuranga; indu niraya peruku theriyaradulla - Avangalum manusanga thaney pa; avangalukkum frustration varadu iyalbu thaney nu sollama solli irukeenga - epdi mudika porenganu parkalaam :-)