Tuesday, July 10, 2007

சுயம்...

"இம்சை...... எல்லாரும் புரியாத மொழி கவிதை எழுதறாங்க. நீ ஏன் எழுதக் கூடாது???"-னு என் கனவுல அடிக்கடி ஒரு அசரீரி ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு. அதனால நானும் ரெண்டு நாளா சோறு தண்ணியில்லாம செவுத்தப் பாத்து விட்டத்தப் பாத்து யோசி யோசின்னு யோசிச்சேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஏ இவளுக்கு என்னவோ ஆயிடிச்சுடின்னு பயந்து போயி பக்கத்துல இருக்கற அம்மன் கோயில்ல பூஜை பண்ணி குங்குமம் வாங்கிட்டு வந்து பூசற அளவுக்கு ஆயிடுச்சுன்னா பாத்துக்கங்களேன். அதுக்கப்புறமா பொங்கி எழுந்தேன். அதனோட விளைவுதான் இந்த கவுஜ.... ச்சீ..... கவித..... மொழி கவித...... புரியாத மொழி கவித...... (நல்லா எக்கோ அடிக்குதா???:))

சுயம்...

சுயமறிதலின் போரட்டங்களில்
ஆதியின் வாசனைகளோடும்
இருண்ட கனவுகளின் வெளித்தோன்றலாகவும்
மட்டற்ற மனவெளியில்
கட்டுக்கடங்கா கள்வெறியில்
மடையுடைத்துப் பாய்ந்து
நிதம் அலையுதென் சுயம்

குழப்பமாய் நீளும்
என் கனவுகளின் நீட்சியாய்
அடர் கானகத்தின் குகைகளுக்கு
உள்ளும் புறமுமென
அலையுதென் மனம்

சுயம் கொண்டு போராடியும்
எஞ்சிய ஏமாற்றத்தின் சாயலில்
புளிய மர உச்சிவாழ் உயிராய்
தெளிவில்லாமலே நான்

பி.கு :

இந்த கவிதைல கடைசில இருக்கற ரெண்டு வரிகளைத் தவிர மீதி எல்லாத்தையும் அய்யனார், ராம், ஜீவ்ஸ், ஜி கவிதைகள்ல இருந்து சுட்டது ;)))

பி.குக்கு பி.கு :

இந்த கவுஜக்கும் அய்யனார், ராம், ஜீவ்ஸ், ஜி இவங்க கவுஜகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்ல...... இல்ல...... இல்ல..........

பி.குக்கு பி.குக்கு பி.கு :

ஏன்னா இது புலி கவுஜ இல்ல........ புளி கவுஜ................ புளி கவுஜ................ புளி கவுஜ................


சந்தேகம்னா கடைசி ரெண்டு வரிய திரும்ப படிங்க ;)))

19 comments:

அய்யனார் said...

அம்மாடி!! உனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் சொல்லு பேசித் தீர்த்துக்கலாம்..இந்த கொலவெறி வேணாந்தாயி :(

டெம்ப்ளேட் சூப்பர்

சிநேகிதன்.. said...

\\தெளிவில்லாமலே நான்\\
கரெக்டா சொன்னீங்க!!

Jeeves said...

அடக் கடவுளே..

அம்மா தாயே.. பரதேவதே.. உனக்கு கோபம் இருந்தா ரெண்டு கன்னத்தையும் ( ராமோடது தான் ) காட்டறேன்.. பளார் பளார்னு ரெண்டு அறை விடு.. அது விட்டுட்டு கவுஜ எழுதிட்டு இருக்கியே..


உனக்கு என்னோட ஒரே ஒரு கேள்வி தான்

நீ நல்லா இருப்பியா ?

இராம் said...

ஜிஸ்டர்,

ஏனிந்த கொலைவெறி..... :((

G3 said...

Template super.. :))

Puli paavam over tension aagi ippo endha veetu rasathula moozhgi than kovatha thanichitirukko ;))

வருத்தப்படாத வாலிபன். said...

ரொம்ப சந்தோஷம்.நீங்களுமா?.தாங்காது தாயி.வேணாம்.

அபி அப்பா said...

செல்லம்! உடம்புக்கு முடியலையாடா, ஆசுபத்திரி போடா! நேத்து நா பேசின போதே கொண கொணன்னு இருந்துச்சு குரலு!:-))

இம்சை அரசி said...

// அய்யனார் 덧글 내용...
அம்மாடி!! உனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் சொல்லு பேசித் தீர்த்துக்கலாம்..இந்த கொலவெறி வேணாந்தாயி :(

டெம்ப்ளேட் சூப்பர்
//

என்ன அய்யனார் இப்படி கோவிச்சிக்கறீங்க? நான் புளி கவுஜ தான எழுதிருக்கேன்...

டெம்ப்ளேட்ல இருக்கறது நான் தான்... அடையாளம் தெரியலையா??? அய்யோ அய்யோ... ;)))

இம்சை அரசி said...

// சிநேகிதன்.. 덧글 내용...
\\தெளிவில்லாமலே நான்\\
கரெக்டா சொன்னீங்க!!
//

ஏனிந்த கொலவெறி??? உங்களுக்கு கவுஜ புரியவே இல்ல... அய்யோ அய்யோ :)))

இம்சை அரசி said...

// Jeeves 덧글 내용...
அடக் கடவுளே..

அம்மா தாயே.. பரதேவதே.. உனக்கு கோபம் இருந்தா ரெண்டு கன்னத்தையும் ( ராமோடது தான் ) காட்டறேன்.. பளார் பளார்னு ரெண்டு அறை விடு.. அது விட்டுட்டு கவுஜ எழுதிட்டு இருக்கியே..


உனக்கு என்னோட ஒரே ஒரு கேள்வி தான்

நீ நல்லா இருப்பியா ?
//

நீங்க வரிசையா புரியாம எழுதி எல்லாரையும் டார்ச்சர் பண்ணினீங்க இல்ல... பழி வாங்கும் படலம் :)))

இம்சை அரசி said...

// இராம் 덧글 내용...
ஜிஸ்டர்,

ஏனிந்த கொலைவெறி..... :((
//

புரியற மாதிரி கவுஜ எழுதுங்கன்னு எத்தன தடவ சொல்லிருப்பேன்??? யாராச்சும் கேட்டீங்க? அதான் பொன்ங்இ எழுந்துட்டேன் ;)

இம்சை அரசி said...

// G3 덧글 내용...
Template super.. :))

Puli paavam over tension aagi ippo endha veetu rasathula moozhgi than kovatha thanichitirukko ;))
//

thk u G3!!! அந்த போட்டோல இருக்கறது நான் தான்... யார்ட்டயும் சொல்லிடாதீங்க. கண்ணு வச்சிடுவாங்க இல்ல. அதான் ;)))

இம்சை அரசி said...

// வருத்தப்படாத வாலிபன். 덧글 내용...
ரொம்ப சந்தோஷம்.நீங்களுமா?.தாங்காது தாயி.வேணாம்.
//

வருத்தமே படாதீங்க. இனிமேல் கிடயாது. ஏனா இதுக்கு மேல என்னால காப்பியடிக்க முடியல ;)

இம்சை அரசி said...

// அபி அப்பா 덧글 내용...
செல்லம்! உடம்புக்கு முடியலையாடா, ஆசுபத்திரி போடா! நேத்து நா பேசின போதே கொண கொணன்னு இருந்துச்சு குரலு!:-))
//

அதெல்லாம் ஒண்ணும் இல்ல அண்ணா. நல்லாதான் இருக்கேன். அதான் காப்பி கவுஜ... ச்சே... புளி கவுஜ ;)

CVR said...

/அய்யனார், ராம், ஜீவ்ஸ், ஜி//
அந்த லிஸ்ட்டுல இப்போ நீங்களும் சேந்துட்டீங்க யக்கோவ்!! :-D

Vasanth said...

een intha kolaveRi?

ILA(a)இளா said...

ஆமாண்டி ராசாத்தி, அப்படிதான். ஒன்னியுமே புரியல. ஆனா நல்லா இருக்கு வாசிக்க

gundumama said...

yemma indha akka paatu paadi yenna bayamuruthuraanga :(

.:: மை ஃபிரண்ட் ::. said...

thelivaa kuzhappiddeengga.. enge irunthaalum nalla irungga... :-((