Monday, July 2, 2007

எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமையா...

அட அட அட.... பாசக்கார பயபுள்ளக நம்மள விடாம இம்புட்டு இழுத்து புடிக்கறத நினைக்கும்போது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒரே ஆனந்த கண்ணீரா வருது. நம்ம புளி ச்சே... பாசக்கார புலி, நிலவு நண்பன், காதல் முரசு அருட்பெருங்கோ, கொல்லிமலை சாரல் JK எல்லாரும் வாங்க வாங்கன்னு என்னையும் ஆட்டத்துல இழுத்து விட்டுட்டாங்க. இன்னும் போடலையா-ன்னு கோவத்துல புலி உறுமின உறுமுல பயந்து அலறியடிச்சுட்டு 8 போட ஓடியாந்துட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். நம்மள பத்தி எட்டு பெருமையான விஷயத்த சொல்லனும்னு சொன்னதும் என்ன அப்படி நம்மகிட்ட எட்டு பெருமையான விஷயம்னு நின்னுக்கிட்டு யோசிச்சேன்.... உக்காந்தும் யோசிச்சேன்..... படுத்துக்கிட்டும் யோசிச்சேன்..... என்னய்யா இது அநியாயம். இப்போ தாஜ்மஹால் உலக அதிசயம்னா அதுல இருக்கற கதவு, ஜன்னல், தரை இப்படி ஒண்ணொன்னையும் அதிசயம்னு சொல்லிட்டு இருக்க முடியுமா??? அந்த மாதிரிதான். என்னை பொறுத்த வரைக்கும் உலக அதிசயம் எட்டும் நாந்தான்(இப்படியெல்லாம் மொறைக்கப்படாது:)))) அப்புறம் என்ன தனி தனியா பிரிச்சு எழுதிட்டுன்னு எனக்கே என் மேலயே கடுப்பா வந்துச்சு. அதான் நம்ம லிஸ்ட் இப்டி அழகா வந்துடுச்சு. ஹி... ஹி... உருட்டு கட்டையெல்லாம் அப்டியே ஓரமா தூக்கிப் போட்டுட்டு வரனும்.

1. நான்
2. ஜெயந்தி
3. இம்சை அரசி
4. ஜெயராஜ், ஜெயலஷ்மியோட பொண்ணு
5. தினேஷோட அக்கா
6. என் ஃப்ரெண்ட்ஸுக்கு நல்ல ஃப்ரெண்ட்
7. தொல்ஸ் அண்ணா, தேவ் அண்ணா, சிபி அண்ணா, ராம் அண்ணா, ஐயப்பன் அண்ணா, CVR அண்ணா இவங்களுக்கு தங்கச்சி
8. வரப் போற என் ஆத்துக்காரருக்கு ஒரு அழகான ராட்சசி (யாருல அது இதெல்லாம் நெம்ப ஓவருன்னு சொல்றது???)

அப்புறம் நம்ம தலைவர் வேற எட்ட பத்தி ஒரு பாட்டு பாடியிருக்கார். அதான் ஒரு ஸீனா இருக்குமேனு இந்த தலைப்பு வச்சேன். தலைப்ப பாத்துட்டு வந்து ஏமாந்திருந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல சாமியோவ்.......

எனக்கு தெரிஞ்சு எல்லாருமே எட்டு பதிவ போட்டுட்டாங்க. நிறைய பேர் கூப்பிட்டும் இன்னும் போடாம இருக்கறது எங்க அண்ணன்தான். ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சின்னு எப்படி ப்ரூஃப் பன்றோம் பாருங்க. ஹ்ம்ம்ம்...... அவரே ஒரு பெருமையான விஷயம். அவர் என்ன எழுதறாருன்னு பாக்கறேன்.

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.


பி.கு: இந்த மாதிரி ரூல்ஸை ஃபாலோ பண்றேன் பாருங்க. இதுவே எம்புட்டு பெரிய பெருமையான விஷயம்!!!!

ஷ்ஷ்ஷ்ஷ்........ அப்பாஆஆஆஆஆஆ....... இப்பவே கண்ண கட்டுதே...... போயிட்டு வரேனுங்க........

33 comments:

அபி அப்பா said...

8

அபி அப்பா said...

தங்கச்சி கூப்பிட்டு அண்ணன் 8 போடலைன்னு நாளைக்கு ஒரு பேச்சு வரப்பிடாது!

அபி அப்பா said...

என்ன ஒரு வில்லத்தனம் நான் அப்டி என்ன கிழிச்சுட்டேன் இந்த உலகத்துல 8 போடும் அளவுக்கு!:-)) ஐயஹோ!

அபி அப்பா said...

சரி சரி மூக்க சிந்த கூடாது சிந்தினாலும் அண்ணாத்த மேல தொடைக்க கூடாது! போடறேன் போடறேன் சீக்கிரமா!

அருட்பெருங்கோ said...

இது 8 இல்ல 0.8!!!

ம்ம்ம் எப்படியெல்லாம் எஸ்கேப் ஆகறாங்கப்பா...

நிலவு நண்பன் said...

மிகவும் குட்டி எட்டு இதுவாகத்தான் இருக்கும்...

கப்பி பய said...

//தாஜ்மஹால் உலக அதிசயம்னா அதுல இருக்கற கதவு, ஜன்னல், தரை இப்படி ஒண்ணொன்னையும் அதிசயம்னு சொல்லிட்டு இருக்க முடியுமா??? //


என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீங்க!! :))

குசும்பன் said...

அபி அப்பா இன்னைக்கு நான் ஆபிஸ் வரும் பொழுது நீங்க எப்படி பிஸியா இருந்தீங்க,எல்லாரையும் உருட்டி மிரட்டிக்கிட்டு..அத பத்தி ஒரு 8 போட்டுவிடுங்க...

நாகை சிவா said...

//என்ன ஒரு வில்லத்தனம் நான் அப்டி என்ன கிழிச்சுட்டேன் இந்த உலகத்துல 8 போடும் அளவுக்கு!:-)) ஐயஹோ! //

என்ன ஒரு வில்லத்தனம், இதுவரைக்கும் 8 போட்டவர்களை கிண்டல் அடிக்கும் அளவுக்கு....

நீங்க கிழிச்ச கிழிய எல்லாம் நான் சொல்லட்டா.... இல்ல நீங்க திருகிய, உடைச்ச, திறந்த.. இன்னும் பல பல மேட்டர நான் சொல்லட்டா?

நாகை சிவா said...

//அதான் நம்ம லிஸ்ட் இப்டி அழகா வந்துடுச்சு. //

இதுக்கு கல்லை கட்டி கடல்ல குதிக்கலாம்.

இன்னிக்கு இதை இரண்டாவது தடவையோ மூணாவது தடவை சொல்லுறேன்...

காயத்ரி said...

//வரப் போற என் ஆத்துக்காரருக்கு ஒரு அழகான ராட்சசி (யாருல அது இதெல்லாம் நெம்ப ஓவருன்னு சொல்றது???)//

நான் தான்!!

இராம் said...

ஜிஸ்டர்......

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜி said...

இதெல்லாம் நெம்ப ஓவர்...

Jeeves said...

//1. நான்//

இதைத்தான் நான் அப்படிங்கற ஆணவம் சொல்றாங்க :-?

//2. ஜெயந்தி//

//3. இம்சை அரசி//

4. ஜெயராஜ், ஜெயலஷ்மியோட பொண்ணு
5. தினேஷோட அக்கா
////

சரி ஒத்துக்கறேன். சில சமயம் உண்மை சொல்றேங்கறதை ஒத்துக்கறேன். (வீட்ல இம்சை எல்லாம் கிடையாதா ?)

/6. என் ஃப்ரெண்ட்ஸுக்கு நல்ல ஃப்ரெண்ட்/

யாரு? நீயி? நேத்துக் கூட உன் ரூம் மேட்டை போட்டு ஒத ஒதன்னு ஒதச்சன்னு தானே அவ 1 வாரம் லீவ் எடுத்துக்குட்டு வீட்டுக்கு போய்ட்டான்னு சொன்னே

//
8. வரப் போற என் ஆத்துக்காரருக்கு ஒரு அழகான ராட்சசி (யாருல அது இதெல்லாம் நெம்ப ஓவருன்னு சொல்றது???)///


ராட்சசி தெரியும்.. அதென்ன அழகான ?

வெயிட்.. வெயிட் . இப்படி எல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனா இப்படி மேலே சொன்ன மாதிரி எல்லாம் தங்காச்சியை யாராச்சும் கலாய்ச்சீங்க தெரியும் சேதி ஏன்னா

//

7. தொல்ஸ் அண்ணா, தேவ் அண்ணா, சிபி அண்ணா, ராம் அண்ணா, ஐயப்பன் அண்ணா, CVR அண்ணா இவங்களுக்கு தங்கச்சி
///


இதான் காரணம்

சரியா தங்கச்சி ? யார்னா கலாய்ச்சாங்கன்னா சொல்லு மூனுல நாலு பாத்துடலாம்

-- ஐயப்பன் அண்ணா --
கீலே வரும் பாட்டு நானு என் தங்காச்சிக்கு நான் டெடிகேட் பண்ணுது

1. பாசமலரே.. அன்பில் விளைந்த வாச மலரே
2. ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு.

CVR said...

//CVR அண்ணா இவங்களுக்கு தங்கச்சி//
:O
நான் தான் உங்களுக்கு தம்பின்னு அப்பலேர்ந்து சொல்லிட்டு இருக்கேனே!!
தினேஷோட என்னையும் தம்பியா சேத்துக்கோங்களேன் அக்கா!! :-)

CVR said...

//1. நான்
2. ஜெயந்தி
3. இம்சை அரசி//

இது என்ன அம்பி,அன்னியன்,ரெமோ மாதிரி மல்டிபிள் பெர்சனாலிட்டி யா??
:-ஸ்

இம்சை அரசி said...

// அபி அப்பா 덧글 내용...
தங்கச்சி கூப்பிட்டு அண்ணன் 8 போடலைன்னு நாளைக்கு ஒரு பேச்சு வரப்பிடாது!
//

நான் சொல்லி நீங்க போடாம இருப்பீங்களா??? :)))

இம்சை அரசி said...

// அபி அப்பா 덧글 내용...
சரி சரி மூக்க சிந்த கூடாது சிந்தினாலும் அண்ணாத்த மேல தொடைக்க கூடாது! போடறேன் போடறேன் சீக்கிரமா!
//

அய்யய்யோ! சொல்றதுக்குள்ள தொடைச்சிட்டேனே ;)

இம்சை அரசி said...

// அருட்பெருங்கோ 덧글 내용...
இது 8 இல்ல 0.8!!!

ம்ம்ம் எப்படியெல்லாம் எஸ்கேப் ஆகறாங்கப்பா...
//

என்ன கவிஞரே இப்படி சொல்லீட்டிங்க? அது போட்டா லிஸ்ட் சீனப் பெருஞ்சுவர் கணக்கா போயிட்டே இருக்குமுல்ல... அதான் இப்படி :)))

இம்சை அரசி said...

// நிலவு நண்பன் 덧글 내용...
மிகவும் குட்டி எட்டு இதுவாகத்தான் இருக்கும்...
//

நாம கொஞ்சம் வித்தியாசமா இருக்கனுமில்லீங்களா??? :)))

இம்சை அரசி said...

// கப்பி பய 덧글 내용...
//தாஜ்மஹால் உலக அதிசயம்னா அதுல இருக்கற கதவு, ஜன்னல், தரை இப்படி ஒண்ணொன்னையும் அதிசயம்னு சொல்லிட்டு இருக்க முடியுமா??? //


என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீங்க!! :))
//

அக்கவுண்ட் நம்பர அனுப்பறேன் ;)

இம்சை அரசி said...

// குசும்பன் 덧글 내용...
அபி அப்பா இன்னைக்கு நான் ஆபிஸ் வரும் பொழுது நீங்க எப்படி பிஸியா இருந்தீங்க,எல்லாரையும் உருட்டி மிரட்டிக்கிட்டு..அத பத்தி ஒரு 8 போட்டுவிடுங்க...
//

இன்னைக்கு மட்டும் இல்ல... எங்க அண்ணன் எப்போமே பிஸிதான் :)))

இம்சை அரசி said...

// நாகை சிவா 덧글 내용...
//அதான் நம்ம லிஸ்ட் இப்டி அழகா வந்துடுச்சு. //

இதுக்கு கல்லை கட்டி கடல்ல குதிக்கலாம்.

இன்னிக்கு இதை இரண்டாவது தடவையோ மூணாவது தடவை சொல்லுறேன்...
//

நம்ம புலி வாய் சொல் வீரர்னு எல்லாருக்கும் தெரியாதா பின்ன??? ;)

இம்சை அரசி said...

// காயத்ரி 덧글 내용...
//வரப் போற என் ஆத்துக்காரருக்கு ஒரு அழகான ராட்சசி (யாருல அது இதெல்லாம் நெம்ப ஓவருன்னு சொல்றது???)//

நான் தான்!!
//

எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசி தீத்துக்கலாம். பப்ளிக் ப்ளேஸ்ல வேணாம்...

இம்சை அரசி said...

// இராம் 덧글 내용...
ஜிஸ்டர்......

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

அழக் கூடாது அண்ணா... கர்ச்சீப் வாங்கி அனுப்பறேன்...

இம்சை அரசி said...

// ஜி 덧글 내용...
இதெல்லாம் நெம்ப ஓவர்...

//

எது ஓவரு??? கரெக்டா சொன்னாதான தெரியும்... :@

இம்சை அரசி said...

// Jeeves 덧글 내용...

-- ஐயப்பன் அண்ணா --
கீலே வரும் பாட்டு நானு என் தங்காச்சிக்கு நான் டெடிகேட் பண்ணுது

1. பாசமலரே.. அன்பில் விளைந்த வாச மலரே
2. ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு.

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்........

உங்களுக்கு டெடிகேட் பண்ண பாட்டு தேடிட்டு இருக்கேன் :)))

இம்சை அரசி said...

// CVR 덧글 내용...
//CVR அண்ணா இவங்களுக்கு தங்கச்சி//
:O
நான் தான் உங்களுக்கு தம்பின்னு அப்பலேர்ந்து சொல்லிட்டு இருக்கேனே!!
தினேஷோட என்னையும் தம்பியா சேத்துக்கோங்களேன் அக்கா!! :-)
//

noway... :)))


// CVR 덧글 내용...
//1. நான்
2. ஜெயந்தி
3. இம்சை அரசி//

இது என்ன அம்பி,அன்னியன்,ரெமோ மாதிரி மல்டிபிள் பெர்சனாலிட்டி யா??
:-ஸ்
//

புத்திசாலி... கண்டுபிடிச்சிட்டிங்களே ;)))

அபி அப்பா said...

// காயத்ரி said...
//வரப் போற என் ஆத்துக்காரருக்கு ஒரு அழகான ராட்சசி (யாருல அது இதெல்லாம் நெம்ப ஓவருன்னு சொல்றது???)//

நான் தான்!! //

காயத்ரி! ஆத்துக்காரரா அல்லது ஓவர்ன்னு சொன்னதா?:-))

கோபிநாத் said...

இப்படி எல்லாம் கூட எட்டு போடலமா?

G.Ragavan said...

எட்டு எட்டுன்னதும் தட்டுத் தடுமாறி ஓடியாந்தேன். இப்பிடி எட்டு போட்டுட்டியேம்மா.....

கோ, இது 0.8 இல்ல....அம்மணிக்கு இருக்குற தெறமைக்கு இது வெறும் 0.000008தான்.

அது சரி...ஒரே ஜெயமயமா இருக்குதே! வெற்றி உன்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது போல.

செந்தில் said...

ithula ippo neenga entha ettula irukkeenga?

enna ithu 8. immaathoondu 8 ellaam poodap pitaathu. olunga 8 potap patalinaa license aplikesan niraakarikkap patum.

இம்சை அரசி said...

test