Wednesday, January 10, 2007

நானா? சன் மியுசிக்லயா?

ஒரு நாள் நைட் எல்லாரும் உக்காந்து சன் ம்யூசிக் பார்த்துட்டு இருந்தோம். அந்த பொண்ணு "நீங்க யார்க்கு இந்த் பாட் dedicate பண்றிங்க?"ன்னு கேட்டுட்டு இருந்தப்ப தான் எனக்கு அந்த யோசனை தோணுச்சு.

உடனே வேகமா "ஏ பேசாம நானும் VJவா போயிடட்டுமா?"ன்னுதான் கேட்டேன்.

உடனே என்னை ஒரு நக்கல் சிரிப்போட திரும்பி பார்த்த என் ப்ரெண்ட் சொன்னா "அதுக்கெல்லாம் கொஞ்சமாவது பார்க்கற மாதிரி இருக்கனும்"

"ஆஆஆஆ......" எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்ல.

"அதெல்லாம் மேக்கப் போட்டா உள்ளூர் கிழவிகூட உலக அழகியா தெரிவாய்ங்க. இவ கொஞ்சமாவது தெரிய மாட்டாளா?" ன்னு எனக்கு ஒத்து ஊதற மாதிரி இன்னொருத்தி கால வாருனா.

"அடியே சைக்கிள் கேப்புல டேங்கர் லாரியே ஓட்டறியா நீயி"ன்னு நான் சவுண்டு விட்டதும்

"இல்ல இல்ல. நீ தாராளமா VJ ஆகலாம்னு சொன்னேண்டி" ன்னா.

நானும் அப்படியே சந்தோஷம் தாங்க முடியாம "இதொ பெங்ளூரிலிர்க்கும் நம்ம இம்சை அர்சிக்காக இதொ இந்த் பாட்" ன்னு அப்படியே VJ மாதிரி பேசிக் காட்டினேன்.

அதுவரைக்கும் அமைதியா உக்காந்திருந்த என் ப்ரெண்டு "ஏண்டா இப்படி தமிழ கொல பண்ற? இதுல நீ ஒரு எழுத்தாளர் வேற" அப்படின்னு சொன்னாலே பார்க்கலாம். "என்னது எழுத்தாளரா??!!!". எனக்கு அப்படியே மயக்கமே வந்துடுச்சு.

அப்பதான் இன்னொருத்தி சொன்னா "நீ வேற. அவ ப்ளாக் எழுதறவங்கள எழுத்தாளர்னு சொல்லுவா. ஏதோ நீ பொழப்பில்லாம அடிச்சு வெளயாண்டுட்டு இருக்கறதப் பார்த்துட்டு உன்னையும் தெரியாத்தனமா அந்த லிஸ்ட்ல சேத்துட்டா. நீ அதுக்காக எல்லாம் பீல் பண்ணிக்காத" ன்னு.

ஆஹா! கதை இப்படி போகுதா! இதையே அப்படியே மெயின்டெயின் பண்ணிக்க வேண்டியதுதான்னு நினச்சுக்கிட்டே என் VJ கனவ எனக்குள்ள போட்டு புதைச்சுக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். ஹ்ம்ம்ம். சன் ம்யூசிக்குக்கு அதிர்ஷ்டம் இல்ல போல. என்ன miss பண்ணிடுச்சுன்னு என்ன நானே தேத்திக்கிட்டேன்.

32 comments:

பொன்ஸ் said...

ம்ம்...சன் மியூசிக்குக்கு எப்போ தான் அதிர்ஷ்டமோ, எங்களுக்கு எப்ப விடுதலையோ... :))) ;)

ச்ச்சும்மா.. விளையாட்டுக்கு :)))

அழகான ராட்சசி said...

உங்களை எழுத்தாளர் என்று சொன்னவங்களுக்கு கண் இருக்கா ?.அளவுக்கு மீறி ஆசைப்படுகிறீர்களோ என்று நினைக்கிறேன்.

இம்சை அரசி said...

// பொன்ஸ் said...
ம்ம்...சன் மியூசிக்குக்கு எப்போ தான் அதிர்ஷ்டமோ, எங்களுக்கு எப்ப விடுதலையோ... :))) ;)

ச்ச்சும்மா.. விளையாட்டுக்கு :)))
//

அது எப்படி உங்கள எல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட்டுட்டு போயிடுவேனா???

இத நெனக்கும்போதே ஒரே அழுகையா வருது...... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்......

சுந்தர் / Sundar said...

எல ... நீ எம்முல ... சன் மியுசிக்கெல்லாம் போற ...

உனக்கு இருக்கவே இருக்கு ...ப்ளாக்கொ .. கீக்கொ ... அதுல எழுது ...சரியா .. அழகூடாது ..

ஜி said...

என்னங்க நம்மெல்லாம் பின்ன எப்ப எழுத்தாளர் ஆகுறது.. இப்படி ரெண்டு மூனு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா போதும் :)

[நானும் இதேதான் இங்க மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்கேன்]

இம்சை அரசி said...

// அழகான ராட்சசி said...
உங்களை எழுத்தாளர் என்று சொன்னவங்களுக்கு கண் இருக்கா ?.அளவுக்கு மீறி ஆசைப்படுகிறீர்களோ என்று நினைக்கிறேன்.

//

அய்யோ இப்படி எதாவது சிக்கல் வரும்னுதான் இதை எழுத வேணாம்னு நினச்சேன்.

நாந்தான் முன்னாடியே சொல்லியிருந்தேனே. ப்ளாக் எழுதறதால அவ தெரியாத்தனமா அப்படி சொல்றான்னு....

ஆசையெல்லாம் இல்லீங்க. சும்மா ஒரு வெளயாட்டுக்குதான் எழுதினேன் :))))))))))

Anonymous said...

Ippadi ellam kuda aasai irukka??? Vendam... Vittudunga....

Kathir

இம்சை அரசி said...

// சுந்தர் / Sundar said...
எல ... நீ எம்முல ... சன் மியுசிக்கெல்லாம் போற ...

உனக்கு இருக்கவே இருக்கு ...ப்ளாக்கொ .. கீக்கொ ... அதுல எழுது ...சரியா .. அழகூடாது ..

//

ம்ம்ம்.... அழுவுல....

இனிமே இந்த மாதிரி தப்பான முடிவுக்கெல்லாம் போக மாட்டேன்....

சரியா???

இம்சை அரசி said...

// ஜி said...
என்னங்க நம்மெல்லாம் பின்ன எப்ப எழுத்தாளர் ஆகுறது.. இப்படி ரெண்டு மூனு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா போதும் :)

[நானும் இதேதான் இங்க மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்கேன்]

//

அப்பாடி.... அடிக்கடி நீங்க எனக்கு கம்பெனி குடுத்துடரீங்க....

உங்கள என் வாழ்க்கைல என்னைக்கும் மறக்கவே மாட்டேங்க ஜி....
(அப்படியெ slow motionல ஒரு songஅ போட்டு விட்டுக்கோங்க) :)))))

இம்சை அரசி said...

// Anonymous said...
Ippadi ellam kuda aasai irukka??? Vendam... Vittudunga....

Kathir

//

விட்டுட்டேங்க கதிர்........

நான் ரொம்ப சூப்பரா VJ தமிழ் பேசுவேனாக்கும்....... ம்ம்ம்ம்...... தமிழ்நாடே miss பண்ணுது.....

நா.ஆனந்த குமார் said...

ஆதெல்லாம் ஒரு பெரிய காமெடி. யாருக்கு டெடிகேட் பண்ணறீங்கன்னு ஒரு அசட்டுத்தனமான கேள்வி. இந்த பாட்டை யாருக்கு தியாகம் பண்றீங்கன்னு அதை அப்படியே மொழிபெயர்த்து பாருங்க. அவனவன் காசு போட்டு பாட்டு எடுத்தா.. ஒத்தரூபா போன்ல இவரு தியாகம் பண்ணுவாராம்..!!!

இதில கேள்வியெல்லாம் வேற கேப்பாங்க. ஒருமுறை சன் மியூசிக்ல கேள்வி கேக்கறேன்னு "பாலைவன ஒட்டகம் என அழைக்கப்படும் கப்பல் எது?" அப்படின்னு அந்தம்மா கேட்டுட்டாங்க. கேட்டுட்டு ஒரு முழி முழிச்சாஙக பாருங்க... அப்புறம்.. "இல்ல.. இல்ல.. நான் மாத்தி கேள்வி கேட்டுட்டேன்.. அதாவது.. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் மிருகம் எது?... ம்ம்..அதுதான்.. எங்க சொல்லுங்க பார்ப்போம்னு வழிஞ்சாங்க..!!

நீங்க எழுத்தாளராகவே இருங்க!!!

கோபிநாத் said...

அரசி

நினைச்சு பார்த்தேன்....சன் மியுசிக்கெல்லாம் வேணாம்....ரொம்ப பாவம்..... நீங்க தான்.....:(((

நீங்க எழுத்தாளராகவே இருங்க :)))

அரை பிளேடு said...

ஆமா.. கரீக்டுதான...
இம்சைங்க இருக்க வேண்டிய இடம் சன் மியூசிக்தான...

எயுத்தாளரா யார் அது... ?

:))

Anonymous said...

sun music is the luckiest that u are not it's vj and thanks a lot for all the people will be killed by ur speech(which is like sword)

Anonymous said...

Dear Insai Arasi,
Nan pinuttam pooduvatharke en abi "Appa neenga pereeiya writer aahiteengappa"nu mechikkara- ippadiku Abi Appa

Anonymous said...

ungalai unga friend writernu sonnathi thappeillai - Abi Appa

இம்சை அரசி said...

// நா.ஆனந்த குமார் said...
ஆதெல்லாம் ஒரு பெரிய காமெடி. யாருக்கு டெடிகேட் பண்ணறீங்கன்னு ஒரு அசட்டுத்தனமான கேள்வி. இந்த பாட்டை யாருக்கு தியாகம் பண்றீங்கன்னு அதை அப்படியே மொழிபெயர்த்து பாருங்க. அவனவன் காசு போட்டு பாட்டு எடுத்தா.. ஒத்தரூபா போன்ல இவரு தியாகம் பண்ணுவாராம்..!!!

இதில கேள்வியெல்லாம் வேற கேப்பாங்க. ஒருமுறை சன் மியூசிக்ல கேள்வி கேக்கறேன்னு "பாலைவன ஒட்டகம் என அழைக்கப்படும் கப்பல் எது?" அப்படின்னு அந்தம்மா கேட்டுட்டாங்க. கேட்டுட்டு ஒரு முழி முழிச்சாஙக பாருங்க... அப்புறம்.. "இல்ல.. இல்ல.. நான் மாத்தி கேள்வி கேட்டுட்டேன்.. அதாவது.. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் மிருகம் எது?... ம்ம்..அதுதான்.. எங்க சொல்லுங்க பார்ப்போம்னு வழிஞ்சாங்க..!!

நீங்க எழுத்தாளராகவே இருங்க!!!

//

சரிங்க.......

இனி அப்படி நெனக்க கூட மாட்டேன் :)

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
அரசி

நினைச்சு பார்த்தேன்....சன் மியுசிக்கெல்லாம் வேணாம்....ரொம்ப பாவம்..... நீங்க தான்.....:(((

நீங்க எழுத்தாளராகவே இருங்க :)))

//

நீங்க எனக்காக இவ்வளவு பீல் பண்ணி சொல்லும்போது உங்களுக்காக இதக் கூட செய்ய மாட்டேனா என்ன??

கண்டிப்பா போக மாட்டேங்க கோபிநாத் :))))

இம்சை அரசி said...

// அரை பிளேடு said...
ஆமா.. கரீக்டுதான...
இம்சைங்க இருக்க வேண்டிய இடம் சன் மியூசிக்தான...
//

வேணாம்........ அப்புறம் அழுதுடுவேன்.........

//எயுத்தாளரா யார் அது... ?

:))

//

என்ன இப்படி கேட்டுட்டீங்க??

நாந்தாங்க அது........

இம்சை அரசி said...

// Anonymous said...
sun music is the luckiest that u are not it's vj and thanks a lot for all the people will be killed by ur speech(which is like sword)

//

இதையெல்லாம் நமக்குள்ள வச்சிக்கணும். இப்படியெல்லாம் பப்ளிக்ல சொல்லப்படாது.... ஆமா... சொல்லிப்பிட்டேன்........

இம்சை அரசி said...

// Anonymous said...
Dear Insai Arasi,
Nan pinuttam pooduvatharke en abi "Appa neenga pereeiya writer aahiteengappa"nu mechikkara- ippadiku Abi Appa

ungalai unga friend writernu sonnathi thappeillai - Abi Appa

//

ரொம்ப தேங்க்ஸூங்க அபி அப்பா...

நீங்க வ.வா.சங்கத்துல எனக்கு குடுத்த comment பாத்தேன். felt soooooo happy..... :)))

வெட்டிப்பயல் said...

//அழகான ராட்சசி said...

உங்களை எழுத்தாளர் என்று சொன்னவங்களுக்கு கண் இருக்கா ?.அளவுக்கு மீறி ஆசைப்படுகிறீர்களோ என்று நினைக்கிறேன். //

என்னங்க அழகான ராட்சசி, எழுத்தாளராவறது அளவுக்கு மீறிய ஆசையா???

ப்ளாக் எழுதற நம்ம எல்லாருமே எழுத்தாளர்தாங்க... நல்ல எழுத்தாளராகறதுதான் கஷ்டம். அதுவும் ஒன்னும் பேராசையில்லை...

முயன்றால் முடியாதது எதுவுமில்லை... வானமே எல்லை :-)

வெட்டிப்பயல் said...

சரிங்க இ.அ,
சீக்கிரம் சன் மியுசீக்ல சேர்ந்து பொது அறிவு கேள்வியெல்லாம் கேப்பீங்கனு நம்பறோம் :-)

அப்படி கேக்கும் போது நம்ம வலையுலக மக்களை பத்தியும் நாலு கேள்வி கேளுங்க...

நாங்களே போன் பண்ணி பாப்புலர் பண்ணிடறோம் ;)

இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் said...
சரிங்க இ.அ,
சீக்கிரம் சன் மியுசீக்ல சேர்ந்து பொது அறிவு கேள்வியெல்லாம் கேப்பீங்கனு நம்பறோம் :-)

அப்படி கேக்கும் போது நம்ம வலையுலக மக்களை பத்தியும் நாலு கேள்வி கேளுங்க...

நாங்களே போன் பண்ணி பாப்புலர் பண்ணிடறோம் ;)
//

கண்டிப்பா கேக்கறேன்......

ப்ளாக் குல மக்களுக்கு நெல்லிக்கா குடுத்தது யாரு?

எப்படி கேள்வி???

ஆனா எனக்கு devil show போட்டுடக் கூடாது. அதையும் இப்பவே சொல்லிப்பிட்டேன் :)))

// முயன்றால் முடியாதது எதுவுமில்லை... வானமே எல்லை :-)
//

கலக்கறீங்க வெட்டி.

ஒண்ணும் சொல்ல முடியல :)))

Arunkumar said...

எழுதுற எல்லாருமே எழுத்தாளர்கள்
தாங்க :)
இல்லேனா கூட நம்ம அப்பிடியே மெய்ண்டெய்ன் பண்ணிக்கனும் :)

அப்பறம் சன் மூசிக் மேட்டர்ல வெட்டி சொல்ற மாதிரி நீங்களும் VJஆகி வலை மக்களோட பெருமைய எல்லாம் எடுத்து சோல்லுங்க :)

ரிஷி said...

சீக்கிரம் சன் மியூசிக்ல சேர்ந்து எனக்காக வல்லவன்ல இருந்து 'யம்மாடி .. ஆத்தாடி' பாட்டு போடுங்க .. இத நம்ம பிளாக் மக்களுக்கு டெடிகேட் பண்றேன் ..

இம்சை அரசி said...

// Arunkumar said...
எழுதுற எல்லாருமே எழுத்தாளர்கள்
தாங்க :)
இல்லேனா கூட நம்ம அப்பிடியே மெய்ண்டெய்ன் பண்ணிக்கனும் :)
//

ஆஹா...... பண்ணிக்கிட்டே இருக்கேன்......

//அப்பறம் சன் மூசிக் மேட்டர்ல வெட்டி சொல்ற மாதிரி நீங்களும் VJஆகி வலை மக்களோட பெருமைய எல்லாம் எடுத்து சோல்லுங்க :)
//

அதுதான் நிறைய பேர் என்ன VJ ஆக வேண்டாம்னு சொல்லிட்டாங்களே. அவிங்க பாசத்துக்கு கட்டுப்பட்டு இங்கயே இருக்க போறேன். சாரிங்க :))))

இம்சை அரசி said...

// ரிஷி said...
சீக்கிரம் சன் மியூசிக்ல சேர்ந்து எனக்காக வல்லவன்ல இருந்து 'யம்மாடி .. ஆத்தாடி' பாட்டு போடுங்க .. இத நம்ம பிளாக் மக்களுக்கு டெடிகேட் பண்றேன் ..
//

அப்புறம் உங்க கிட்ட ஒரு question கேப்பேனே.....

இந்தியாவோட தலைநகரம் எது???

ஒரே ஒரு க்ளூதான்...

மூன்றெழுத்து ஊர் அது... டெ-யில் ஆரம்பித்து லி-யில் முடியும்.

சொல்லுங்க பாப்போம் :))))))

JACK said...

அப்படியே நீங்க வி.ஜே வா போனா எனக்கு சிபாரிசு பண்ணுங்க,

அப்படி பண்ணா உங்களுக்கு பிடிச்ச பாட்டையே நான் தினமும் 3-4 தடவை போடுவேன்னு உறிது அளிக்கிறேன்,

omsrii@gmail.com நம்ம ஐடிங்கோ,
Tamil2Friends@googlegroups.com எங்களோட குழுமம் ஐடிங்கோ

இம்சை அரசி said...

// JACK said...
அப்படியே நீங்க வி.ஜே வா போனா எனக்கு சிபாரிசு பண்ணுங்க,

அப்படி பண்ணா உங்களுக்கு பிடிச்ச பாட்டையே நான் தினமும் 3-4 தடவை போடுவேன்னு உறிது அளிக்கிறேன்,
//

சாரிங்கோ jack. நம்ம மக்கா அல்லாரும் நான் இங்கனயே இருக்கோனும்னு சொல்லிப்பிட்டாய்ங்க.

அதனால தமிழ்நாட்டுக்கு அதிர்ஷ்டம் இல்லாம போயிடுச்சு.

மனச தேத்திக்கங்க :)

நாமக்கல் சிபி said...

எதுக்கும் ஒரு முயற்சி செஞ்சிதான் பாருங்க! சன் மியூஸிக் சேனலுக்கு ஒரு அப்ளிகேஷன் போட்டு வைங்க!

(பின்னே நாங்க எப்படி தப்பிக்கறதாம்)

இம்சை அரசி said...

// நாமக்கல் சிபி said...
எதுக்கும் ஒரு முயற்சி செஞ்சிதான் பாருங்க! சன் மியூஸிக் சேனலுக்கு ஒரு அப்ளிகேஷன் போட்டு வைங்க!
//

அப்ளிகேஷன் எல்லாம் தேவையே இல்லீங்க. நம்மள பாத்தாவே வந்து கெஞ்சுவாங்க. ப்ளீஸ் வந்துடுங்க வந்துடுங்கன்னு ;)

//(பின்னே நாங்க எப்படி தப்பிக்கறதாம்)
//

நோ............. நான் போக மாட்டேன்....... அதெல்லாம் உங்களை ஒரு வழி பண்ணாம விடறதா இல்ல....