Monday, January 15, 2007

இந்தியா குடியரசானது எப்பொழுது?

பொங்கல் லீவுக்கு நானும், என் தம்பியும் வீட்டுக்கு போய் சேர்ந்துட்டோம். ஞாயித்துக் கிழமை காலைல ரொம்ப நேரமா ஒரு ஒன்பதரை மணிக்கெல்லாம் என் தம்பி என்னை எழுப்பி விட்டுட்டான். சரி இனியும் தூங்கிட்டு இருந்தா குடியிருந்த கோயில் விளக்குமாத்த தூக்கிட்டு வந்திடும்னு அப்படியே எழுந்திருக்கலாமான்னு நல்ல நேரத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்பதான் எங்க பக்கத்து வீட்டு சின்ன பையன் வந்தான் (டிப்ளமோ செகண்ட் இயர் படிக்கிறான். ஆனா இன்னமும் எங்களுக்கு அவன் சின்ன பையன்தான்).

வந்தவன் நேரா என் தம்பிகிட்ட போய் "அண்ணா நான் உங்ககிட்ட ஒரு GK question கேக்கறேன்" னான். இதென்னடா காலைலங்காட்டி வம்பா போச்சுன்னு என்னதான் கேக்கறான்னு பாக்கலாமேன்னு நானும் அவனுங்க பேசறத கவனிச்சேன். என் தம்பி சரின்னதும் "ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது எந்த ஆண்டு?" ன்னு கேட்டான். எங்க வீட்டுலயே GK அதிகம் உள்ள ஒரு அறிவாளி யாருன்னா அது என் தம்பிதான். அவனே ஒரு நிமிஷம் முழிச்சான். அடடா...... அடுத்து நம்மகிட்ட வந்துடுவானேன்னு நான் நல்லா கண்ண இறுக்கி மூடிக்கிட்டேன்.

இவன் எப்படி சமாளிக்கப் போறானோன்னு ஒரு நிமிஷம் எனக்கும் பாவமாத்தான் இருந்துச்சு. ஆனாலும் என்னை நேரமா எழுப்பி விட்டுட்டானில்ல. நல்லா முழிக்கட்டும்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷத்தோட என்ன பண்ணப் போறான்னு பாத்துட்டு இருந்தேன். "அதெல்லாம் இருக்கட்டுண்டா. இந்தியா சுதந்திரம் ஆனது எப்பன்னு சொல்லு. நான் உன் questionக்கு answer பண்றேன்" ன்னு என் தம்பியும் கேட்டான். அவன் உடனே ரொம்ப வேகமா "1947 ஆகஸ்ட் 15" ன்னான். என் தம்பி அப்படியே அவன பாத்து ஹீரோ கணக்கா ஒரு லுக் விட்டான். பய எப்படி சமாளிக்க போறான்னு பாப்போம்னு நானும் தூங்கற மாதிரி ஆக்ட் விட்டுட்டு இருந்தேன். "டேய்! question-அ ஒழுங்கா கேட்டுட்டு சொல்லனும். நான் கேட்டது இந்தியா குடியரசானது எப்பன்னு. நீ என்ன பதில் சொல்ற?" ன்னு கேட்டான். உடனே அவனும் சளைக்காம "ஓ! குடியரசாண்ணா? அதுகூட எனக்கு தெரியாதா? 1956 ஜனவரி 26" ன்னானே பார்க்கலாம். என்னால சிரிப்ப அடக்க முடியல. எழுந்து உக்காந்து நான் சிரிச்ச சிரிப்புல என் தம்பியும் சேர்ந்துக்க அவனுக்கு அப்பவும் புரியல. நான் உடனே "டேய்! நான்தான் GKல ஜீரோன்னு நினைச்சுட்டு இருந்தேன். எனக்கும் மேல நீயா? இந்தியா குடியரசானது 1956லயா?!" ன்னு கேட்டு நான் சிரிச்ச சிரிப்புலதான் அவனுக்கு புரிஞ்சது. "அய்யோ இல்ல இல்ல...... 1950 ஜனவரி 26" ன்னு வேக வேகமா சொன்னான்.

அதையெல்லாம் நாங்க ஏத்துக்காம அவன அப்படி இப்படின்னு கிண்டலடிச்சு எங்க அம்மாகிட்ட பஞ்சாயத்துக்கு போயி அப்புறம் கடைசியாதான் தெரிஞ்சது அவனுக்கு ரெண்டே ரெண்டு questionதான் தெரியும். அதை எல்லார்கிட்டயும் கேட்டு கேட்டு பெரிய அறிவாளி மாதிரி பந்தா விட்டுட்டு இருப்பான்னு. ஆஹா நம்ம தம்பி எப்படி சமாளிச்சுட்டான்னு பெருமை பொங்க அவன பாத்தப்பதான் எனக்கு ஞாபகம் வந்தது அவன் என்னை நேரமா எழுப்பி விட்டது. அடடா chance-ஐ miss பண்ணிட்டோமேனு எனக்கு ஒரே ஃபீலிங். ஆகட்டும் ஆகட்டும். இன்னொரு நாளைக்கு மாட்டாமயா போயிடுவ. அன்னைக்கு வச்சிக்கிறேண்டி உனக்கு கச்சேரின்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே அவனப் பாத்து "சிங்ககுட்டிடா நீயி. எந்தம்பி இல்ல. எப்படி சமாளிச்ச"ன்னு புகழ்ந்து வச்சேன். ஹ்ம்ம்ம். என்ன பண்றது????

15 comments:

ஜி said...

இந்த தம்பிகளே இப்படித்தான்...

அவிங்கள எழுப்பி விட்டுட்டாங்கன்னா நம்மள தூங்க விட மாட்டாய்ங்க...

Anonymous said...

நான் அபி அப்பா, வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். இம்சை அரசியையே இம்சைக்குள்ளாக்கிய வாண்டு பையன் வாழ்க!!!

k4karthik said...

குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல...

very good.. very good..

இம்சை அரசி said...

// ஜி said...
இந்த தம்பிகளே இப்படித்தான்...

அவிங்கள எழுப்பி விட்டுட்டாங்கன்னா நம்மள தூங்க விட மாட்டாய்ங்க...

//

நல்ல அனுபவம் போல???

என்னங்க ஜி???

இம்சை அரசி said...

// Anonymous said...
நான் அபி அப்பா, வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். இம்சை அரசியையே இம்சைக்குள்ளாக்கிய வாண்டு பையன் வாழ்க!!!
//

வாங்க அபி அப்பா...
உங்களுக்கும் அபி குட்டிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் :)

என்னை யாரலயும் இம்சை பண்ணவே முடியாது. நாந்தான் எல்லாரையும் இம்சை பண்ணுவேன் :))))))

இம்சை அரசி said...

// k4karthik said...
குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல...

very good.. very good..
//

வாங்க கார்த்திக்........

thank u...... thank u.......

அபி அப்பா said...

//வாங்க அபி அப்பா...
உங்களுக்கும் அபி குட்டிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் :)//

நன்றி.என் சார்பாகவும் பாப்பா குட்டி சார்பகவும்.

//என்னை யாரலயும் இம்சை பண்ணவே முடியாது. நாந்தான் எல்லாரையும் இம்சை பண்ணுவேன் :))))))//

நன்பர் கார்த்திக் சொன்னதையே ரிப்பீட்டு..// குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல...//

பொங்களூர் முடிஞ்சுது.பெங்களூரு ரிட்டர்ன் எப்போ?

இம்சை அரசி said...

// நன்பர் கார்த்திக் சொன்னதையே ரிப்பீட்டு..// குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல...
//

ஹி... ஹி...
நம்மளுக்கு ஆப்பு வாங்கித்தான பழக்கம்.....
இதெல்லம் அரசியல்ல சகஜம் அபி அப்பா :)))

//பொங்களூர் முடிஞ்சுது.பெங்களூரு ரிட்டர்ன் எப்போ?
//

பொங்கலாவது பிரியாணியாவது...
அந்த கொடுமைய ஏன் கேக்கறீங்க?
லீவு கிடைக்கல. ஞாயித்துக் கிழமையே கிளம்பியாச்சு :((((

கோபிநாத் said...

அக்காங்க தூங்கும் போது இப்படி எழுப்புறதுல கிடைக்குற சந்தோஷம் இருக்கே...அந்த குறும்பு.....

ம்ம்ம்ம்..இப்ப நினைச்சலும் சந்தோஷம இருக்கு...நன்றி அரசி...

இன்னும் விளக்கு மாத்து உன்டா...:)))

நாமக்கல் சிபி said...

//ஜி said...

இந்த தம்பிகளே இப்படித்தான்...

அவிங்கள எழுப்பி விட்டுட்டாங்கன்னா நம்மள தூங்க விட மாட்டாய்ங்க... //

இதை நான் கடுமையா எதிர்க்கிறேன்!!!
தம்பிங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க...
வீட்ல நல்ல பிள்ளையா யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம விடிய காலை 10 மணி வரைக்கும் தூங்குவாங்க...

இந்த அண்ணன்/அக்கா தான் நல்ல பேர் வாங்கனும், பொறுப்பா இருக்கனும்னு சீக்கிரம் எழுந்திரிச்சு நம்ம பேர கெடுக்கறது மட்டுமில்லாம பல வழிகளிலே நமக்கு தொந்தரவு செய்வாங்க...

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
அக்காங்க தூங்கும் போது இப்படி எழுப்புறதுல கிடைக்குற சந்தோஷம் இருக்கே...அந்த குறும்பு.....

ம்ம்ம்ம்..இப்ப நினைச்சலும் சந்தோஷம இருக்கு...நன்றி அரசி...

இன்னும் விளக்கு மாத்து உன்டா...:)))
//

ஆனாலும் தம்பிகிட்ட சண்டை போடுற ஜாலியே ஜாலி....... ஹ்ம்ம்ம்ம்.....
miss பண்றோம்னு நினைச்சாலே கஷ்டமா இருக்கு.....

அதெல்லாம் எப்பவும் உண்டுங்க. ஆனா அதுக்கெல்லாம் அசர ஆளா நாம. டிமிக்கி கொடுத்துட்டு திருப்பி தூங்கிட வேண்டியதுதான் :))))))

இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் said...
//ஜி said...

இந்த தம்பிகளே இப்படித்தான்...

அவிங்கள எழுப்பி விட்டுட்டாங்கன்னா நம்மள தூங்க விட மாட்டாய்ங்க... //

இதை நான் கடுமையா எதிர்க்கிறேன்!!!
தம்பிங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க...
வீட்ல நல்ல பிள்ளையா யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம விடிய காலை 10 மணி வரைக்கும் தூங்குவாங்க...

இந்த அண்ணன்/அக்கா தான் நல்ல பேர் வாங்கனும், பொறுப்பா இருக்கனும்னு சீக்கிரம் எழுந்திரிச்சு நம்ம பேர கெடுக்கறது மட்டுமில்லாம பல வழிகளிலே நமக்கு தொந்தரவு செய்வாங்க...

//

எலேய் வெட்டி.....

இதெல்லாம் ரொம்ப ஓவரு. நல்லதுக்கில்ல. சொல்லிப்பிட்டேன்....

அகில உலக வீட்டின் மூத்த பிள்ளைகள் சங்கத்துல இருந்து அப்புறம் நோட்டிஸ் வரும் ஜாக்கிரதை.

Syam said...

//எனக்கு ஞாபகம் வந்தது அவன் என்னை நேரமா எழுப்பி விட்டது//

இது படிச்ச உடன் எனக்கு ஒன்னு ஞாபகம் வந்துச்சு...மெட்ராஸ் போன புதுசுல காலைல ஆபீஸ்ல எனக்கு முன்னாடி யாராவது வந்து இருந்தா...அவங்க கிட்ட என்ன நேரமே வந்துட்டீங்கனு கேட்பேன்...அவங்க முழிப்பாங்க...அப்புறம் கொஞ்சம் மாத்தி சீக்கிரமேனு கேட்டு பழகிட்டேன்... :-)

இம்சை அரசி said...

// Syam said...
//எனக்கு ஞாபகம் வந்தது அவன் என்னை நேரமா எழுப்பி விட்டது//

இது படிச்ச உடன் எனக்கு ஒன்னு ஞாபகம் வந்துச்சு...மெட்ராஸ் போன புதுசுல காலைல ஆபீஸ்ல எனக்கு முன்னாடி யாராவது வந்து இருந்தா...அவங்க கிட்ட என்ன நேரமே வந்துட்டீங்கனு கேட்பேன்...அவங்க முழிப்பாங்க...அப்புறம் கொஞ்சம் மாத்தி சீக்கிரமேனு கேட்டு பழகிட்டேன்... :-)
//

:))))))

ஜி said...

//இம்சை அரசி said...
எலேய் வெட்டி.....

இதெல்லாம் ரொம்ப ஓவரு. நல்லதுக்கில்ல. சொல்லிப்பிட்டேன்....

அகில உலக வீட்டின் மூத்த பிள்ளைகள் சங்கத்துல இருந்து அப்புறம் நோட்டிஸ் வரும் ஜாக்கிரதை. //

ithai naanum vazi mozikiren...