Sunday, January 7, 2007

உயிரில் கலந்த உறவே - 1

பெரு மகிழ்ச்சியை கொண்டாடும்
இதயத்தை படைத்தாய்
இறைவா!
சிறு துன்பத்தையும் தாங்கும்
மனதினை படைக்க
ஏன் மறந்து போனாய்?


"நோ" என்ற கவிதாவின் அலறலில் மருத்துவமனையே கிடுகிடுத்தது.

"ஷ்ஷ்... கவிம்மா இது ஹாஸ்பிடல்" என்ற டாக்டரின் குரலுக்கு அடங்கியவள் தனது கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கியபடியே இடிந்து போய் அமர்ந்திருக்கும் சந்திரசேகரிடம் சென்றாள். அவர் முன் டேபிளில் கைகளை ஊன்றிக் கொண்டு "டாடி ப்ளீஸ் டாடி. அங்கிள்கிட்ட விளையாட வேண்டாம்னு சொல்லுங்க டாடி" என்று கெஞ்சினாள்.

"இதுல விளையாட என்னம்மா இருக்கு?" என்று கண்ணீருடன் நின்றவளைப் பார்த்து பரிதாபமாய் சொன்னவர் சந்திரசேகரிடம் திரும்பி "எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்து கன்பார்ம் பண்ணிக்கிட்டு தான்டா சந்துரு சொல்றேன். அம்மாவுக்கு கன்பார்மா ப்ளட் கேன்சர்தான். மிஞ்சிப் போனா ரெண்டு மாசம் தான். அதுக்கு மேல தாங்காது" என்றார்.

"வேற வழியே இல்லையா?" என்ற சந்திரசேகர் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கூடத் துடைக்காமல் அமர்ந்திருந்தார்.

"ஆரம்ப நிலையா இருந்தா கொஞ்ச நாள் உயிர் வாழ வைக்க முயற்சி செய்யலாம். ஆனா கடைசிக் கட்டத்திலேதான் கண்டுபிடிச்சிருக்கோம். ஒண்ணே ஒண்ணுதான் பண்ண முடியும். உங்கம்மாவை கண் மூடற வரைக்கும் நிம்மதியா எந்த குறையும் இல்லாம பார்த்துக்கணும். அவங்க கடைசி ஆசை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதையெல்லாம் நிறைவேத்தனும். வேற எதுவும் பண்ண முடியாது" என்று கையை விரித்த டாக்டரிடம் வேறு எதுவும் கேட்கத் தோன்றாமல் சந்திரசேகர் எழுந்தார். கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு டாக்டரைப் பார்த்து தலையாட்டி விட்டு வெளியே சென்றவரின் பின்னாலேயே கவிதா கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டே சென்றாள். தங்கம்மாள் இருந்த அறையை நெருங்கியதும் நின்று கவிதாவிடம்

"கவிம்மா பாட்டிகிட்ட இதை எதுவும் சொல்லக் கூடாது. அவங்க உடம்புக்கு எதுவும் இல்லைன்னு சொல்லனும்" என்று
சந்திரசேகர் சொன்னதும் மீண்டும் பொல பொலவென்று கண்ணீர் வடித்தாள்.

"ஷ். அங்க வந்து இப்படியே அழுதுகிட்டு இருந்தீன்னா உங்கம்மா என்ன என்னன்னு கேப்பா. அப்புறம் பாட்டிக்கும் தெரிஞ்சிடும். தயவு செஞ்சு கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இரு" என்று அவர் கெஞ்சலாய்க் கேட்கவும் தலையாட்டிக் கொண்டே கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அவர் பின்னால் சென்றாள்.

இருவரும் உள்ளே நுழைந்ததும் கட்டிலில் படுத்திருந்த தங்கம்மாள் எழ முயல அவரை அப்படியே படுக்க வைத்தாள் வளர்மதி. அதற்குள் கவிதா சென்று அவரது தலைமாட்டில் நின்றுக் கொண்டாள். அம்மாவின் அருகில் அமர்ந்த சந்திரசேகர் அவரது கைகளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு,
"எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்தாச்சும்மா. உடம்புக்கு எதுவும் இல்லையாம். கொஞ்சம் வீக்கா இருக்கீங்க அவ்வளவுதான்" என்று புன்னகைக்க முயன்றார். அதைக் கேட்டு லேசாய் சிரித்த தங்கம்மாள்

"என்னை சமாதானப்படுத்தினது போதும்ப்பா. எனக்கு என்னன்னு தெரிஞ்சுக்கவும் நான் விரும்பலை. ஆனா என் முடிவு நெருங்கிடுச்சு. அது மட்டும் நிச்சயம் தெரியும்" என்று சொல்லி முடிப்பதற்குள் "அம்மா தயவு செஞ்சு அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதீங்க. எங்களை விட்டுட்டு நீங்க எங்கயும் போயிட மாட்டீங்க. உங்களுக்கு எதுவும் ஆகாது" என்ற சந்திரசேகரின் கண்கள் அவரையும் அறியாமல் கலங்கியது. அதைக் கேட்டு விசும்பிய கவிதாவின் சத்தத்தைக் கேட்ட தங்கம்மாள் அவளது கையைப் பற்றி இழுத்துத் தனக்கு அருகில் உட்கார வைத்துக் கொண்டு

"நீ ஏன்டாம்மா அழற? ஒண்ணும் கவலைப்படாத. எனக்கு எப்பவும் ஒரே ஆசைதான். கண்ணை மூடறதுக்குள்ள உன் கல்யாணத்தைப் பார்த்திடனும். அவ்வளவுதான். என் தங்கத்தைக் கல்யாணக் கோலத்தில பார்க்காம என் உயிர்தான் போயிடுமா என்ன?" என்று புன்னகைத்தார்.

"அதைதாம்மா நானும் யோசிச்சுட்டு இருக்கேன். இன்னும் ஒரு மாசத்தில் கவியோட படிப்பு முடிஞ்சுடும்.முடிஞ்ச உடனேயே கல்யாணம் பண்ணிடலாம்னு நினைக்கிறேன். அவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது இல்லையா? நீங்க என்ன சொல்றீங்க?" என்று சந்திரசேகர் கேட்டார்.

"அவ விருப்பம் எப்படியோ அப்படியே செய்ப்பா. எனக்கு கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா" என்று கவிதாவின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார். கவிதா எதுவும் புரியாமல் அவரைப் பார்த்து விழிக்க "பாட்டிக்கிட்ட பேசிட்டு இரு. நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன். வந்ததும் நாம ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்பலாம்" என்று கூறி விட்டு வளர்மதியை அழைத்துக் கொண்டு சென்றார்.

வெளியில் சென்றதும் அவளிடம் எல்லா விவரங்களையும் கூறி விட்டு பின் மருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு கவிதாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
(தொடரும்...)

22 comments:

சுந்தர் / Sundar said...

present Mam ,
அப்புறம் படிச்சிட்டு சொல்லுறேன்

ISR Selvakumar said...

It's Good...

இம்சை அரசி said...

// சுந்தர் / Sundar said...
present Mam ,
அப்புறம் படிச்சிட்டு சொல்லுறேன்

//

என்ன சுந்தர் அண்ணா இப்படி சொல்லிப்போட்டு போய்ட்டீய???

சீக்கிரம் வந்து சொல்லுங்க :)

இம்சை அரசி said...

// r.selvakkumar said...
It's Good...

//

thank u Selvakkumar :)

ராம்குமார் அமுதன் said...

அன்பின் இம்சை அரசி...

இன்னைக்கு தாங்க உங்க ப்ளாக் முழுசுமா படிச்சேன்....

ரொம்ப நல்லாயிருக்கு...

அதுலயும் அந்த தோசை கதை டாப்....

எங்கள மாதிரி பசங்க பேச்சுலர்ஸ் த்ங்கீருக்குற எடத்துலயும் இந்த மாதிரி நெறைய காமெடி நடக்கும்....

கவிதைகள் எல்லாமே டாப் வகையறா....

ஆனா இவ்ளோ காமெடியா போய்கிட்டு இருக்கேல இந்த நாவல் பதிவு மட்டும் ஏங்க இவ்ளோ சீரியஸா?? எல்லாம் வெட்டிப்பயலோட தாக்கம்னு நெனக்கிறேன்....

எது எப்படியோ? நல்லாருக்கு நல்லாருக்கு எல்லாமே நல்லாருக்கு.....

மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்.....

இம்சை அரசி said...

// அமுதன் said...
அன்பின் இம்சை அரசி...

இன்னைக்கு தாங்க உங்க ப்ளாக் முழுசுமா படிச்சேன்....

ரொம்ப நல்லாயிருக்கு...

அதுலயும் அந்த தோசை கதை டாப்....

//

ரொம்ப thanks அமுதன்

//எங்கள மாதிரி பசங்க பேச்சுலர்ஸ் த்ங்கீருக்குற எடத்துலயும் இந்த மாதிரி நெறைய காமெடி நடக்கும்....
//

உண்மையாவே எனக்கு நல்லா சமைக்க தெரியுங்க. இது சும்மா காமெடிக்காக எழுதினது :)

//கவிதைகள் எல்லாமே டாப் வகையறா.... //

மறுபடியும் ரொம்ப thanksங்க....
ரொம்ப சந்தோஷமா இருக்கு :))

//ஆனா இவ்ளோ காமெடியா போய்கிட்டு இருக்கேல இந்த நாவல் பதிவு மட்டும் ஏங்க இவ்ளோ சீரியஸா?? எல்லாம் வெட்டிப்பயலோட தாக்கம்னு நெனக்கிறேன்....
//

வாழ்க்கைனா எல்லாமே இருக்கத்தானுங்களே வேணும்.
இதுல ஒரு விஷயம் என்னன்னா இது சீரியஸான கதையும் இல்ல. காமெடியான கதையும் இல்ல. படிச்சுட்டு சொல்லுங்க :))

// எது எப்படியோ? நல்லாருக்கு நல்லாருக்கு எல்லாமே நல்லாருக்கு.....

மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்.....

//

again n again thank u... thank u... :))

Unknown said...

கலக்குங்க...

ஜி said...

நாவலா?

அடுத்தப் பகுதி எப்போ?

கோபிநாத் said...

அரசி...
கதை அருமையா இருக்கு....கலக்குறிங்க...

\\வாழ்க்கைனா எல்லாமே இருக்கத்தானுங்களே வேணும்.
இதுல ஒரு விஷயம் என்னன்னா இது சீரியஸான கதையும் இல்ல. காமெடியான கதையும் இல்ல. படிச்சுட்டு சொல்லுங்க :))\\

நீங்க சொன்னத வைச்சி பார்த்த முடிவை எப்படி இருக்குமுன்னு ஒர் அளவுக்கு யோசிக்க முடியுது.

தொடர்ந்து கலக்குங்க....

நாமக்கல் சிபி said...

நாவலா???
கலக்குங்க...

அடுத்த பகுதிக்கு வெயிட்டீங் :-)

Unknown said...

தொடரா வாழ்த்துக்கள்.. தொடர்ட்டும்

இம்சை அரசி said...

// அருட்பெருங்கோ said...
கலக்குங்க...

//

thank u Arutperungo :)

இம்சை அரசி said...

// ஜி said...
நாவலா?

அடுத்தப் பகுதி எப்போ?

//

ஏதோ கொஞ்சம் try பண்றேன்......

படிச்சுட்டு சொல்லுங்க ஜி :)

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
அரசி...
கதை அருமையா இருக்கு....கலக்குறிங்க...
//

அய்யோ..... அய்யோ....... சந்தோஷத்துல என்ன சொல்றதுன்னே தெரியலங்க.....

ரொம்ப தேங்க்ஸூங்க :)


//நீங்க சொன்னத வைச்சி பார்த்த முடிவை எப்படி இருக்குமுன்னு ஒர் அளவுக்கு யோசிக்க முடியுது.

தொடர்ந்து கலக்குங்க....
//

உங்களால கண்டிப்பா guess பண்ணவே முடியாது. bcaz its having 20 parts :)

இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் said...
நாவலா???
கலக்குங்க...

அடுத்த பகுதிக்கு வெயிட்டீங் :-)

//

ஹ்ம்ம்ம்...... மடுவப் பார்த்து மலை சொல்லுது :)))

thank u vetti :)

இம்சை அரசி said...

// தேவ் | Dev said...
தொடரா வாழ்த்துக்கள்.. தொடர்ட்டும்

//

thank u Dev அண்ணா :)))

நாமக்கல் சிபி said...

//ஹ்ம்ம்ம்...... மடுவப் பார்த்து மலை சொல்லுது :)))//

நக்கலோ நக்கல் ;)

இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் said...
//ஹ்ம்ம்ம்...... மடுவப் பார்த்து மலை சொல்லுது :)))//

நக்கலோ நக்கல் ;)

//

உண்மையதானுங்கோ சொன்னேன் :)

ஜி said...

// இம்சை அரசி said...
ஹ்ம்ம்ம்...... மடுவப் பார்த்து மலை சொல்லுது :)))//

சூப்பர்....

Anonymous said...

கவிதாவுக்கு உதவும் டாக்டர் வாழ்க!

இம்சை அரசி said...

// ஜி said...
// இம்சை அரசி said...
ஹ்ம்ம்ம்...... மடுவப் பார்த்து மலை சொல்லுது :)))//

சூப்பர்....

//

அப்பாடி.... கம்பெனிக்கு ஆள் இருக்காங்க....

thank u ஜி.... :)))

என்ன வெட்டி?

இம்சை அரசி said...

// நியாயஸ்தன் said...
கவிதாவுக்கு உதவும் டாக்டர் வாழ்க!

//

டாக்டர் எங்கங்க கவிதாவுக்கு உதவுனாரு???