Sunday, January 7, 2007

உயிரில் கலந்த உறவே - 2

ஏதேனும் துன்பம் நேர்ந்தால்
விதியே என்று அமைதியுறுவேன்
விதியே சதி செய்தால்.........

ஏ.சி சான்ட்ரோ காரினுள் அமைதியாய் அமர்ந்திருந்த கவிதாவிற்கு நெருப்பின் மேல் இருப்பது போலிருந்தது.

"என்ன கவி. பாட்டிக்கு இப்படி ஆயிடுச்சேன்னு பீல் பண்றியாடா? என்னாலயும் தாங்கவே முடியலை" என்று சந்திரசேகர் துக்கத்துடன் கூறினார்.

"என்னாலயும் தாங்கிக்கவே முடியல டாடி. அதை விட இன்னும் என்ன கஷ்டமா இருக்குன்னா பாட்டிகிட்ட இப்படி பொய்
சொல்லிட்டீங்களேன்னுதான்..." என்று அவள் முடிப்பதற்குள்

"பின்ன என்னடா? பாட்டிக்கிட்ட போய் உங்களுக்கு ப்ளட் கேன்சர் அப்படின்னு சொல்ல முடியுமா?" என்றார்.

"அய்யோ நான் அதை சொல்லலை டாடி. பாட்டி எப்பவுமே அவங்க போறதுக்குள்ள என் கல்யாணத்தைப் பார்த்திடனும்னு சொல்லுவாங்க.
அவங்ககிட்ட போய் கல்யானம் பண்ணலாம்னு சொல்லிட்டு... அப்புறம் கடைசி நேரத்தில ரொம்ப பீல் பண்ணுவாங்க இல்லையா டாடி? அதை
நினைச்சாதான் இன்னும் கஷ்டமா இருக்கு" என்று வருத்தத்துடன் கூறினாள்.

"அது பொய்னு உனக்கு யார் சொன்னது?" என்று சந்திரசேகர் ஆச்சரியமாய் கேட்கவும் தூக்கி வாரிப்போட நிமிர்ந்தவளிடம்

"உங்கம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். அவ இப்பவே போகும் போது தரகரைப் பார்த்துட்டு போகச் சொன்னா. நான் தான் உன்கிட்ட
கேட்டுட்டு போய் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்" என்றார்.

"நோ டாடி. என்னால சம்மதிக்க முடியாது. எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க கொஞ்சம் கூட விருப்பமில்லை" என்று உறுதியாக
தலையசைத்தாள்.

"கவிம்மா ப்ளீஸ். சூழ்நிலையை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுடா. நீயே யோசிச்சுப் பாரு. நான் சொல்றது சரின்னு புரியும்"

"டாடி ஆனா நான் இப்பதான் பி.எஸ்.ஸியே கம்ப்ளீட் பண்ண போறேன். நான் இன்னும் பி.எட் பண்ணனும்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். இப்ப
வந்து இப்படி சொன்னா என்ன டாடி அர்த்தம்?"

"உன் ஆசையை நான் குறை சொல்லலை. ஆக்சுவலா உனக்கு இப்ப கல்யாணம் பண்ற ஐடியாவும் இல்லை. ஆனா பாட்டியோட ஆசை என்ன?
உன்னோட கல்யாணத்தைப் பார்க்கணும் அவ்வளவுதான். எங்களால என்னடா பண்ண முடியும்?" என்று அவர் கெஞ்சலாய் கேட்டும் அவள் அமைதியாய் அமர்ந்திருக்கவே மேலும்

"எதுவா இருந்தாலும் உன் விருப்பம். உன்னை நான் கட்டாயப்படுத்தலை. என்ன...... எங்க எல்லாரையும் விட பெத்த பிள்ளையான என்னை விடவும் உன் மேலதான் பாசம் அதிகம். உன்னை கண்ணுல வச்சு வளர்த்த உயிர் நிம்மதியா போகறதும் போகாததும் உன் கையிலதான் இருக்கு" என்றார்.

"நான் யோசிச்சு சொல்றேன் டாடி" என்று மெதுவாய் சொன்னவள் அதற்குள் வீடு வந்துவிடவும் வேகமாக இறங்கிச் சென்று அவளது அறைக்குச்
சென்றாள். சந்திரசேகர் காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார்.

நேராகச் சென்று மெத்தையில் விழுந்த கவிதா என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினாள். தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று
வருந்தியவள் திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
'இப்ப பண்ணிக்க விருப்பமில்லைதான். பி.எட் முடிக்கணுமே. பரவாயில்ல. எனக்கு பாட்டிய விட நானே முக்கியமில்ல. என் ஆசை எந்த மூலைக்கு'
என்றெண்ணியவளின் கண்கள் பாட்டியின் நினைவுகளில் மீண்டும் குளமாயின.

சிறு வயதிலேயே கணவனை இழந்த தங்கம்மாள் ஒரே மகனான சந்திரசேகரைக் கண்ணுக்கு கண்ணாக வளர்த்தார். தனக்காக எவ்வளவோ
தியாகங்கள் செய்து கஷ்டப்பட்டு வளர்த்த தாயிடம் சந்திரசேகர் உயிரையே வைத்திருந்தார். தனது தொழில் திறமையால் நன்கு முன்னேறி ஒரு
சிறந்த தொழிலதிபராய் ஆன சந்திரசேகர் வளர்மதியைக் கைப்பிடித்தப் பிறகும் தாயிடம் வைத்திருந்த பாசம் சிறிது கூட குறையவே இல்லை.
சந்திரசேகரின் முதல் குழந்தையான கவிதாவை அதை விட பன்மடங்கு பாசத்தைக் கொட்டி வளர்த்தார் தங்கம்மாள். அவளுக்கு பிறகு பிறந்த
அபிஷேக்கிடம் கூட அந்த அளவு பாசம் வைக்கவில்லை. பிறந்தது முதல் பாட்டியிடமே இருந்து வந்த கவிதாவும் தனது பெற்றோரை விடவும்
பாட்டியிடமே அதிக பாசம் வைத்திருந்தாள். டீச்சர் டிரெயினிங் படிப்பிற்காக அவளை ஹாஸ்டலில் கொண்டு விட்டபோதுகூட எனக்கு படிப்பே
வேண்டாம் என்று கூறி விட்டு வந்துவிட்டாள். தங்கம்மாள் தான் இரண்டு வருடம் தானே இரண்டு நிமிடமாய் பறந்து விடும் என்று அவளை
சமாதானப்படுத்திக் கொண்டு விட்டு வந்தார். எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு வருடங்களை தள்ளியவள் உள்ளூரிலேயே படித்துக் கொள்கிறேன்
என்று அருகில் இருந்த கல்லூரியிலேயே பி.எஸ்.ஸி கணிதம் சேர்ந்து விட்டாள். பி.எஸ்.ஸி முடிக்க கடைசி செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே
மிச்சமிருக்கும் பட்சத்தில் இப்படி அவள் தலையில் இடி விழுந்து விட்டது.

'அய்யோ! உன் மடியில் தலை வச்சு படுத்து நீ தலை நீவி விடாம நான் எப்படி தூங்குவேன்? ரெண்டு வருஷத்தை உன் பக்கத்தில் இல்லாம தள்ள
எவ்வளவு கஷ்டப்பட்டேன். இப்படி என்னை விட்டுட்டு போகப் போறியே. நான் என்ன செய்யப் போறேன்?' என்று அழுது கொண்டே இருந்தவள்

'உன்னை விட எனக்கு எதுவும் முக்கியமில்ல. உனக்காக.......... உன் சந்தோஷத்துக்காக......... நான் என்ன வேணும்னாலும் செய்வேன். ஆப்டர்
ஆல் கல்யாணம்........ இதைக் கூட உனக்காக செஞ்சுக்க மாட்டேனா' என்று எண்ணிக் கொண்டே கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

சட்டென்று சக்திவேல் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வர தொய்ந்து போய் அப்படியே மீண்டும் தொப்பென்று விழுந்தாள்.

'அய்யோ சக்தி. நான் என்ன பண்ணட்டும்? எனக்கு வேற வழி தெரியலை சக்தி' என்று புலம்பிய மனது சக்திவேலை எண்ணத் தொடங்கியது.

தொடரும்....

22 comments:

ராம்குமார் அமுதன் said...

Nalla irukkkunga....

இம்சை அரசி said...

// அமுதன் said...
Nalla irukkkunga....

//

thank u :)

ஜி said...

கவிதா, அபிஷேக்... பெயர் வித்தியாசம் பயங்கரமா இருக்கே...

ஐ எம் த வெயிட்டிங்...

இம்சை அரசி said...

// ஜி said...
கவிதா, அபிஷேக்... பெயர் வித்தியாசம் பயங்கரமா இருக்கே...

ஐ எம் த வெயிட்டிங்...

//

அச்சச்சோ....... இதுல concentrate பண்ணாம விட்டுட்டேனா??? இல்லையே அபிஷேகம் தானே அபிஷேக்?

என்னங்க ஜி???

நாமக்கல் சிபி said...

நல்லா போயிட்டு இருக்கு...

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...

இம்சை அரசி said...

Divya/Vishnupriya,
Thx for ur comments and I really feel happy that u remember my story even after 2 yrs :-)

Sorry for not publishing ur comments as I dont want to blow my trumpets...
Hope u will understand :-)

கோபிநாத் said...

அரசி,

கலக்கல போயிட்டு இருக்கு...

இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் said...
நல்லா போயிட்டு இருக்கு...

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...
//

சீக்கிரம் போடறேன் வெட்டி :)))

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
அரசி,

கலக்கல போயிட்டு இருக்கு...

//

thank u கோபிநாத் :)))

ஜி said...

//இம்சை அரசி said...
இல்லையே அபிஷேகம் தானே அபிஷேக்?//

illa generalaa north indiansthaan Abisheknu peyar vaipaanga. Kavitha south indian peru... athaan little confuse aayitten.

இம்சை அரசி said...

// ஜி said...
//இம்சை அரசி said...
இல்லையே அபிஷேகம் தானே அபிஷேக்?//

illa generalaa north indiansthaan Abisheknu peyar vaipaanga. Kavitha south indian peru... athaan little confuse aayitten.
//

பரவாயில்லைங்க ஜி......

இப்படி பெரியவா நீங்க எல்லாம் சொன்னாதான நாங்க எல்லாம் கொஞ்சமாவது மேல வர முடியும் :)

ஜி said...

//இப்படி பெரியவா நீங்க எல்லாம் சொன்னாதான நாங்க எல்லாம் கொஞ்சமாவது மேல வர முடியும் :)//

ennathu periyavaala...
ithu konjam over....

neenga pala perukku class edukura alavukku therami ulla teacher..
naanga... kadaisi bench students...
Vettikitta sonna avarum athaiyethaan solvaaru..

இம்சை அரசி said...

// ஜி said...
ennathu periyavaala...
ithu konjam over....
//

overலாம் இல்லைங்க ஜி. எல்லாம் correctஆ தான் இருக்கு :)

//neenga pala perukku class edukura alavukku therami ulla teacher..
naanga... kadaisi bench students...
Vettikitta sonna avarum athaiyethaan solvaaru..
//

நீங்க எல்லாம் கடைசி பெஞ்ச்ல உக்காந்தாலும் ஒழுங்கா இருக்கற students...... ஆனா நான் கடைசி பெஞ்ச்ல அப்படியே படுத்து தூங்கற student........ :))))

G3 said...

hello.. ippo dhaan unga blog pakkam vandhen.. neenga dhaan writer jeyanthiya? i have read this story.. monthly novella padichen... so neenga dhaan writer jeyanthiya? enakku indha story en nyaabagam irundhudhuna i loved those kutti kavidhais in the starting of each episode.. ippo kooda recenta en blogla adhula irundhu 2 - 3 kavidhai suttu potirukken :)

I loved the one when kavi tells her husband that she is conceived.. chancae illa adhu..

Hats off to ur writing.. :)

இனியாள் said...

Nan intha kathaiya padichu irukken arasi, nalla irunthathu. Kanmani la vanthatha.....?

Iniyal

Unknown said...

hHi, why did u left this story without completing... :(

Unknown said...

why did u left this story without completing

Anonymous said...

adutha pagudhi eppo varum?romba naal aache...?

kadhayai infy public folders la potirukeengala?apdina link anupunga...

இம்சை அரசி said...

// Anonymous thanu said...

adutha pagudhi eppo varum?romba naal aache...?

kadhayai infy public folders la potirukeengala?apdina link anupunga...
//

இல்லைங்க... இது கண்மணில வெளிவந்த என்னோட நாவல். போடலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் டைம் இல்லைனு விட்டுட்டேன். 16th March 2005ல தேவியின் கண்மணில வந்துச்சு :)))

Anonymous said...

//16th March 2005ல தேவியின் கண்மணில வந்துச்சு //
appo muzhu kadhaiyavum padikradhu romba kashtam poliruke...:(

Anonymous said...

2005 கண்மணியை தேடினாலும் கிடைக்காதே கண்மணி... இப்படி ஏமாற்றலாமா?

Anonymous said...

நான் இந்த கதை படித்திருக்கிறேன். எனக்கு பிடித்திருந்தது. நீங்க தானா அது. ...... கண்மணி எனக்கு பிடித்த நாவல். அம்மாவோட கலக்சனில நிறைய படிச்சிருக்கேன். ஆனால் இப்ப அதன் தரம் மிகவும் குறைந்துவிட்டதுப்பா. நேத்து ஒன்னு படிச்சேன். அவர் வேற‌ 666 சிறுகதை எல்லாம் எழுதியவர்னு போட்டிருந்தாங்க‌. சகிக்கல. ஒரு கண்மணி புக்கை டெய்லி படிச்சிருக்கிறேன். துளசின்னு ஒரு கரக்டர். ஜேம்ஸ் அப்புறம் துளசியோட ஒரு முஸ்லிம் ஃப்ரென்ட்.