Thursday, December 14, 2006

ஐடியா ப்ளீஸ்.....

காலைல 8.30க்கு செல் அலாரம் அடிச்சதும் மெல்ல கண்ணு முழிச்சு பாத்தா எல்லாம் பர பரன்னு கெளம்பிட்டு இருக்காங்க... எழுந்து வேக வேகமா குளிச்சுட்டு கெளம்பனுமா... ஸ்ஸ்ஸ்.....அப்பா..... இப்பவே கண்ண கட்டுதேன்னு ரொம்ப பீலிங்கோட எழுந்தேங்க இன்னைக்கு.

என் எதிரி(கடைசில தெரியும் ஏன் இப்படி சொல்றேன்னு) என்கிட்ட "சாப்பாடு செஞ்சு வச்சாச்சுடா. சாப்பிட்டுட்டு லஞ்ச் எடுத்துட்டு வந்துடு" ன்னு சொல்லிட்டு கெளம்பிட்டா. சரின்னு நானும் வேக வேகமா குளிச்சுட்டு கெளம்பி தட்டுல சாதத்தை போட்டு கொழம்பை ஊத்தறேன்...... ஒரே கொழப்பமா இருக்கே..... கொழம்பு வைக்கலையா??? வெறும் ரசத்தோட நிறுத்திட்டாளா???!!! சரி இதையாவது சாப்பிட்டுட்டு போலாமேன்னு பிசைஞ்சு வாயில வச்சா...... அட பாவிங்களா...... புளிய கரைச்சு வாயில ஊத்துன மாதிரி இருக்குதே...... இது சரிப்படாதுன்னு அப்படியே வச்சுட்டு மதியம் ஆபிஸ்லயே சாப்பிட்டுக்கலாம்னு கெளம்பிட்டேன்.

போன உடனே மொத வேலையா போனை போட்டு "என்னடி செஞ்சு வச்ச?" ன்னு கேட்டதுக்கு என்ன பதில சொன்னா தெரியுமாங்க? "புளி சாதம் செய்யலாம்னு ட்ரை பண்ணுனோன்டா. அது தண்ணியா போயிட்டதால சாதத்தை கொட்டி கெளர முடியலை. அதனால அப்படியே பெசைஞ்சு சாப்பிடலாம்னு நினைச்சோம். கடைசில அதுவும் முடியலை. சரி உன்னால முடியுதான்னு சும்மா செக் பண்ணுனோம். சும்மா லுலுலா" ன்னு சொல்லி சிரிச்சா பாருங்க....... எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்ல.

இவ எல்லாம் எதுக்கு சமைக்கறேன்னு வரணும்? சமையல் தெரியலைன்னா பொண்ணா லட்சணமா என்னை மாதிரி ரிஸ்க் எடுக்காம அமைதியா இருக்க வேணாம்???

பழி வாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன். யாராவது நல்ல ஐடியாவா குடுங்க. நல்ல ஐடியா குடுக்கறவங்களுக்கு என் கையால நான் மொத மொத பண்ண போற சாப்பாடுடுடுடுடுடுடுடுடு............. அய்யோ ஓடாதீங்க.......... ஐடியாவ சொல்லிட்டு போங்க................ ஹலோ...............

20 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

//சமையல் தெரியலைன்னா பொண்ணா லட்சணமா என்னை மாதிரி ரிஸ்க் எடுக்காம அமைதியா இருக்க வேணாம்??? //

ஆஹா யக்கா இம்சையகோவ் நிங்க ரொம்ப கொக்குமாகான ஆளுதான் போலருக்கே !! :))))))))))) நல்ல பாலிசி !!

ஜி said...

பாய் கட மட்டன் பிரியானி வாங்கி உங்க ஃப்ரெண்ட வலுப்பங்காட்டியே சாப்பிடுங்க.

Unknown said...

????????????????????????

இம்சை அரசி said...

யப்பா ஜொள்ளு தம்பி... இப்படியெல்லாம் சொன்னா என் கையாலயே அலுவா கிண்டி உன் வாயில வச்சு அடச்சிடுவேன் ஆமாம்...

இம்சை அரசி said...

// பாய் கட மட்டன் பிரியானி வாங்கி உங்க ஃப்ரெண்ட வலுப்பங்காட்டியே சாப்பிடுங்க.

//

அவ அதுக்கெல்லாம் அசர ஆள் இல்ல ஜி... என்கிட்ட இருந்து பிடுங்கி அப்புறம் எனக்கு வலுப்பங்காட்டிட்டே அவ சாப்பிட்டுடுவா...

வேற எதாவது நல்ல ஐடியா???

இம்சை அரசி said...

// ????????????????????????

//

இதுக்கு என்ன அர்த்தம்ங்க பொதிகை சாரல்????????????

Anonymous said...

Please marry a person who knows cooking and enjoy your life.

Then invite your friend for a lunch indicating that your hasband is preparing the lunch.

But you cook on the day and serve to your friend. Great punishment to her. isn't it

Anonymous said...

Imsai arasi appadinnu peru vechukkittu frienda imsai panna mathavange kitta idea ketta eppadi. Pera mathi vachukkamma

Unknown said...

அந்தக் கேள்விக்குறிகள் தங்களை 1000 கேள்விகள் கேட்கச்செய்யும்...அந்த கேள்விகள்தான் பதில்கள்.......

இம்சை அரசி said...

// Please marry a person who knows cooking and enjoy your life.

Then invite your friend for a lunch indicating that your hasband is preparing the lunch.

But you cook on the day and serve to your friend. Great punishment to her. isn't it

//

ஆனா அதுக்கு ரொம்ப நாள் ஆகுமே padippavan... உடனடியா குடுக்கற மாதிரி எதாவது சொல்லுங்களேன் ப்ளீஸ்...

இம்சை அரசி said...

// Imsai arasi appadinnu peru vechukkittu frienda imsai panna mathavange kitta idea ketta eppadi. Pera mathi vachukkamma

//

அவ இம்சை பேரரசியா இருக்காளே... நான் என்ன பண்ணட்டும்???

இம்சை அரசி said...

// pothihaisaaral said...
அந்தக் கேள்விக்குறிகள் தங்களை 1000 கேள்விகள் கேட்கச்செய்யும்...அந்த கேள்விகள்தான் பதில்கள்.......
//

அய்யோ மறுபடியும் மறுபடியும் கொழப்புரீங்களே... எனக்கு அந்த அளவுக்கெல்லாம் மூளை வேலை செய்யாதுங்க....

Anonymous said...

sari. naalaikku konjam seekiramma elunthiruchu ( kashtam thaan. irundalum frienda kodumai paduthure santhosham irukke!)avalukku uppuma senji kodukkavum

இம்சை அரசி said...

// padippavan said...
sari. naalaikku konjam seekiramma elunthiruchu ( kashtam thaan. irundalum frienda kodumai paduthure santhosham irukke!)avalukku uppuma senji kodukkavum

//

அதெல்லாம் சரி தானுங்கோ padippavan... அதுக்கு மொதல்ல நான் உப்புமா செய்ய கத்துக்கனுமே... கடைசில நீங்க என்னை நானே கொடுமை பண்ணிக்க ஐடியா தரீங்களே!!! :(

ஜொள்ளுப்பாண்டி said...

//யப்பா ஜொள்ளு தம்பி... இப்படியெல்லாம் சொன்னா என் கையாலயே அலுவா கிண்டி உன் வாயில வச்சு அடச்சிடுவேன் ஆமாம்...//

ஆஹா இம்சையக்கா உங்களுக்கு அலுவா கிண்டத்தெரியுமா ?? ;))) சீகிரம் கொண்டாங்க வாயும் பல்லுமா உக்காந்து இருக்கேன் ;)))))

ஒரு அல்வாவே
அல்வாவை
கிண்டுகிறதே !!!

கவிதை கவிதை :))))))))))

சைதை முரளி said...

இது ரொம்ப சுவாரசியமா, நல்லா இருக்கே!

சைதை முரளி.

Anonymous said...

//

அதெல்லாம் சரி தானுங்கோ padippavan... அதுக்கு மொதல்ல நான் உப்புமா செய்ய கத்துக்கனுமே... கடைசில நீங்க என்னை நானே கொடுமை பண்ணிக்க ஐடியா தரீங்களே!!! :(

Iyo Iyo Iyo. Ungalukku puriyave ille. neenga uppuma siyaa kathukkittaa eppadi kodumai panna mudiyum. kathukkamaleye uppuma senjaa thaane kodumai panna mudiyum. purinjuthaa

இம்சை அரசி said...

// ஆஹா இம்சையக்கா உங்களுக்கு அலுவா கிண்டத்தெரியுமா ?? ;))) சீகிரம் கொண்டாங்க வாயும் பல்லுமா உக்காந்து இருக்கேன் ;)))))

//

இது வரைக்கும் தெரியாது. தம்பிக்காகதான் இனிமே கத்துக்க போறேன். டெஸ்ட் பண்ண ரெடியா???

// ஒரு அல்வாவே
அல்வாவை
கிண்டுகிறதே !!!

கவிதை கவிதை :))))))))))

//

எலேய்... ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசில மனுஷனை கடிக்கற கதையா இல்ல இருக்கு.... தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு....

இம்சை அரசி said...

// padippavan said...

Iyo Iyo Iyo. Ungalukku puriyave ille. neenga uppuma siyaa kathukkittaa eppadi kodumai panna mudiyum. kathukkamaleye uppuma senjaa thaane kodumai panna mudiyum. purinjuthaa

//

vaare wow!!!!!!!
wt a gud idea........
1st prize goes to padippavan.....
anyway that uppuma is my 1st preparation. i'll send a parcel to u.
r u readyyyyyyyyyyyyy????????????

இம்சை அரசி said...

// சைதை முரளி said...
இது ரொம்ப சுவாரசியமா, நல்லா இருக்கே!

சைதை முரளி.

//

நன்றி சைதை முரளி.

இன்னும் நிறைய சுவாரசியமா இருக்கு.

ஒண்ணொண்ணா சொல்றேன். :)