Tuesday, December 12, 2006

ஓ பெங்களூரு...! ஓஓ பெங்களூரு...!!

"அடேயப்பா... பெங்களூரு வந்து 4 மாசம் ஆயிடுச்சே. இது வரைக்கும் ரெண்டே தடவை தான் ஷாப்பிங் போயிருக்கிறோமே. நெனச்சா நமக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேமா இருக்கே."

இப்படியெல்லாம் நெனச்சு தாங்க போன ஞாயித்து கிழமை நாங்க ஒரு மூணு பேரு சேர்ந்து ஷாப்பிங் கெளம்பினோம். மதியம் சரியா மூணு மணிக்கு மெஜஸ்டிக் போய் சேர்ந்ததும் நேரா ரோடை க்ராஸ் பண்ணி சப்வேல போய் ரைட்ல திரும்பினா... அம்மாடியோவ்.... எவ்வளோ கடைங்க... அய்யோ... அய்யோ... ஒரே குஷி... தாங்க முடியலை. எல்லா கடைலயும் ஒரு ரவுண்டு விட்டு கொண்டுட்டு போன காசையெல்லாம் காலி பண்ணிட்டோம். கடைசில ஒரு சுடிதார் தைக்க குடுக்கலாமேன்னு போனோம். ஒரு அரை மணி நேரத்துல தைச்சு குடுத்துடுவோம் மேடம்னு சொல்லவும் ரொம்ப சந்தோஷமா குடுத்துட்டு வந்தோம். ஒரு மணி நேரம் கழிச்சு திரும்பி போனா... கடவுளே... என் துணி அப்படியே வெட்டி(வெட்டி உங்களை இல்ல) போட்டவாக்குல கெடக்குது. எவ்வளவு நேரமாகும்னு நான் இங்க்லீஷ்ல கேக்க... அவன் ஏதோ ஹிந்தில பதிலை சொல்ல... நாஞ்சொல்றது அவனுக்கு புரியாம... அவஞ்சொல்றது எனக்கு புரியாம... தைச்சு குடுத்தா சரின்னு அங்கனயே கொஞ்ச நேரம் உக்காந்து துணிய வாங்கிட்டு ஒடியாந்தா மணி 6.00.

அட கடவுளே! எலக்ட்ரானிக் சிட்டி ப்ஸ்ஸை தொட கூட விட மாட்டேங்கறாய்ங்க. அவ்வளவு கூட்டம். அப்படியே எவ்வளவு நேரந்தான் பஸ்ஸையே பார்த்துட்டு இருக்கறதுன்னு ஒரு 7.30 மணிக்கு ஒரு சின்ன மீட்டிங்க போட்டு சரி அடுத்த ஸ்டாப்ல போய் வர எலக்ட்ரானிக் சிட்டி பஸ்ல ஏறி இங்க வந்துடுவோம். அப்படியே உக்காந்துகிட்டே போயிடுவோம்னு ப்ளான் பண்ணி நடக்கறோம்... நடக்கறோம்... நடந்துகிட்டே இருக்கறோம் ஒரு 45 நிமிஷமா... எனக்கு தலைய சுத்துது... அங்க ஒரு பஸ் ஸ்டாப்பை பாத்ததும் தான் சுத்துன என் தலை நின்னுச்சு.

ஒரு 20 நிமிஷம் பல்லை கடிச்சுட்டு... இந்த ஐடியா குடுத்தவளை முறைச்சுக்கிட்டோ நின்னோம். கடைசியா ஒரு 356C எங்களை தாண்டி போய் நின்னத பாத்ததும் அப்படியே பி.டி.உஷா கணக்கா ஓடி போய் ஏறுனோம். பஸ் ஸ்டாண்ட்க்கு வெளியே வந்து சேர்ந்ததும் சீட்டை புடிச்சு உக்காறோம்... கண்டக்டர் வண்டி டிப்போ போகுது எல்லாரும் எறங்குங்கன்னு சொல்றாரு... ஆவ்வ்வ்வ்... முடியலை... சனி இப்படியா வாழ்க்கைல வெளயாடனும்னு நெனச்சு எறங்கி மறுபடியும் உள்ள போய் கொஞ்ச நேரம் எல்லா பஸ்ஸையும் மொறச்சு பாத்துட்டே நின்னோம்.

கடைசில ஒரு 9.30 மணிக்கு கொஞ்சம் நிக்கற மாதிரி எடம் கெடச்ச பஸ்ல ஏறி ஒரு 10.30 மணிக்கு "ஓ பெங்களூரு...! ஓஓ பெங்களூரு... !!"ன்னு பாடிக்கிட்டே வீடு வந்து சேர்ந்தோம்.

(அப்பா... டைட்டிலோட ரிலேட் பன்னியாச்சு... ஹைய்யா... ஜாலி... ஜாலி...)

18 comments:

CVR said...

என் பெங்களூர் நாட்கள் பசுமையாக நினைவுக்கு வந்து போனது!! :)
வாழ்த்துக்கள்!!

தொடர்ந்து எழுதவும்!! :)

இம்சை அரசி said...

thanks cvr...

உண்மைய சொல்லனும்னா அன்னைக்கு ரொம்ப கடுப்பாகி திரும்பி வந்து சேர்ந்தோம். ஆனா ப்ளாக்ல ஜாலியா எழுதி போட்டதுக்கப்புறம் இப்ப நினைச்சா சிரிப்பு தான் வருது... :-)

சுந்தர் / Sundar said...

ஊரா அது

இம்சை அரசி said...

// சுந்தர் said...
ஊரா அது

//

என்னங்க இப்படி சொல்லிட்டடீங்க???

விஜயன் said...

//எனக்கு தலைய சுத்துது... அங்க ஒரு பஸ் ஸ்டாப்பை பாத்ததும் தான் சுத்துன என் தலை நின்னுச்சு.
//

Romba luckyinga neenga. unga mudhugellam paarthu iruppenga???!!!!

இம்சை அரசி said...

// விஜயன் said...
//எனக்கு தலைய சுத்துது... அங்க ஒரு பஸ் ஸ்டாப்பை பாத்ததும் தான் சுத்துன என் தலை நின்னுச்சு.
//

Romba luckyinga neenga. unga mudhugellam paarthu iruppenga???!!!!

//

பொறாமைப்படாதீங்க விஜயன்...
நீங்களும் ஒரு நாள் இப்படிக்கா வந்துட்டு போனீங்கன்னா உங்க முதுகை நீங்க பாத்துக்களாம் :)

விஜயன் said...

bengalore la sivarasana pottu thallna idathukku pakkaththula thaan naan kudiyirunthen.

இம்சை அரசி said...

// bengalore la sivarasana pottu thallna idathukku pakkaththula thaan naan kudiyirunthen.

//

பெங்களூர் பத்தி எனக்கு அந்த அளவுக்கு தெரியாதுங்க......

சுந்தர் / Sundar said...

என்ன இருக்கு அந்த ஊருள?

இம்சை அரசி said...

// சுந்தர் said...
என்ன இருக்கு அந்த ஊருள?

//

இப்படி குண்டக்க மண்டக்க கேக்கப்படாது சுந்தர். அப்புறம் பெங்களூர்வாழ் தமிழ் மக்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து வருவாய்ங்க உங்களை போட்டு தள்ள...

சும்மா டமாஷு....

சுந்தர் / Sundar said...

அந்த ஊருலதான் நானும் இருக்கேன் ...
வரட்டும் பாத்துக்குறேன் ! ... நானா பெங்களுரானு...

இம்சை அரசி said...

// சுந்தர் said...
அந்த ஊருலதான் நானும் இருக்கேன் ...
வரட்டும் பாத்துக்குறேன் ! ... நானா பெங்களுரானு...

//

அந்த ஊருலதான் இருக்கீங்களா???!!! அய்யய்யோ! தெரியாம சொல்லிப்புட்டேனுங்கண்ணா..... சின்ன புள்ள... மன்னிச்சு விட்டுடுங்கண்ணா...

G.Ragavan said...

நீங்களும் பெங்களூரா? வாங்க வாங்க வெல்கம் டு பெங்களூரு.

இம்சை அரசி said...

// G.Ragavan said...
நீங்களும் பெங்களூரா? வாங்க வாங்க வெல்கம் டு பெங்களூரு.

//

ஆஹா... மொத மொதலா நீங்க தான் எனக்கு வரவேற்பு கொடுத்திருக்கீங்க...

நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சா ரொம்ப அதிர்ச்சியாயிடுவீங்க ராகவன் :)

Anonymous said...

இம்சை .. சென்னையில் 2 வருஷம் இருந்துட்டு இப்ப நானும் பெங்களூர்ல தான் இருக்கேன். எனக்கு பிடிக்காத ஊர் லிஸ்ட்ல பெங்களூரையும் சேர்த்துக்கலாம். நீங்க மடிவாளா ல யா இருக்கீங்க ..?

இம்சை அரசி said...

// குணா 덧글 내용...
இம்சை .. சென்னையில் 2 வருஷம் இருந்துட்டு இப்ப நானும் பெங்களூர்ல தான் இருக்கேன். எனக்கு பிடிக்காத ஊர் லிஸ்ட்ல பெங்களூரையும் சேர்த்துக்கலாம். நீங்க மடிவாளா ல யா இருக்கீங்க ..?

//

என்ன குணா இப்படி சொல்லிட்டீங்க??!!! Garden Cityங்க...
இனி அப்படியெல்லம் சொல்ல கூடாது. சரியா?

Anonymous said...

//எனக்கு தலைய சுத்துது... அங்க ஒரு பஸ் ஸ்டாப்பை பாத்ததும் தான் சுத்துன என் தலை நின்னுச்சு.
//


சும்மா காமெடி பண்ணாதீங்க...
உங்க ப்ளாக் சைட் போனாலே சிரிப்புதான் வருது எனக்கு...

Anonymous said...

ஹலோ முதல்ல அனுப்புன கமெண்ட்ஸ் ஏதும் Blogla போட்டுடாதீங்க....

ப்ளீஸ்....

naan blogla pudhu manushan...
Adhuvum periya manushan....