இங்கும் அங்குமாய்
தேடி தேடியலைகிறேன்
என்றாலும் இதுவரை
கிடைத்தபாடில்லை....
பத்திரமாய் பாதுகாத்து
வைத்துக் கொள்ளாதது
எனது தவறுதான்
ஒத்து கொள்கிறேன்....
எவ்வித மாற்றமும்
இல்லாமல் அப்படியே
கிடைத்தாக வேண்டுமே
என்று தவிக்கிறேன்....
எங்கே புகார் செய்தால்
உடனடியாக தேடி
கண்டுபிடித்து கொடுப்பார்கள்
உங்களுக்கு தெரியுமா?
தெரிந்தவர் உதவுங்களேன்!
ஒரு அபலை பெண்ணிற்கு
உதவிய புண்ணியம்
உங்களை சேரும்....
அட!
தொலைத்தது எதை என்று
சொல்ல மறந்து விட்டேனா?
என் இதயத்தை.....
10 comments:
இங்கனதான் ட்விஸ்டே...
இப்படி ஒரு சின்னப் பொண்ணு படத்தப் போட்டிருக்கீங்க...
அதனால... ஏதாவது 'இதயம் நல்லெண்ணைய' யாரோ ஒளிச்சி வக்க, இந்த பொண்ணு தேடிட்டு இருக்குன்னு நெனக்கிறேன். ஸோ, 'ஜோ'க்கு ஒரு ஃபோன போட சொல்லுங்க...
சத்தியமா எனகிட்ட இல்ல !
என்ன அரசி...என்ன ஆச்சு..
அருமையாக இருக்கிறது..
\\அட!
தொலைத்தது எதை என்றுசொல்ல மறந்து விட்டேனா?என் இதயத்தை.....\\
கண்டுப்புடுச்சுட்டேன்..."இம்சை அரசன்" :)))
உங்கள் இதயத்தை தொலைத்து விட்டீர்களா இல்லை யாரேனும் திருடி விட்டார்களா?....தொலைத்து விட்டீர்கள் என்றால் உங்கள் அஜாக்கிறதை...திருடி விட்டார்கள் என்றால் நீங்கள் ஜாக்கிறதை....!
// ஜி said...
இங்கனதான் ட்விஸ்டே...
இப்படி ஒரு சின்னப் பொண்ணு படத்தப் போட்டிருக்கீங்க...
அதனால... ஏதாவது 'இதயம் நல்லெண்ணைய' யாரோ ஒளிச்சி வக்க, இந்த பொண்ணு தேடிட்டு இருக்குன்னு நெனக்கிறேன். ஸோ, 'ஜோ'க்கு ஒரு ஃபோன போட சொல்லுங்க...
//
ஏங்க ஜி அவ்வளவு கஞ்சம்னு நினைச்சுட்டீங்களா? இதயம் நல்லெண்ணை காணாம போனதுக்கு போலிஸ் ஸ்டேஷன்ல போய் complaint குடுக்கற அளவுக்கு??
// சுந்தர் said...
சத்தியமா எனகிட்ட இல்ல !
//
உண்மைய சொன்னதுக்கு ரொம்ப டேங்க்ஸூங்கோவ்
// கோபிநாத் said...
என்ன அரசி...என்ன ஆச்சு..
அருமையாக இருக்கிறது..
//
டேங்க்ஸூங்கோ கோபிநாத்...
// கண்டுப்புடுச்சுட்டேன்..."இம்சை அரசன்" :)))
//
அய்யோ அவரு எங்க அண்ணாருங்கோ!!!
// உங்கள் இதயத்தை தொலைத்து விட்டீர்களா இல்லை யாரேனும் திருடி விட்டார்களா?....தொலைத்து விட்டீர்கள் என்றால் உங்கள் அஜாக்கிறதை...திருடி விட்டார்கள் என்றால் நீங்கள் ஜாக்கிறதை....!
//
என்னங்க இப்படி என்னையவே குறை சொல்றீங்க??? அதெல்லாம் என் கிட்ட லாக்கர்ல வச்சு பூட்டுன கணக்கா ரொம்ப பத்திரமா இருக்கு.
If i found i will let you know... Ok va..
Kathir
// 익명 의 덧글 내용...
If i found i will let you know... Ok va..
Kathir
//
உங்க உதவிய நான் ஆயுசுக்கும் மறக்கவே மாட்டேங்க...
பேச்சே வர மாட்டேன்றது....
Post a Comment