Friday, December 8, 2006

ஒரு சின்ன சந்தேகம்!!!

ஒரு ஆர்வத்துல ப்ளாக் ஆரம்பிச்சு நாலு கவிதையை போட்டாச்சு. வேற எதாவது எழுதலாமேன்னு பார்த்தா ஒண்ணுமே தோண மாட்டேங்கறது... ம்ம்ம்... சரி ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருக்குதே. அதை கேட்டா யாராவது நம்ம சந்தேகத்தை தீர்த்து வைப்பாங்களேன்ற நம்பிக்கைல இந்த பதிவு :-)

இந்த காதல் காதல் அப்படின்றாங்களே... அப்படின்னா என்னங்க???

'கண்டவுடன் காதல்' - இதையே எடுத்துப்போம். இன்னைக்கு ஒருத்தரை பார்க்கறோம். பாத்த உடனே பிடிச்சு போச்சுங்க. சரின்னு 'மின்ன்லே' மாதவன் கணக்கா காதலிக்க ஆரம்பிச்சுடறோம். கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா... அட... இன்னொருத்தவங்களை அதை விட பிடிக்குதுங்க. இப்ப இதுக்கு பேரு என்னங்க???

சரி அதை விட்டு தள்ளுங்க... நல்லா பழகி புரிஞ்சுக்கிட்டு வரது தான் காதல்ன்றதையே எடுத்துப்போம். ஒருத்தர் கிட்ட ரொம்ப பழகிட்டு இருக்கோம். அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சுங்க. சரி இது தாண்டா காதல்னு காதலிக்க ஆரம்பிச்சுட்டோம். அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா இன்னொருத்தரை அதை விட பிடிச்சு போச்சுங்க. இப்ப இதை என்னன்னுங்க சொல்றது???

ப்ளீஸ்... ப்ளீஸ்... no violence please... இப்படியெல்லாம் முறைக்க கூடாது... பாவங்க நான்... சின்ன பொண்ணு... ஏதோ வெவரம் தெரியாம கேட்டுட்டேன்... தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்க... :-)

40 comments:

நாமக்கல் சிபி said...

நல்லா எழுதியிருப்பீங்கன்ற தைரியத்துல போடறேனுங்க...

படிச்சிட்டு அப்பாளிக்கா சொல்றேன்

நாமக்கல் சிபி said...

சந்தேகத்தை தீர்த்து வெச்சா ஆயிரம் பொற்காசு தருவீங்களா?

அப்படினா நான் வேணா மண்டபத்துல யாரையாவது பிடிச்சு வாங்கிட்டு வரேன் ;)

இம்சை அரசி said...

// நல்லா எழுதியிருப்பீங்கன்ற தைரியத்துல போடறேனுங்க... //

என்ன ஒரு நம்பிக்கை!!! புல்லரிக்குது போங்க வெட்டி... :-)

இம்சை அரசி said...

// சந்தேகத்தை தீர்த்து வெச்சா ஆயிரம் பொற்காசு தருவீங்களா? //

மனசுல என்ன தருமின்னு நெனப்பாலே ஒனக்கு???

Unknown said...

payangara aanubavam irukkum pola.

Partha chinna ponnu mathiri teriyalaye!!!

Unknown said...

unlimit அன்புதான்
ஆனாலும் தீராத பசி!
அதாங்க காதல்...

ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா என்னா ஒரு சந்தேகம் என்னா ஒரு புரியாமை இம்சையக்காவ் :)) எப்பாடிக்கா இப்படியெல்லாம் சந்ட்ர்ஹாகம் வந்து உங்களுக்கு உடுக்கை அடிக்குது?? ;)))

ஏஹ்டோ என்னால முடுஞ்சது சொல்றேன் நல்லாகேட்டுகுங்கோ சரியா ?

கண்டவுடனே வரது ஜொள்ளுதாங்கோ :_))) அட ஆமாங்க. அதுக்கு பேரு லவ்ஸ் இல்லீங்கோ !! ;)))

அந்த ரெண்டாவதுக்கு பேரு ஒண்ணே ஒண்ணுதாங்க! 'விதி' னு அதுமேல பாரத்தை போட்டுட்டு யாராச்சும் ஒருத்தருக்கு 'பாடை'ய கட்டிர வேண்டியதுதான் ;)))))))))))))))
ஆனா இதெல்லாம் நெம்ப ஒவரு ஆமா சொல்லிபிட்டேன் !!!

அரை பிளேடு said...

"அரசன நம்பி புருசன கைவுடாத" ன்னு ஒரு பயமொயி கீது...

இது பயமொயிதான் நம்ப கருத்து கடியாது...
இந்த பயமொயி இந்த இடத்துல ஃபிட் ஆவும்னு தோணிச்சி... எயுதிட்டேன்...

அரை பிளேடு said...

எக்ஸ்ட்ராவா இன்னொரு பயமொயி

"இக்கரைக்கு அக்கரை பச்சை".

நாமக்கல் சிபி said...

//மனசுல என்ன தருமின்னு நெனப்பாலே ஒனக்கு???//

நான்
தருமியெல்லாம்
இல்லைங்க... அவர் எவ்வளவு பெரிய ப்ளாகர்...

ரெண்டு பேர் டெம்ப்ளேட்டும் ஒரு மாதிரி இருக்குங்கறதுக்காக நீங்க இப்படி சொல்லக்கூடாது

Srinivas said...

I don't have Tamil fonts at this moment so in English.
ImsaiArasi - Nerula Parthal nijamave Adikkanum Pola irukku.

Tamizhan

Anonymous said...

No tamil fonts in my system now, so in English.
Nerula parthal nijamave violence than.

இம்சை அரசி said...

// payangara aanubavam irukkum pola.

Partha chinna ponnu mathiri teriyalaye!!!

//

அனுபவம் இல்லீங்கோ அம்மணி...
அதனாலதான் ஒரே சந்தேகமா வருது...

இம்சை அரசி said...

// unlimit அன்புதான்
ஆனாலும் தீராத பசி!
அதாங்க காதல்... //

இங்க பாருங்க சாரல்... நான் பொல்லாதவளா ஆயிடுவேன்... நான் தான் எல்லாரையும் கொழப்பரேன்னா நீங்க என்னையைவே கொழப்பரீங்களே!!!

புரியர மாதிரி சொல்லுங்க தல...

இம்சை அரசி said...

// எப்பாடிக்கா இப்படியெல்லாம் சந்ட்ர்ஹாகம் வந்து உங்களுக்கு உடுக்கை அடிக்குது?? ;)))

//

அதுவா வருது....

// ஆனா இதெல்லாம் நெம்ப ஒவரு ஆமா சொல்லிபிட்டேன் !!!

//

இப்படியெல்லாம் சொன்னா... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்....... அழுதுடுவேன்.....

Unknown said...

நல்ல சந்தேகம்தான் :)

ஆனா இதுதான் காதல்னு எந்த இலக்கணத்துக்கும் கட்டுப்படாததுதான் காதல்! (அப்படிங்கறது என்னோடக் கருத்து!)

ஜி said...

நல்ல சந்தேகம்தேகம். காதலிச்சுப் பாத்தாதானே இதப்பத்தித் தெரியும்.

பாத்தவுடனே புடிக்கிறப் பொண்ணுங்கெல்லாம், ஏற்கனவே எவனுக்கோப் பாத்தவுடனே புடிச்சிப் பல ஸ்டேஜ் போயிருப்பாங்க

ரொம்பப் பழகுனவங்கள்ள லவ் பண்ணலாம்னா யாருமே பழக மாட்டேங்கறாங்க.

அதனால, இதெல்லாம் நடக்கும்போது சொல்றேன். ஓகே?

இராம்/Raam said...

//தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்க... :-) //

ஐ யம் சோ சாரி, எனக்கும் தெரியாது... :)

இம்சை அரசி said...

// "அரசன நம்பி புருசன கைவுடாத" ன்னு ஒரு பயமொயி கீது...

"இக்கரைக்கு அக்கரை பச்சை".

//

ரெண்டுமே contradictionஆ இருக்கே... தெளிவா சொல்லுங்க அரை பிளேடு....

இம்சை அரசி said...

// ரெண்டு பேர் டெம்ப்ளேட்டும் ஒரு மாதிரி இருக்குங்கறதுக்காக நீங்க இப்படி சொல்லக்கூடாது //

தெரியாம சொல்லிப்புட்டேன். வெட்டிப்புடாதீங்க வெட்டி...

இம்சை அரசி said...

// ImsaiArasi - Nerula Parthal nijamave Adikkanum Pola irukku.

Nerula parthal nijamave violence than
//

என்னங்க தெரியாத ஒரு விஷயத்த கேட்டா இப்படியெல்லாம் மிரட்டுரீங்க???

எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க...

இம்சை அரசி said...

// நல்ல சந்தேகம்தான் :) //

ரொம்ப டேங்சுங்கோ...

// ஆனா இதுதான் காதல்னு எந்த இலக்கணத்துக்கும் கட்டுப்படாததுதான் காதல்! (அப்படிங்கறது என்னோடக் கருத்து!)

//

இலக்கணத்த விடுங்க... நடைமுறைல என்னன்றதை சொல்லுங்க...

இம்சை அரசி said...

// அதனால, இதெல்லாம் நடக்கும்போது சொல்றேன். ஓகே?
//

நடக்கறதுக்கு All the best-ங்க

இம்சை அரசி said...

// ஐ யம் சோ சாரி, எனக்கும் தெரியாது... :)
//

நம்ம கட்சிக்காரங்களா???

அய்யோ... அய்யோ...

ஒரே சந்தோஷமா இருக்கு...:-)

மழைக்காதலன் said...

அன்புள்ள இம்சை அரசி, எனக்கும் இந்த சந்தேகம் கொஞ்ச நாளா இருக்கு, யார்கிட்ட கேக்குறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருந்தேன்(பின்னே யாராவது உதைக்க வந்துட்டாங்கன்னா) உங்களுக்கு பதில் கிடைச்சா எனக்கும் சொல்லுங்க‌

விஜயன் said...

vela illa pola.????????

நாமக்கல் சிபி said...

//தெரியாம சொல்லிப்புட்டேன். வெட்டிப்புடாதீங்க வெட்டி...//

ஏங்க என்னய பார்த்தா வெட்டு குத்துல இறங்கற ஆள் மாதிரியா இருக்கு :-X

அரை பிளேடு said...

இக்கரைக்கு அக்கரை பச்சைன்னா, இந்த கரையில இருந்து பாக்கோ சொல்லோ அந்த கரை பச்சையா தெரியும்..

இத்த வுட்டுட்டு அங்க போனாதான் அந்த இடமும் காஞ்சு போயிருக்கிறது தெரியும்...

அதே மாறிதான், புருசனா விட ராசா ஒசுத்தியா தெரிவாரு, ஆனா நம்பி போனா பேலஸ்ல ப்ராபர்டியோட ப்ராபர்டியா ஆக்கிடுவாரு..

இரண்டு பயமொழியோட மீனிங்கும் ஒண்ணுதான்...

யப்பா.. கடசில பயமொயி விளக்கம் கொடுக்க வேண்டியதா பூட்சே...

உலகன் said...

அது இயல்பு தாங்க அம்மிணி. எல்லோருக்குள்ளேயும் ஒரு குழந்தை உள்ளம் சாகும் வரை இருந்து கிட்டு தான் இருக்கு. அது ஐஸ்க்ரீம் ருசி தெரிஞ்சதும் சாக்லேட்டை விட்டுரும். (இரண்டையும் வெளுத்துக் கட்டற குழந்தைகளும் இருக்குங்கறது வேற விஷயம்).

சதிலீலாவதியில் கோவைசரளா சொல்வதாக ஒரு வசனம் வரும்.
"இந்த ஆம்பளைகளுக்கு சான்ஸோ சாய்ஸோ கொடுக்கக் கூடாது. டக்கென்று இடம் மாறி விடுவார்கள்" என்று. மனோநிலை, நடத்தையை பொறுத்த வரை ஆண், பெண் என்பது தீர்மானிக்கும் விவகாரமாக இருப்பதில்லை. மாறாக வளர்ந்த மற்றும் வளரும் சூழல் மற்றும் கற்பிதங்கள் தான் தீர்மானிக்கின்றன.

கொஞ்சம் ஓவராப் போயிட்டனோ?

இம்சை அரசி said...

// அன்புள்ள இம்சை அரசி, எனக்கும் இந்த சந்தேகம் கொஞ்ச நாளா இருக்கு, யார்கிட்ட கேக்குறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருந்தேன்(பின்னே யாராவது உதைக்க வந்துட்டாங்கன்னா) உங்களுக்கு பதில் கிடைச்சா எனக்கும் சொல்லுங்க‌
//

அடா... அடா... அடா... என் கட்சில ஆள் சேர்ந்துட்டே இருக்கே!!!

இம்சை அரசி said...

// vela illa pola.????????

//

என்னங்க விஜயன் இப்படி சொல்லிட்டீங்க :-(

இம்சை அரசி said...

// ஏங்க என்னய பார்த்தா வெட்டு குத்துல இறங்கற ஆள் மாதிரியா இருக்கு :-X
//

நான் எப்பங்க உங்களை பார்த்தேன்???

இம்சை அரசி said...

ரொம்ப டேங்க்சுங்கோ அரை பிளேடு

பயமொயி விளக்கம் பயங்கரமா குடுத்துருக்கீங்க :-)

இம்சை அரசி said...

ரொம்ப சூப்பரா விளக்கம் கொடுத்தீங்க உலகன். ரொம்ப தேங்க்ஸ்...

என்னோட கருத்தை இன்னொரு பதிவா போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

அதுக்கு அட்வான்ஸ் தேங்க்ஸ்...

சைதை முரளி said...

ஹலோ ஜெ,
ப்ளாக்குக்கு ஏத்த பதிவு. ஏதோ எனக்குத் தெரிஞ்சதை நானும் கிறுக்கி வைக்கேன். நீங்க கேட்ட கேள்விக்கு கண்ணதாசன் பதில் சொல்லியிருக்கிறார். ஒரே ஒருவரிடம் வருவதெனில் அது காதல். பலரிடமெனில் அது காமம்.

முன்பெல்லாம் கருத்தொருமித்து வருவதே காதல் என்றார்கள். ஆனால் இப்போதைய நிலையைப் பார்த்தால், 'கரு' தரிக்காமல் பார்த்துக்கொள்வதே காதல் என்று போய்க்கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் ஓவராகத் தோன்றலாம். உண்மைகள் சுடும்.

காதலில் காமம் இருக்கலாம்; காமம் மட்டுமே எனில் அது காதலாக இருக்கமுடியாது என்பதுதான் என் அபிப்பிராயம்.

காதல் குறித்த என் கவிதைகளை இந்த லிங்கில் நீங்கள் பார்க்கலாம். http://srmkavithaigal.blogspot.com/2006_10_01_archive.html

அன்புடன்,
சைதை முரளி.

இம்சை அரசி said...

ரொம்ப நன்றிங்க சைதை முரளி...

CVR said...

நல்ல கேள்வி கேட்டீங்க மேடம்.
நம்மளால ஒருத்தர் சந்தோஷபடுறாரு/சந்தோஷபடுவாரு அப்படின்னு நினைக்கும் போது ஒரு சந்தோஷமான உணர்ச்சி வரும் பாத்தீங்களா,அது கூட போதுமான அளவு காமத்தையும் சேர்த்தீங்கன்னு வெச்சுக்கோங்களேன்!!!
அது தாங்க இந்த லவ்வு!!!
சின்ன பையன் !!! ஏதோ எனக்கு தெரிஞ்சத ஒளரி வெச்சிருக்கேன்,தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க!! :-)

நேரம் இருந்தா
இதையும்

அப்புறமா இதையும்

பாருங்க!! :-)

இம்சை அரசி said...

// CVR said...
நல்ல கேள்வி கேட்டீங்க மேடம்.
நம்மளால ஒருத்தர் சந்தோஷபடுறாரு/சந்தோஷபடுவாரு அப்படின்னு நினைக்கும் போது ஒரு சந்தோஷமான உணர்ச்சி வரும் பாத்தீங்களா,அது கூட போதுமான அளவு காமத்தையும் சேர்த்தீங்கன்னு வெச்சுக்கோங்களேன்!!!
அது தாங்க இந்த லவ்வு!!!
சின்ன பையன் !!! ஏதோ எனக்கு தெரிஞ்சத ஒளரி வெச்சிருக்கேன்,தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க!! :-)

நேரம் இருந்தா
இதையும்

அப்புறமா இதையும்

பாருங்க!! :-)
//

வாங்க CVR...

correct-ஆ தான் சொல்லியிருக்கீங்க.

உங்களுக்கு பதிலை உங்க பதிவுலயே போட்டிருக்கேன் :)))

நிஜமா நல்லவன் said...

Vikatan'la unga blog paththi padichittu summa ulla vanthu paarthen. Nejama romba super irukku unga imsai. Unga santhegam enakkum romba naala irukku. unga santhegam thelinjiruntha appadiye enakkum konjam sonna nalla irukkum.

Anonymous said...

Unmai Kaathal ...
"Nee en muthal kaathaliyaaga illamal irukkalaam,
aanal nee thaanadi en kadaisi kathali"

Every one may have many love's, but its all about on whom you stop and love her for ever