Wednesday, February 4, 2009

இனிய இல்லறம்!!!

"ஏங்க! சாப்பிடலாமா?"

"சரிம்மா"

"இங்க பாருங்க. நான் செய்யறதுல என்ன குறை இருக்கோ அத அப்டியே சொல்லணும். அப்போதான் அடுத்த தடவை அந்த தப்பு இல்லாம என்னால செய்ய முடியும். சரியா?"

"சரி"

"எப்படி இருக்கு?"

"சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கு. காரமும் கம்மியா இருக்கு"

"போங்க நீங்க ரொம்ப மோசம். நான் ஆபிஸ் போயிட்டு அங்க அவ்ளோ வேலை செஞ்சுட்டு வீட்டுக்கு வந்து உங்களுக்காக ஆசை ஆசையா செஞ்சு குடுத்தா நீங்கப் பாட்டுக்கு குறை சொல்றீங்க..."

"@#$^#@$"

-------------------------------------------------------------------------------

"ஏங்க"

"என்னம்மா?"

"நான் ஒண்ணு கேப்பேன். நீங்க உண்மைய சொல்லணும்"

"கேளு சொல்றேன்"

"கண்டிப்பா?"

"கேளு"

"நான்... நான்... ரொம்ப அழகா? இல்ல ரொம்ப ரொம்ப அழகா?"

"ஆண்டவா! எனக்கு நெஞ்சு வலிக்குதே"

-------------------------------------------------------------------------------

"என்னங்க இந்த வாரம் ஊருக்குப் போகும்போது அம்மாட்ட சொல்லி உங்களுக்கு சுத்திப் போட சொல்லணும்"

"என்னடி திடீர்னு?"

"இன்னைக்கு பொரியல்க்கு வெண்டைக்காய் வெட்டி தந்தீங்க இல்ல. மதியம் லஞ்ச் அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்டி இவ்ளோ பொடிசா நறுக்கினனு ஆச்சர்யமா கேட்டுட்டு இருந்தாங்க. என் வீட்டுக்கார்தான் வெட்டித் தந்தார்னு ரொம்ப பெருமையா சொன்னேன் :-)"

":-|"

"அதான் கண்டிப்பா சுத்திப் போடனும்னு சொன்னேன். ஏங்க... இன்னைக்கு கோவைக்காய் ஃப்ரை பண்ணலாம்னு வாங்கி வச்சிருக்கேன்..."

"!@$%^$#@"

-------------------------------------------------------------------------------

"ஏண்டி இருக்க இருக்க ஏறிட்டேப் போற?"

"கொஞ்சம்தான வெயிட் போட்டிருக்கேன்"

"கல்யாணத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் எவ்ளோ வெயிட்?"

"முன்னாடி 45 கே.ஜி தாஜ்மகால். அப்றம் 54 கே.ஜி தாஜ்மகால். கொஞ்சம்தான ஏறிருக்கேன்?"

"ஆண்டவா! எனக்கு ஏனிந்த சோதனை..."

-------------------------------------------------------------------------------

"ஏங்க வருஷ வருஷம் தீபாவளி அப்போ உங்க அம்மாவுக்கு உங்க அப்பா என்ன வாங்கி தருவார்?"

"உனக்கு தீபாவளிக்கு எதும் வேணும்னா நேரா கேளு"

"எனக்கு ஒண்ணும் வருஷ வருஷம் வேணாம். மொத தீபாவளினால இந்த வருஷம் மட்டும் வாங்கி கொடுங்க"

"சரி என்ன வேணும்?"

"ஒண்ணும் பெருசா எதும் வாங்கி தர வேணாம்"

"சரி என்ன வேணும்னு சொல்லு"

"ஒரே ஒரு... வைர ஒட்டியாணம் மட்டும் வாங்கித் தாங்கப் போதும்"

அப்போது வாயடைத்தவர் இரண்டு நாட்களுக்கு வாயை திறக்கவே இல்லை.

இப்படித்தான் எங்கள் இனிய இல்லறம் வெகு இனிதாய் நடந்துக் கொண்டிருக்கிறது :)

பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...

49 comments:

அபி அப்பா said...

சிங்கம் களத்துல இறங்கல! ஆண் சிங்கம் என்னும் தேரை இழுத்துகிட்டு வருது!அடங்க மாட்டீயா தங்கச்சி:-))

தங்க மச்சானை எதுனா சொன்னீன்னா இருக்குடீ உனக்கு!

நாதஸ் said...

//பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...//

ரங்கமணி சமையல் கட்டுக்குள் வந்ததை சொல்றீங்களா? ;)

Anonymous said...

அப்படியே எங்க வீட்டுல பேசினத கேட்டு காப்பி அடிச்சு போட்ட மாதிரி இருக்கு :)

கோபிநாத் said...

\\\"உனக்கு தீபாவளிக்கு எதும் வேணும்னா நேரா கேளு"\\

;-)))))))))) சூப்பர் பஞ்ச்.

\\பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...\\

அவ்வ்வ்வ்fவ்வ்வவ்வ்வ்!

G3 said...

:))))))))))))))))))))))))

pudugaithendral said...

ஹா ஹா ஹா!

ரசிச்சேன்.

ராமலக்ஷ்மி said...

:))))!

தொடரட்டும் இல்லறம் இதுபோல இனிதாக இன்றென்றும்:)))!

பாச மலர் / Paasa Malar said...

கல்யாண வாழ்க்கை நல்லாப் போயிட்டிருக்கு போல..வாழ்த்துகள்..

நாகை சிவா said...

//நான் ஆபிஸ் போயிட்டு அங்க அவ்ளோ வேலை செஞ்சுட்டு //

இது எப்போதிலிருந்து? ஒ.. சும்மா லுலுலாயியா... சரி.. சரி :))

நாகை சிவா said...

//பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...//

இறங்கிடுச்சா.. இல்லையா? ஏதாச்சும் ஒன்னு தான் சொல்லனும்...

பிரபு... :(((

Vijay said...

//பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...//

அச்சச்சோ.....

SUBBU said...

னாந்தான் முதலா

Vijay said...

Welcome back Jeyanthi. கல்யாண வாழ்க்கை சுவையா இருக்குன்னு சொல்லுங்க.

வாழ்த்துக்கள் :-)

Divyapriya said...

வாங்க வாங்க…களம் கலை கட்டிடுச்சு :)

Thamira said...

வைர ஒட்டியாணம் கொஞ்சம் சினிமாட்டிக்கா இருந்தாலும்.. அத்தனையையும் ரசிக்க முடிந்தது. முதலிரண்டு அழகு. கொஞ்சம் படுத்துகிறீர்கள் என்பதும் புரிகிறது. பாவம் உங்கள் கணவர்..

Rajkumar said...

Vazhakkam pola, miga nandru.

akkaa, appadiyae kalakkunga.

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
சிங்கம் களத்துல இறங்கல! ஆண் சிங்கம் என்னும் தேரை இழுத்துகிட்டு வருது!அடங்க மாட்டீயா தங்கச்சி:-))

தங்க மச்சானை எதுனா சொன்னீன்னா இருக்குடீ உனக்கு!
//

:P:P:P

இம்சை அரசி said...

// nathas said...
//பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...//

ரங்கமணி சமையல் கட்டுக்குள் வந்ததை சொல்றீங்களா? ;)

//

ஹி ஹி... அவர் சமையல் கட்டுக்குள்ள வந்தார்னு எங்கேயாச்சும் சொல்லி இருக்கேனா? ஹால்ல கூட உக்காந்து காய் வெட்டி தர முடியுமே :P

இம்சை அரசி said...

//சின்ன அம்மிணி said...
அப்படியே எங்க வீட்டுல பேசினத கேட்டு காப்பி அடிச்சு போட்ட மாதிரி இருக்கு :)
//

அக்கா... நாமெல்லாம் ஒரே இனம் :)))

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
\\\"உனக்கு தீபாவளிக்கு எதும் வேணும்னா நேரா கேளு"\\

;-)))))))))) சூப்பர் பஞ்ச்.

\\பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...\\

அவ்வ்வ்வ்fவ்வ்வவ்வ்வ்!
//

ஏன் அண்ணா? ஏன்? ஏனிந்த கொலைவெறி??

இம்சை அரசி said...

// G3 said...
:))))))))))))))))))))))))
//

இதுக்கு என்னக்கா அர்த்தம்?? :)

இம்சை அரசி said...

// புதுகைத் தென்றல் said...
ஹா ஹா ஹா!

ரசிச்சேன்.

//

டேங்க் யூ டேங்க் யூ :)))

இம்சை அரசி said...

//
ராமலக்ஷ்மி said...
:))))!

தொடரட்டும் இல்லறம் இதுபோல இனிதாக இன்றென்றும்:)))!
//

மிக்க நன்றி மேடம் :)))

இம்சை அரசி said...

//பாச மலர் said...
கல்யாண வாழ்க்கை நல்லாப் போயிட்டிருக்கு போல..வாழ்த்துகள்..
//

தேங்க்ஸ் அக்கா :)))

இம்சை அரசி said...

// நாகை சிவா said...
//நான் ஆபிஸ் போயிட்டு அங்க அவ்ளோ வேலை செஞ்சுட்டு //

இது எப்போதிலிருந்து? ஒ.. சும்மா லுலுலாயியா... சரி.. சரி :))
//

யோவ் புலி... இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறச்சலே இல்ல :P

நாங்கெல்லாம் ராப்பகலா கஷ்டப்பட்டு உழைக்கறோமாக்கும்...

இம்சை அரசி said...

// நாகை சிவா said...
//பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...//

இறங்கிடுச்சா.. இல்லையா? ஏதாச்சும் ஒன்னு தான் சொல்லனும்...

பிரபு... :(((
//

பிரபுவுக்காக ஒண்ணும் வருத்தப்பட வேண்டாம். அவங்க பண்ற அலும்பக் கேட்டா எனக்காக ரத்தக் கண்ணீர் வடிப்பீங்க...

இம்சை அரசி said...

// Vijay said...
//பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...//

அச்சச்சோ.....
//

what man?? what அச்சச்சோ??

இம்சை அரசி said...

// Subbu said...
னாந்தான் முதலா
//

sorry boss... நம்ம அண்ணன் முந்திக்கிட்டாரு :)

better luck next time :))

இம்சை அரசி said...

// விஜய் said...
Welcome back Jeyanthi. கல்யாண வாழ்க்கை சுவையா இருக்குன்னு சொல்லுங்க.

வாழ்த்துக்கள் :-)
//

ரொம்ப நன்றி விஜய் :)))

இம்சை அரசி said...

// Divyapriya said...
வாங்க வாங்க…களம் கலை கட்டிடுச்சு :)
//

ஆஹா! நம்மளக் கூட மனசார வரவேற்கறாங்கப்பா :))

நன்றி நன்றி நன்றி... :)))

இம்சை அரசி said...

// தாமிரா said...
வைர ஒட்டியாணம் கொஞ்சம் சினிமாட்டிக்கா இருந்தாலும்.. அத்தனையையும் ரசிக்க முடிந்தது. முதலிரண்டு அழகு. கொஞ்சம் படுத்துகிறீர்கள் என்பதும் புரிகிறது. பாவம் உங்கள் கணவர்..
//

உண்மையாவே அந்த ஒட்டியாணம் கதைதான் 100% உண்மை :)))

ரொம்ப நன்றி :)

இம்சை அரசி said...

// Rajkumar said...
Vazhakkam pola, miga nandru.

akkaa, appadiyae kalakkunga.

//

நன்றி நன்றி :)))

உங்கள மாதிரி தம்பிங்க தயவு இருக்கும்போது கலக்க வேண்டியதுதான் :)))

ஜொள்ளுப்பாண்டி said...

//பி.கு: சிங்கம் களத்துல இறங்கிடுச்சு இல்ல...//

எல்லாம் நகருங்கப்பா.... !!

யக்க்கோவ்வ்வ்... வாங்க வாங்க.... :)))

ரிதன்யா said...

இம்சைடா சாமி,
பாவம்பா அவரு, விட்டிடு இல்ல...
அழுதுடுவாரு.

வெண்பூ said...

ஹி..ஹி.. ஒண்ணியும் சொல்லப்போறது இல்ல.. படிச்சுட்டு கமுக்கமா போயிட வேண்டியதுதான்.. வீட்டுக்கு வீடு தங்கமணி..

//தாமிரா said... //

அதானே.. தங்கமணி, ரங்கமணி குறித்த பதிவுல தாமிரா இல்லாமயா?

எம்.எம்.அப்துல்லா said...

//போங்க நீங்க ரொம்ப மோசம்//

ஆமா அவரு உன்னைய கண்ணாலம் கட்ட முடிவு பண்ண அன்னைக்கே எனக்குத் தெரிஞ்சு போச்சு :))

எம்.எம்.அப்துல்லா said...

//... நான்... ரொம்ப அழகா? இல்ல ரொம்ப ரொம்ப அழகா?"

//

ரொம்ப ரொம்ப இம்சை :))

எம்.எம்.அப்துல்லா said...

//இப்படித்தான் எங்கள் இனிய இல்லறம் வெகு இனிதாய் நடந்துக் கொண்டிருக்கிறது :)
//

தங்கச்சியும்,மச்சானும் என்றும் இனிதாய் வாழ என் இனிய வாழ்த்துகள் :))

Unknown said...

:)))

சுரேகா.. said...

வந்துட்டீங்களா?

:)

வாங்க வாங்க!

சிங்கம் போஸ்ட் காலியாத்தான் இருக்கு!!

ஸ்ரீ.... said...

இல்லறத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! பதிவு, அருமை.

ஸ்ரீ....

Anonymous said...

Gud one.. Keep writing..

Anonymous said...

You are the best blogger!! Do not publish this.. :-) :-) enna ellarum appuram jealous aaiduvaanga..

Latea vanthalum latestaa Iruku..

Looks Different, with lots of humor.. :-) :-)

parameswary namebley said...

ha ha ha ha

கைப்புள்ள said...

ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க. பெண்களுக்கு ரொம்ப subtle-ஆன நகைச்சுவை உணர்வு இருக்கும்ங்கிற என்னோட hypothesisஐ உண்மைன்னு நிருபிக்கிறீங்க. இனிய இல்லறத்துக்கு என் நல்வாழ்த்துகள். God bless you both. இன்னிக்கு மகளிர் தினம்னு எதாச்சும் மொட்டை போட்டீங்களா அவருக்கு?
:)

MyFriend said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

FunScribbler said...

யக்கோவ், எப்ப அக்கா மறுபடியும் கோதாவுல இறங்குனீங்க... சொல்லவே இல்ல. ரொம்ம்ம்ப நாளாச்சு உங்க வலைப்பக்கம் வந்து. இப்ப தான் கவனிச்சேன். சாரி:(

பதிவுகள் எல்லாம் கலக்கல்.

மாமா எப்படி இருக்காரு?:)

Sateesh said...

Ur blog is awesome.. :)

Sreeram said...

Veetuku veedu vasapadhi i dhu thaan enga kadhi :-|