Tuesday, November 18, 2008

என்றென்றும் காதலுடன்...!!!

சமயலறை விழுப்புண்களில்
மகிழவே செய்கிறேன்
எனக்கான துயரம்
தேங்கிய விழிகளுடன்
அன்பாய் நீ தரும்
முத்தங்களை எண்ணி...

என் உள்ளங்கைகளில்
பொத்தி பாதுகாத்திருக்கும்
உன் முத்தங்களின் இளஞ்சூட்டினை
இந்தப் பாழாய்ப் போன
கீபோர்டிற்குத் தர
எப்படி மனம் வரும் எனக்கு?

அதிசயம்தான்!
எனக்கு கழுத்தில்
மகுடம் சூட்டியிருக்கிறாயே!!

ஒரே தட்டில் உண்டு...
ஒரே கட்டிலில் உறங்கி...
இந்தக் கடவுள் மீது
கோபமாய் வருகிறது!
உடல்கள் மட்டும் ஏன்
இரண்டாய் படைத்தானென்று!!

எப்பொழுதும் உனது
கொஞ்சல் மொழிகளும்
கெஞ்சல் ஒலிகளுமே
காதுகளில் ஒலித்திருக்க
PR-களிலும் CR-களிலும்
எப்படி கவனம் செலுத்துவது??

தவமிருக்கிறேன்
எண்ணற்ற இதயங்கள்
வேண்டுமென்று...
அள்ளி அள்ளி
நீ தரும் காதலை
பொத்தி வைக்க
என் ஒரு இதயம்
போதவில்லையே...

36 comments:

தமிழ் said...

/ஒரே தட்டில் உண்டு...
ஒரே கட்டிலில் உறங்கி...
இந்தக் கடவுள் மீது
கோபமாய் வருகிறது!
உடல்கள் மட்டும் ஏன்
இரண்டாய் படைத்தானென்று!! /

அருமை

Anonymous said...

:-)ம்ம்ம் நல்லா இருக்கு

Anonymous said...

Welcome back to the blog world...

நித்தி .. said...

என் உள்ளங்கைகளில்
பொத்தி பாதுகாத்திருக்கும்
உன் முத்தங்களின் இளஞ்சூட்டினை
இந்தப் பாழாய்ப் போன
கீபோர்டிற்குத் தர
எப்படி மனம் வரும் எனக்கு?

nijamalumae unara vaikum vaarthaigal imsai....
very very nice...

Saranya Venkateswaran said...

பொங்கி எழும் காதல் உணர்வுகளின் அற்புதமான படைப்பு!!!

கத்தார் சீனு said...

Rombave anubavachi Ezhudi irukeenga !!!!

Very Good....Vaazthukkal

Thamira said...

ரசித்தேன்.. காதல் வழிகிறது, காலம் முழுதும் அது தொட‌ர்ந்திருக்க வாழ்த்துகள் இம்சை.!

வாழவந்தான் said...

இதுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனா இருக்கற இம்சை(யின்) அரசர் இந்த கவிதை(??)யெல்லாம் படிச்சு ஃபீல் பண்ணி ஒரு மறுமொழி இடுவாரா??
இல்லை ஏற்கனவே நீங்க மறுமொழியை வாங்கியிருந்தால் அதையும் ஆட் செய்ய்யவும்.

இப்படி செய்தால் சங்க இலகியங்களில் வரும் தலைவன் தலைவி உரையாடல் ரேஞ்சுக்கு அப்ப்டியே பில்டப் பண்ணிரலாம்.

(பதிவு உலகமே!! இன்னும் இம்சை கல்யாண கனவுகளில் இருந்து வெளிவராததால் பதிவுகள் குறையும் என்று எண்ணி பதிவர் வட்டம் சற்றே நிம்மதியடையலாம்)

சந்தனமுல்லை said...

haha...gud one!!

நாகை சிவா said...

போன பதிவுல ஏதோ கேள்வி கேட்ட மாதிரி இருந்துச்சு....

இதயத்தை தமிழ் சினிமா மாதிரி இந்த கவிதை எழுதுறவங்களும் விட மாட்டிங்களா?

இதயத்தை வேலை என்ன என்பது தெரியும் தானே....

நட்புடன் ஜமால் said...

//என் உள்ளங்கைகளில்
பொத்தி பாதுகாத்திருக்கும்
உன் முத்தங்களின் இளஞ்சூட்டினை
இந்தப் பாழாய்ப் போன
கீபோர்டிற்குத் தர
எப்படி மனம் வரும் எனக்கு? //

அழகு அழகு ...

சகி said...

heee,hee ,we asked u to write articles not u r romance....still it was good.thirumbi vantutinga,engala vittu iruka mudiyala illa......

நந்து f/o நிலா said...

முடியல...

ஜியா said...

//அவள் முடிவு சரியானதா?!!//

சரியில்லைன்னு நான் சொல்ல தேவையேயில்லை... ;))

நந்து f/o நிலா said...

//வாழவந்தான் said...

இதுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷனா இருக்கற இம்சை(யின்) அரசர் இந்த கவிதை(??)யெல்லாம் படிச்சு ஃபீல் பண்ணி ஒரு மறுமொழி இடுவாரா??
இல்லை ஏற்கனவே நீங்க மறுமொழியை வாங்கியிருந்தால் அதையும் ஆட் செய்ய்யவும்//

ஆமா ஆமா மச்சான் மறுமொழிய பார்க்க ஆவலாத்தான் இருக்கு..

ஆனா ஒரு டவுட்.ஏற்கெனவே வாங்குன மறுமொழிய இங்க எப்படி கமெண்டா மாத்தி போடமுடியுமா?
:P

gayathri said...

தவமிருக்கிறேன்
எண்ணற்ற இதயங்கள்
வேண்டுமென்று...
அள்ளி அள்ளி
நீ தரும் காதலை
பொத்தி வைக்க
என் ஒரு இதயம்
போதவில்லையே...

intha varikalai padithu konde irukanum pola iruku pa.

kavithai varikal arumai

gayathri said...

தவமிருக்கிறேன்
எண்ணற்ற இதயங்கள்
வேண்டுமென்று...
அள்ளி அள்ளி
நீ தரும் காதலை
பொத்தி வைக்க
என் ஒரு இதயம்
போதவில்லையே...

intha varikalai padithu konde irukanum pola iruku pa.

kavithai varikal arumai

ஜே கே | J K said...

இத கொஞ்சம் படிங்க. அங்க என்னமோ சொல்லி இருக்காங்க.

http://imsaiarasi.blogspot.com/2008/11/blog-post.html

கைப்புள்ள said...

//ஒரே தட்டில் உண்டு...
ஒரே கட்டிலில் உறங்கி...
இந்தக் கடவுள் மீது
கோபமாய் வருகிறது!
உடல்கள் மட்டும் ஏன்
இரண்டாய் படைத்தானென்று!! //

யம்மாடியோவ்...எப்பேர்ப்பட்ட திங்கிங்க்? சூப்பரோ சூப்பர். இதெல்லாம் லைட்டா சுட்டு தங்கமணியை இம்ப்ரெஸ் பண்ணலாம் போலிருக்கே?
:))

நவீன் ப்ரகாஷ் said...

சொற்கள் தோறும் காதல்
பொங்கி வழிகிறது ஜெயந்தி....
அழகான உணர்வுகளை
மிக அழகான சொற்களால்
வேய்ந்திருக்கிறீர்கள்...

அழகோ அழகு... :)))

Unknown said...

நல்லா இருக்கு அக்கா :)))

Sundar சுந்தர் said...

நல்லா இருக்கு.
(கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிடும்)

வெண்பூ said...

அருமையான கவிதை இம்சை.. உங்கள் எழுத்துக்களின் பலமே உங்கள் மனதின் மகிழ்ச்சி, வலி, வேதனையை படிக்கும் அனைவரும் உணர்வதுதான்.. வாழ்த்துக்கள்...

Revathyrkrishnan said...

காதலினூடு காற்றாய் பயணிக்கும் தங்களின் உணர்வுகள் உணர்த்துகின்றன கவிதை வரிகள். நல்லாருக்குங்க இம்சையரசி உங்க கவிதை:)))...

Anonymous said...

come to the outside world...........there are more things in life than marriage,it is not the only thing,it is a thing in life..........babe see the herosim of small people who has helped others live.

மொக்கைச்சாமி said...

ரொம்ப நல்ல கவிதை... :-)))

Sateesh said...

அருமை:)
PR-களிலும் CR-களிலும்
CR சரி ..அது என்னங்க PR..?

கிறுக்கன் said...

இம்சை அரசியை இப்படி புலம்ப விட்ட அந்த இம்சை அரசன் யார் ?

butterfly Surya said...

நல்லாயிருக்கு.

வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

ஒரே தட்டில் உண்டு...
ஒரே கட்டிலில் உறங்கி...
இந்தக் கடவுள் மீது
கோபமாய் வருகிறது!
உடல்கள் மட்டும் ஏன்
இரண்டாய் படைத்தானென்று///

பின்னீட்டிங்க அம்மிணி!!

தேவா..

Anonymous said...

Arumaiyaai irukku :)

Dr.Naganathan Vetrivel said...

அட! நம்மளக் கூட follow பண்றாங்கப்பா!! ...vadivel solluratan naapgam varutu
" neenga remba ..remba ...

மங்களூர் சிவா said...

/
சமயலறை விழுப்புண்களில்
மகிழவே செய்கிறேன்
/

ஒழுங்கா சுட்டுக்காம சமைக்க வரலைங்கிறத என்னா டீஜண்ட்டா சொல்றாங்கய்யா

:))))))))))

மங்களூர் சிவா said...

/ஒரே தட்டில் உண்டு...
ஒரே கட்டிலில் உறங்கி...
இந்தக் கடவுள் மீது
கோபமாய் வருகிறது!
உடல்கள் மட்டும் ஏன்
இரண்டாய் படைத்தானென்று!! /

ரெண்டு ஆப்பீஸ்ல வேல பாத்து ரெண்டு சம்பளம் வாங்கறத்துக்கா இருக்குமோ!?!?

:))))

மங்களூர் சிவா said...

/
நந்து f/o நிலா said...

முடியல...
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

//
நந்து f/o நிலா said...


ஆமா ஆமா மச்சான் மறுமொழிய பார்க்க ஆவலாத்தான் இருக்கு..
//

ரிப்பீட்டு