நேத்துதான் Slum Dog Millionaire படம் பாத்தேன். ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. பல காட்சிகள் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் "Jab we met" தமிழ்ல எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதுல பரத், தமன்னா நடிக்கறாங்கன்னும் கேள்விப்பட்டேன். உடனே மனசுல தோணினது ஆண்டவா! அந்தப் படத்த என்னென்னக் கொலை செய்யப் போறாங்களோனு. இந்தப் படத்தப் பாத்ததும் இதே படம் தமிழ்ல ரீமேக் பண்ணினா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாத்தேன். ஓ மை காட்!!!
தமிழ்ல எடுத்தா அதுல என்னென்ன மாற்றங்கள் செய்வாங்கனு என் சிற்றறிவுக்கு எட்டினதை லிஸ்ட் அவுட் பண்ணிருக்கேன். உங்களுக்கு தோணறத எடுத்து விடுங்க மக்கா...
1. ஹீரோவை கான்ஸ்டபிள் அடிக்க கையை ஓங்கும்போது படாரென்று அவர் மூக்கில் ஒரு குத்து விட்டு நம்ம ஹீரோ ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார்(like சொல்லி அடிக்கறதுல இவன் கில்லி... சொல்லாம அடிக்கறதுல இவன் ஒரு பல்லி...:P)
2. உடனே ஹீரோவுக்கு ஒரு என்ட்ரி சாங்(பாக்கத்தான் இவன் ஸ்லம் டாக்... மனசால ஒரு பொமரேனியன் டாக்... கோவம் வந்தா ஒரு ஸ்ட்ரீட் டாக்... ரவுண்டு கட்டி அடிக்கறதுல டாபர் டாக்...)
3. ஃப்ளாஷ்பேக் சீன்ல ஹீரோவோட அம்மா செத்துப் போறப்போ தாய்க்குலங்க மனச டச் பண்ற மாதிரி ஒரு சென்டிப் பாட்டு. (like அம்மா அம்மா எந்தன் ஆருயிரே...)
4. ஹீரோ குப்பைக் குழியில எல்லாம் படுத்து உருளும்போது அந்த அம்மாப் பாட்டு அப்படியே கன்டினியூ ஆகணும்.
5. ஹீரோயின விட்டுப் பிரிஞ்சு இருக்கறப்போ அப்பப்போ கனவுல அவங்களோட டூயட் பாடுவாரு. இதுக்கு இந்த லண்டன், பாரிஸ், ஜெர்மனி இப்படி கன்ட்ரீஸ்லப் போயி சாங்க சூட் பண்ணிக்கலாம்(ahem... நாங்க வேணா உடுத்திக்க நல்லத் துணிக் கூட இல்லாத சேரிக் காதலர்களா இருக்கலாம். ஆனா டூயட்டுனு வந்துட்டா யூரோப், யூவெஸ் இப்படி ப்ளேஸ்லதான் டூயட் பாடுவோம்)
6. பிரிஞ்சுப் போனக் காதலிய தேடி மும்பை வர ஈரோ அவளக் கண்டுபிடிக்கறதுக்காக தெரு தெருவா அவங்க சின்ன வயசுல பாடிட்டு இருந்தப் பாட்ட பாடிக்கிட்டே போவாரு. அதைக் கேட்டு ஈரோயின் சிக்னல் குடுக்க அவங்களப் போய் காப்பாத்திக் கூட்டிட்டு வருவாரு.
7. கோடீஸ்வரன் நிகழ்ச்சிய நடத்தறவரு ரெஸ்ட் ரூம்ல தப்பான விடைய சொல்லித் தந்தும் நிகழ்ச்சில சரியான விடைய சொல்ற நம்ம ஹீரோ நிகழ்ச்சிய நடத்தறவருக்கு மட்டும் கேக்கற மாதிரி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லுவாரு.
8. படத்துல கண்டிப்பா ஒரு குத்துப்பாட்டும் அட்லீஸ்ட்டு ரெண்டு ஃபைட்டாவது இருக்கோணும். அதும் ஈரோ சும்மா ஒரு அஞ்சாறு குண்டு ஆளுங்கள ஒரே அடில சுழட்டி அடிச்சு எழுந்திருக்க முடியாதபடி விழ வைக்கணும்.
9. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹீரோகிட்ட அவர் சொன்ன பதில் சரியானு கேக்கும்போது ஹீரோ ஒரு பஞ்ச் டயலாக் விடனும்(ஒரு தடவ சொல்லிட்டா என் பதில நானே மாத்திக்க மாட்டேன்...)
10. கால் சென்டர்-ல ட்ரெயினிங் க்ளாஸ் எடுக்கற பொண்ணு ஒரு பையன்ட கேள்விக் கேட்டு அவன் தெரியாம முழிக்கும்போது அங்க டீ கொண்டு வர நம்ம ஹீரோகிட்ட பதில் சொல்ல சொல்லிக் கேக்கும்போது ஹீரோ கைல வச்சிருந்த ட்ரேய மேல தூக்கி வீசிட்டு அந்த பொண்ணு கைல இருக்க மார்க்கர் பென்-ன வாங்கி அமெரிக்கன் அக்சென்ட்-ல இங்க்லிபிஷ் பேசி அந்த ட்ரெயினிங் செஸன் ஃபுல்லா எடுத்துடுவாரு(நோட் திஸ் பாயிண்ட். ஹீரோ ஸ்கூல் பக்கமே தலை வச்சுக் கூடப் படுக்காதவரு). முடிச்சிட்டு மார்க்கர வீசிட்டு அவர் திரும்ப வரும்போது அது வரைக்கும் அந்தரத்துலயெ நின்னுட்டு இருந்த ட்ரே இப்போ அவர் கைல கரெக்டா வந்து விழும்.
11. அவர் க்ளாஸ் எடுத்த அழகுல மயங்கிப் போயிடுது அந்த க்ளாஸ்ல இருந்த ஒரு பொண்ணு. இங்கதான் செகண்ட் ஹீரோயின் இன்ட்ரோ. அவங்க கனவுல ஹீரோவோட கவர்ச்சிகரமா டான்ஸ் ஆடுவாங்க. ஹீரோ பின்னாடியே சுத்துவாங்க. ஆனா ஹீரோ அவங்கள கண்டுக்கவே மாட்டாரு. ஹீரோயினயே நினைச்சுட்டு பீலிங்ஸா உட்டுட்டு இருப்பாரு.
12. ஹீரோ சின்னப் பையனா இருக்கும்போது அவங்க சேரில தலைவர் சூட்டிங்குக்கு வர மாதிரி வச்சு அவருக்கு ஒரு சாங்க வச்சுடணும். ஜோடியா நயன் தாரா(இவங்க பழசாயிட்டாங்களோ?!!), தமன்னா இப்படி யாரையாச்சும் கால்குறை ட்ரெஸ்ல ஆட விடணும்.
Last but not the least...
13. படம் பூஜைப் போட்டதுமே இந்தப் படம் தலைவர் படம்னு ஃபுல்லா நியூஸ் பரப்பி எடுக்கப் போற வெத்து வேட்டுப் படத்த சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிடணும். NOM :)))
இந்தக் கதைக்குப் பொருத்தமான ஈரோ, ஈரோயின கொஞ்சம் சஜஸ்ட் பண்ணுங்க மக்கா :)))
Sunday, February 22, 2009
Slum Dog Millionaire - தமிழில் ரீமேக் செய்தால்?!!
Posted by இம்சை அரசி at 7:39 PM
Labels: ஃபீலிங்க்ஸ், சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
அருமையாக இருந்தது.
கதாநாயகன் தனுஷ்
நாயகி நயந்தாரா அல்லது ஸ்ரேயா
அனில் கபூர் பாத்திரத்தில் பிரகாஸ்ராஜ்
போலீஸ்காரர்களாக பொன்னம்பலம் மனோபாலா
தனுஷின் அண்ணனாக சரோஜா புகழ் கிஷோர்
ஆர்யா, பூஜா ஜோடி எப்படி... கிட்டத்தட்ட இதே ரேஞ்சிலதான் நான் கடவுள்-ல நடிச்சாங்க...
//என் சிற்றறிவுக்கு //
பரவாயில்லை....கொஞ்சூண்டாவது இருக்கே
:)
//இந்தக் கதைக்குப் பொருத்தமான ஈரோ, ஈரோயின கொஞ்சம் சஜஸ்ட் பண்ணுங்க மக்கா :)))
//
உன் ஏழரை வரவர ரொம்ப கூடிருச்சு :))))))
\\பாக்கத்தான் இவன் ஸ்லம் டாக்... மனசால ஒரு பொமரேனியன் டாக்... கோவம் வந்தா ஒரு ஸ்ட்ரீட் டாக்... ரவுண்டு கட்டி அடிக்கறதுல டாபர் டாக்..\\
நீங்க ஏன் சினிமால முயற்சி பண்ணக்கூடாது? மருத்துவர் படங்களுக்கு அறிமுக பாடலை நீங்க எழுதலாமே?
\\படம் பூஜைப் போட்டதுமே இந்தப் படம் தலைவர் படம்னு ஃபுல்லா நியூஸ் பரப்பி எடுக்கப் போற வெத்து வேட்டுப் படத்த சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிடணும். \\
அப்புறம் படம் ரிலீஸ் ஆனப்புறம் நாலு பெரிய ஆளுங்க கைல கால்ல விழுந்து ஒரு பேட்டிய வாங்கிபுடனும்... சரியா??
Good imagination, keep it up.
:-)
கொஞ்ச பாயிண்ட்ஸ விட்டுடீங்க....
* படத்தோட ஆடியோ ரிலீஸ சன் மீயுசிக் இல்லைனா கலைஞர் டிவில தான் ரிலீஸ் பண்ணணும்..(இப்ப
இதுதேன் பேசன்...)
* படம் ரிலீஸ் ஆன அன்னிக்கு நைட்டு, படத்தோட ஈரோ , ஹீரோயினி அக்கா, டயரடக்கர் அல்லாரும் ஏதாவது ஒரு டிவியில பாவப்பட்ட நேயர்கள்ட்ட
பேசனும்....(எல்லாம் ஒரு பப்பிளிசிட்டிதேன்..)
* கொஞச நாளைக்கு அந்த படத்தோட பாட்டு , சீன்ஸ் எதையும் டிவியில போட விடக்கூடாது...
எப்புடி.....?
இன்னைக்கு நம்ம ஆளுங்க விருது வாங்கினதுல பயங்கர சந்தோஷமா இருக்கிறதால நோ கலாய்த்தல்.. நாளைக்கு இந்தப் பக்கம் வரேன்..
Jab we met எனக்கும் ரொம்ப புடிச்சது. சோனி டிவில பார்த்தேன். ஹிந்தி தெரியாது. ஆனாலும் படம் நல்லா புரிஞ்சது. ரொம்ப அழகான படம். அதும் அந்த லூசுக் கரீனா.. அட. அட.. :))
இப்பத்திக்கு ஒரு மேட்டர் மட்டும் சொல்றேன்.. ஈரோவுக்கு கொரலு குடுக்கறது நம்ப லிட்டிலு சூபப்ர் ஸ்டாரு.. :))
நீங்க விஜய் மனசுல வச்சு தான் பாதி சீன் எழுதி இருக்கீங்க. அதனால அவரையே காமெடி சே ஹீரோவா போடுங்க.
ஹீரோயின், நீங்க எடுக்க போற படம் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் வாய்க்கவே வாய்க்காது. அதனால் நீங்களே ஹீரோயினா ஆயிடுங்க
இதோ ரெண்டு ஆஸ்காரை தட்டி சென்று விட்டது Slum Dog Millionaire.
அதில் ஒன்று உங்களுக்கு...
சத்யமா முடியல சாமி....
என்ன ஒரு கற்பனை திறமை.....
இந்த ரீமேக் படத்திற்கு ......
விஜய் இல்லாட்டி தனுஷ் நடிச்ச நல்ல இருக்கும் ல
விஜய் & த்ரிஷா
விழாம சிரிச்சேன்.. ஹா ஹா ஹா..
அருமை..............தொடர்ந்து எழுதுங்கள்
venkat
That's a good blog you have. Interesting, keep it up.
பேரரசு எழுதி வச்சிருந்த கதையை சுட்டு இங்க போட்டிருக்க.. :))
:))
ஐயோ!! ஐயோ!!
ஹி ஹி ஹி
இப்படியும் கூட நடக்கக்கூடும் :)))
இது சம்பந்தமா இன்னுமொரு பதிவே போடற அளவுக்கு முக்கியமான ஒரு பாயிண்ட் மிஸ்ஸிங்க் பாஸ்
வலைப்பதிவுல விமர்சனம்ங்கற பேர்ல விதவிதமான டைட்டில்களோட அந்த படத்தையும் போட்டு குமுறோ குமுறுன்னு கும்மி எடுத்துடுவாங்க :))))
Hi...
I wanted to ask you about உன்னோடுதான் என் ஜீவன்?.
I liked the first 3 parts very much. Please continue it madam.. :-)
மொக்கையான படம், அதுக்கு கரெக்டான ஹீரோ யாருநா..
யேய்.. பேசிட்டிருக்கேன்ல.. சைலன்ஸ் அப்புறமா..
//எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் "Jab we met" தமிழ்ல எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதுல பரத், தமன்னா நடிக்கறாங்கன்னும் கேள்விப்பட்டேன். உடனே மனசுல தோணினது ஆண்டவா!//
எனக்கும் அதே தான் தோணுச்சு:)
This is too much....we know only the hit movies from other languages....Dont irritate the people who loves tamil cinema....Criticism is always easy than make a good critics...Comedynna enna venumnalum ezhuthiveengala - Tamil Kirukkan
hehe super!
Dog song super
11 point sema super
Nejammavey endha padatha tamil edutha ungay kittey vandhu kandippa suggestions kepaanga :)
"Jab we met " translate pandraangala - ada kaduvuley!
Srivats
eppadi ippadillaam????? chae.......azugaachi azugaachiyaa varuthu....
a regular reader
Post a Comment