Wednesday, September 26, 2007

நண்பா...


மாலை நேர தேநீர்
இறங்குவதே இல்லை...
செல்ல சண்டைளின்றி
அவை என்றும்
இனிக்காதாம்

இதுவரை ஒன்றாய்
நடந்து கடந்த சாலைகள்
கண்களை பொத்தி கொள்கின்றன
தனிமையில் எனை காண
பிரியமில்லையாம்

கை ஈரம் துடைக்க
நீ தரும் கைகுட்டையை
தேடி அழுது
அடம் பிடிக்கின்றன
விரல்கள்

பேருந்து பயணங்களில்
சாய்ந்து தூங்க
உன் தோள்கள்
இல்லாமல் இமைகள்
மூடுவதேயில்லை

சண்டை போட்டு
உன்னிடம் பிடுங்கி
சாப்பிடும் சாக்லேட்டின் சுவை
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்
உணவிலும் கிடைப்பதில்லை

கைகோர்த்து திரிந்த
நாட்களை எண்ணும்போது
துளிர்க்கும் கண்ணீரினூடே
தூக்கம் கலையாதிருக்க
அசையாதிருந்த உன் நட்பு
புன்னகையாய் விரிகிறது

17 comments:

இராம்/Raam said...

அருமை.....

நிலா said...

ஒன்னுமில்ல ஆன்ட்டி, யாருமே கமென்ட் போட கானோம், அதான் கவுஜ நல்லாருக்குன்னு சொல்லிட்டு போக வந்தேன்

நிலா said...
This comment has been removed by the author.
நிலா said...

அப்புறம் உங்க கவிதைய விட அந்த படம் ச்சோ ச்சுவீட்

Never give up said...

enaku indha kavithai romba pidithirukiradhu. Vaazhga valamudan

ஜி said...

என்னாது?? இம்சை அரசி பதிவுல காதல் இல்லாத கவிதையா?? இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்... கூப்டுங்கப்பா அந்த கவுண்டமணிய...

கோபிநாத் said...

நல்லாயிருக்கு...

ஜே கே | J K said...

நல்லாயிருக்கு...

அபி அப்பா said...

நான் வேண்டுமானால் ஒரு விமர்சனம் எழுதிடவாடா இதுக்கு?

நாகை சிவா said...

//சண்டை போட்டு
உன்னிடம் பிடுங்கி
சாப்பிடும் சாக்லேட்டின் சுவை
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்
உணவிலும் கிடைப்பதில்லை//

ஆமாங்க ஸ்டார் ஹோட்டலில் எல்லாம் உணவு பாக்க தான் நல்லா இருக்கும்... :)

நாகை சிவா said...

//மாலை நேர தேநீர்
இறங்குவதே இல்லை...
செல்ல சண்டைளின்றி
அவை என்றும்
இனிக்காதாம//

காலையில?

கப்பி | Kappi said...

கவித கவித!! :))

கப்பி | Kappi said...

கவித கவித!! :))

k4karthik said...

சூப்பர்.. ரொம்ப நல்லா இருந்துச்சு..

மங்களூர் சிவா said...

//
அபி அப்பா said...
நான் வேண்டுமானால் ஒரு விமர்சனம் எழுதிடவாடா இதுக்கு?
//
அண்ணே ஏன் இந்த் விபரீத ஆசை உங்களுக்கு??

மங்களூர் சிவா said...

நல்லாயிருக்கு...

Piththa_ Piraisoodi said...

kavithaiyil contenttai vida kavithikkana uththi engo manathil ethaiyo nilaladavaikirathu