போன வெள்ளிக்கிழமை spiderman-3 பாத்தேன். அதை பத்தி விமர்சனம் எழுத போறேனோன்னு யாரும் பயந்துக்காதீங்க. அந்த நல்ல பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது. ஏன்னா அந்த அளவுக்கு மேல் மாடில ரொம்ப ஒண்ணும் இல்ல(யாருல அது களிமண்ணான்னு கேக்கறது???).
சரிங்க நம்ம விஷயத்துக்கு வருவோம். spiderman-3 ல அப்படி என்ன இருந்தது நீ புதுசா சொல்றதுக்குனு நீங்க கேக்கறது புரியுது. பாதி படம் வர வரைக்கும் ஒரு blogger பார்வையில நான் பாக்கலை. parker-ரோட காதலி அவன்கிட்ட நான் உன்னை காதலிக்கலை... வேற ஒருத்தரை காதலிக்கறேன்... என்னை மறந்துடுனு சொன்னப்பதான் எனக்குள்ள இருந்த blogger திடுக்கிட்டு கண்ணு முழிச்சது. சரி அதுக்கு அவன் என்ன சொல்லப்போறானு பாக்கலாம்னு நினைக்கறதுக்குள்ள அவன் அழ ஆரம்பிச்சிட்டான். ப்ளீஸ் அப்படி மட்டும் சொல்லாதனு அவன் அழுதப்போதான் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு.
எப்பேற்பட்ட ஆணா இருந்தாலும் ஒரு பொண்ணுக்காகன்னு வரும்போது கண்ணீர் வடிப்பான். அதுக்கு spiderman மட்டும் விதிவிலக்கா என்னன்னு. பா.விஜயோட "உடைந்த நிலாக்கள்" என்னோட favourite கவிதை தொகுப்பு. இதை படிச்சவங்களுக்கு நல்லா தெரியும் பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு... எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு... ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்.......... இப்படி நீண்டுட்டே போற லிஸ்ட்ல கடைசில நம்ம பருத்தி வீரனும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்.
"பெண் என்னும்
பிஞ்சு பிராவகமே!
கனவாக நீயிருந்தால்
கண்விழித்தா நான் இருப்பேன்?
நிலமாக நீயிருந்தால்
நடக்க மாட்டேன். தவழ்ந்திருப்பேன்
முள்ளாக நீயிருந்தால்
குத்திக் கொண்டு குதூகலிப்பேன்
தீயாக நீயிருந்தால்
தினந்தோறும் தீக்குளிப்பேன்
தூசாக நீயிருந்தால்
கண் திறந்து காத்திருப்பேன்
மழையாக நீயிருந்தால்
கரையும் வரை நனைந்து நிற்பேன்"
-- உடைந்த நிலாக்களிலிருந்து
பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆணோட வாழ்க்கையும் பெண்ணில்லாம முழுமையடையாது. எதோ ஒரு பாட்டுல வரும் "ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் பாலத்தை கட்டி முடிப்பா"-ன்னு. இதை பலர் ஒத்துக்க மறுக்கலாம். அதுக்காக என் கொள்கைல இருந்து நான் பின் வாங்கப் போறதில்ல. ஏத்துக்கறவங்க ஏத்துக்கோங்க. திட்டறவங்க திட்டிக்கோங்க. எல்லாருக்கும் ஒரு பெரிய :-)
21 comments:
/பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆணோட வாழ்க்கையும் பெண்ணில்லாம முழுமையடையாது. எதோ ஒரு பாட்டுல வரும் "ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் பாலத்தை கட்டி முடிப்பா"-ன்னு.//
யக்கோவ்,
இப்போ யாரு இல்லன்னு சொன்னா??
ஸ்பைடர்மேன்,உடைந்தநிலாக்கள்,பெண்ணியம் அட! அட! இம்சை என்ன ஒரு லிங்க்.. கலக்கிட்டீங்க போங்க
:)
/யக்கோவ்,
இப்போ யாரு இல்லன்னு சொன்னா??/
அதே ..அதே
//பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆணோட வாழ்க்கையும் பெண்ணில்லாம முழுமையடையாது. எதோ ஒரு பாட்டுல வரும் "ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் பாலத்தை கட்டி முடிப்பா"-ன்னு. இதை பலர் ஒத்துக்க மறுக்கலாம். அதுக்காக என் கொள்கைல இருந்து நான் பின் வாங்கப் போறதில்ல. ஏத்துக்கறவங்க ஏத்துக்கோங்க. திட்டறவங்க திட்டிக்கோங்க. எல்லாருக்கும் ஒரு பெரிய :-)
//
உங்க கருத்தை நான் 100% ஆமோதிக்கிறேன். :-D
கண்டிப்பா இந்த கருத்துக்களை ஏத்துக்கிறேன். ;-)
யாரும் திட்ட மாட்டாங்க .. ;-)
//இப்படி நீண்டுட்டே போற லிஸ்ட்ல கடைசில நம்ம பருத்தி வீரனும்.//
:-))
நல்லாதான் சிந்திக்கிறீங்க. :-D
//யக்கோவ்,
இப்போ யாரு இல்லன்னு சொன்னா?? //
ஆமா அக்கா ரஞ்சினி அண்ணியும் இராம் அண்ணாவும் இப்படிதான் இருக்காங்கன்னு கேள்வி பட்டேன்
அக்கா பிறந்த நாளுக்கு நீங்க போட்ட வாழ்த்துகளுக்கு நன்றி
//ஆமா அக்கா ரஞ்சினி அண்ணியும் இராம் அண்ணாவும் இப்படிதான் இருக்காங்கன்னு கேள்வி பட்டேன்//
பிர்த்டே பேபி,
ஒனக்கு ஓவரு சேட்டைதான்.. :((
//ஒரு பொண்ணு நினைச்சா இந்த வானுக்கும் பூமிக்கும் பாலத்தை கட்டி முடிப்பா"-//
கட்டி முடிச்சுட்டு சொன்னா நம்பாத என்ன மாறி சனமும் நம்பும்ல....
;-)
//எப்பேற்பட்ட ஆணா இருந்தாலும் ஒரு பொண்ணுக்காகன்னு வரும்போது கண்ணீர் வடிப்பான்.//
எப்பேர்பட்ட ஆணா இருந்தால் ஒரு பெண்ணால் அழ வைக்கப்படுகிறான் என்று மண்டபத்தில் வர்காந்து பலர் புலம்பிக்கிட்டு இருக்காங்க.... அது ஏங்க....
//இம்சை என்ன ஒரு லிங்க்.. கலக்கிட்டீங்க போங்க//
இது மாதிரி எல்லாத்தையும் கலந்து கட்டி எழுதினா உமக்கு பின் நவினத்துவம் மாதிரி இருக்குமே... அதானே!....
அது போகட்டும் அது என்ன சாட்ல ஒன்னு சொல்லிட்டு இங்க வந்து இப்படி ஆமாம் சாமி போட்டு போய் இருக்க....
//நல்லாதான் சிந்திக்கிறீங்க//
இது அது இல்லை
சரித்திரத்தை அங்க அங்க சிந்தி இருக்காங்க.....
nice...!
நீங்க சொல்றது எல்லோரும் ஒத்துக்கிட்டு இருக்கற விஷயம் தானே,இதுக்கு எதுக்கு பதிவு எல்லாம் போட்டுகிட்டு?? :-))
ஆண் இல்லாம பெண்ணின் வாழ்விலேயும் சந்தோஷம் கிடையாதுன்னு போட்டா பரவாயில்லை. அதைதான் யாரும் ஒத்துக்க மாட்டாங்க!!பின்னூட்டங்களும் வானளவு தொடும்,ஹிட் கவுன்டர் மட மட வென ஏறும். உங்க பதிவு சூடான பதிவு பட்டியல்-ல வந்துடும்!! :-)
பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு... எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு... ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்.......... இப்படி நீண்டுட்டே போற லிஸ்ட்ல கடைசில நம்ம பருத்தி வீரனும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்
///
ஆமா இல்லையா பின்ன..
இதான் பெண்களை நம்பாதேனு ஒருத்தர் பாடிட்டு போனார்
Mr.X
பெ(ஆ)ண் இல்லைன்னா எந்த ஒரு ஆ(பெ)ணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆ(பெ)ணோட வாழ்க்கையும் பெ(ஆ)ண் இல்லாமல் முழுமையடையாது
ஹி ஹி ஹி
50-50
இது கூடதான் நல்லா இருக்கு
MR.Y
ம்ம்ம்...ஒரு முடிவோடதான் இருக்குறாப்புல தெரியுது. ஆணுக்குப் பெண்ணும்..பெண்ணுக்கு ஆணும்...வேணுந்தானே. காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்..மண்ணில் மாமலையும் ஓர் கடுகாம்னு ஆண்களுக்கும் உண்டும்மா...
அது சரி....பாலம் கட்டி முடிச்சாச்சா?
///
பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. எந்த ஒரு ஆணோட வாழ்க்கையும் பெண்ணில்லாம முழுமையடையாது.
///
பூரிக்கட்டைல அடி வாங்கினாலும் உன்மை உன்மை தான் :0
// பிராவகமே! //
i think it should be பிரவாகமே
என்ன அக்கா, பெண்ணியம்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்க? யாராவது பெண்ணியம் பத்தி எழுதுனாதான் பெண் பதிவாளர்கள் லிஸ்ட்ல சேத்துக்குவேன்னு சொன்னாங்களா?? ;))))
நீங்க சொன்னது கரெக்டுதான்... ஆனா அப்துல் கலாம் மாதிரி ஆட்களுக்கு பெண் இல்லாமலையே வாழ்க்கை முழுமையடஞ்சிருக்குதே எப்படி??
//பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. //
இது ஒத்துக்கொள்ள முடியாத விசயம். நான் சொன்ன அப்துல் கலாமையே எடுத்துப் பார்த்தால் தெரியும். பெண் ஓர் ஆண் வாழ்க்கையில் கூடுதல் அர்த்தம் ஏற்படுத்துகிறாள்னு சொன்னா ஓகே... அதே மாதிரிதான் ஒரு ஆண் பெண் வாழ்க்கையில். இங்க ஆண் பெருசா, பெண் பெருசாங்கறது முக்கியமில்லை. எப்படி ரெண்டு பேரும் அனுசரிச்சு வாழ்றாங்கங்றதுதான் முக்கியம் :))
// யாராவது பெண்ணியம் பத்தி எழுதுனாதான் பெண் பதிவாளர்கள் லிஸ்ட்ல சேத்துக்குவேன்னு சொன்னாங்களா?? ;))))//
யோவ் ஜி, ஒரு முடிவோட தான்யா திரியுறீங்க ;)))) (equal smiley போட்டுட்டேன் ;) )
////பெண் இல்லைன்னா எந்த ஒரு ஆணோட வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்காது. //
இது ஒத்துக்கொள்ள முடியாத விசயம். நான் சொன்ன அப்துல் கலாமையே எடுத்துப் பார்த்தால் தெரியும்//
அப்துல் கலாம் அம்மா? ;) :)))
என்ன ஆச்சு தாயீ....நீயும் இந்த மாதிரி பேச ஆரம்பிச்சிட்ட
\\ பெண் ஓர் ஆண் வாழ்க்கையில் கூடுதல் அர்த்தம் ஏற்படுத்துகிறாள்னு சொன்னா ஓகே... அதே மாதிரிதான் ஒரு ஆண் பெண் வாழ்க்கையில். இங்க ஆண் பெருசா, பெண் பெருசாங்கறது முக்கியமில்லை. எப்படி ரெண்டு பேரும் அனுசரிச்சு வாழ்றாங்கங்றதுதான் முக்கியம் :))\\
ரொம்ப கரைட்ட சொன்ன ஜி ;)
Post a Comment