Tuesday, May 1, 2007

எங்கே நீ சென்றாயோ!!!



மௌன வண்டுகள்

காதுகளில் எப்பொழுதும்

உன் பெயரையே ரீங்கரிக்கின்றன


தனிமை பொழுதுகள்

சிறகு விரித்து ஏனோ

உனையே சுற்றி வருகின்றன


இதய இருட்டுகளில்

ஒளிர்ந்த உன் புன்னகையை

தேடித் தவிக்கிறது மனம்


உள்ளிழுக்கும் காற்றிலாவது

உன் சுவாசம் கலந்திருக்காதாவென்ற

ஏக்கத்தில் துடிக்கிறது இதயம்


புண்பட்ட இதயத்தில்

ஆழமாய் வேல் பாய்ச்சுகிறது

உன் ஒற்றைப் பார்வை


நீயில்லாத உலகில்

பார்வையிழந்துதான் போய் விட்டன

உனை சுமந்த விழிகள்


மரணத்தின் வாயிலிலும்

புன்னகை சிந்தும் மனம் இன்று

வாழ்க்கைப் படிகளில் தள்ளாடுகிறது


கனவுகளில் கட்டிய

காதல் சாம்ராஜ்ஜியத்தை

எந்த பூகம்பம் தகர்த்தெரிந்ததோ


உயிரின் வேர் வரை

கசிந்துருகிய உன் காதலை

ஒரு நொடியும் மறவாது நெஞ்சம்

32 comments:

அபி அப்பா said...

யப்பா என்ன ஒரு கவிதை:-(((((((

அபி அப்பா said...

:-((((

ஸ்ரீமதன் said...

நல்லா உருகியிருக்கீங்க அரசி. :-)

ஸ்ரீமதன் said...

எந்த வலைப்பூ போனாலும் தோழி மை பிரண்டுதான் முதல் பின்னூடடம் போட்றாங்க.

இன்னைக்கு நான் முதல்னு நினைக்கிறேன்.மை பிரண்டுக்கு ஒரு ஸ்மைலி :-)

இம்சை அரசி said...

// யப்பா என்ன ஒரு கவிதை:-(((((((
//

// அபி அப்பா 덧글 내용...
:-((((
//

என்ன அண்ணா ஒரே sad smiley???

Anonymous said...

நம்ப அண்ணா சொன்னது போல
:-(((((

இம்சை அரசி said...

// வருத்தப்படாத வாலிபன். 덧글 내용...
நல்லா உருகியிருக்கீங்க அரசி. :-)

//

நன்றி வருத்தப்படாத வாலிபன் :))))

இம்சை அரசி said...

// வருத்தப்படாத வாலிபன். 덧글 내용...
எந்த வலைப்பூ போனாலும் தோழி மை பிரண்டுதான் முதல் பின்னூடடம் போட்றாங்க.

இன்னைக்கு நான் முதல்னு நினைக்கிறேன்.மை பிரண்டுக்கு ஒரு ஸ்மைலி :-)

//

சாரிங்க... அண்ணன் மொதல்ல வந்துட்டாரு :)

இம்சை அரசி said...

// துர்கா|thurgah 덧글 내용...
நம்ப அண்ணா சொன்னது போல
:-(((((

//

என்ன ஆச்சு??? ஒரே சோகம்??

MyFriend said...

அக்கா, நீங்க கவிதை எவ்வளவு சூப்பரா இருந்தாலும், இப்போ படிக்கவும் ரசிக்கவும் முடியாத நிலமையில் இருக்கிறேன்..

அதனால் என் பங்குக்கும்....
:-((((((

MyFriend said...

@வருத்தப்படாத வாலிபன்:

//எந்த வலைப்பூ போனாலும் தோழி மை பிரண்டுதான் முதல் பின்னூடடம் போட்றாங்க.
//

ஆஹா.. என் புகழ் எட்டுத்திக்கும் பறவுது.. :-P

//இன்னைக்கு நான் முதல்னு நினைக்கிறேன்.மை பிரண்டுக்கு ஒரு ஸ்மைலி :-) //

நாளைக்கு நைட் வரைக்கும் எங்கெங்கே புது பதிவு இருக்கோ, அங்கெல்லாம் நீங்க முதல் இடம் பிடிக்கலாம் அண்ணா.. நாளை வரைக்கும் நான் :-(((((

CVR said...

அழகான கவிதை மேடம்!
வாழ்த்துக்கள்!! :-)

எனக்கு பிடித்த சில வரிகள்

//உள்ளிழுக்கும் காற்றிலாவது
உன் சுவாசம் கலந்திருக்காதாவென்ற
ஏக்கத்தில் துடிக்கிறது இதயம்
//

//தனிமை பொழுதுகள்
சிறகு விரித்து ஏனோ
உனையே சுற்றி வருகின்றன
//


//நீயில்லாத உலகில்
பார்வையிழந்துதான் போய் விட்டன
உனை சுமந்த விழிகள்
//

இப்படி பல!!

நடத்துங்க!! :-)

நவீன் ப்ரகாஷ் said...

//கனவுகளில் கட்டிய
காதல் சாம்ராஜ்ஜியத்தை
எந்த பூகம்பம் தகர்த்தெரிந்ததோ//

இம்சை காதல் த்தும்பி வழிகிறது வரிகளில் !!!

காதலான கனவு
கனவான காதல்
நனவாகாதா என்ன?? :))))

ஜி said...

arumaiyaana kavithai varikal... ungal kavithai thoguppai konjam enakku anuppi vaiyungalen.. atha paathu paditchittu naanum innum superaa kavithai ezutha aarambikiren ;))))

கோபிநாத் said...

;-((((((((

இம்சை அரசி said...

// .:: மை ஃபிரண்ட் ::. 덧글 내용...
அக்கா, நீங்க கவிதை எவ்வளவு சூப்பரா இருந்தாலும், இப்போ படிக்கவும் ரசிக்கவும் முடியாத நிலமையில் இருக்கிறேன்..

அதனால் என் பங்குக்கும்....
:-((((((
//

no probs da...

மெல்லவே வேலைய முடிச்சுட்டு வா... :)))

இம்சை அரசி said...

// CVR 덧글 내용...
அழகான கவிதை மேடம்!
வாழ்த்துக்கள்!! :-)

எனக்கு பிடித்த சில வரிகள்

//உள்ளிழுக்கும் காற்றிலாவது
உன் சுவாசம் கலந்திருக்காதாவென்ற
ஏக்கத்தில் துடிக்கிறது இதயம்
//

//தனிமை பொழுதுகள்
சிறகு விரித்து ஏனோ
உனையே சுற்றி வருகின்றன
//


//நீயில்லாத உலகில்
பார்வையிழந்துதான் போய் விட்டன
உனை சுமந்த விழிகள்
//

இப்படி பல!!

நடத்துங்க!! :-)
//

நன்றி CVR!!! :)))

இம்சை அரசி said...

// நவீன் ப்ரகாஷ் 덧글 내용...
//கனவுகளில் கட்டிய
காதல் சாம்ராஜ்ஜியத்தை
எந்த பூகம்பம் தகர்த்தெரிந்ததோ//

இம்சை காதல் த்தும்பி வழிகிறது வரிகளில் !!!

காதலான கனவு
கனவான காதல்
நனவாகாதா என்ன?? :))))
//

நன்றி நவீன் :)))

யாருக்கு தெரியும்??? ;)

இம்சை அரசி said...

// ஜி 덧글 내용...
arumaiyaana kavithai varikal... ungal kavithai thoguppai konjam enakku anuppi vaiyungalen.. atha paathu paditchittu naanum innum superaa kavithai ezutha aarambikiren ;))))
//

இதெல்லாம் ரொம்ப ஓவரு... இந்த நக்கல் தான வேணாங்கறது :)))

இம்சை அரசி said...

// கோபிநாத் 덧글 내용...
;-((((((((

//

ஏன் ஏன் இந்த சோகம்??? ;)

Ayyanar Viswanath said...

மரணத்தின் வாயிலிலும்
புன்னகை சிந்தும் மனம் இன்று
வாழ்க்கைப் படிகளில் தள்ளாடுகிறது

நல்லாருக்கு இம்சை
நிறய எழுதுங்க

இராம்/Raam said...

//உயிரின் வேர் வரை
கசிந்துருகிய உன் காதலை
ஒரு நொடியும் மறவாது நெஞ்சம்//

அட்டகாசமான வார்த்தை பிரயோகம்....

நல்லா இருந்துச்சு இம்சையாக்கோவ் :)

ஆமா எதுக்கு எல்லாரும் அழுவாச்சியா போட்டு வைச்சிருங்காங்க???

MyFriend said...

யக்கா,

கவிதை சூப்பர்.. ;-)
நல்லாவே உருகியிருக்கீங்க.. :-)
அருமையான வரிகள்.. :-D

Anonymous said...

hi,
padicha poramaya irukku...
love pannappa edo kavithainu ezludinathu...eppa continuous a yosikka kuda mudiyalai...innum niraya eluthunga atleast paddikavavathu cheyalam( tamil a type panna therialainga)

Anonymous said...

ஓஓஓஓஓ...
இம்சை மட்டும் தான் தெரியும் என்று
நினைத்தேன் :-) :-)

அழகாய் இருக்கிறது..

நேசமுடன்..
-நித்தியா

இம்சை அரசி said...

// அய்யனார் 덧글 내용...
மரணத்தின் வாயிலிலும்
புன்னகை சிந்தும் மனம் இன்று
வாழ்க்கைப் படிகளில் தள்ளாடுகிறது

நல்லாருக்கு இம்சை
நிறய எழுதுங்க
//

நன்றி அய்யனார் :)

இம்சை அரசி said...

// இராம் 덧글 내용...
//உயிரின் வேர் வரை
கசிந்துருகிய உன் காதலை
ஒரு நொடியும் மறவாது நெஞ்சம்//

அட்டகாசமான வார்த்தை பிரயோகம்....

நல்லா இருந்துச்சு இம்சையாக்கோவ் :)

ஆமா எதுக்கு எல்லாரும் அழுவாச்சியா போட்டு வைச்சிருங்காங்க???
//

நன்றி தம்பி... :)

அதுதான் ஏன்னு எனக்கும் தெரியலை :)))

இம்சை அரசி said...

// .:: மை ஃபிரண்ட் ::. 덧글 내용...
யக்கா,

கவிதை சூப்பர்.. ;-)
நல்லாவே உருகியிருக்கீங்க.. :-)
அருமையான வரிகள்.. :-D
//

தேங்க் யூ தங்கச்சி :)))

இம்சை அரசி said...

// nenjil 덧글 내용...
hi,
padicha poramaya irukku...
love pannappa edo kavithainu ezludinathu...eppa continuous a yosikka kuda mudiyalai...innum niraya eluthunga atleast paddikavavathu cheyalam( tamil a type panna therialainga)
//

ரொம்ப நன்றிங்க nenjil :)))

இம்சை அரசி said...

// நித்தியா 덧글 내용...
ஓஓஓஓஓ...
இம்சை மட்டும் தான் தெரியும் என்று
நினைத்தேன் :-) :-)

அழகாய் இருக்கிறது..

நேசமுடன்..
-நித்தியா
//

வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க நித்தியா :)))

காயத்ரி சித்தார்த் said...

"நீயில்லாத உலகில்
பார்வையிழந்துதான் போய் விட்டன
உனை சுமந்த விழிகள்"


அனுபவமா அரசி மேடம்? வலி சுமந்த வார்த்தைகள்! ரொம்ப நல்லாயிருக்கு!

யாழ்_அகத்தியன் said...

நீயில்லாத உலகில்
பார்வையிழந்துதான் போய் விட்டன
உனை சுமந்த விழிகள்"


அழகான கவிதை
வாழ்த்துக்கள்!!