Monday, April 23, 2007

பாப் ஆல்பம் வெளியிட ஜி-யுடன் கூட்டு முயற்சி

நம்ம தல கோடம்பாக்கத்துல துண்டு போட முடிவு செஞ்சு பாட்டு எழுதினார். அதை மருதம் பாடி தந்த கதை உங்க எல்லாருக்கும் தெரியும். அப்புறம் அவரு இது பையன் பாடற மாதிரி இருக்கு. பொண்ணு பாடற மாதிரி நீங்க எழுதுங்களேன்னு நம்மளை ரொம்ப உசுப்பேத்தி விட்டுட்டார். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதான் ரணகளமாக்கிடறாங்கப்பா. இதை எழுதங்குள்ள பயங்கற ரணகளமாயிடுச்சு. படிச்சிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்கப்பு. உனக்கு இதெல்லாம் ரொம்ப தேவையானு நீங்க மொனகறது எனக்கு கேக்குது. இதுக்கெல்லாம் அசர ஆளா நாங்க.

----------------------------------------------------------------

எங்கே நீ சென்றாயோ
என் இதயம் திருடி சென்றாயோ
எங்கே நீ சென்றாயோ
என் உயிரை மீட்டு தருவாயோ

கனவிலெல்லாம் நினைவாய் வந்தாய்
நனவில் கூட கனவாய் வந்தாய்
உன் நினைவாய்தானே தவிக்கின்றேன்
இங்கு காதல் வலியால் துடிக்கின்றேன்

விழிகளில் உந்தன் உருவம்தான்
மூச்சினில் உந்தன் சுவாசம்தான்
ஒற்றை பார்வையில் உயிரை பறித்தாயே

தூக்கம் பறித்து சென்றவனே
என் தேடல் நீயென்பது புரியலையா
உன் மூச்சினில் நான் வாழ்கின்றேன்

எங்கே நீ சென்றாலும்
நிழலாய்தானே தொடர்வேனே
உன்னில் பாதி நானில்லையா

இறுதி வரை தொடரும் உறவன்றோ
உன்னவளாய்
வேறென்ன வேண்டும் இதை விட
பிறவிப்பயனாய்

தருவாய் அன்பே....

பனியில் இங்கு எரிகின்றேன்
நெருப்பினில் இதமாய் குளிர்கின்றேன்
என் தட்பவெப்பம் மாற்றி சென்றாயே
என் நிலவில் தீயை வைத்து சென்றாயே

தேனும் இங்கே கசக்கிறதே
என் படுக்கை முள்ளாய் மாறியதே
ஏனடா நீ என்னை சோதிக்கிறாய்

பூக்களில் வாசம் செய்பவனே
பூ ஒன்று தவிக்கிறதே
ஏனடா நீ என்னை வதைக்கிறாய்

இறுதி வரை தொடரும் உறவன்றோ
உன்னவளாய்
வேறென்ன வேண்டும் இதை விட
பிறவிப்பயனாய்

தருவாய் அன்பே....

எங்கே நீ சென்றாயோ
என் இதயம் திருடி சென்றாயோ
எங்கே நீ சென்றாயோ
என் உயிரை மீட்டு தருவாயோ

----------------------------------------------------------------

இதை பாத்துட்டு நீங்க சொல்லப் போற முடிவ வச்சுதான் இனிமே பாட்டு எழுதறதா வேணாமான்னு முடிவு பண்ணனும். அதும் இல்லாம பாப் ஆல்பம் போடறதா ஜி முடிவு பண்ணியிருக்கார். இதுக்கு வர ரெஸ்பான்ஸ பாத்துட்டுதான் என்னையும் கூட்டு சேத்துப்பேனு அடம் புடிக்கறார். கொஞ்சம் எனக்காக அவர்கிட்ட ரெகமண்ட் பண்ணிட்டு போங்கப்பு. புண்ணியமா போவும்.

19 comments:

ஜி said...

//இதை எழுதங்குள்ள பயங்கற ரணகளமாயிடுச்சு.//

மக்களே.. இத நம்பாதீங்க.... நான் சொன்ன அரை மணி நேரத்துல இந்தக் கவிதைய எழுதித் தந்தாங்க. அவ்வளவு தெறம.... ரொம்ப தன்னடக்கமாம்

ஜி said...

என்னுடைய முதல் பின்னூட்டத்தை அலட்சியப்படுத்தும் இம்சை அரசியை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்

.:: மை ஃபிரண்ட் ::. said...

peN pulavaRA AgiddInGkaLaa?

vAzthukkal!

padichchiddu vArEn..

Anonymous said...

arasi pulavaraukku porul kodukka vendum.. arasiyae pulavar aagi vittaal enna aavathu

-dev

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இதை பாத்துட்டு நீங்க சொல்லப் போற முடிவ வச்சுதான் இனிமே பாட்டு எழுதறதா வேணாமான்னு முடிவு பண்ணனும். //

Neengga ezhuthungga akka.. appadiye intha paaddaiyum Maruthuvai vachchi record panni poddudungga.. :-)

CVR said...

கலக்கறீங்க மேடம்!!!
சும்மாவா/?? எழுத்தாளர் ஆச்சே!!! :-)

ஒரிஜினல் ஒத்துக்காதவன் said...

அய்யோஓஓஓ
இங்கிட்டு யாரோ தமிழ் சினிமால பேமசான பாட்டு லைன் லாம் சுட்டுட்டாங்காஆஆஆஆஆ

இம்சை அரசி said...

// ஜி 덧글 내용...
//இதை எழுதங்குள்ள பயங்கற ரணகளமாயிடுச்சு.//

மக்களே.. இத நம்பாதீங்க.... நான் சொன்ன அரை மணி நேரத்துல இந்தக் கவிதைய எழுதித் தந்தாங்க. அவ்வளவு தெறம.... ரொம்ப தன்னடக்கமாம்
//

ஏன் இந்த கொல வெறி??? ஏன் இல்ல ஏன்றேன்???

// ஜி 덧글 내용...
என்னுடைய முதல் பின்னூட்டத்தை அலட்சியப்படுத்தும் இம்சை அரசியை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்
//

அதான் பப்ளிஷ் பண்ணிட்டோம்ல

இராம் said...

யக்கோவ்,

அசத்திறீங்களே????

வரிகள் அனைத்தும் அருமை :)

இம்சை அரசி said...

// .:: மை ஃபிரண்ட் ::. 덧글 내용...
peN pulavaRA AgiddInGkaLaa?

vAzthukkal!

padichchiddu vArEn..
//

ஆமாம் ஆமாம்... :)))

//.:: மை ஃபிரண்ட் ::. 덧글 내용...

Neengga ezhuthungga akka.. appadiye intha paaddaiyum Maruthuvai vachchi record panni poddudungga.. :-)
//

தேங்க் யூ தேங்க் யூ... :)))

உன்னைதான் பாடிதர சொல்லலாம்னு இருந்தேன் ;)

இம்சை அரசி said...

// Anonymous 덧글 내용...
arasi pulavaraukku porul kodukka vendum.. arasiyae pulavar aagi vittaal enna aavathu

-dev

//

ஒண்ணும் ஆவாது ;)

எங்க பாப் ஆல்பத்துக்கு finance பண்றேன்னு சொன்னீங்களே அண்ணா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... ஆனந்த கண்ணீரா வருது. எங்க மேல எவ்ளோ ஒரு நம்பிக்கை :)))

இம்சை அரசி said...

// CVR 덧글 내용...
கலக்கறீங்க மேடம்!!!
சும்மாவா/?? எழுத்தாளர் ஆச்சே!!! :-)
//

தேங்க் யூ CVR :)))

இம்சை அரசி said...

// ஒரிஜினல் ஒத்துக்காதவன் 덧글 내용...
அய்யோஓஓஓ
இங்கிட்டு யாரோ தமிழ் சினிமால பேமசான பாட்டு லைன் லாம் சுட்டுட்டாங்காஆஆஆஆஆ
//

என்னென்ன பாட்டுனு கொஞ்சம் லிஸ்ட் போட்டா ரொம்ப நன்னாயிருக்கும்

இம்சை அரசி said...

// இராம் 덧글 내용...
யக்கோவ்,

அசத்திறீங்களே????

வரிகள் அனைத்தும் அருமை :)
//

தேங்க் யூ ராமு தம்பி...

இதுக்கு நானும் finance பண்ணுவேன்னு தேவ் அண்ணாகிட்ட அடம் புடிச்சீங்களாமே... அக்கா மேல இம்புட்டு பாசமா???

அய்யனார் said...

என்ன நடக்குது இங்க
இம்சை லிரிக்ஸ்
மைஃப்ரண்ட் சிங்கர்
ஜி டைரக்டர்
அப்ப புரட்யூசர் ...??? கண்டிப்பா அபி அப்பாவாதான் இருக்கனும்

இம்சை நீங்க தாராளமா எழுதுங்க ஒண்ணும் ப்ரச்சினை இல்லை உங்க அண்ணன் தான் தயாரிப்பாளர் அப்புறம் என்ன :)

கோபிநாத் said...

\\மக்களே.. இத நம்பாதீங்க.... நான் சொன்ன அரை மணி நேரத்துல இந்தக் கவிதைய எழுதித் தந்தாங்க. அவ்வளவு தெறம.... ரொம்ப தன்னடக்கமாம்\\

என்னாது இதெல்லாம்.....எங்க ஒளிச்சி வச்சிருந்திங்க

ஒவ்வொரு வரியும் அருமை...அருமை
வாழ்த்துக்கள் ;-)

இம்சை அரசி said...

// அய்யனார் 덧글 내용...
என்ன நடக்குது இங்க
இம்சை லிரிக்ஸ்
மைஃப்ரண்ட் சிங்கர்
ஜி டைரக்டர்
அப்ப புரட்யூசர் ...??? கண்டிப்பா அபி அப்பாவாதான் இருக்கனும்

இம்சை நீங்க தாராளமா எழுதுங்க ஒண்ணும் ப்ரச்சினை இல்லை உங்க அண்ணன் தான் தயாரிப்பாளர் அப்புறம் என்ன :)
//

அப்புறம் financiar லிஸ்ட சொல்லலை.

தேவ் அண்ணா, ராமு தம்பி, அய்யனார், (vl b added)

இம்சை அரசி said...

// கோபிநாத் 덧글 내용...
\\மக்களே.. இத நம்பாதீங்க.... நான் சொன்ன அரை மணி நேரத்துல இந்தக் கவிதைய எழுதித் தந்தாங்க. அவ்வளவு தெறம.... ரொம்ப தன்னடக்கமாம்\\

என்னாது இதெல்லாம்.....எங்க ஒளிச்சி வச்சிருந்திங்க

ஒவ்வொரு வரியும் அருமை...அருமை
வாழ்த்துக்கள் ;-)
//

தேங்க் யூ... தேங்க் யூ அண்ணா :)))

நவீன் ப்ரகாஷ் said...

//கனவிலெல்லாம் நினைவாய் வந்தாய்
நனவில் கூட கனவாய் வந்தாய்
உன் நினைவாய்தானே தவிக்கின்றேன்
இங்கு காதல் வலியால் துடிக்கின்றேன்//

கண்ணீரில் தோய்த்த வார்த்தைகள்!!
காதல் வழியின் வலியை வலிமையாக எளிமையாக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் இம்சை :)))