Tuesday, February 27, 2007

வலி - I

'ஏன் இங்க white box error வருது?' கம்பூட்டரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மனோ அருகில் ஏதோ நிழலாட நிமிர்ந்து பார்த்தான். அவனை முறைத்துக் கொண்டு துர்கா நிற்பதைக் கண்டதும் ஆச்சர்யமானவன்

"என்ன என் ஃபேன்ஸ எல்லாம் பாக்கனும்னு வந்தியா?? எல்லாரையும் பாக்கனும்ணா உனக்கு கழுத்து வலியே வந்துடும். ஹ்ம்ம்ம். அவ்ளோ பேர் இருக்காங்க" என்றான்.

"உன் மூஞ்சிக்கு இன்னும் ஃபேன்ஸ் ஒண்ணுதான் கொறச்சல். நான் இங்க வந்து எவ்ளோ நேரமாச்சு தெரியுமா? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வா போய் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்" என்றவள் அவன் பதில் பேச வாயெடுக்கும் முன் அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.

"சொல்லுடா. எதோ முக்கியமான விஷயம்னு சொன்னியே" என்றபடியே சான்ட்விச்சை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தவன் "எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாத்துட்டாங்க" என்று அவள் சொன்னதும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நிமிர்ந்தான்.

"ஹே! நிஜமாவா சொல்ற?" என்றவன் முகத்தில் புன்னகை விரிய சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.

"எப்படியோ ஒருத்தனுக்கு ஏழரை ஆரம்பிக்கப் போகுது. யாரு அந்த அப்பாவி?? டீடெயிலா சொல்லு" என்று அவன் அவசரப்படுத்தவும் அவனை சில விநாடிகள் முறைத்தவள்

"எங்களுக்கு தூரத்து சொந்தமாம். ஜாதகமெல்லாம் ஒத்து வந்துடுச்சாம். இப்ப சிகாகோல வொர்க் பண்ணிட்டு இருக்காங்களாம். மூணு மாசத்துல இங்க வராங்களாம். கல்யாணம் முடிஞ்சதும் கூட்டிட்டு போயிடற மாதிரி எல்லாரும் ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க. எல்லாமே பேசி முடிச்சிட்டாங்க" என்று அவள் சொல்லி முடிக்கவும்

"சிகாகோ போறியா? வாவ். சிகாகோவில் சின்ன குரங்கு. இது எப்படி இருக்கு?" என்று சிரித்தான். அவள் கோவித்துக் கொண்டு எழுந்து செல்லவும் அவள் பின்னாலேயே சென்றான்.

"ஹே! விளையாட்டுக்கு சொன்னா ஏன் இப்படி கோவிச்சுக்குவ? ஃபோட்டோ பாத்தியா? பேசினியா?" என்று அவன் சமாதானமாய் கேட்டதும் அவள் முகம் சிவக்க "சும்மாயிருடா. இப்பதான பேசியிருக்காங்க. அதுக்குள்ள என்ன அவசரம்" என்று சிணுங்கினாள். அவளை கிண்டலடித்துக் கொண்டே அன்றைய பொழுது ஓடியது.

இரவு பஸ்ஸில் மனோவின் தோளில் சாய்ந்து கண்களை மூடியிருந்தவள் திடீரென்று நிமிர்ந்து "இன்னும் கொஞ்ச நாளைக்குதான இப்படி இருப்போம்" என்றவளது கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.

"உனக்கு என்ன? ஜாலியா உன் சிகாகோ மாப்பிள்ளையோட டூயட் பாடிட்டிருப்ப" என்றான்.

"நான் போனதுக்கு அப்புறம் எப்படியும் உனக்கு புது ஃப்ரெண்ட் கிடைப்பா. அதுக்கு அப்புறம் என்னை மறந்துடுவியா?" என்று அவள் கேட்டதும் சிரித்தவன்

"உன்னை எப்படி மறப்பேன். என் புது ஃப்ரெண்ட்கிட்ட குரங்கு குட்டி மாதிரி ஒண்ணு என்னை ஒட்டிட்டே அலையும்னு உன்னை பத்தி பெருமையா சொல்லுவேன்ல" என்றான்.

"அப்ப நீ என்ன எனக்கு அம்மா குரங்கா?" என்று அவள் கேட்டதும் "இல்ல நான் குரங்காட்டி" என்றான்.

"போடா. உன்னோட நான் பேசவே மாட்டேன்" என்று கோவித்துக் கொண்டு எழுந்து சென்று வேறு ஸீட்டில் உட்கார்ந்துக் கொண்டாள். மனோ அவளிடம் எதுவும் பேசவில்லை.

அன்று இரவு முழுவதும் அவனுக்கு அவள் ஞாபகமாகவே இருந்தது. அவளை முதல் முதலாய் ட்ரெயினிங்கின் போது சந்தித்தது. அங்கு அறிமுகமே இல்லாமல் நாட்கள் ஓட ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் அவன் பஸ்ஸிற்காக காத்திருந்த போது அவளாய் வந்து பேசி அவளை அழைத்து செல்லுமாறு கேட்டுக் கொண்டது. அன்று ஆரம்பித்த அவர்கள் நட்பு இருவரும் ஒரே ப்ராஜக்டில் சேர்ந்த பின் வளர்ந்து இந்த ஒரு வருடத்தில் விருட்சமாகி நிற்கிறது. எப்பொழுதும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தவர்கள் இனி பிரியப் போகும் நேரம் வந்து விட்டது என்றெண்ணும்போது அவனுக்கு ஏதோ ஒன்று அவனை விட்டு செல்வது போல தோன்றியது. தூக்கம் வராமல் புரண்டவன் அவளுக்கு ஃபோன் செய்தான். வெகு நேரம் பிஸியாக இருக்கவே வைத்து விட்டு எழுந்து வெளியே வந்தான்.

அங்கிருந்த ரோஜாத் தொட்டிகளைப் பார்த்ததும் அவனுள் ஏதோ செய்தது.
"எனக்கு ரோஸ் செடி வளத்தனும்னு ரொம்ப ஆசைடா. ஆனா வீட்ல இடமே இல்ல. PGலயும் வைக்க முடியாது. உங்க ரூம் முன்னாடி நிறையா இடம் இருக்குதான" என்று நிறைய செடிகளை வாங்கி வைத்தாள். முதல் முதலாய் பூ பூத்த போது அதை பறித்துச் சென்று அவளிடம் கொடுத்தான்.

"ஏன்டா பறிச்ச? நான் பூ வைக்க மாட்டேன். தலைல வச்சா என்னால பாக்க முடியாது இல்ல" என்று அவள் சொன்னபோது அவனுக்கு ஏதோ வித்தியாசமாய் தெரிந்தாள்.

'என்ன இது எதைப் பாத்தாலும் அவ ஞாபகமாவே வருது' என்று தலையை சிலுப்பிக் கொண்டு சென்று படுத்தான். வெகு நேரம் இப்படியே நினைத்துக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.

(தொடரும்)

26 comments:

ஜி said...

தொடர்கதையா??? அசத்துங்க.. அசத்துங்க.. நான் படிச்சிட்டு அப்புறம் பின்னூட்டம் போடுறேன் :)))

சுபமூகா said...

ஒரு ரகசியம் இப்போதே சொல்லி விடுகிறேன்:
இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் :-)

நடை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

அன்புடன்,
சுபமூகா

ஜி said...

இம்சையக்கோவ்....

கதை நல்ல ஆரம்பம்.. ஆனா என்ன? நான் ஏதாவது கதை எழுதலாம்னு யோசிச்சு வச்சாளே நீங்கெல்லாம் எப்படித்தான் டெலிபதி மூலமா அத சுடுறீங்களோ தெரியலப்பா...

டைட்டிலப் பாத்தா தேவதாஸ் கதை மாதிரில்ல தெரியுது... சரி, சரி... வெயிடிங் ஃபார் த ரெஸ்ட்...

பங்காளி... said...

நான் அடிச்சி சொல்றேன்...அடுத்த பாகத்துல இவங்க ரெண்டு பேரும்...லவ்வோஓஓஓ....லவ்வுன்னு....லவ்வப்போறாங்கோஓஓஓஓ

Anonymous said...

todar kadhai nalla than arramban ayeruku, ana kadisila kalla kathala mudumnu nenaikren...
kanni thivu madhiri ellama cikirama mudicha nalladu.

Anonymous said...

todar kadhai nalla than arramban ayeruku, ana kadisila kalla kathala mudumnu nenaikren...
kanni thivu madhiri ellama cikirama mudicha nalladu.

கோபிநாத் said...

அரசி...

கதை இயல்பாக உள்ளது...எழுத்து நடை எல்லாம் அருமையாக இருக்கிறது..

கதையின் தலைப்பை பார்க்கும் போது அடுத்த பகுதியில தான் "வலி" ஆரம்பமாகும் போல...அடுத்த பகுதிக்கு வெயிடிங்

கோபிநாத் said...

தொடர்கதையா??? ஏற்கனவே ஒரு தொடர்கதை நிக்குதே அது என்ன ஆச்சு??

ஸ்ரீமதன் said...

கதையின் நடையில் நம்ம வெட்டிப்பயலின் ஜாடை தெரிந்தாலும் நல்ல ஆரம்பம் அரசி.அசத்துங்கள்.

இம்சை அரசி said...

// ஜி - Z said...
தொடர்கதையா??? அசத்துங்க.. அசத்துங்க.. நான் படிச்சிட்டு அப்புறம் பின்னூட்டம் போடுறேன் :)))

//

ஏதோ உங்க அளவுக்கு இல்லாட்டியும் எதோ என்னால முடிஞ்சது :)))

இம்சை அரசி said...

// சுபமூகா said...
ஒரு ரகசியம் இப்போதே சொல்லி விடுகிறேன்:
இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் :-)

நடை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

அன்புடன்,
சுபமூகா
//

வாங்க வாங்க....

இப்படி தமிழ் சினிமா பாத்து எல்லாரும் நல்லா கெட்டுப் போய்ட்டிங்க. ஒரு கதை எழுத ஆரம்பிக்கங்குள்ள guess பண்ணிடறிங்க... ஹ்ம்ம்ம் :)))

இம்சை அரசி said...

// ஜி - Z said...
இம்சையக்கோவ்....

கதை நல்ல ஆரம்பம்.. ஆனா என்ன? நான் ஏதாவது கதை எழுதலாம்னு யோசிச்சு வச்சாளே நீங்கெல்லாம் எப்படித்தான் டெலிபதி மூலமா அத சுடுறீங்களோ தெரியலப்பா...

டைட்டிலப் பாத்தா தேவதாஸ் கதை மாதிரில்ல தெரியுது... சரி, சரி... வெயிடிங் ஃபார் த ரெஸ்ட்...
//

நான் ஒண்ணும் சுடலைங்க ஜி...

ஏதோ என் குருவி மூளைக்கு எட்டுனது :)))

இம்சை அரசி said...

// பங்காளி... said...
நான் அடிச்சி சொல்றேன்...அடுத்த பாகத்துல இவங்க ரெண்டு பேரும்...லவ்வோஓஓஓ....லவ்வுன்னு....லவ்வப்போறாங்கோஓஓஓஓ
//

wait n see :)))

இம்சை அரசி said...

// Anonymous said...
todar kadhai nalla than arramban ayeruku, ana kadisila kalla kathala mudumnu nenaikren...
kanni thivu madhiri ellama cikirama mudicha nalladu.
//

சும்மா 3 பாகம்தான் :)))

dont feel...

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
அரசி...

கதை இயல்பாக உள்ளது...எழுத்து நடை எல்லாம் அருமையாக இருக்கிறது..

//

thank u Gopinath :)))

//கதையின் தலைப்பை பார்க்கும் போது அடுத்த பகுதியில தான் "வலி" ஆரம்பமாகும் போல...அடுத்த பகுதிக்கு வெயிடிங்
//

wait n see :)))

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
தொடர்கதையா??? ஏற்கனவே ஒரு தொடர்கதை நிக்குதே அது என்ன ஆச்சு??
//

அது ரொம்ப பெருசுங்க...
எழுத நேரம் இல்ல.

இது சின்னது... அதான் :)))

இம்சை அரசி said...

// வருத்தப்படாத வாலிபன். said...
கதையின் நடையில் நம்ம வெட்டிப்பயலின் ஜாடை தெரிந்தாலும் நல்ல ஆரம்பம் அரசி.அசத்துங்கள்.
//

என்னங்க இது???
software company-ல காதல் வந்தா உடனே வெட்டி கதையா?

எலேய் வெட்டி... என்ன காப்பிரைட் வாங்கியாச்சா??? :)))

anyway வாழ்த்துக்கு ரொம்ப thanksங்க வருத்தப்படாத வாலிபன் :)))

Anonymous said...

கதையைச் சீக்கிரம் முடித்து விடுங்கள்.சஸ்பன்ஸ் தாங்க மாட்டேன்.ஆரம்பம் நன்றாக உள்ளது :)

அபி அப்பா said...

இம்சையம்மா! இப்பதான் கதைய பாத்தேன். படிச்சுட்டு சொல்கிறேன். ஆமா அந்த தமிழ்மணத்தின் 30 விளையாட்டு தெறியுமா?

அபி அப்பா said...

நம்ம வீட்டுபக்கம் வரக்காணுமே, "பாரதிக்கும் பாரதமாதவுக்கும் என்ன பிரச்சனை?" பதிவு பக்கம் வரலையே! அண்ணாச்சி 132 அடிச்சு தமிழ்மணமே புது ரூல் போட காரணமாயிட்டார் தெறியுமோ?

இம்சை அரசி said...

// துர்கா said...
கதையைச் சீக்கிரம் முடித்து விடுங்கள்.சஸ்பன்ஸ் தாங்க மாட்டேன்.ஆரம்பம் நன்றாக உள்ளது :)
//

thank u துர்கா :)))
வருகைக்கும் commentக்கும் :))))

//அபி அப்பா said...
இம்சையம்மா! இப்பதான் கதைய பாத்தேன். படிச்சுட்டு சொல்கிறேன். ஆமா அந்த தமிழ்மணத்தின் 30 விளையாட்டு தெறியுமா?
//

தெரியும் அண்ணா...
அதான் இப்படி மொத்தமா comment போடறேன் :)))

//அபி அப்பா said...
நம்ம வீட்டுபக்கம் வரக்காணுமே, "பாரதிக்கும் பாரதமாதவுக்கும் என்ன பிரச்சனை?" பதிவு பக்கம் வரலையே! அண்ணாச்சி 132 அடிச்சு தமிழ்மணமே புது ரூல் போட காரணமாயிட்டார் தெறியுமோ?
//

அதை படிச்சிட்டேன். commentதான் போடலை. சூப்பரா இருந்தது. ஏதோ என் மருமக பேர வச்சு பொழச்சுட்டு இருக்கீங்க... ஹ்ம்ம்ம்...

இன்னைக்கு போட்டிருக்கிற பதிவு வரைக்கும் எல்லாமே படிச்சிட்டேன் :)))

Nazeer Ahamed said...

wow!!

Even it is little bit romantic, too poetic and friendly.

like the talent u hit 6 in first ball.

இம்சை அரசி said...

// Azhagiya Tamizh Magan said...
wow!!

Even it is little bit romantic, too poetic and friendly.

like the talent u hit 6 in first ball.
//

thank u Azhagiya Tamizh Magan... :))))

J J Reegan said...

ஹலோ இம்சை அரசி, எனக்கு ஒரு உதவி வேணும், அந்த வலி கதைல வர மனோ துர்கா கேரக்டர் நிஜமா இல்ல சும்மாவா. அந்த கதைல முடிவில நான் இப்போ நிக்கிறேன். அதோட உங்க கதைய வேற படிச்சேனா உங்க வலி அப்பிடியேதான் இருக்கு என் வலி அதிகமாயிடுச்சு.

இதுக்கு முன்னாடி நான் கவிதை எழுதியது இல்லை. ஆனா இப்போ மனசு மட்டும் எழுதுது. பேப்பர்வரைக்கும் இன்ன வரல. ஒன்னு மாதிரிக்கு சொல்றேன் படிச்சு பாருங்க. நல்ல இருந்தா பாராட்ட வேண்டாம் வலி இன்னும் அதிகமாயிடும்

நினைத்து கூட
பார்க்கவில்லை - அவள்
நினைவுகள் என்னை
வருத்துமென்று...