Thursday, September 17, 2009

கா for கா... த... ல்...



காதல்... இந்த மூணெழுத்து வார்த்தை நம்மளப் படுத்தறப் பாடு இருக்கே... அப்பப்பா... சொல்லி மாளாது... உடனே நீ இன்னும் திருந்தலையானு கேக்காதீங்க? ;) திருந்தலையானு கேக்கற அளவுக்கு அது என்ன அவ்ளோ பெரிய கொலைக்குத்தமா என்ன? ஹி... ஹி... இப்படில்லாம் கேப்பேனு நினைச்சிங்களா? வவ்வவ்வவே... நீங்க என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லயே... :P

சரி விஷயத்துக்கு வருவோம். ஆக்சுவலா இத போன போஸ்ட்ல சமீபத்திய ஃப்ளாஷ்பேக்-னு போட்டு எழுதணும்னு நினைச்சேன். அத எழுதும்போது மறந்துப் போயிட்டேன். வயசாவுதுல்ல ;)

வீட்டுல என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போய் ஹாஸ்டல்ல தள்ளிட்டார். அங்க ஒரு பட்டாளமே சேர்ந்து கும்மியடிச்சுட்டு இருந்தோம். அதுல ஒருத்திக்கு 9th படிக்கறப்ப இருந்தே லவ்வு. அதும் அவ அத்தைப் பையன் மேல. அவ அதேப் பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு பெங்களூர்ல செட்டில் ஆயிட்டா இப்போ. எங்க கேங்-ல இன்னொருத்தி இருந்தா. அவளோட அத்தைப் பையன் அவள லவ் பண்றானோனு எங்களுக்கெல்லாம் ஒரு டவுட். அவன டவுட் பண்ணியே இவ அவன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா. அதுல எங்களுக்கெல்லாம் டென்ஷன் ஆக ஆரம்பிச்சது. வேறேன்ன? எப்படியாவது இவங்கள சேத்து வைக்கணுமேன்ற கவலைதான். அதுக்கு ஃபர்ஸ்ட் அவன் இவள லவ் பண்றான்னு கன்ஃபார்ம் பண்ணனும். அவளுக்கு பொலம்பறதே வேலையாப் போச்சு. எப்பப் பாத்தாலும் கண்ணக் கசக்கிட்டே அவன் என்னை லவ் பண்றானானு தெரியலை. அவன் நோ சொல்லிட்டா அப்புறம் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேனு அவங்க செத்துப் போன பாட்டி மேலல்லாம் சத்தியம் பண்ணினா. சோ அத தெரிஞ்சுக்க உடனடியா செயல்ல இறங்கணும்னு ஒரு சனிக்கிழமை தீர்மானிச்சோம்.

அந்த 9th லவ் பொண்ணு அவ கசின்க்கு ஸ்டடி ஹாலிடேஸ். சோ இவ கசின்க்கும் கண்டிப்பா ஸ்டடி ஹாலிடேஸ் இருக்கும்னு நாங்களா முடிவுப் பண்ணிக்கிட்டோம். சரி இவள எப்படி வீட்டுக்கு அனுப்பறது? எங்க ஸ்கூல்ல பேரண்ட்ஸ் வந்து கையெழுத்துப் போட்டுதான் கூட்டிட்டுப் போகணும். வீட்டுக்குப் போறதுக்கு எதாவது ஸ்ட்ராங் ரீசன் இருக்கணும். எல்லாரும் ரவுண்டுக் கட்டி யோசிச்சோம். மஞ்சள் காமாலை வந்துடுச்சு, ஒரே நெஞ்சு வலியாவே இருக்கு - இப்டில்லாம் நான் சொன்ன நல்ல நல்ல யோசனையெல்லாம் ரிஜக்ட் பண்ணிட்டாளுங்கன்ற கோவத்துல என்னதான் சொல்லப் போறாளுங்கன்னு நானும் வேடிக்கைப் பாத்துட்டு இருந்தேன். அவளும் என்ன பண்றதுன்னே தெரியாம சோடாப்புட்டிக் கண்ணாடிக்குள்ள உருட்டி உருட்டி முழிச்சிட்டு இருந்தா. அப்போதான் அந்த இன்னொரு லவ் பண்ற பொண்ணு உன் கண்ணாடியக் கழட்டிக் கொடுடினு சொன்னா. நாங்க எல்லாம் இப்ப எதுக்கு இதக் கேக்கறானு ஆச்சர்யமாப் பாத்தோம். அத வாங்கி கண்ணாடிக்கும் கண்ணாடிய காதுல மாட்டறதுக்கு இருக்கற கம்பிக்கும் உள்ள தொடர்ப துண்டிச்சா. அட அதாங்க அது ரெண்டையும் ஜாயிண்ட் பண்ற ஸ்க்ரூவக் கழட்டினா. போய் HM-ட்ட கண்ணாடி உடைஞ்சுடுச்சுனு சொல்லி அப்பாவ வர சொல்லு. இங்கயே கடைலக் குடுத்து சரி பண்ணிக்கலாமேனு சொல்லுவார். இல்ல இப்ப பவர் செக் பண்ணி மாத்தணும்னா ஒரேடியா மாத்திட்டு வந்துடுவேன். அதே டாக்டர்ட்டதான் பாக்கணும்னு சொல்லுனு சொல்லிக் குடுத்தா. நாங்கெல்லாம் கைத் தட்டாத கொறதான். எவ்ளோ சூப்பர் ஐடியா இல்ல? ஆனா காதலிக்கறவங்களுக்குதான்பா இப்படியெல்லாம் எடக்கு முடக்கா ஐடியா எல்லாம் தோணும் ;)

நம்மாளு நேரா HM ரூமுக்கு போனா. நாங்களும் கூடவேப் போய் HM ரூமுக்கு வெளில நின்னுட்டு இருந்தோம். அவர் அவ சொன்ன மாதிரியே இங்கயேக் குடுத்து சரி பண்ணிக்கலாமேனு கேட்டார். இவ கோழி திருடுனவ மாதிரி திரு திருனு முழிச்சுட்டே இல்ல பவர் செக் பண்ணனும் அப்டினு அவ சொல்லி குடுத்த மாதிரியே உளறிக் கொட்டினா. ஹூர்ர்ரேரே... எங்க ப்ளான் சக்ஸஸ். அவ வீட்டுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லிட்டாங்க. அம்மணியும் டிப்டாப்பா கிளம்பிப் போனாங்க. நாங்க எப்படா திங்கக்கிழமை வரும். அவன் என்ன பதில் சொல்லிருப்பான்? ஆமானு ஒத்துக்கிட்டு இருப்பானோ இல்ல நோ சொல்லி இருப்பானோ. அவன் நோ சொல்லிட்டா இவ என்ன பண்ணுவா இப்படி பல விதமா யோசிச்சு ஞாயித்துக் கிழமைய நகத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

ஒரு வழியா திங்கள் கிழமை காலைல வந்து சேர்ந்தா. அவ அப்பாவுக்கு டாடா பை பை எல்லாம் சொல்லி அனுப்பி வச்சு வேகமா அவள ரூமுக்கு இழுத்துட்டு வந்து என்னடி ஆச்சுன்னு கேட்டா பெக்க பெக்கனு சிரிக்கறா. ஞாயித்துக் கிழமை எங்களுக்கு இருந்த டென்ஷன்க்கு BPயே வந்திருக்கணும். நாங்க அவ்ளோ டென்ஷனா இருக்கோம். அந்த குப்பிக் கழுதை ஊருக்குப் போய் ஆட்டுக்கால் சூப்பும் கோழி பிரியாணியும் தின்னுட்டு புதுப் படம் ரெண்டுப் பாத்துட்டு வந்துட்டேனு கூலா சொல்லுது. எல்லாம் சேர்ந்து நல்லா மொத்தி எடுத்தோம். அவனுக்கு செமஸ்டர் எக்ஸாம் நடக்குதாம். அவன் வீட்டுக்கு வரலைனு எங்கத்த சொன்னாங்க நான் என்னடிப் பண்ணட்டும்னு அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு கேட்டா. போய் தொலை. நீயுமாச்சு உன் லவ்வுமாச்சுனு விட்டுட்டோம்.

அதுக்கப்புறம் அவ லவ்வ சொல்லி அவன் ஒத்துக்காமப் போயி கடைசில ரெண்டும் சண்டைக் கட்டிக்கிட்டு திருப்ப சமாதானம் ஆகி... இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியாம வீட்டுலயேப் பேசி முடிச்சு அவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. இப்ப குழந்தைக் குட்டியோட சந்தோஷமா இருக்கா :)))

ஆனாப் பாருங்க. லவ் பண்றவங்கள விட லவ்வுக்கு ஹெல்ப் பண்றவங்க படற பாடு இருக்கே. அப்பப்பா... எனக்கு நிறைய அனுபவம் உண்டு. இது நாடோடிகள் படம் பாத்ததும் ஞாபகத்துல வந்துச்சு. இதே மாதிரி ஹெல்ப் பண்ணப் போய் பல்பு வாங்கின கதை இருந்தா ஷேர் பண்ணுங்க (அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம் ;))))

34 comments:

உண்மைத்தமிழன் said...

வாம்மா இம்சை ராணி..!

இன்னும் உனக்கு இந்த காதல் ஜூரம் விடலையா..?

ஒன்பதாம் கிளாஸ் படிக்கிற புள்ளைக்கு லவ் பண்ண ஐடியா கொடுத்திருக்கேன்னு சொல்றியேம்மா.. இதெல்லாம் நியாயமா..?

பொம்பளை பிள்ளைகளை பத்தி நிறைய பேர் ஏதேதோ சொன்னாங்க. நான்தான் கேக்கலை. இப்ப புரியுது.. உங்களுக்கு பயபுள்ளைகளே பரவாயில்லை போலிருக்கு..

மின்னல்ப்ரியன் said...

ஹாய் இம்சை... உங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் எழுத்தை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி .... தொடருங்கள் ...

சென்ஷி said...

ஹா ஹா ஹா...

அநியாய இம்சை அரசியா இருக்கீங்க :)

பதிவு கலக்கல்!

geethappriyan said...

நல்ல நகைசுவை,இயல்பான எழுத்தில்
வவ்வவ்வவே நன்றாக இருந்த்தது
:)))

seik mohamed said...

///அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம்///

same blood

Anonymous said...

//அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம் ;))))//

சரியாச்சொன்னீங்க :)

Anonymous said...

Me the FIRST??

Yepoodiiiii :-)

பித்தனின் வாக்கு said...

இந்த காதல்னா இப்படித்தான் இருக்கும், எனக்கு தெரிஞ்ச ஒருத்தர், மோகன்பிரபுனு பேரு,நல்லபையந்தான் ரொம்ப சமர்த்து, ஆனா பாருங்க திடீர்னு கல்யானம் பண்ணிவச்சுட்டாங்க. அவனுக்கு வந்த மனைவி ஒரு இம்சை அரசி.அவனும் கல்யானத்துக்கு அப்புறம் மனைவிய காதலிக்ககின்ற போருல நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சுடான். இப்ப தினமும் ஜ ல்வ் யு, இன்னிக்கி நீ அழகா இருக்கனு பொய் சொல்லறான். இதுகூட பொறுத்துக்கலாம் ஒரு வெந்னீர் கூட வைக்கத் தெரியாத அந்த பெண்னுகிட்ட உன் சமையல் ரொம்ப சூப்பர்னு ஒரு போடு போட்டான் பாருங்க நான் ஆடிப்போய்ட்டன். ஏம்பா இப்படி கேட்ட இதுல கூட ஒரு சுகம்டா மச்சான்னு சொல்லறாறு. என்ன பண்ண? எப்படியோ இது மாதிரி சந்தொசமா இருந்தா சரினு வாழத்த வேண்டியதுதான்.

இம்சை அரசி said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாம்மா இம்சை ராணி..!

இன்னும் உனக்கு இந்த காதல் ஜூரம் விடலையா..?

ஒன்பதாம் கிளாஸ் படிக்கிற புள்ளைக்கு லவ் பண்ண ஐடியா கொடுத்திருக்கேன்னு சொல்றியேம்மா.. இதெல்லாம் நியாயமா..?

பொம்பளை பிள்ளைகளை பத்தி நிறைய பேர் ஏதேதோ சொன்னாங்க. நான்தான் கேக்கலை. இப்ப புரியுது.. உங்களுக்கு பயபுள்ளைகளே பரவாயில்லை போலிருக்கு..
//

அண்ணோய்... பதிவ நல்லா இன்னொரு முறை படிங்க...

ஐடியா குடுத்தது நானில்ல... கிகிகிகி... :)))

இம்சை அரசி said...

// மின்னல்ப்ரியன் said...
ஹாய் இம்சை... உங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் எழுத்தை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி .... தொடருங்கள் ...
//

மிக்க நன்றி மின்னல்ப்ரியன் :)))

இம்சை அரசி said...

// சென்ஷி said...
ஹா ஹா ஹா...

அநியாய இம்சை அரசியா இருக்கீங்க :)

பதிவு கலக்கல்!
//

ஹி ஹி... தேங்க்ஸ் சென்ஷி :)))

இம்சை அரசி said...

// கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
நல்ல நகைசுவை,இயல்பான எழுத்தில்
வவ்வவ்வவே நன்றாக இருந்த்தது
:)))
//

நன்றி கார்த்திக்... அது நான் அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தை... அப்படியே வந்துடுச்சு... :))))

இம்சை அரசி said...

// பார்சா குமார‌ன் said...
///அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம்///

same blood
//

//
சின்ன அம்மிணி said...
//அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம் ;))))//

சரியாச்சொன்னீங்க :)
//

ஹி ஹி... LOL :)))

இம்சை அரசி said...

// பித்தன் said...
இந்த காதல்னா இப்படித்தான் இருக்கும், எனக்கு தெரிஞ்ச ஒருத்தர், மோகன்பிரபுனு பேரு,நல்லபையந்தான் ரொம்ப சமர்த்து, ஆனா பாருங்க திடீர்னு கல்யானம் பண்ணிவச்சுட்டாங்க. அவனுக்கு வந்த மனைவி ஒரு இம்சை அரசி.அவனும் கல்யானத்துக்கு அப்புறம் மனைவிய காதலிக்ககின்ற போருல நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சுடான். இப்ப தினமும் ஜ ல்வ் யு, இன்னிக்கி நீ அழகா இருக்கனு பொய் சொல்லறான். இதுகூட பொறுத்துக்கலாம் ஒரு வெந்னீர் கூட வைக்கத் தெரியாத அந்த பெண்னுகிட்ட உன் சமையல் ரொம்ப சூப்பர்னு ஒரு போடு போட்டான் பாருங்க நான் ஆடிப்போய்ட்டன். ஏம்பா இப்படி கேட்ட இதுல கூட ஒரு சுகம்டா மச்சான்னு சொல்லறாறு. என்ன பண்ண? எப்படியோ இது மாதிரி சந்தொசமா இருந்தா சரினு வாழத்த வேண்டியதுதான்.
//

எலேய்... யாருல அது என் வீட்டுக்கார அவன் இவன் சொல்றது???

எங்கல அந்த அருவா??? ;)))

சென்ஷி said...

//எலேய்... யாருல அது என் வீட்டுக்கார அவன் இவன் சொல்றது???

எங்கல அந்த அருவா??? ;)))//

ம்ஹ்ம்.. இதுக்குத்தான் சும்மாவாச்சும் அடுப்பங்கறையை எட்டிப்பார்க்கனுங்கறது, இப்ப அருவா, கத்தி, கடப்பாறை எல்லாம் எங்க இருக்குன்னு தேடுற நிலைமை வந்திருக்குமா :)

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

//அந்த குப்பிக் கழுதை ஊருக்குப் போய் ஆட்டுக்கால் சூப்பும் கோழி பிரியாணியும் தின்னுட்டு புதுப் படம் ரெண்டுப் பாத்துட்டு வந்துட்டேனு கூலா சொல்லுது.//

செம காமெடி மேடம்... :) நல்ல பதிவு.

எம்.எம்.அப்துல்லா said...

//வயசாவுதுல்ல ;)


//


தெரிஞ்சா சரி :)

இரும்புக்குதிரை said...

அடுத்த தொடர் பதிவுக்கு டைடில் ரெடி. "கா for கா... க்... கா...". யாரு தொடர பொரதுனு பார்கலாம். ஆயீல்சா ?

எம்.எம்.அப்துல்லா said...

//அதுல ஒருத்திக்கு 9th படிக்கறப்ப இருந்தே லவ்வு. அதும் அவ அத்தைப் பையன் மேல.

//

இந்த அத்தை பொண்ணை லவ் பண்றேன்...மாமா பையனை லவ் பண்றேன்னு சொல்றவங்களெல்லாம் வேற யாரும் மாட்டாத கேசு. ஊருல எல்லாரும் லவ் பண்றாய்ங்களே, நம்பளுக்கும் ஒரு ஆள் இல்லனு சொன்னா அவ்வளவு கெத்தா இருக்காதேன்னு அத்தை பொண்ண லவ் பண்றேன், மாமா பையனை லவ் பண்றேன் ஒரு பிட்ட போட்டுருவாங்க. அத்தை பையனையோ, மாமாவோட பொண்ணையோ எதுக்கு மெனக்கட்டு லவ் பண்ணனும்??? அதான் வீட்லயே கட்டி வச்சுருவாய்ங்களே!!!


இப்படிக்கு,
மாமா பெண்ணை காதலித்து கல்யாணம் செய்த,
அப்துல்லா (ஹி..ஹி..ஹி..)

பித்தனின் வாக்கு said...

எலேய்... யாருல அது என் வீட்டுக்கார அவன் இவன் சொல்றது???

எங்கல அந்த அருவா??? ;)))

ஆஹா!!! அருவா தூக்க ஆரம்பிச்சுட்டங்க, ஏம்பா
இவங்க இம்சை அரசியா, கொலை அரசியா? சொல்லவே இல்லை, சொல்லியிருந்தா எஸ் ஆகியிருப்பம் இல்ல. இப்படி மாட்டியிருக்க மாட்டன் இல்ல. தம்பி பிரபு (மன்னிச்சுகோ) பிரபு அண்ணா, காப்பாத்துப்பா. ஒகே,ஒகே, அங்கனயும் இந்த நிலமைதானா, சரி,சரி,
தெவுடா தெவுடா என்னையும் பிரபுவையும் காப்பாத்துப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

//வவ்வவ்வவே... ///

நன்றி இதுமாதிரி மறந்துருந்ததுயெல்லாம் ஞாபகப்படுத்துனதுக்கு.....

Thamira said...

இப்படிக்கு,
மாமா பெண்ணை காதலித்து கல்யாணம் செய்த,
அப்துல்லா (ஹி..ஹி..ஹி..)
//

நமக்கு அதுகூட ஃபெயிலியராப்போச்சுதுண்ணே.! அவ்வ்வ்..

வால்பையன் said...

நீங்கல்லாம் அப்பவே ரவுடியா!?

Anonymous said...

ethukku unga photo aa potta timing aa erunthirukkum

அபி அப்பா said...

அடியே தங்கச்சி!!சிரிச்சு வயித்து வலிக்குதும்மா:-))))
நீ இம்சை அரசிதான்!!!!

Sanjai said...

// (அடுத்தவங்க பல்பு வாங்கினத கேக்கறதுலதான் என்ன சுகம் என்ன சுகம் ;))))//

நீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவனு நேத்து மோகன் சொன்னாரே.. அது இதுக்கு தானா? :))

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ்..... ஷாஜகான் விஜய் ரேஞ்சுக்கு இருந்திருக்கீங்க போல :)

ஜொள்ளுப்பாண்டி said...

யக்கோவ்.... ஜீப்பரா சொன்னீய... பல்பு வாங்கறதென்னவோ இந்த ஹெல்ப் செஸ்த்தானு கோஷ்டிகதான்... :)))

கோபிநாத் said...

:)))

நல்லாயிருக்கு உங்க உதவி எல்லாம் ;)

Romeoboy said...

கலக்கல் இம்சை ...

இந்த சைடு கொஞ்சம் எட்டி பாருங்க.

http://ennaduidu.blogspot.com/

Unknown said...

எஸ்கேப் ஆகுறது எப்படி அரசி

sathishsangkavi.blogspot.com said...

இம் இம் ..... பல்பு வாங்கற சுகமா தனிதான் ..........

எங்க பல்பையும் பாருங்க........

http://sangkavi.blogspot.com

Anonymous said...

wow super...

nanum niraya help panni bulb vankirukken.

அன்புத்தோழன் said...

hmmm..... feelings of india va..... neenga sariyaana imsa dhaan pola.... ha ha..... so sweet memories....