Wednesday, September 2, 2009

ச்சும்மா...

என்னத்த எழுதறதுன்னு ஒரு மண்ணும் தோண மாட்டேங்குது... சரி நம்ம லேட்டஸ்ட் சரித்திரத்த எழுதலாம்னு வந்துட்டேன். பதிவ படிக்கப் போறீங்களா? இனி உங்கள அந்த ஆண்டவனாலக் கூட காப்பாத்த முடியாது... கிகிகிகிகிகி...

சமீபத்திய சந்தோஷம்:
==========================================================

புதுசா எக்லெஸ் கேக், பிஸ்கட் புட்டிங், போலேநாத் வண்டில பாதாம் கீர்-னு விப்பாங்க இல்ல அது எல்லாம் செய்ய கத்துக்கிட்டேன். நான் செஞ்ச கேக்க எங்க ஆபிஸ்ல கொண்டு போய் குடுத்ததும் என் டீம்மேட் நல்லா இருக்கேனு கேட்டு ரெசிப்பி எல்லாம் வாங்கிட்டுப் போய் அவனும் செஞ்சுப் பாத்தான். நான் செஞ்சத விட அவன் செஞ்சது ரொம்ப சூப்பரா இருந்துச்சு. ஹி ஹி... சொல்லிக் குடுத்த நமக்கு இத விட வேற என்ன வேணும்.

சமீபத்திய துக்கம்:
==========================================================

என்ன ட்ரை பண்ணியும் அவன் செஞ்ச கேக் மாதிரி எனக்கு செய்ய வரமாட்டேங்குது. அதனால என் வீட்டுக்கார்ட்ட நம்ம வீட்டு microwave oven தான் சரி இல்லனு ஏமாத்தி வச்சிருக்கேன். ஹி ஹி...

சமீபத்திய பாராட்டு:
==========================================================

என் ஆபிஸ் நண்பரிடம் நேற்று சொன்னது:

கடுகு கருவப்பில்ல தாளிச்சு, தக்காளிய வெட்டிப் போட்டு புளியக் கரைச்சு ஊத்தி ஒரு கொதி விட்டா ரசம். இது ஒரு பெரிய வேலையா? சாதத்த மத்துப் போட்டு நல்லாஆஆஆ கடைஞ்சு அதுல பாலை ஊத்தி மறுபடியும் கட்டி விழாம நல்லாஆஆஆக் கடைஞ்சு அதுல தயிறு கொஞ்சம் ஊத்தி மறுபடியும் கட்டி விழாம நல்லாஆஆஆக் கடைஞ்சு, அதுல கொத்தமல்லி தழை வெட்டிப் போட்டு, இஞ்சி கட் பண்ணிப் போட்டு தயிர்சாதம் செய்யறது எவ்ளோ பெரிய வேலை??

அதுக்கு அவர் சொன்னது:

ஆனா பேச்சுலயே ரசம் வைக்கறது ஈஸி தயிர்சாதம் செய்யறது ரொம்ப கஷ்டம்னு அடுத்தவங்கள நம்ப வைக்க உங்களால மட்டும்தாங்க முடியும்

:))))))))))))

சமீபத்திய ஆப்பு:
==========================================================

எங்க யூனிட்ல எல்லாருக்கும் யூனிட் பேரு போட்டு கைல போட்டுக்கற பேண்ட் ஒண்ணு கொடுத்தாங்க. பெருசா இருக்கேனு கைல வச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ அங்க வந்த ஒரு நார்த் இண்டியன் ஃப்ரெண்ட் அத பிடுங்கி அவன் கைலப் போட்டுக்கிட்டான். ரெண்டு நாள் கழிச்சு அவன் கைல அத பாத்துட்டு அவன ஓட்டணும்னு நினைச்சு என்னது இது? சிங்குச்சா சிங்குச்சா மஞ்ச கலரு சிங்குச்சா-னு கேட்டேன். உடனே அவன் இத ஒரு பைத்தியம் குடுத்துச்சுனு சொன்னான். உடனே வேகமா நான் குடுக்கல-னு சொல்ல ஆரம்பிச்சேன். அவன் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். அப்போதான் நானே ஒத்துக்கிட்டேனேனு எனக்குப் புரிஞ்சது :(((( ஆக்சுவலா நான் இதக் குடுக்கல நீயாதான் பிடிங்கிக்கிட்டனு அவன ஓட்ட நினைச்சு சொல்ல ஆரம்பிச்சேன். எனக்கே ஆப்பாயிடுச்சு :(((( பாருங்க எவ்ளோ அப்பாவிப் பொண்ணு நான்...

சமீபத்திய ஃபீலிங்:
==========================================================

இப்ப அடிக்கடி இந்த FM-ல பேப்பர் வாழை இலைக்கு விளம்பரம் போடறாங்க. அதக் கேட்டாலே கோபமா வருது. வாழை இலைல சாப்பிடறது உடம்புக்கு எவ்ளோ நல்லது. விஷேசத்துக்கெல்லாம் அதப் போடாம பேப்பர் வாழை இலை வாங்கிப் போட்டா நல்லா இருக்குமா? இனிமேல் நிறையப் பேர் அத வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. யப்பா... கடைசில இலையக் கூட விட்டு வைக்க மாட்டேன்றாங்கப்பா... அதையும் ஆர்டிஃபிசியலா பண்ணிட்டாங்க...

சமீபத்திய கோபம்:
==========================================================

என் நாத்தனாரின் கணவர் ஒரு லிங்க்கைக் கொடுத்துப் பார்க்க சொன்னார். அதப் பாத்ததும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இவங்கல்லாம் மனுஷங்களா இல்ல மிருகங்களா? கண்டிப்பா மனுஷங்களா இருக்கவே முடியாது. நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க.

http://maaruthal.blogspot.com/2009/08/blog-post_29.html

சமீபத்திய சிந்தனை:
==========================================================

பாலிதின் கவர் யூஸ் பண்ணாதிங்க பண்ணாதிங்கனு எல்லாருக்கும் அட்வைஸ் பண்றத விட்டுட்டு கவர்மென்ட்டே பாலிதின் கவர் ப்ரொடக்ஷன நிறுத்தினா என்ன?!!

சமீபத்தில் ரசித்தப் பாடல்:
==========================================================

கந்தசாமி படத்துல வர எக்ஸ்கியூஸ் மி மிஸ்டர் கந்தசாமிப் பாட்டு அவ்ளோ பிடிக்குதுங்க எனக்கு. அந்த பாட்ட பாத்ததில்ல இன்னும்(அதனாலதான் பிடிக்குதோ :S) சுச்சி வாய்ஸ் அவ்ளோ சூப்பரா இருக்கு. ஸ்டார்ட்டிங்க்ல மியூஸிக் செமயா இருக்கு. என் மொபைல்க்கு அததான் ரிங்க்டோனா வச்சிருக்கேன் :)

சமீபத்தில் பார்த்த படம்:
==========================================================

சமீபத்தில் பார்க்க ஆரம்பித்த படம்னு சொல்லலாம். என்கிட்ட பேண்ட பிடுங்கின அந்த ஃப்ரெண்ட்... ப்ரெண்ட் இல்ல எனிமி... ஒரு படம் குடுத்தான். சூப்பரா இருக்கும். பாருனு. பத்தே நிமிஷம்தான் பாத்திருப்போம். ப்ரபு வேணாம்னு ஆஃப் பண்ணிட்டாங்க. அவ்ளோ கொடூரம். ஆரம்பிச்சதுல இருந்து கொலை கொலை கொலை. அதும் ரொம்ப கொடூரமா. யப்பா. எடுத்தவன் சைக்கோவா இருப்பான் போல. அந்தப் படம் பாக்கணும்னு உங்களுக்கு ஆசையா இருக்கா? "My Bloody Valentine" தான் அந்தப் படம். வீக்கெண்ட்ல பாத்து எஞ்சாய் பண்ணுங்க.

படம்னு சொல்லும்போது இத சொல்லியே ஆகனும். என் வீட்டுக்கார் எப்போப் பாத்தாலும் இங்க்லிஷ் படமேப் பாத்துட்டு இருப்பார். அடிக்கடி என் மாமியார் கடுப்பாகி தமிழ் படம் போட்டா என்னடா-னு கேட்டுட்டே இருப்பாங்க. ஒரு நாள் அவங்க அப்படி கேட்டதும் இவங்க ஒரு சூப்பர் தமிழ் படம் போட்டாங்க. அதப் பாத்ததுக்கப்புறம் என் மாமியார் தமிழ் படமே கேக்கறதில்ல. அப்படி என்ன படம்னு கேக்கறீங்களா? ஹி ஹி... நம்ம டாக்டர் நடிச்ச வில்லு படம்தான்.

சமீபத்திய ஃபோட்டோ:
==========================================================

ப்ரபுவோட கசின்ஸ் வந்திருந்தப்போ மகாபல்லிபுரம் போயிருந்தோம். அங்க அவர் தங்கச்சி ஹஸ்பெண்ட் எங்களுக்குத் தெரியாம எடுத்த ஃபோட்டோ இது :)))



ஓக்கேய்... நிறைய எழுதணும்னு நினைச்சேன். எல்லாம் மறந்துப் போயிட்டேன். சீக்கிரம் மீட் பண்ணுவோம். பை பை... :)))

47 comments:

இராம்/Raam said...

மொக்கை அரசி back'ஆ?? :)

சிவக்குமரன் said...

welcome back

ஆயில்யன் said...

//கடுகு கருவப்பில்ல தாளிச்சு, தக்காளிய வெட்டிப் போட்டு புளியக் கரைச்சு ஊத்தி ஒரு கொதி விட்டா ரசம். இது ஒரு பெரிய வேலையா? சாதத்த மத்துப் போட்டு நல்லாஆஆஆ கடைஞ்சு அதுல பாலை ஊத்தி மறுபடியும் கட்டி விழாம நல்லாஆஆஆக் கடைஞ்சு அதுல தயிறு கொஞ்சம் ஊத்தி மறுபடியும் கட்டி விழாம நல்லாஆஆஆக் கடைஞ்சு, அதுல கொத்தமல்லி தழை வெட்டிப் போட்டு, இஞ்சி கட் பண்ணிப் போட்டு தயிர்சாதம் செய்யறது எவ்ளோ பெரிய வேலை??///


யேஏஏஏஏஏஏஎ எப்பாடியோவ்வ்வ்வ்வ்வ்வ் இவ்ளோ பெரிய புரொசிஜர்ஸ் இருக்கா தயிர்சாதத்துக்கு !!!!!

ஆயில்யன் said...

//சமீபத்திய ஃபீலிங்///

நல்லா இருக்கு!

பட் இப்ப வாழை தோட்டம் பிசினஸே கவுழ்ந்துக்கிடக்குது அதை நிமிர்த்திட கவர்ன்மெண்ட் 1ம் செய்யவும் இல்ல யாரும் கண்டுக்கவும் இல்லை :(

கார்த்திக் பிரபு said...

Nalla iruku photos , unga peeling ellam

valga valamudan

நாகை சிவா said...

:)

//சுச்சி வாய்ஸ் அவ்ளோ சூப்பரா இருக்கு.//

Padathil kettu parunga padu kevalama irrukum :)

அபி அப்பா said...

நல்ல வேலைடா தங்காச்சி! பிரண்ட்ல இருந்து போட்டோ எடுக்கலை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!


வந்துட்டியா வா வா! கண்மனி டீச்சர் கூட வந்திருக்காங்க! வந்து கலக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாருக்கும் எப்படியாச்சும் நல்லாதெரிஞ்சுடும்போலப்பா உன்னைப்பத்தி.. இல்லன்னா இப்படி ஓட்டுவாங்களா..?

அந்த ஓவன் விசயம்... :))

எம்.எம்.அப்துல்லா said...

//பாருங்க எவ்ளோ அப்பாவிப் பொண்ணு நான்... //

யாரு???
நீயா?நீயா?நீயாஆஆஆஆ?

அடப்பாவி :)

எம்.எம்.அப்துல்லா said...

//welcome back

//

மலையேறுன ஆத்தா இறங்கி வந்துருக்கு.திரும்ப மலை ஏறாம இருந்தாச் சரி :))

எம்.எம்.அப்துல்லா said...

//வந்துட்டியா வா வா! கண்மனி டீச்சர் கூட வந்திருக்காங்க! வந்து கலக்கு!

//

அட அவங்க எப்ப வந்தாங்க ?!!???.

மெனக்கெட்டு said...

மூணு மாச லீவு எல்லாம் ரொம்ப ஓவர்

(follower list ல இருந்து தூக்கறதா இருந்தேன். நல்ல வேளை தப்பிச்சீங்க! )

anyway மீண்டும் வந்ததற்கு நன்றி.

தினேஷ் said...

ஆனா பேச்சுலயே ரசம் வைக்கறது ஈஸி தயிர்சாதம் செய்யறது ரொம்ப கஷ்டம்னு அடுத்தவங்கள நம்ப வைக்க உங்களால மட்டும்தாங்க முடியும்

முடியல சாமி எப்பூடி இபபபபபபபபபபபப்டி

FunScribbler said...

photo juuuuuuuper!!

Muthu said...

Welcome Back!

சென்ஷி said...

:-)

வெல்கம் பேக்!

Sanjai Gandhi said...

நீ சொன்ன அளவுக்கெல்லாம் மொக்கை இல்லை ஜெ. ரொம்பவே இண்டரஸ்டிங்கா தான் இருக்கு. அந்த கெக் ரெசிபி எனக்கும் சொல்லு. நானும் மைக்ரோவேவ் வச்சி தானே பொழப்பை ஓட்றேன்.

.. சரி சரி.. இப்போ நான் செஞ்சிட்டிருக்கிற பருப்பு சாதம் ரெசிபியும் சொல்லிடட்டுமா? ப்ளீஸ்.. ப்ளீஸ்.. எவ்ளோ யோசிச்சி உன்னை புகழ்ந்துறிக்கேன் பாரு.. :))..

( ஆனாலும் ப்ரபு சமையலை எல்லாம் உன்னோடதுன்னு சொல்றது டூ மச்மா.. ;)) )

கோபிநாத் said...

எந்த பக்கத்துல இருந்து எடுத்தாலும் மாப்பி பயபக்தியோட இருக்குறது தெரியுது ;)))

கலக்கல் ;))

Thamira said...

நிறைய எழுதணும்னு நினைச்சேன். எல்லாம் மறந்துப் போயிட்டேன்// என்னதிது? இவ்ளோ எழுதினப்புறம்?

சமீபத்திய ப்பாராட்டுதான் டாப்பு.!

MyFriend said...

:-)

Welcome back

வால்பையன் said...

நல்லாருக்கு!

அனுபவங்களும் சிந்தனைகளும்!

ப்ரியமுடன் வசந்த் said...

பிளாஸ்டிக் வாழி இழையா அட அறிவு? கெட்ட அசமந்தங்களா இதுலயும் பிளாஸ்டிக்கா திருத்தவே முடியாதுடா உங்கள

எல்லா விஷயங்களும் ரசித்து படித்தேன்
முக்கியமா தயிர்சாத சமையல் குறிப்பு

Anonymous said...

திரு.புதுகை.அப்துல்லா அவர்கள் உங்களைப் பற்றி எழுதியதைப் படித்துவிட்டு இன்றுதான் முதன்முதலில் வருகின்றேன். ரொம்ப நல்லா எழுதுறீங்க.நீங்க தொடர்ந்து எழுதனும்.

சந்தியா.

மங்களூர் சிவா said...

/
இராம்/Raam said...

மொக்கை அரசி back'ஆ?? :)
/
ROTFL
:))))))

welcome back

Cable சங்கர் said...

அப்துல்லா சொன்னது சரிதான்.:)

pudugaithendral said...

ஆஹா,

அசத்தல்

நிகழ்காலத்தில்... said...

//ஆனா பேச்சுலயே ரசம் வைக்கறது ஈஸி தயிர்சாதம் செய்யறது ரொம்ப கஷ்டம்னு அடுத்தவங்கள நம்ப வைக்க உங்களால மட்டும்தாங்க முடியும் //

சந்தேகமே இல்லை :))

//பாலிதின் கவர் யூஸ் பண்ணாதிங்க பண்ணாதிங்கனு எல்லாருக்கும் அட்வைஸ் பண்றத விட்டுட்டு கவர்மென்ட்டே பாலிதின் கவர் ப்ரொடக்ஷன நிறுத்தினா என்ன?!!//

விட்டா சிகரெட், தண்ணி இதுக்கும் இப்படி தயாரிப்ப நிறுத்துங்கன்னு சொல்லிடுவீங்க போலிருக்கு
அஅவ்வ்வ்வ்வ்.....!!!!

வாழ்த்துக்கள், அடிக்கடி எழுதுங்க, உங்க எழுத்து கலக்கலா இருக்கு

Vinitha said...

nice!

ஈரோடு கதிர் said...

நல்லா எழுதியிருக்கீங்க

GK said...

welcome back.
Please do finish all your stories :)

நா.இரமேஷ் குமார் said...

//Cable Sankar said...
அப்துல்லா சொன்னது சரிதான்.:)//
அப்துல்லா அண்ணன் சமயத்துல உண்மையையும் சொல்வீங்க போல....

gils said...

sooper :) suntvla sendra vara ulagam paatah epect...athenanga video...kumatidichi paathu!!! oru hint kudukapdatha!! ivlo koduramana video!!

SPIDEY said...

BACK WITH A BANG
BLOG UNTIL PC HANG(S)
:)

சுரேகா.. said...

அடேயப்பா..
எவ்ளோ நாளாச்சு..!
கலக்குறீங்க!

வாழ்த்துக்கள்!

பித்தனின் வாக்கு said...

//கடுகு கருவப்பில்ல தாளிச்சு, தக்காளிய வெட்டிப் போட்டு புளியக் கரைச்சு ஊத்தி ஒரு கொதி விட்டா ரசம். இது ஒரு பெரிய வேலையா? //

ரசம் தாயரிப்பு முறை சரியாக இல்லை, மொதலில் புளி கரைசலில் உப்பு,மிளாகாய் பொடி போட்டு, வதக்காத தக்காளியய் கையில் விண்டு போட்டு, பின் பொருங்காயம் ஸேர்த்து புளி ஜலம் பச்சை வாசம் போகும்வரை கொதிவிட்டு, பின் கொதி வந்தவுடன் ரசப்பொடி அல்லது அரைத்த விலுது இட்டு, நல்ல ஒரு முறை மட்டும் கொதிக்க விட்டு நுரைத்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிட்டு கடுகு மற்றும் கருவேப்பிலை திருப்புமாறி கொட்டவும், பின் பச்சை கொத்தமல்லியை கையால் கிள்ளிப்போட்டு நல்ல தட்டுடன் மூடி தம் போட்டால்(சிகரெட் தம் அல்ல) ஆவி கட்டும் தம். போட்டு ஒரு பத்து நிமிடம் கழித்து திறந்தால் சுவையான ரசம் ரெடீ.
கடுகு திருப்புமாறி கொதிவிட்டால் கடுகும் எண்ணெய்யும் கசக்கும்.
ஆமா உங்களுக்கு சமைக்கத் தெரியுமா, பாவம் பிரபு, அவருக்கு எனது கஸ்டமான வாழ்த்துக்கள்.

manjoorraja said...

சுவையான மொக்கைகளுடன் (?) திரும்ப வந்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்.


தமிழ் படம்னு சொன்னவுடனே அது விஜய் படமாத்தான் இருக்கும்னு நெனெச்சேன். ஏமாத்தலெ.

Anonymous said...

anatha photo va tiruppi potta, romba alaga ellai romba romba alagannu solliruvom! :-)

விக்னேஷ்வரி said...

இப்போ தான் உங்க பக்கம் வர்றேன். நல்லா இருக்குங்க.

TAARU said...

வாழ்க அப்துல்லாஹ் சகாப்..
"தயிர் சாதம் - ரசம் " வயிறு வலிக்கிறது.. கண்களில் கண்ணீர். [சிரித்து தான் ma'am] chance ஏ இல்ல..

Thenammai Lakshmanan said...

இம்சை அரசி எல்லமே சூப்பர்ப்

எதை சொல்லுறது எதை விடுறது

அப்துல்லா சொன்னது சரிதான்

கொஞ்சம் பொரியல் ரெசிப்பி சொல்லுங்கம்மா

:)))))

Anonymous said...

நல்லா இருக்கு உங்க எழுத்து.

மேலும் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

Unknown said...

imsai arasi per ungalukku correctathaan irukum pola

CS. Mohan Kumar said...

அப்துல்லா blog-ல் தந்த link கண்டு வந்தேன். ரொம்ப நல்லா எழுதுறீங்க. நல்ல நடை. விடாம எழுதுங்க. உங்க கிட்டே நிறைய எதிர் பார்க்கிறோம். :)

மோகன் குமார்

mee-and-mine said...

Hi, Did u participate in Vijay TV "Adhu Idhu Edhu" Programme? I remember seeing one episode.. unga punai peru sonna madhiri irundhadhu.. bt as I dont know ur actual name, cudnt confirm it to be u?

அபி அப்பா said...

\\கைல போட்டுக்கற பேண்ட் ஒண்ணு கொடுத்தாங்க. பெருசா இருக்கேனு கைல வச்சுக்கிட்டு இருந்தேன்\\

இதை இப்ப தான் கேள்வி படுறேன். ஆமா கைல கூடவா பேண்ட் போட்டுப்பாங்க ஜெ!

சுள்ளான் அமெரிக்காவிலுருந்து said...

//எங்க யூனிட்ல எல்லாருக்கும் யூனிட் பேரு போட்டு கைல போட்டுக்கற பேண்ட் ஒண்ணு கொடுத்தாங்க. //

பேண்டை கால்ல இல்ல போட்டுக்குவாங்க?

//பெருசா இருக்கேனு கைல வச்சுக்கிட்டு இருந்தேன்.//

பின்ன கால்ல போடறதை, கைல போட நினைச்ச, பெருசாதான் இருக்கும். சின்ன புள்ளத்தனமாள்ள இருக்கு!

kadaroli said...

avaru yen oru cylinder mela saanjikitu irukkaru???