Tuesday, June 26, 2007

கல்யாண கனவு

அட அட அட..... என்ன இது.... கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியா போனதால எட்டிப் பாக்காம இருந்துட்டேன். அதனால லேட்டஸ்ட் அப்டேட்ஸ் தெரியாம மாயவரத்துல கோழி திருடுன ஆளாட்டம் பேந்த பேந்த முழிச்சிட்டு உக்காந்திருந்ததால அமைதியான பொண்ணு, நல்ல பொண்ணுன்னு பேர் வாங்கிட்டேன். அப்பாடி........ (வாழ்க்கைல இதுவரைக்கும் வாங்காத பட்டம்:))))
நம்ம இம்சையில்லாம மக்கா அல்லாரும் நிம்மதியா இருக்காங்க போல. எப்டி விடலாம்னு திருப்பி களமிறங்கியாச்சு. ஹி.... ஹி....

"என்ன லைஃப் இது??? காலைல எழறோம். ஆபிஸ்க்கு போறோம். சாயந்திரம் வரோம். சமையல் செஞ்சு சாப்பிட்டுட்டு தூங்கறோம். ஒரே போர்" இப்படி பொலம்பிக்கிட்டு இருந்தது சாட்சாத் அடியேன்தான். ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா டிவி பாத்துட்டு இருந்த என் ஃப்ரெண்ட் அப்படியே திரும்பி என்னை ஒரு லுக் விட்டா.

"அதுக்குதான் கல்யாணம் பண்ணிக்கோனு சொல்றோம்"-ன்னு அப்படியே சீரியஸா சொன்னா.

"ப்ளீஸ்டா. கல்யாணத்துக்கு போயி எவ்ளோ நாளாச்சு தெரியுமா? பண்ணிக்கோயேன். நாங்க வந்து எஞ்சாய் பண்ணுவோமில்ல" ன்னாளே பாக்கலாம். அப்படியே எனக்கு பத்திக்கிட்டு வந்தது.

"அடிங்க நாயே! நீ எஞ்சாய் பண்ணனும்கறதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கனுமா?"-ன்னு கத்தினேன்.

"செல்லம் அப்படி சொல்லலைடா. நீதான் ரொம்ப போர்னு ஃபீல்னு பண்ணின. அதுக்குதான் ஐடியா குடுத்தேன். எப்படியோ ஒருத்தன உன் தலைல கட்டி அவன் போன ஜென்மத்துல பண்ணின பாவத்த எல்லாம் கழிக்க போறாங்க. அதை ஏன் நீ இப்பவே பண்ணி பாவ மோட்சம் அழிக்க கூடாதுன்னு கேட்டேன்" - என்ன ஒரு உள்குத்து??!!!

"அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கறது அவனுக்கு தண்டனையா???"ன்னு இன்னும் நான் எகிற

"சரி சரி ஃப்ரீயா விடு. உனக்கு எப்படி மாப்பிள்ளை பாக்கணும்னு சொல்லு"ன்னா.

அப்படியே என் முகத்துல ஒரு ப்ளாஷ் அடிச்சது. என் கனவுகளை எல்லாம் அள்ளி விட்டேன்.

"எனக்கு அப்படி ஒண்ணும் பெருசா எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்ல. ஆனா கொஞ்சம் கண்டிஷன்ஸ் இருக்கு"

"ம்ம்ம்.... சொல்லு சொல்லு பாத்துடுவோம்"

"அதாவது என்னை வேலை செய்ய சொல்லி கஷ்டப்படுத்தக் கூடாது. அதுக்குனு நான் வேலை எதும் செய்ய மாட்டேனு சொல்லலை. ஷேர் பண்ணி செய்யணும். நான் பாத்திரம் கழுவனும்னா அவன் பாத்திரம் வெளக்கனும். நான் வீடு கூட்டினா அவன் குப்பை அள்ளனும். நான் துணி துவைச்சா துணி அலசணும். நான் காயப் போட்டா எடுத்து மடிச்சு வைக்கனும். நான் கொழம்பு வக்கணும்னா காய் வெட்டி தரணும்...."

"நிறுத்து நிறுத்து.... விட்டா நீ சோறு சாப்பிட்டா அவன் ஏப்பம் விடனும்........ நீ தூங்கினா அவன் குறட்டை விடணும்......... உனக்கு காய்ச்சல் அடிச்சா அவன் போயி ஊசிப் போட்டுக்கணும்னு சொல்லுவ போல" - ன்னு என்னை மொறைச்சா.

"ஏய்! அவன கண் கலங்காம பாத்துக்குவேன் தெரியுமா"

"எப்படி எப்படி? உன் கண்ணு கலங்காம அவன் கண்ண கலங்க வச்சு பாத்துப்பதான?? செல்லம் உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காது போ"-ன்னா. grrrrrrrrr............. எவ்ளோ கொழுப்பு அவளுக்கு. நீங்களே சொல்லுங்க. நான் கேக்கறது எதவது தப்பா? கரெக்டாதான கேட்டேன்.

அப்போதான் இன்னொருத்தி ஸீனுக்குள்ள வந்தா.

"ஏ நம்ம உமாவுக்கு ஃபோன் பண்ணினேன். நகை வாங்க கடைக்கு போயிருந்தாளாம். இன்னைக்கு போயி எல்லா பர்ச்சேஸும் முடிச்சிட்டு வந்துட்டாங்களாம்" ன்னு சொன்னா.

"அவங்க அத்தை பையனையே கல்யாணம் பண்ணிக்கறதுக்கு அவ வீட்ல இருந்து எவ்ளோ தராங்க பாரு. XX பவுனும் XX பணமுமாம்"

"அநியாயம்டி. நம்மளையும் தான நம்ம வீட்ல கஷ்டப்பட்டு படிக்க வைக்கறாங்கன்னு ஏன் புரிஞ்சிக்க மாட்டென்றாங்க???"

"இவ்ளோ காசு குடுத்து நம்மளை வித்துடறாங்க இல்ல"-ன்னு கவலையோட சொன்னது நான்.

"அட லூஸு. காசு குடுக்கறது நாம. சோ நாமதான் வாங்கறோம். சரியா"-ன்னு ஒருத்தி விளக்கி சொன்னதும்தான் நம்ம மூளைல அப்டியே ஃப்ளாஷ் அடிச்சது.

"அட பாவிகளா இதை முன்னாடியே சொல்றதில்ல. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு எனக்கு வரவன் எப்படி இருக்கணும்னு யோசிச்சு வச்சேன். எல்லாமே ரிஜக்டட். நான் வாங்கின பையனுக்கு நான் எதுக்கு ஹெல்ப் பண்ணனும். சோ நோ பாத்திரம் கழுவிங், நோதுணி துவைச்சிங், நோ சமைச்சிங். அவன்தான் எல்லாமே செய்யணும் ;)" - ன்னு நான் சந்தோஷமா சொன்னதும் ஒரு எனிமி வேக வேகமா சொன்னா.

"முன்னாடியாவது கொஞ்சம் சான்ஸ் இருக்குனு நினைச்சேன். இப்போ ரொம்ப நல்லா தெரியுது. இந்த ஜென்மத்துல உன் கல்யாணத்துக்கு நோ சான்ஸ்"-ன்னு என்கிட்ட சொல்லிட்டு இன்னொருத்திக்கிட்ட ஓடினா

"செல்லம் நீ என்னடா எக்ஸ்பெக்ட் பண்ற"-ன்னு கேட்டுகிட்டு.

ஹ்ம்ம்ம்ம்.......... யாரை நம்பி நான் பிறந்தேன்.... போங்கடா போங்க............ ன்னு அவளப் பாத்து பாடிட்டு என் பொலம்பல் வேலைய மறுபடியும் பண்ண ஆரம்பிச்சேன்.

நீங்களே சொல்லுங்க. நான் கேக்கறது எதாவது தப்பா? கரெக்டாதான கேட்டேன்......... நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டென்றாங்க.......

54 comments:

CVR said...

ஐயோ அக்கா!!
உங்களுக்கு மாப்பிள்ளை பாக்குறதுக்குள்ள எனக்கு மண்டை காய்ஞ்சி போயிடும் போல இருக்கே!! :-((((

நாமக்கல் சிபி said...

இப்படியெல்லாம் துடுக்குத் தனமா பேசி அண்ணனுங்க வயித்துல புளியைக் கரைக்கப்பிடாது கண்ணு!

Anonymous said...

எனது ஓட்டு இம்சையக்காவுக்கே

Anonymous said...

// CVR said...
ஐயோ அக்கா!!
உங்களுக்கு மாப்பிள்ளை பாக்குறதுக்குள்ள எனக்கு மண்டை காய்ஞ்சி போயிடும் போல இருக்கே!! :-((((
//

உங்களுக்கு பொண்ணு பார்க்கறத்துக்குள்ள எங்களுக்கும் மண்டை காய்ஞ்சு போயிடும் ன்னு நினைக்கிறேன் :D
என்ன அக்கா நான் சொல்லுறது

நாமக்கல் சிபி said...

//உங்களுக்கு பொண்ணு பார்க்கறத்துக்குள்ள எங்களுக்கும் மண்டை காய்ஞ்சு போயிடும் ன்னு நினைக்கிறேன் :D
என்ன அக்கா நான் சொல்லுறது //

அது சரி!

:)

Anonymous said...

ஊரான் ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா

என்னமோ இந்த பாட்டு வந்து தொலைக்குது .. இம்சைடா சாமி

Anonymous said...

முழுப்பாட்டு இப்படி இருக்கும்..

ஊரான் ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு வாங்க சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்

-- உனக்கு தெரிந்த உத்தமன் --

ஜே கே | J K said...

//அதாவது என்னை வேலை செய்ய சொல்லி கஷ்டப்படுத்தக் கூடாது. அதுக்குனு நான் வேலை எதும் செய்ய மாட்டேனு சொல்லலை. ஷேர் பண்ணி செய்யணும். நான் பாத்திரம் கழுவனும்னா அவன் பாத்திரம் வெளக்கனும். நான் வீடு கூட்டினா அவன் குப்பை அள்ளனும். நான் துணி துவைச்சா துணி அலசணும். நான் காயப் போட்டா எடுத்து மடிச்சு வைக்கனும். நான் கொழம்பு வக்கணும்னா காய் வெட்டி தரணும்....///

இது வேலக்காரனே போதுமே!.

அவன் புல்லாவே செஞ்சிருவான்.

நீங்க பாதிகூட செய்யவேண்டியதில்லை.

Iyappan Krishnan said...

அது சரி.. இந்த அக்காவுக்கு மாப்பு பாக்கறதுக்குள்ள தாவு தீந்துடும்..

என்னா ஒரு வில்லத்தனம்

அது சரி காசு குடுத்து ஏன் வாங்கனும்ன்னேன் ? .. விலைக்குப் போக விருப்பமில்லாத ஒரு தன்மானம் உள்ளவன் இந்தக் காலத்துல ரொம்ப அதிகம் அம்மணி..

சுபஸ்ய சீக்கிறம்..

அபி அப்பா said...

:-))) super!

வல்லிசிம்ஹன் said...

இம்சை, நிஜமாலுமே உங்களுக்கு நல்ல மாப்பிள்ளைதான் கிடைப்பான்.

கண்டிஷன்ஸை விட்டுடாதீங்க.:)))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

மன்னிக்க உங்களையும் மாட்டி விட்டுட்டேன்..கலந்து கொள்ளுங்கள்..

http://nilavunanban.blogspot.com/2007/06/blog-post_26.html

கதிரவன் said...

//நான் வாங்கின பையனுக்கு நான் எதுக்கு ஹெல்ப் பண்ணனும். சோ நோ பாத்திரம் கழுவிங், நோதுணி துவைச்சிங், நோ சமைச்சிங். அவன்தான் எல்லாமே செய்யணும் ;)//

:-))

அருள் குமார் said...

//நீங்களே சொல்லுங்க. நான் கேக்கறது எதாவது தப்பா? கரெக்டாதான கேட்டேன்......... நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டென்றாங்க....... //

பொதுவாவே இந்த பொண்ணுங்க எல்லாம் நல்லா வெவரமான கேரக்டர் தாங்க...

அது எப்படி எப்படி... உங்களையும் காஷ்டப்பட்டு படிக்க வைச்சிட்டதால நீங்க வரதட்சனை கொடுத்தா அந்த பையன வாங்கினதா அர்த்தமா?

வரதட்சனை கேக்காத பொண்ணுங்க எல்லாரும் தன் புருஷன் சம்பாதிக்கறது மட்டும் தனக்கு போதும்னு இருந்துடுவாங்களா என்ன? பையன் வீட்ல பாகப் பிரிவினைன்னா பையன் கூட கணக்குபாத்து கேக்க மாட்டான். அவன் பொண்டாட்டிதான் ரொம்ப வெவரமா இத கேளுங்க அதக்கேளுங்கன்னு கரெக்டா தூண்டிவிடுவா.

வாழ்க்கையை பகிர்ந்துக்க வர்ரப்போ தன் பெத்தவங்க கிட்டேர்ந்து கொண்டுவர்றது தப்பான கலாச்சாரம். ஆனா புருஷன் வீட்டு சொத்துல மட்டும் இவங்களுக்கு கரெக்ட்டா பங்கு வேணும். என்னங்க நியாயம் இது?!

வரதட்சனை தரமாட்டேன்னு சொல்ற பொண்ணுங்க எல்லாம் பையன் நல்ல வேலைல இருக்கானான்னு மட்டும் பாருங்க. அவங்க வீட்ல எவ்ளோ சொத்து இருக்கு அதுல இவனுக்கு எவ்ளோ வரும்னு கணக்கு போடாம இருக்கமுடியுமான்னு யோசிங்க!

OK வா.

G3 said...

//எனது ஓட்டு இம்சையக்காவுக்கே //

ரிப்பீட்டு :-))

காயத்ரி சித்தார்த் said...

//அமைதியான பொண்ணு, நல்ல பொண்ணுன்னு பேர் வாங்கிட்டேன்.//

இதென்ன புதுக்கத? யாரு சொன்னது? ஏம்பா யாராச்சும் சொன்னீங்க அப்பிடி?

காயத்ரி சித்தார்த் said...

//வாழ்க்கையை பகிர்ந்துக்க வர்ரப்போ தன் பெத்தவங்க கிட்டேர்ந்து கொண்டுவர்றது தப்பான கலாச்சாரம். ஆனா புருஷன் வீட்டு சொத்துல மட்டும் இவங்களுக்கு கரெக்ட்டா பங்கு வேணும். என்னங்க நியாயம் இது//

அண்ணாச்சி யாரு? ரொம்ப சூடாவராறே?

ILA (a) இளா said...

//நான் வாங்கின பையனுக்கு நான் எதுக்கு ஹெல்ப் பண்ணனும். சோ நோ பாத்திரம் கழுவிங், நோதுணி துவைச்சிங், நோ சமைச்சிங். அவன்தான் எல்லாமே செய்யணும் //
அது சரிங்க கேபி.சுந்தராம்பாள்

ILA (a) இளா said...

நான் வாங்கின பையனுக்கு//

எப்போ வாங்கினீங்க? ஏற்கனவே வாங்கியாச்சா? சொல்லவே இல்லே

ILA (a) இளா said...

//நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டென்றாங்க....... //
ஆமா இவ்வளவு நாளா சரியா புரிஞ்சிக்காம இருந்தோம், இப்போதான் தெள்ளத்தெளிவா புரிஞ்சிருக்கு

களவாணி said...

//கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியா போனதால எட்டிப் பாக்காம இருந்துட்டேன்//

என்னது கொஞ்ச நாளா?, இது ஒரு நீண்ட இடைவெளிங்க...

//ப்ளீஸ்டா. கல்யாணத்துக்கு போயி எவ்ளோ நாளாச்சு தெரியுமா? பண்ணிக்கோயேன். நாங்க வந்து எஞ்சாய் பண்ணுவோமில்ல"//

உங்க ஃப்ரெண்ட்ஸ்தானே, வேற எப்பிடி இருப்பாங்க ; )

//நீங்களே சொல்லுங்க. நான் கேக்கறது எதாவது தப்பா? கரெக்டாதான கேட்டேன்//

நீங்க சொன்னா எல்லாமே கரெக்ட்தான்க்கா. :)

Unknown said...

கனவு மெய்ப்பட வேண்டுகிறேன் :)

உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே

ஜி said...

அடேங்கப்பா... ஒரு மாசம் கழிச்சு ஒரு போஸ்ட்டா?? கலக்குற இம்சை... அதுவும் தடாலடி போஸ்ட்...

அருள் குமார் said...

//அண்ணாச்சி யாரு? ரொம்ப சூடாவராறே?//

சாரி தங்காச்சி.... சின்ன வயசுலேர்ந்தே அநியாயத்த கண்டா பொங்கி எழறது பழக்கமாயிடுச்சி! :)

இம்சை அரசி said...

// CVR 덧글 내용...
ஐயோ அக்கா!!
உங்களுக்கு மாப்பிள்ளை பாக்குறதுக்குள்ள எனக்கு மண்டை காய்ஞ்சி போயிடும் போல இருக்கே!! :-((((
//

என்ன அண்ணா இதுக்கே இப்டி அசந்து போயிட்டா எப்படி?? இன்னும் எவ்வளவோ இருக்கு ;)

இம்சை அரசி said...

// நாமக்கல் சிபி 덧글 내용...
இப்படியெல்லாம் துடுக்குத் தனமா பேசி அண்ணனுங்க வயித்துல புளியைக் கரைக்கப்பிடாது கண்ணு!

//

அப்பாடா!!! ரஸம் வைக்க புளி வாங்கற செலவு மிச்சம் :)))

இம்சை அரசி said...

// துர்கா|†hµrgåh 덧글 내용...
எனது ஓட்டு இம்சையக்காவுக்கே
//

வாடி செல்லம்... நீயும் இப்படிதான் இருக்கனும் சரியா??? ;)))

இம்சை அரசி said...

// துர்கா|†hµrgåh 덧글 내용...
// CVR said...
ஐயோ அக்கா!!
உங்களுக்கு மாப்பிள்ளை பாக்குறதுக்குள்ள எனக்கு மண்டை காய்ஞ்சி போயிடும் போல இருக்கே!! :-((((
//

உங்களுக்கு பொண்ணு பார்க்கறத்துக்குள்ள எங்களுக்கும் மண்டை காய்ஞ்சு போயிடும் ன்னு நினைக்கிறேன் :D
என்ன அக்கா நான் சொல்லுறது
//

நீ சொன்னா அது கரெக்டாதான் இருக்கும் :)))

இம்சை அரசி said...

// உனக்கு தெரிந்த உத்தமன் 덧글 내용...
முழுப்பாட்டு இப்படி இருக்கும்..

ஊரான் ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு வாங்க சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்

-- உனக்கு தெரிந்த உத்தமன் --

//

இதை இங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம்னு கொஞ்சம் விளக்கி சொன்னா நல்லாயிருக்கும்...

thx in advance ;)))

இம்சை அரசி said...

// J K 덧글 내용...
//அதாவது என்னை வேலை செய்ய சொல்லி கஷ்டப்படுத்தக் கூடாது. அதுக்குனு நான் வேலை எதும் செய்ய மாட்டேனு சொல்லலை. ஷேர் பண்ணி செய்யணும். நான் பாத்திரம் கழுவனும்னா அவன் பாத்திரம் வெளக்கனும். நான் வீடு கூட்டினா அவன் குப்பை அள்ளனும். நான் துணி துவைச்சா துணி அலசணும். நான் காயப் போட்டா எடுத்து மடிச்சு வைக்கனும். நான் கொழம்பு வக்கணும்னா காய் வெட்டி தரணும்....///

இது வேலக்காரனே போதுமே!.

அவன் புல்லாவே செஞ்சிருவான்.

நீங்க பாதிகூட செய்யவேண்டியதில்லை.
//

நீ பச்ச புள்ளப்பா... உனக்கு இதெல்லாம் ஒண்ணும் புரியாது... கம்முனு உக்காந்து வேடிக்கை பாரு ;)))

இம்சை அரசி said...

// Jeeves 덧글 내용...
அது சரி.. இந்த அக்காவுக்கு மாப்பு பாக்கறதுக்குள்ள தாவு தீந்துடும்..

என்னா ஒரு வில்லத்தனம்

அது சரி காசு குடுத்து ஏன் வாங்கனும்ன்னேன் ? .. விலைக்குப் போக விருப்பமில்லாத ஒரு தன்மானம் உள்ளவன் இந்தக் காலத்துல ரொம்ப அதிகம் அம்மணி..
//

பாத்துக்கிட்டுதான இருக்கோம்... :P

// சுபஸ்ய சீக்கிறம்.. //

தேங்க் யூ... தேங்க் யூ...

இம்சை அரசி said...

// அபி அப்பா 덧글 내용...
:-))) super!

//

தேங்க்ஸ் அண்ணா :)))

நாகை சிவா said...

இப்ப என்ன? உங்களுக்கு கல்யாணம் பண்ணுற ஆசை வந்துடுச்சு... அதுக்கு வீட்டுக்கு அடி போட்டு காட்டுறீங்க... புரிஞ்சுப்பாங்க.... புரிஞ்சுப்பாங்க....

கவலைய விடுங்க...

நாகை சிவா said...

//எப்படியோ ஒருத்தன உன் தலைல கட்டி அவன் போன ஜென்மத்துல பண்ணின பாவத்த எல்லாம் கழிக்க போறாங்க.//

பாவத்தை கழிக்காவா... இல்ல செய்த பாவத்துக்கு பழி வாங்கவா....

சுந்தர் / Sundar said...

ஓ.. ஹோ ... கத அப்படி போகுதா ...

நாகை சிவா said...

//"எனக்கு அப்படி ஒண்ணும் பெருசா எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்ல. ஆனா கொஞ்சம் கண்டிஷன்ஸ் இருக்கு"//

இதுல இந்த எக்ஸ் க்கும் கண்டிக்கும் என்ன வித்தியாசம் என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா... இந்த கண்டி எல்லாம் பூர்த்தி செய்யனும் என்ற எக்ஸ்சே... மிக பெரிய எக்ஸ்சு, இதுக்கு மேல என்ன பெரிசா எக்ஸ் இருக்கனும் சொல்லுங்க...

நாகை சிவா said...

//நீங்களே சொல்லுங்க. நான் கேக்கறது எதாவது தப்பா? கரெக்டாதான கேட்டேன்......... நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டென்றாங்க....... //

உங்க வில்லத்தனத்த யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க என்று வந்து இருக்கனும்.. திருத்துங்க...

நாகை சிவா said...

அருள் அண்ணாத்த சும்மா பின்னுறீங்களே....

Anonymous said...

அருள் அண்ணாச்சி ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவரு!

இப்பவே தானும் சமையல் எல்லாம் செய்யணுமோன்னு பயந்துகிட்டு இருக்காரு!

பாவம்!

அ.க.ச
சென்னை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா உங்களுக்கு தங்கச்சி என்று உரிமை கொண்டாடும்போதே எனக்கு தெரீயும்.. ஒன்னும் சரியில்லை.. உருப்படறதுக்கான வழியே இல்லை...இதுல சூப்பர்ன்னு வந்து பின்னூட்டம்..அதுக்கு தேங்க்ஸ் அண்ணான்னு பின்னூட்ட பதி ல் வேற..

காயத்ரி வாம்மா வா..கேட்டாலும் கேட்ட சரியான கேள்வி
//காயத்ரி said...
//அமைதியான பொண்ணு, நல்ல பொண்ணுன்னு பேர் வாங்கிட்டேன்.//

இதென்ன புதுக்கத? யாரு சொன்னது? ஏம்பா யாராச்சும் சொன்னீங்க அப்பிடி?//

வழிமொழிகிறேன்..

இராம்/Raam said...

இம்சையக்கா,

எப்பவுமே சொல்லுறதுதான்... இங்கயும் சொல்லிக்கிறேன்.... :))

பாவம்!! அந்த தெய்வ மச்சான்....:)

அன்பேசிவம் said...

இப்படி எத்தனை பேர் கெளம்பி இருக்கீங்க.................

அருள் குமார் said...

//அருள் அண்ணாச்சி ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவரு!//

ஹீம்... யாரோ என்ன கலாய்க்கறதா நெனச்சி உண்மைய சொல்லியிருக்காங்க. இத அப்படியே மெயிண்டய்ன் பண்ணிக்கலாம் :)

Anonymous said...

யோவ் யாருப்பாது தலைல துண்டு போட்டுட்டு ஒடறது.. அட புள்ளை புடிக்கறவங்க எல்லாம் இல்லப்பா இங்க..
அட ஓடேதேங்க்றன் ..

--- உனக்கு தெரிந்த உத்தமன் --

இம்சை அரசி said...

// வல்லிசிம்ஹன் 덧글 내용...
இம்சை, நிஜமாலுமே உங்களுக்கு நல்ல மாப்பிள்ளைதான் கிடைப்பான்.

கண்டிஷன்ஸை விட்டுடாதீங்க.:)))
//

ரொம்ப நன்றிங்க அக்கா. கண்டிப்பா கண்டிஷன்ஸ் மட்டும் விட மாட்டேன் :)))

இம்சை அரசி said...

// நிலவு நண்பன் 덧글 내용...
மன்னிக்க உங்களையும் மாட்டி விட்டுட்டேன்..கலந்து கொள்ளுங்கள்..

http://nilavunanban.blogspot.com/2007/06/blog-post_26.html

//

இதுல போயி மன்னிக்கறதுக்கு என்னங்க இருக்கு? போட்டுட்டேன் பாருங்க :)))

இம்சை அரசி said...

// கதிரவன் 덧글 내용...
//நான் வாங்கின பையனுக்கு நான் எதுக்கு ஹெல்ப் பண்ணனும். சோ நோ பாத்திரம் கழுவிங், நோதுணி துவைச்சிங், நோ சமைச்சிங். அவன்தான் எல்லாமே செய்யணும் ;)//

:-))
//

வருகைக்கும் ஸ்மைல்க்கும் ரொம்ப நன்றிங்க :)))

இம்சை அரசி said...

// S. அருள் குமார் 덧글 내용...
//நீங்களே சொல்லுங்க. நான் கேக்கறது எதாவது தப்பா? கரெக்டாதான கேட்டேன்......... நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டென்றாங்க....... //

பொதுவாவே இந்த பொண்ணுங்க எல்லாம் நல்லா வெவரமான கேரக்டர் தாங்க...

அது எப்படி எப்படி... உங்களையும் காஷ்டப்பட்டு படிக்க வைச்சிட்டதால நீங்க வரதட்சனை கொடுத்தா அந்த பையன வாங்கினதா அர்த்தமா?

வரதட்சனை கேக்காத பொண்ணுங்க எல்லாரும் தன் புருஷன் சம்பாதிக்கறது மட்டும் தனக்கு போதும்னு இருந்துடுவாங்களா என்ன? பையன் வீட்ல பாகப் பிரிவினைன்னா பையன் கூட கணக்குபாத்து கேக்க மாட்டான். அவன் பொண்டாட்டிதான் ரொம்ப வெவரமா இத கேளுங்க அதக்கேளுங்கன்னு கரெக்டா தூண்டிவிடுவா.

வாழ்க்கையை பகிர்ந்துக்க வர்ரப்போ தன் பெத்தவங்க கிட்டேர்ந்து கொண்டுவர்றது தப்பான கலாச்சாரம். ஆனா புருஷன் வீட்டு சொத்துல மட்டும் இவங்களுக்கு கரெக்ட்டா பங்கு வேணும். என்னங்க நியாயம் இது?!

வரதட்சனை தரமாட்டேன்னு சொல்ற பொண்ணுங்க எல்லாம் பையன் நல்ல வேலைல இருக்கானான்னு மட்டும் பாருங்க. அவங்க வீட்ல எவ்ளோ சொத்து இருக்கு அதுல இவனுக்கு எவ்ளோ வரும்னு கணக்கு போடாம இருக்கமுடியுமான்னு யோசிங்க!

OK வா.
//

ஏனுங்கண்ணா இம்புட்டு டென்ஷன் ஆகறீங்க? இதெல்லாம் சும்மா லுலுலா.... இதுக்கு மேல எவ்வளவோ இருக்கு.... ;)))

இம்சை அரசி said...

// G3 덧글 내용...
//எனது ஓட்டு இம்சையக்காவுக்கே //

ரிப்பீட்டு :-))

//

அப்பாடி... கூட்டணி அமைச்சாச்சு :)))

இம்சை அரசி said...

// காயத்ரி 덧글 내용...
//அமைதியான பொண்ணு, நல்ல பொண்ணுன்னு பேர் வாங்கிட்டேன்.//

இதென்ன புதுக்கத? யாரு சொன்னது? ஏம்பா யாராச்சும் சொன்னீங்க அப்பிடி?
//

அன்னைக்கு அப்படி சொல்லிப்பிட்டு இன்னைக்கு இப்பிடி சொல்றீங்களா??? மண்டபத்துல யார்ட்டயாவது காசு வாங்கிட்டு வந்துட்டீங்களா???

இம்சை அரசி said...

// ILA(a)இளா 덧글 내용...
//நான் வாங்கின பையனுக்கு நான் எதுக்கு ஹெல்ப் பண்ணனும். சோ நோ பாத்திரம் கழுவிங், நோதுணி துவைச்சிங், நோ சமைச்சிங். அவன்தான் எல்லாமே செய்யணும் //
அது சரிங்க கேபி.சுந்தராம்பாள்
//

ஐய்! ஜாலி ஜாலி... ஒரு பெரிய தலையோட பேரை இவ்ளோ சின்ன வயசுலயே வாங்கிட்டேன் :)))

// ILA(a)இளா 덧글 내용...
நான் வாங்கின பையனுக்கு//

எப்போ வாங்கினீங்க? ஏற்கனவே வாங்கியாச்சா? சொல்லவே இல்லே
//
அதாவது கல்யாணத்துக்கு அப்புறம் "நான் வாங்கின பையனுக்கு"...

// ILA(a)இளா 덧글 내용...
//நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டென்றாங்க....... //
ஆமா இவ்வளவு நாளா சரியா புரிஞ்சிக்காம இருந்தோம், இப்போதான் தெள்ளத்தெளிவா புரிஞ்சிருக்கு
//

இதை புரிய வைக்கறதுக்கு என்ன பாடுபட வேண்டியிருக்கு சாமி....

இம்சை அரசி said...

// செந்தில் 덧글 내용...
//கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியா போனதால எட்டிப் பாக்காம இருந்துட்டேன்//

என்னது கொஞ்ச நாளா?, இது ஒரு நீண்ட இடைவெளிங்க...

//

நாய் வேஷம் போட்டா கொலச்சுதானே ஆகனும் :(((

//
//ப்ளீஸ்டா. கல்யாணத்துக்கு போயி எவ்ளோ நாளாச்சு தெரியுமா? பண்ணிக்கோயேன். நாங்க வந்து எஞ்சாய் பண்ணுவோமில்ல"//

உங்க ஃப்ரெண்ட்ஸ்தானே, வேற எப்பிடி இருப்பாங்க ; )
//

ஹி... ஹி...

////நீங்களே சொல்லுங்க. நான் கேக்கறது எதாவது தப்பா? கரெக்டாதான கேட்டேன்//

நீங்க சொன்னா எல்லாமே கரெக்ட்தான்க்கா. :)
//

அப்பாடி... உங்களுக்காவது புரிஞ்சதே... புத்திசாலிங்க நீங்க :)))

இம்சை அரசி said...

// அருட்பெருங்கோ 덧글 내용...
கனவு மெய்ப்பட வேண்டுகிறேன் :)

உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே
//

நன்றிங்க :)))

அழைப்புக்கு பதில் போட்டாச்சு :)))

Anonymous said...

hi arasi,
it was a nice post ...enjoy it before u get into trouble...i had a hearty laughter...nanum ipidi konjum sollikittu thaan irunden...ippa ellame talaikela nadakkuthu...
ok good luck in ur venture