Wednesday, February 7, 2007

எடுத்த சபதம் முடிப்பேன்

வேலை பெங்களூருலன்னு கடுதாசி வாங்குனதும் அழுதுக்கிட்டே நம்ம சென்னைப் பட்டணத்துக்கு ஒரு டாட்டா சொல்லிட்டு பெங்களூரு வந்து இறங்கினேன். அடுத்த நாள் போய் வேலைல ஜாயின் பண்ணி ஒரு வாரம் ட்ரெயினிங் முடியற வரைக்கும் எனக்கு அந்த சந்தேகமே வரலை. எப்ப என் க்யூபிக்கிள்மேட் என்கிட்ட ஹிந்தில பேசி பதிலுக்கு நான் சிரிச்சு மழுப்பிட்டே "சாரி ஐ டோன்ட் நோ ஹிந்தி"ன்னு சொன்னதும் அவன் என்னை கேவலமா ஒரு பார்வை பார்த்து "ஆர் யூ அன் இண்டியன்"னு கெட்டதும்தான் எனக்கு இந்த சந்தேகமே வந்தது. அப்படியே நாலா பக்கமும் இருந்து நான் இந்தியன் இல்லையா?.... இந்தியன் இல்லையா?.....இல்லையா?..... ன்னு ஒரே எக்கோவா அடிக்குது. அட கொடுமையே! என்னடா இது?? ஊரு விட்டு ஊரு வந்து இப்படி வாங்கி கட்டிக்கிட்டோமேனு ஒரே கவலையான கவலை. அப்புறம்தான் முடிவு பண்ணினேன். என்னத்த பெரிய ஹிந்தி. அதுல சும்மா பிச்சு உதற மாதிரி கத்துக்கிட்டு அந்த பையன்கிட்ட பேசி காட்டி போன மானத்த மீட்டே ஆகனும்னு சபதம் எடுத்தேன்.

ஹரியானால இருந்து ஒரு பொண்ணு. அதுகிட்ட அப்படியே பிட்ட போட்டு "ப்ளீஸ் டீச் மி ஹிந்தி யார்"ன்னு கேட்டு வச்சேன். அந்த பொண்ணும் சொல்லி தரேனு ஒத்துக்கிட்டு என்கிட்ட படாதபாடு பட்டுச்சு. கடைசில "எப்டி இர்கிங்க? நல்லா இர்கிங்க்ளா?"ன்னு நம்ம மக்கள்ட்ட கேக்கற அளவுக்கு டெவலப் ஆயி சண்டிகர் போய் சேர்ந்துடுச்சு. ஒரு வார்த்தை கூட இந்த குருவி மூளைல ஏறலை. நமக்குதான் இந்த மானப் பிரச்சினை எல்லாம் தூங்கி எழுந்தா சரியாப் போயிடுமே. என் சபத மேட்டர மறந்துட்டு ப்ராஜக்ட் ட்ரெயினிங்ல வலது காலை எடுத்து வச்சிட்டு பாத்தா என் ட்ரெயினிங் டீம்ல இருக்கற ஏழு பேரும் ஹிந்தில பேசிட்டு இருக்காங்க. அய்யகோ............ இங்கயுமா எமகண்டம்???? அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அந்த ஏழு பேரும் எனக்கு ஹிந்தி தெரியாதுனு ஓட்டின ஓட்ட நான் உக்காந்து வில்லுப்பாட்டாதான் பாடணும்........... ஆப்போ ஆப்பு........

எப்படியாவது இந்த ஹிந்திய கத்தே ஆகனும்னு அன்னைக்கு முடிவு பண்ணி ஒரு 2 நாளா ஹிந்தி சேனல்ஸ் மட்டும் பாத்தேன். என் ரூம்ல இருக்கற ஒருத்திக்கு ஓரளவு ஹிந்தி தெரியும். அவள்ட்ட கெஞ்சி கூத்தாடி நான் கேட்டதுல சொல்லி தரேனு ஒத்துக்கிட்டா. "நீ என் ஃப்ரெண்டுனு எப்படி ஹிந்தில சொல்றது?" இது நானு. "து மேரா துஷ்மன்" இது அவ. துஷ்மனா??? ஏதோ இடிக்குதேன்னு ஒரே சந்தேகம். சரி நம்ம ஃப்ரெண்டு அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டானு நம்பி ஒரு ஹிந்தி தெரிஞ்ச ஃப்ரெண்டுக்கு ஃபோன போட்டு "து மேரா துஷ்மன்"-ன்னேன் பெருமையா. எங்க இன்னொரு தடவை சொல்லுனு அவ சொன்னதும் ஒரு தடவை என்ன நாலு தடவையே சொல்றேனு திருப்பி திருப்பி நாலு தடவை சொன்னேன். "அப்படியே போன வச்சிட்டு ஓடி போயிடு"ன்னு போன வச்சிட்டா. அதுல வந்த கோவத்துல ஹிந்தியாவது பிந்தியாவதுன்னு அந்த சபதத்தை குழி தோண்டி புதைச்சு வச்சிட்டு பொழப்ப பாக்க ஆரம்பிச்சேன்.

சிவனேன்னு ப்ராஜக்ட்க்குள்ள மெல்ல தலைய விட்டு எட்டி பாத்தா எங்க lead பேச ஆரம்பிச்சாவே அவங்களுக்கு ஹிந்திதான் வருது. எனக்கு தெரியாதுனு என்கிட்ட மட்டும்தான் இங்க்லீஷ்ல பேசுவாங்க. ஒரு நாள் அவங்க ஏதோ கமெண்ட் அடிக்க நான் புரியாம முழிக்க "யு சுட் லேர்ன் ஹிந்தி" ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அதுதான் எனக்கு வந்து தொலைய மாட்டென்றதே. என்னைய விட்டுடுங்கன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு அதோட அதை மறந்துட்டு சுத்திட்டு இருந்தேன்.

காவிரி ப்ரச்சினை வந்த அன்னைக்கு எல்லா தமிழ் சேனலும் கட் பண்ணி போட்டாங்க. என்னடா பண்றது போர் அடிக்குதேனு நினைச்சப்பதான் கண்ணு முன்னாடி கொசுவர்த்தி சுத்தி சபத மேட்டர் எல்லாம் ஞாபகம் வந்தது. அட எப்படியும் நாளைக்கு ஆபிஸ் லீவாதான் இருக்கும்னு கையில இருந்த spec-ஐ தூக்கி போட்டுட்டு ஓடி போய் Z டிவிய போட்டு உக்காந்தேன். நானும் என்னை மாதிரி பல அவமானங்களை சந்திச்ச ஒரு ஃப்ரெண்டும் ஹிந்தி தெரிஞ்சவள இழுத்து பிடிச்சு உக்கார வச்சோம். ஒரு டயலாக் வந்த உடனே (எங்களுக்கு புரியற மாதிரி) அவ எங்களுக்கு ஒரு ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லனும். திருப்பி நாங்க நாலு தடவை ஒப்பிப்போம். அதுல தப்பு இருந்தா அவ சரியா சொல்லி தரனும். இதுதான் டீல். கடைசில அவ படத்துல ஒன்றிப் போயிட்டா. நாங்க அவள பாக்க விடாம டார்ச்சர் பண்ணி கண்டுபிடிச்ச ஒரே டயலாக் "முஜே தோ பெகலி பத்தா தா". இதையே கடைசி வரைக்கும் ஒப்பிச்சு ஒப்பிச்சு கடைசில வேற ஒண்ணும் புரியாம கடுப்பாயி "என்னடி இது லாங்குவேஜ்? பத்துமா பத்தாதானு"ன்னு நாங்க பொலம்பும்போது படமே முடிஞ்சு போச்சு.

காலைல 6 மணிக்கு ஒரு நட்பு ஃபோனப் போட்டு லீவெல்லாம் கிடையாது வந்து சேருன்னு சொன்னதும் காவிரி கலவரமெல்லாம் எனக்குள்ளதான் ஆச்சு. அய்யோ ஆன்சைட் ஆளுங்க ஆப்படிப்பாங்களேனு எழுந்து அவசர அவசரமா கெளம்பி ஆபீஸ்க்கு ஓடியாந்து Spec-ஐ வச்சு முட்டிட்டு இருந்தேன். மதியம் போய் lead-கிட்ட ஹிந்தி கத்துக்க ஆரம்பிச்சிட்டேனு பெருமையா சொல்லிட்டு "முஜே தோ" ன்னு சொல்லங்குள்ள மீதி எல்லாம் மறந்து போச்சு. "முஜே தோ..... முஜே தோ...."ன்னு நான் இழுக்கவும் அவங்களுக்கு சிரிப்பு தாங்கலை. எனக்கு ஏற்கனவே தெரியும்னு எப்படி சொல்றதுனு கேட்டதும் "முஜே தோ பெகலி சே பத்தா ஹோ"ன்னாங்க. அதுல இருந்து இதையேதான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு திரிஞ்சுட்டு இருக்கேன். இன்னைக்கு மதியம் "முஜே தோ பெகலி சே பத்தா ஹோ"ன்னு நான் சொன்னதும் அன்னைக்கு என்னோட கத்துக்கிட்ட ஃப்ரெண்ட் "தப்பா சொல்ற பத்தா ஹோ இல்ல பத்தா தா" ன்னா. அப்படியே கேவலமா அவள ஒரு லுக் விட்டு "இது ஸ்டைலிஷ் ஹிந்தி" ன்னு நான் சொன்னதும் என்னை ஒரு பார்வை பார்த்தாலே பார்க்கலாம். அவளுக்கு ஸ்டைலா பேசறேனு என் மேல பொறாமைனு முஜே தோ பெகலி சே பத்தா ஹோ...........................

73 comments:

Anonymous said...

நல்லா இருங்கம்மா... நாலும் கிழமையும் அதுவுமா...

இந்தி வந்தா தமிலு சச்சி போவும்னு சொல்லி இங்கிலீசு டமிலு அப்பாலிக்கா இந்தி எதுவுமே தெரிய வுடாமா செஞ்சதுங்களே கெயங்கட்டைங்க.. அதுங்க மட்டும் கைல கெடைக்கட்ட்டும் ( ஹ்ம்ம் எனக்கு இந்தி தெரியாத சோகம் தான் தாயி... )

என்னத்த சொல்றது

சல்தா ஹை

இம்சை அரசி said...

// Anonymous said...

//

ஹ்ம்ம்ம்.... இப்படியே நாமல்லாம் ரவுண்டு கட்டி பொலம்ப வேண்டியதுதான்...........

ஜி said...

//ஆன்சைட் ஆளுங்க ஆப்படிப்பாங்களேனு //

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... இங்கன வந்தாதான் தெரியும்.... கிளையண்ட் இத பண்ணுனு சொல்ல, அத ஆஃப்ஸோர் ஆளுங்க பண்ண முடியாதுன்னு சொல்ல, அத கிளயண்ட் கிட்ட பண்ண முடியாதுன்னு சொல்ல முடியாம, எக்ஸ்ட்ராவா ரெண்டு மூனு பிட்டப் போட்டு ஒருவழியா சொன்னா, அவன் இதுகூடா பண்ண முடியாதான்னு நம்ம டேமேஜர்கிட்டப் போட்டுக் கொடுக்க... டேமேஜர் நம்மள கிழிக்க, நாம ஆஃப்ஸோர கைகாட்ட, ஆஃப்ஸோர் மேனேஜர் அங்கவுள்ள மக்களுக்கு சப்போர்ட்டா குரல் கொடுக்க... ரெண்டு பக்கத்துலையும் அடி வாங்கிக்கிட்டு இருக்குறவங்கதான் ஆன்ஸைட் மக்கள்.. நீங்க எப்படி அவங்கள தப்பா சொல்லலாம்...

:)))))))))
(ஸ்மைலிய சீரியஸா எடுத்துக்கக் கூடாது..)

ஜி said...

எனக்குக்கூட "ஏக் காவ்மே.. ஏக் கிஸான் ரகு தாத்தா..." தான்...

தனிப்பதிவா அப்புறம் போட்டுடுவோம்...

G.Ragavan said...

எனக்கும் இந்த இந்தியெல்லாம் தெரியாது. பந்திதான் தெரியும். கர்நாடகா வந்தப்புறந்தான் தெரியும் கொடகுல பந்தின்னா பன்னியாம். கன்னடத்துல ஹந்தின்னா பன்னியாம். அப்பவே ஹிந்தியும் வேணாம் ஹந்தியும் வேணாம்னு ஒதுங்குனவந்தான்.

ஒங்க கம்பெனி சட்டதிட்டங்களின் படி....அலுவலகப் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். இல்லைன்னா நீங்க ஒங்க மனிதவள மேம்பாடு கிட்ட புகார் கொடுக்கலாம். எதுவும் உதவி வேணும்னா சொல்லுங்க. நான் செய்றேன். (புகார்னதும் ஓடி வந்துருவீங்களேன்னு கேக்குறது புரியுது)

கதிர் said...

இங்க துபாயிலயும் இதே பிரச்சினை எனக்கு :((

என்னவோ இந்த நாட்டுல இந்திதான் தேசிய மொழின்னு அறிவிச்ச மாதிரி இவனுங்க இந்தில பேசுவானுங்க.
என்கிட்டலாம் எவனாச்சும் இந்தில பேசினான்னா நான் தமிழ்ல பதில் சொல்லுவேன்.

ஹிந்தி தெரியாதான்னு கேட்டான்னு வைங்க?

ஏண்டா உனுக்கு தமிழ் தெரியாதான்னு நான் கேப்பேன்!

இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா அடங்கிடுவானுங்க!

ஏதொ உலகத்துலயே இந்தி மட்டும்தான் மொழின்னு நம்மள குத்தலா பாக்குறான் பாருங்க அவன வெரட்டி அடிக்கணும்.

கதிர் said...

//எனக்குக்கூட "ஏக் காவ்மே.. ஏக் கிஸான் ரகு தாத்தா..." தான்...//

ரஹ...
ரஹ...

எங்க சொல்லு பாப்போம்.

CVR said...

ஹ ஹா!!
அப்போ கடைசி வரைக்கும் என்ன சொல்லறோம்னே தெரியாம சொல்லிக்கிட்டு இருந்தீங்களா??
ஏதாவது சந்தேகம்னா என்ன கேளுங்க,எங்க அம்மா ஹிந்தி டீச்சர்!!(அவங்க கிட்ட கேட்டு சொல்வேன்னுசொல்ல வந்தேன் ஹி ஹி)

அது யாரு ஹிந்தி தெரியலனா இந்தியனா இல்லையான்னு கேள்வி கேட்டது!! என் கையில கெடைச்சா கைமா பண்ணிடுவேன்.

பை த வே ஆன்சைட் அவலங்கள் பத்தி ஜி சொன்னத நான் முழுமையாக வரவேற்கிறேன்.

கோபிநாத் said...

எனக்கும் தான் இந்த இந்தி தெரியாது..

அதுவும் இங்க (Sharjah, Dubai) ரொம்ப கஷ்டம் சுத்தி சுத்தி வூடுக்கட்டி அடிப்பானுங்க பாருங்க :((

போதாகுறைக்கு நம்ம பக்கத்து நாட்டு காரனுங்க தொல்லை வேற..

அட போங்கடன்னு இப்ப எல்லாத்துக்கும் எதிர்த்து பேச ஆரம்பிச்சாச்சி..

கோபிநாத் said...

\\//எனக்குக்கூட "ஏக் காவ்மே.. ஏக் கிஸான் ரகு தாத்தா..." தான்...//

ரஹ...
ரஹ...

எங்க சொல்லு பாப்போம். \\

ரகு தாத்தா..

Anonymous said...

you hav got a terrific sense of humour arasi...

some of the sentences...

//நமக்குதான் இந்த மானப் பிரச்சினை எல்லாம் தூங்கி எழுந்தா சரியாப் போயிடுமே//

//ஓட்டின ஓட்ட நான் உக்காந்து வில்லுப்பாட்டாதான் பாடணும்//

//காவிரி கலவரமெல்லாம் எனக்குள்ளதான் ஆச்சு//

well...keep posting articles of this kind... best of luck...

அபி அப்பா said...

//என்னவோ இந்த நாட்டுல இந்திதான் தேசிய மொழின்னு அறிவிச்ச மாதிரி இவனுங்க இந்தில பேசுவானுங்க.
என்கிட்டலாம் எவனாச்சும் இந்தில பேசினான்னா நான் தமிழ்ல பதில் சொல்லுவேன். //

இல்ல இல்ல 'தம்பி' நல்லா இந்தி பேசுவார். நேத்திக்கு நா அவர்கிட்ட போனில் பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ அவர் ஒரு ஹோட்டலில் இருந்தார். அப்ப சர்வர்கிட்ட ஹிந்தில order கொடுத்தத என் ஒரு காதால கேட்டேன்.(ஒரு காதிலதான போன வைக்க முடியும்)

சுந்தர் / Sundar said...

எனது பின்னூட்ட்ம் ..
இங்கு பதிவாக .அதுவும் சுட்டது

இம்சை அரசி said...

// //ஆன்சைட் ஆளுங்க ஆப்படிப்பாங்களேனு //

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... இங்கன வந்தாதான் தெரியும்.... கிளையண்ட் இத பண்ணுனு சொல்ல, அத ஆஃப்ஸோர் ஆளுங்க பண்ண முடியாதுன்னு சொல்ல, அத கிளயண்ட் கிட்ட பண்ண முடியாதுன்னு சொல்ல முடியாம, எக்ஸ்ட்ராவா ரெண்டு மூனு பிட்டப் போட்டு ஒருவழியா சொன்னா, அவன் இதுகூடா பண்ண முடியாதான்னு நம்ம டேமேஜர்கிட்டப் போட்டுக் கொடுக்க... டேமேஜர் நம்மள கிழிக்க, நாம ஆஃப்ஸோர கைகாட்ட, ஆஃப்ஸோர் மேனேஜர் அங்கவுள்ள மக்களுக்கு சப்போர்ட்டா குரல் கொடுக்க... ரெண்டு பக்கத்துலையும் அடி வாங்கிக்கிட்டு இருக்குறவங்கதான் ஆன்ஸைட் மக்கள்.. நீங்க எப்படி அவங்கள தப்பா சொல்லலாம்...

:)))))))))
(ஸ்மைலிய சீரியஸா எடுத்துக்கக் கூடாது..)
//

ஆன்சைட்ன உடனே சிங்கம் சீறி எழுந்துட்டு வந்துடுச்சாக்கும் :)))

நான் என்ன சொல்ல வந்தா எல்லாரும் கடைசில ரூட் மாறி எங்க போயி நிக்கறீங்க???

எங்க ஆன்சைட் கோ-ஆர்டினேட்டர் தங்கம்ப்பா. அவர நான் குறை சொல்லவே இல்ல. Spec-ஐ படிக்காம போனா சொல்லதான செய்வாங்க? அதைதான சொல்லியிருக்கேன். எதும் தப்பா சொல்லிருக்கேனா என்ன??

இம்சை அரசி said...

// ஜி said...
எனக்குக்கூட "ஏக் காவ்மே.. ஏக் கிஸான் ரகு தாத்தா..." தான்...

தனிப்பதிவா அப்புறம் போட்டுடுவோம்...
//

நான் மட்டும்தான் இப்படினு நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்.

நம்ம மக்கா அல்லாரும் இப்படிதானு தெரிஞ்ச உடனே ஃபீலிங் எல்லாம் பறந்து போயிடுச்சு :)))

இம்சை அரசி said...

// G.Ragavan said...
எனக்கும் இந்த இந்தியெல்லாம் தெரியாது. பந்திதான் தெரியும். கர்நாடகா வந்தப்புறந்தான் தெரியும் கொடகுல பந்தின்னா பன்னியாம். கன்னடத்துல ஹந்தின்னா பன்னியாம். அப்பவே ஹிந்தியும் வேணாம் ஹந்தியும் வேணாம்னு ஒதுங்குனவந்தான்.

ஒங்க கம்பெனி சட்டதிட்டங்களின் படி....அலுவலகப் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். இல்லைன்னா நீங்க ஒங்க மனிதவள மேம்பாடு கிட்ட புகார் கொடுக்கலாம். எதுவும் உதவி வேணும்னா சொல்லுங்க. நான் செய்றேன்.
//

எங்க lead ரொம்ப தங்கம் ராகவன்.
அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல :))))

//(புகார்னதும் ஓடி வந்துருவீங்களேன்னு கேக்குறது புரியுது)
//

அப்படியெல்லாம் கேக்க மாட்டேன்.

புகார்னதும் விழுந்தடிச்சு ஓடி வந்துருவீங்களே!!!!!!!

இம்சை அரசி said...

// தம்பி said...
இங்க துபாயிலயும் இதே பிரச்சினை எனக்கு :((

என்னவோ இந்த நாட்டுல இந்திதான் தேசிய மொழின்னு அறிவிச்ச மாதிரி இவனுங்க இந்தில பேசுவானுங்க.
என்கிட்டலாம் எவனாச்சும் இந்தில பேசினான்னா நான் தமிழ்ல பதில் சொல்லுவேன்.

ஹிந்தி தெரியாதான்னு கேட்டான்னு வைங்க?

ஏண்டா உனுக்கு தமிழ் தெரியாதான்னு நான் கேப்பேன்!

இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா அடங்கிடுவானுங்க!

ஏதொ உலகத்துலயே இந்தி மட்டும்தான் மொழின்னு நம்மள குத்தலா பாக்குறான் பாருங்க அவன வெரட்டி அடிக்கணும்.
//

இருந்தாலும் தேசிய மொழி தெரிஞ்சிக்காம இருக்கறது நம்ம தப்புதானங்க தம்பி???

நான் ரொம்ப அனுபவப்பட்டுட்டேன். மொதல்ல எல்லாம் ரொம்ப அவமானமா ஃபீல் பண்ணினேன். ஹ்ம்ம்ம். என்ன பண்றது.........

இம்சை அரசி said...

// தம்பி said...
//எனக்குக்கூட "ஏக் காவ்மே.. ஏக் கிஸான் ரகு தாத்தா..." தான்...//

ரஹ...
ரஹ...

எங்க சொல்லு பாப்போம்.
//

தாதா...
தாதா...

எங்க சொல்லுங்க பாப்போம்.

இம்சை அரசி said...

// CVR said...
ஹ ஹா!!
அப்போ கடைசி வரைக்கும் என்ன சொல்லறோம்னே தெரியாம சொல்லிக்கிட்டு இருந்தீங்களா??
ஏதாவது சந்தேகம்னா என்ன கேளுங்க,எங்க அம்மா ஹிந்தி டீச்சர்!!(அவங்க கிட்ட கேட்டு சொல்வேன்னுசொல்ல வந்தேன் ஹி ஹி)

அது யாரு ஹிந்தி தெரியலனா இந்தியனா இல்லையான்னு கேள்வி கேட்டது!! என் கையில கெடைச்சா கைமா பண்ணிடுவேன்.
//

அவன் பூனால இருக்கான். அட்ரஸ் வேணா தரவா???

அவங்க அப்பா மும்பைல பெரிய தாதானு கூட கேள்விப்பட்டேன் :)))

//பை த வே ஆன்சைட் அவலங்கள் பத்தி ஜி சொன்னத நான் முழுமையாக வரவேற்கிறேன்.
//

பட்டிமன்றம் நடத்திடுவோமா??? :)))

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
எனக்கும் தான் இந்த இந்தி தெரியாது..

அதுவும் இங்க (Sharjah, Dubai) ரொம்ப கஷ்டம் சுத்தி சுத்தி வூடுக்கட்டி அடிப்பானுங்க பாருங்க :((

போதாகுறைக்கு நம்ம பக்கத்து நாட்டு காரனுங்க தொல்லை வேற..

அட போங்கடன்னு இப்ப எல்லாத்துக்கும் எதிர்த்து பேச ஆரம்பிச்சாச்சி..
//

தெலுங்கு, மலையாளம், கன்னட மக்கா அல்லாரும் ஹிந்திய தெரிஞ்சு வச்சிருக்காங்க. நாம மட்டும்தான் இப்படி இருக்கோம்.

ஹிந்தி ஒழிக ஒழிகனு சொன்னவங்க வாரிசு எல்லாம் ஹிந்தில பொளந்து கட்டிட்டு இருக்க நாம இப்படி உக்காந்து பொலம்பி தள்ளிட்டு இருக்கோம்.

அபி அப்பா said...

//ஹிந்தி ஒழிக ஒழிகனு சொன்னவங்க வாரிசு எல்லாம் ஹிந்தில பொளந்து கட்டிட்டு இருக்க நாம இப்படி உக்காந்து பொலம்பி தள்ளிட்டு இருக்கோம்.//

வாங்க வாங்க உங்கள லக்கிட்டயே சொல்லி நல்லா மாட்டிவுடுறன்

CVR said...

நான் என்ன சொல்ல வந்தேன்னா!! ஹிந்தி தெரியாட்டாலும் எல்லோரும் இந்தியர்கள்தான் -னு அன்பா சொல்ல வந்தேன்!!!! (அவரு அப்பா ஒரு தாதா-னு ஏன் முன்னாடியே சொல்லல??? :P)

//பட்டிமன்றம் நடத்திடுவோமா???

நான் ரெடி!!!! :D

அபி அப்பா said...

//இல்ல இல்ல 'தம்பி' நல்லா இந்தி பேசுவார். நேத்திக்கு நா அவர்கிட்ட போனில் பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ அவர் ஒரு ஹோட்டலில் இருந்தார். அப்ப சர்வர்கிட்ட ஹிந்தில order கொடுத்தத என் ஒரு காதால கேட்டேன்.(ஒரு காதிலதான போன வைக்க முடியும்)//

அது இன்னான்னு கேக்கலியே...அதனால சொல்லமாட்டனே!!! தம்பி கொண்றுவார்.

அபி அப்பா said...
This comment has been removed by a blog administrator.
இம்சை அரசி said...

// veerakumar said...
you hav got a terrific sense of humour arasi...

some of the sentences...

//நமக்குதான் இந்த மானப் பிரச்சினை எல்லாம் தூங்கி எழுந்தா சரியாப் போயிடுமே//

//ஓட்டின ஓட்ட நான் உக்காந்து வில்லுப்பாட்டாதான் பாடணும்//

//காவிரி கலவரமெல்லாம் எனக்குள்ளதான் ஆச்சு//

well...keep posting articles of this kind... best of luck...
//

thanks a lot Veerakumar :))))

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
//என்னவோ இந்த நாட்டுல இந்திதான் தேசிய மொழின்னு அறிவிச்ச மாதிரி இவனுங்க இந்தில பேசுவானுங்க.
என்கிட்டலாம் எவனாச்சும் இந்தில பேசினான்னா நான் தமிழ்ல பதில் சொல்லுவேன். //

இல்ல இல்ல 'தம்பி' நல்லா இந்தி பேசுவார். நேத்திக்கு நா அவர்கிட்ட போனில் பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ அவர் ஒரு ஹோட்டலில் இருந்தார். அப்ப சர்வர்கிட்ட ஹிந்தில order கொடுத்தத என் ஒரு காதால கேட்டேன்.(ஒரு காதிலதான போன வைக்க முடியும்)
//

தம்பி நல்லா நோட் பண்ணிக்கங்க.

இதைதான் பூனைய மடில கட்டிட்டு சகுனம் பாக்கறதுனு சொல்றாங்களோ???

(அபி அப்பா... என்னையவா ஓட்டறீங்க??? நல்லா மாட்டினிங்களா...)

இம்சை அரசி said...

// சுந்தர் / Sundar said...
எனது பின்னூட்ட்ம் ..
இங்கு பதிவாக .அதுவும் சுட்டது

//

பின்னறீங்க.... ஹ்ம்ம்ம்ம்....

பின்னூட்டத்தையே சுட்டு போடுவீங்கனு not(முஜே தோ பெகலி சே பத்தா ஹோ)

(சாரிங்க. எனக்கு தெரியாதுன்ற வார்த்தைக்கு ஹிந்தில தெரியாது) :)))

இம்சை அரசி said...

// CVR said...
நான் என்ன சொல்ல வந்தேன்னா!! ஹிந்தி தெரியாட்டாலும் எல்லோரும் இந்தியர்கள்தான் -னு அன்பா சொல்ல வந்தேன்!!!! (அவரு அப்பா ஒரு தாதா-னு ஏன் முன்னாடியே சொல்லல??? :P)
//

ஓ! அப்படியா?

அவங்க அப்பா தாதா எல்லாம் இல்ல. அவர் ஏதோ சாஃப்ட்வேர் என்ஜினியராம். தப்பா டைப் பண்ணிட்டேன் போல :)))

//பட்டிமன்றம் நடத்திடுவோமா???

நான் ரெடி!!!! :D

//

நமக்கு உங்கள மாதிரி பெரிய ஆளுங்களோட பேசற அளவுக்கு வெவரம் பத்தாதுங்ணா :)))

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
//ஹிந்தி ஒழிக ஒழிகனு சொன்னவங்க வாரிசு எல்லாம் ஹிந்தில பொளந்து கட்டிட்டு இருக்க நாம இப்படி உக்காந்து பொலம்பி தள்ளிட்டு இருக்கோம்.//

வாங்க வாங்க உங்கள லக்கிட்டயே சொல்லி நல்லா மாட்டிவுடுறன்
//

லக்கிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்???

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
//இல்ல இல்ல 'தம்பி' நல்லா இந்தி பேசுவார். நேத்திக்கு நா அவர்கிட்ட போனில் பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ அவர் ஒரு ஹோட்டலில் இருந்தார். அப்ப சர்வர்கிட்ட ஹிந்தில order கொடுத்தத என் ஒரு காதால கேட்டேன்.(ஒரு காதிலதான போன வைக்க முடியும்)//

அது இன்னான்னு கேக்கலியே...அதனால சொல்லமாட்டனே!!! தம்பி கொண்றுவார்.
//

நீங்க எல்லாம் இப்படி சொல்ல மாட்டேனு சொல்லும்போதே அது என்னவா இருக்கும்னு எங்களுக்கு தெரியாதா என்ன???

ஜி said...

//எங்க ஆன்சைட் கோ-ஆர்டினேட்டர் தங்கம்ப்பா. அவர நான் குறை சொல்லவே இல்ல. Spec-ஐ படிக்காம போனா சொல்லதான செய்வாங்க? அதைதான சொல்லியிருக்கேன். எதும் தப்பா சொல்லிருக்கேனா என்ன??//

சும்மாக்காச்சிக்குதான்.... அதுக்குத்தான் ஸ்மைலி போட்டிருந்தேனே!!!!

எங்க ஆ.கோ (ஆர்வ கோளாறு இல்லீங்க) கூட எங்களுக்கு 5000 ருபாய் அனுப்பி ரெண்டு தடவ டீரீட் எடுத்துக்கச் சொன்னாரு :)))

ஜி said...

//இருந்தாலும் தேசிய மொழி தெரிஞ்சிக்காம இருக்கறது நம்ம தப்புதானங்க தம்பி???//

ஹிந்தி தேசிய மொழி இல்லை... அது மத்திய அரசின் அலுவலக மொழி அவ்வளவே.. மேலும் விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.

நாங்க ஹிந்தி ஏன் படிக்கல்ங்கறதுக்கு ரீஸன் வச்சிருக்கோம்ல ;))

கப்பி | Kappi said...

டெல்லியில் என்னையும் ஒரு ஆட்டோகாரர் இப்படி கேட்டிருக்கார்...நான் அவர் கூட ஒரு பெரிய சண்டையே போட்டுட்டு வந்தேன்..இந்த மாதிரி கேக்கறவனுங்களை அப்படியே அறையனும்போல இருக்கும்..

அதுக்காக இப்படி அவசரப்பட்டு சபதம் எடுக்கலாமா? என்ன இது கெட்டப் பழக்கம்? இதுல இந்த சபதத்தை முடிக்கறேன்னு வேற 'ஏக் அவுர்' சபதம் எடுத்திருக்கீங்க :)))

அபி அப்பா said...

//நீங்க எல்லாம் இப்படி சொல்ல மாட்டேனு சொல்லும்போதே அது என்னவா இருக்கும்னு எங்களுக்கு தெரியாதா என்ன??? //

நானே சொல்லிடறேன்.
அவர் சர்வர்கிட்டே "ச்சாயா, ச்சாயா"ன்னு கூவிட்டு இருந்தாரு.

அதுக்கு நா'தம்பி நல்லா ஹிந்தி பேசுறியே'ன்னு கேட்டேன்.

'நா எப்போ பேசினேன்'ன்னு சொன்னாறு.

'அடப்பாவி ச்சாயா ச்சாயான்னியே அது என்ன ஹிந்தி தான'ன்னு நா கேக்க அவரு 'அடப்பாவமே அப்ப ச்சாயான்னா மலயாளம் இல்லியா'ன்னு கேக்க அப்புறம் நாதான் அவரை கரெக்ட் பண்ணினேன்.

'தம்பி ச்சாயாங்குறது ஹிந்தி, மலையாளத்துல அதுக்கு பேரு TEA" ன்னு.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

தேசிய மொழியாகிய இந்தியை நாம் கற்க வேண்டியது அவசியம்தான்...அதற்காக இந்தி தெரியவில்லையெனில் நம்மை அவர்கள் இழிவாக நினைப்பதுதான் கொஞ்சம் சங்கடமாக உள்ளது...கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியாயிற்றே! கொஞ்சம் கோபமும் வருகிறது.....

இம்சை அரசி said...

// ஜி said...
//எங்க ஆன்சைட் கோ-ஆர்டினேட்டர் தங்கம்ப்பா. அவர நான் குறை சொல்லவே இல்ல. Spec-ஐ படிக்காம போனா சொல்லதான செய்வாங்க? அதைதான சொல்லியிருக்கேன். எதும் தப்பா சொல்லிருக்கேனா என்ன??//

சும்மாக்காச்சிக்குதான்.... அதுக்குத்தான் ஸ்மைலி போட்டிருந்தேனே!!!!

எங்க ஆ.கோ (ஆர்வ கோளாறு இல்லீங்க) கூட எங்களுக்கு 5000 ருபாய் அனுப்பி ரெண்டு தடவ டீரீட் எடுத்துக்கச் சொன்னாரு :)))
//

நீங்க எவ்ளோ அனுப்பினிங்க உங்க டீமுக்கு?

இம்சை அரசி said...

// ஜி said...
//இருந்தாலும் தேசிய மொழி தெரிஞ்சிக்காம இருக்கறது நம்ம தப்புதானங்க தம்பி???//

ஹிந்தி தேசிய மொழி இல்லை... அது மத்திய அரசின் அலுவலக மொழி அவ்வளவே.. மேலும் விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.

நாங்க ஹிந்தி ஏன் படிக்கல்ங்கறதுக்கு ரீஸன் வச்சிருக்கோம்ல ;))
//

ஆஹா... இப்படி ஐடியா குடுக்க ஆளில்லாமதான் என் பொழப்பு இப்படி நாறிப் போச்சு :(

இம்சை அரசி said...

// கப்பி பய said...
டெல்லியில் என்னையும் ஒரு ஆட்டோகாரர் இப்படி கேட்டிருக்கார்...நான் அவர் கூட ஒரு பெரிய சண்டையே போட்டுட்டு வந்தேன்..இந்த மாதிரி கேக்கறவனுங்களை அப்படியே அறையனும்போல இருக்கும்..

அதுக்காக இப்படி அவசரப்பட்டு சபதம் எடுக்கலாமா? என்ன இது கெட்டப் பழக்கம்? இதுல இந்த சபதத்தை முடிக்கறேன்னு வேற 'ஏக் அவுர்' சபதம் எடுத்திருக்கீங்க :)))
//

அதான் // நமக்குதான் இந்த மானப் பிரச்சினை எல்லாம் தூங்கி எழுந்தா சரியாப் போயிடுமே // நம்ம கொள்கைய போட்டுட்டேனே.

பாக்கலையா நீங்க???

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
//நீங்க எல்லாம் இப்படி சொல்ல மாட்டேனு சொல்லும்போதே அது என்னவா இருக்கும்னு எங்களுக்கு தெரியாதா என்ன??? //

நானே சொல்லிடறேன்.
அவர் சர்வர்கிட்டே "ச்சாயா, ச்சாயா"ன்னு கூவிட்டு இருந்தாரு.

அதுக்கு நா'தம்பி நல்லா ஹிந்தி பேசுறியே'ன்னு கேட்டேன்.

'நா எப்போ பேசினேன்'ன்னு சொன்னாறு.

'அடப்பாவி ச்சாயா ச்சாயான்னியே அது என்ன ஹிந்தி தான'ன்னு நா கேக்க அவரு 'அடப்பாவமே அப்ப ச்சாயான்னா மலயாளம் இல்லியா'ன்னு கேக்க அப்புறம் நாதான் அவரை கரெக்ட் பண்ணினேன்.

'தம்பி ச்சாயாங்குறது ஹிந்தி, மலையாளத்துல அதுக்கு பேரு TEA" ன்னு.
//

மலையாளத்துலதான் அதுக்கு பேரு சாயா.

அய்யோ அய்யோ....

இது கூட தெரியலை. அபி குட்டி கை கொட்டி சிரிக்குது பாருங்க :)))

இம்சை அரசி said...

// சண் ஷிவா said...
தேசிய மொழியாகிய இந்தியை நாம் கற்க வேண்டியது அவசியம்தான்...அதற்காக இந்தி தெரியவில்லையெனில் நம்மை அவர்கள் இழிவாக நினைப்பதுதான் கொஞ்சம் சங்கடமாக உள்ளது...கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியாயிற்றே! கொஞ்சம் கோபமும் வருகிறது.....
//

எனக்கு என் மேல.... இல்ல இல்ல எங்க அம்மா அப்பா மேலதான் கோபமோ கோபம் அப்படியொரு கோபம். அன்னைக்கே ஃபோனப் போட்டு நல்லா திட்டி வச்சேன்

தனசேகர் said...

//தேசிய மொழியாகிய இந்தியை நாம் கற்க வேண்டியது அவசியம்தான்//

யார் சொன்னது இந்தி நமது தேசிய மொழின்னு?? அப்படி யாரவது சொன்னா .. நீங்க நம்பாதீங்க...மூஞ்சியில குத்துங்க.... ;)

நம் நாட்டுக்கு தேசிய மொழியே கிடையாது ... வேணும்னா சொல்லுங்க... அதப்பத்தி மெயில் அனுப்பறேன் ..

ஹிந்தி பாதிப்பு இந்தியாவில இல்ல அமெரிக்காவிலும் தான் .. பல பேர் வட இந்தியர்கள்.. அதுனால்.. ஹிந்தி தெரியாதது ஒரு குத்தமே இல்ல்...

ஜி said...

// இம்சை அரசி said...
நீங்க எவ்ளோ அனுப்பினிங்க உங்க டீமுக்கு? //

அதெல்லாம் சிதம்பர ரகசியம். மத்த ஆ.கோ. அனுப்புனாங்கன்னா நாமளும் அனுப்பணுமா என்ன? நம்ம கொஞ்சம் வித்தியாசமா இருக்க வேண்டாமா?

ஜி said...

// இம்சை அரசி said...
ஆஹா... இப்படி ஐடியா குடுக்க ஆளில்லாமதான் என் பொழப்பு இப்படி நாறிப் போச்சு :( //

நீங்க உங்க கம்பெனியோட பொது மடல் (புல்லட்டின் போர்டுதான்) பாக்குறது இல்லையா... அதுல கண்டிப்பா, இது மாதிரி ஏதாவது சண்டை வந்திருக்குமே..

ஜி said...

அரை சதம் போடுறதுக்கு இன்னும் 7 அடிக்கணுமே... ஒரு ஐடியா கொடுங்க இம்சை.. நீங்க எத்தன பேருக்கு ஐடியா கொடுத்திருக்கீங்க ;)

ஜி said...

//எங்க ஆன்சைட் கோ-ஆர்டினேட்டர் தங்கம்ப்பா.//

//எங்க lead ரொம்ப தங்கம் ராகவன்.//

என்ன இம்சை.. உண்மையிலேயே இவங்கெல்லாம் தங்கமா? இல்ல.. ஏதாவது அப்ரைஸல் பீரியடா?

ஜி said...

இன்னும் 5 இருக்குதா? போட்டுடலாமா? வேண்டாமா? சொல்லுங்க இம்சை...

ஜி said...

காசா? பணமா? போட்டுடலாம்.. கரெக்டுதானே நான் சொல்றது....

ஜி said...

நானும் இப்படித்தான்.. கம்பெனில சேந்த புதுசுல, டூர்ணு கூர்க் போணோம். என்னத் தவிற எல்லாருக்கும் ஹிந்தி தெரியும். நான் அப்ப பட்ட பாடு இருக்குதே... அன்னைல இருந்து நான் எங்க டீம்ல ஒரு பய கூடையும் பேசுறது இல்ல. எங்க லீட் கூட, அப்ரைஸல்ல, "ஏன் டா எங்க கூடெல்லாம் பேச மாட்டேங்குற'ன்னு அட்வைஸ்லாம் பண்ணாருன்னா பாத்துக்கோங்களேன்...

ஜி said...

சரி... வந்ததோட வந்துட்டேன்... 49 புடிச்சிக்கோங்க...

ஜி said...

ஒரு சோடா கொண்டு வாங்கப்பா... கமெண்ட் போட்டு போட்டு கைலாம் வலிக்குது... யாருப்பா அது ஸ்கோர் போர்டுல, இன்னும் 49 ன்னே போட்டிருக்குறது....

இம்சை.. ஹெல்மட்ட கழட்டிட்டு, மட்டைய மேல பாத்து தூக்கணும். அப்பதான். 50 போட்டது ஆடியன்ஸுக்குத் தெரியும்...

Unknown said...

Neenga Eluthi Irukkara style , rommba nalla irukku. Its very nice entertainment during working hours.

Appaavi said...

//Its very nice entertainment during working hours.//

Hello Gobi... Intha statementukaaka
unka company இம்சை அரசி maela case file panna poraanga paarunga..

இம்சை அரசி said...

// Dhanasekar B said...
//தேசிய மொழியாகிய இந்தியை நாம் கற்க வேண்டியது அவசியம்தான்//

யார் சொன்னது இந்தி நமது தேசிய மொழின்னு?? அப்படி யாரவது சொன்னா .. நீங்க நம்பாதீங்க...மூஞ்சியில குத்துங்க.... ;)

நம் நாட்டுக்கு தேசிய மொழியே கிடையாது ... வேணும்னா சொல்லுங்க... அதப்பத்தி மெயில் அனுப்பறேன் ..

ஹிந்தி பாதிப்பு இந்தியாவில இல்ல அமெரிக்காவிலும் தான் .. பல பேர் வட இந்தியர்கள்.. அதுனால்.. ஹிந்தி தெரியாதது ஒரு குத்தமே இல்ல்...
//

இப்பவெல்லாம் நான் ஃபீல் பண்றதே இல்லைங்க Dhanasekar...

இவ்ளோ care எடுத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி :)))

இம்சை அரசி said...

// ஜி said...
// இம்சை அரசி said...
நீங்க எவ்ளோ அனுப்பினிங்க உங்க டீமுக்கு? //

அதெல்லாம் சிதம்பர ரகசியம். மத்த ஆ.கோ. அனுப்புனாங்கன்னா நாமளும் அனுப்பணுமா என்ன? நம்ம கொஞ்சம் வித்தியாசமா இருக்க வேண்டாமா?
//

அப்பாடி!! அப்பவே நினைச்சேன். என் நம்பிக்கைய காப்பாத்திட்டிங்க :)))

இம்சை அரசி said...

// ஜி said...
// இம்சை அரசி said...
ஆஹா... இப்படி ஐடியா குடுக்க ஆளில்லாமதான் என் பொழப்பு இப்படி நாறிப் போச்சு :( //

நீங்க உங்க கம்பெனியோட பொது மடல் (புல்லட்டின் போர்டுதான்) பாக்குறது இல்லையா... அதுல கண்டிப்பா, இது மாதிரி ஏதாவது சண்டை வந்திருக்குமே..
//

இப்பவெல்லாம் என் blog-ஐ பாக்கவே நேரம் கிடைக்க மாட்டேன்றது. இதுல எங்க இருந்து போய் நான் bullettin board பாக்கறது

இம்சை அரசி said...

// ஜி said...
//எங்க ஆன்சைட் கோ-ஆர்டினேட்டர் தங்கம்ப்பா.//

//எங்க lead ரொம்ப தங்கம் ராகவன்.//

என்ன இம்சை.. உண்மையிலேயே இவங்கெல்லாம் தங்கமா? இல்ல.. ஏதாவது அப்ரைஸல் பீரியடா?
//

இப்பதான் 6 மாசம் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள எங்க இருந்து அப்ரைஸல் வரும்?

இம்சை அரசி said...

// ஜி said...
ஒரு சோடா கொண்டு வாங்கப்பா... கமெண்ட் போட்டு போட்டு கைலாம் வலிக்குது... யாருப்பா அது ஸ்கோர் போர்டுல, இன்னும் 49 ன்னே போட்டிருக்குறது....

இம்சை.. ஹெல்மட்ட கழட்டிட்டு, மட்டைய மேல பாத்து தூக்கணும். அப்பதான். 50 போட்டது ஆடியன்ஸுக்குத் தெரியும்...
//

ஒரு வழியா 50 போட்டு சாதனை பண்ணிட்டிங்க. ஹ்ம்ம்ம்ம். தேங்க் யூ :)))

இம்சை அரசி said...

// Gopi said...
Neenga Eluthi Irukkara style , rommba nalla irukku. Its very nice entertainment during working hours.
//

thanks a lot Gopi :)))

இம்சை அரசி said...

// Appaavi said...
//Its very nice entertainment during working hours.//

Hello Gobi... Intha statementukaaka
unka company இம்சை அரசி maela case file panna poraanga paarunga..
//

இந்த விளயாட்டுக்கு நான் வரல. என்னை விட்டுடுங்க ;))

Nazeer Ahamed said...

hi imsai arasi,
kitta thatta enakum ithemathi exp iruku. naan 6 months Pune la irunthean. etho konjam understand pannipean. mathapadi hindi kum enakum 7-m porutham. irunthalum hindi therinjikanum nu 3 film theatre la poyu parthaen but no use, ellam sirikum pothu naan mattum (hindi therinja) friend kitta yenda ellorum sirikiranga nu asttu thanama kepean.

ok arsi enaku oru help venume.
ivlo periya post tamil la eppidi type panneenga.naanum online editors search panninaen but user friendly ya illa. please help on this thanks.

imm ippo chennai vanthutaen hindi film TV la kooda ippo parkurathu illa.

இம்சை அரசி said...

Hi Nazeer,

Here is the URL for downloading e-kalappai
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3

download n run the exe. after this press alt+2 for Tamil keyboard. alt+1 for English keyboard.

Nazeer Ahamed said...

//Hi Nazeer,

Here is the URL for downloading e-kalappai
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3

download n run the exe. after this press alt+2 for Tamil keyboard. alt+1 for English keyboard.
//
try this http://www.quillpad.com/tamil/
this tool is very good, no need to install anything, we can access like web

இம்சை அரசி said...

// Azhagiya Tamizh Magan said...
try this http://www.quillpad.com/tamil/
this tool is very good, no need to install anything, we can access like web
//

thank u Azhagiya Tamizh Magan...

but v r having limited net access in office. so v cant use this at anytime :)))

ஸ்ரீ said...

அட என்னங்க இது. எனக்கு கொஞ்சம் ஹிந்தி தெரியும் ஆனா நீங்க சொல்ல வந்த "முஜே தோ பெகலி பத்தா தா" கடைசி வரைக்கும் புரியலை. அது தாங்க உங்களுக்கு கிடைச்ச வெற்றி :)

எச்சுச்மி அது "பெஹலி". இந்நேரம் கிந்தி புலி ஆகியிருப்பீங் தெரிஞ்சிருக்கும்.

Unknown said...

எனக்கு கூட "தோடா தோடா மாலும் ஹை" தான்.....
நம்மளோட இந்த நிலமைக்கு அரசியல்வாதிகள் தான் காரணம்...அவங்க பசங்க பேரனுங்க மட்டும் நல்லா ஹிந்தி படிச்சு உருப்படுவாங்க!!!! :(((
அப்பறம் அரசி உங்களுக்கு கன்னாபின்னான்னு காமிடி வொர்க்கௌட் ஆகுது!!!
எல்லா போஸ்டும் சூப்பர்!!!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இவ்ளோ நாளும் "மேரா ஹிந்தி நஹி மாலும்"னு சொல்லிட்டிருந்தேன். இப்போ மாத்தி "தோடா தோடா மாலும்"னு சொல்லிட்டுருக்கேன்.

துரை said...

தமிழகத்தை விட்டு வெளியே போகும் மாணவர்களின் எண்ணிக்கை 5% இருக்கலாம், மீதி 95% மாணவர்கள் தமிழகத்திலேயே தங்கள் பிழைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
அந்த 5% மக்களுக்காக 95% மக்கள் ஏனய்யா இந்தி படிக்கவேண்டும்.
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், ஹிந்தியை தேசிய மொழியாக அறிவிக்க நினைத்தது.... நீங்கள் நினைப்பது போல் தமிழர்களுக்கும் பிற ஹிந்தி அல்லாத மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பை பெருக்க அல்ல..... ஹிந்தி மாநில மக்களுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்த...
பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் மனிதனால் எதையும் செய்ய முடியும், ஏன் மிருகங்களின் பாஷை கூட அவனால் புரிந்து கொள்ள முடியும். எ.கா யானைப்பாகன்.
ஆக இந்தி தெரிந்தால் தான் நம் வாழ்க்கை தரம் உயரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது
பலர் 1960க்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை ஏதோ மிகத்தவறானதாக பார்கின்றனர்
என் சொந்தக்கருத்து என்னவென்றால் அந்த போராட்டத்தால் தமிழகம் இழந்ததைவிட பெற்றதுதான் அதிகம்
எதை இழந்தோம் என நினைக்கிறீர்கள்? மிஞ்சி மிஞ்சி போனால் பல தமிழருக்கு இந்தி தெரியவில்லை அவ்வளவுதானே,
ஆனால் பெற்றது என பார்த்தால்
1. நாம் நம் தமிழ் திரை உலகை இந்தி திரை உலகத்திடமிருந்து காத்துள்ளோம். இன்றும் தமிழ் சினிமாவில் நடிப்பதை இந்தி நடிகர்கள் பெருமையாக கருதுகின்றனர், ஒரு பெஙாலி மொழிப்படத்திலோ, ஓரிய மொழிப்படத்திலோ நடிக்க அந்த மாநிலத்தவர் கூட விரும்ப மாட்டார்கள். காரணம் அவர்கள் தம் தனித்துவத்தை இந்தியிடம் இழந்துவிட்டார்கள்.
2. நம் தமிழ் பத்திரிக்கை உலகை, இலக்கியத்தை , ஊடகத்தை காத்துள்ளோம். இல்லாவிட்டால் இன்று ஆஜ் தக்கும், ஜீ டி.வியும்தான் தமிழர்களின் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும், தமிழ் தொலைக்காட்சிகள் ஒன்று கூட வளர்ந்திருக்காது. நம் பணம் டில்லிக்குதான் போகும் தமிழர்களின் ஊடகங்கள் நசிந்து போயிருக்கும். கலை இலக்கியம் புதினம் எல்லாவற்றிற்கும் இந்த நிலை வந்திருக்கும்
3. அதையெல்லாம் விடுங்கள், இந்தி நுழையயாததால்தான், பலர் ஆங்கிலம் கற்றே ஆக வேண்டிய சூழ்நிலை உருவானது. இன்று தமிழர்கள் கணிணி துறையில் மிளிர அவர்களின் ஆங்கில அறிவு ஒரு முக்கிய காரணம். இன்றும் அந்திராவில் தெலங்கானா பகுதியில் உள்ளவர்களுக்கு இந்தி நன்றாக தெரியும், ஆங்கிலம் சரியாக வராது. அவர்கள் கணிணி துறையில் ராயலசீமா, கிழக்கு ஆந்திரா மக்களை விட பின் தங்கியுள்ளனர். கிழக்கு ஆந்திரா, ராயலசீமாவில் இந்தி தெலங்கான அளவிற்கு இல்லாததால் இந்த வேறுபாடு
4. முக்கியமாக இந்தியை நாம் தடுத்ததால் தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் குறைத்துள்ளோம். அதனால் என்ன என பலர் கேட்கலாம். தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால், இப்போது செய்வதைப்போல மத்திய அரசை மிரட்டி காரியம் சாதிக்க முடியாது. டில்லிதான் மாநிலை அரசை மிரட்டும். நம் பக்கத்தில் இருக்கும் கேரளா ஒரு நல்ல உதாரணம். அவர்களால் பலமுறை மத்திய அரசில் ஒரு மந்திரியை கூட பெற முடியவில்லை, மிரட்டவும் முடியவில்லை, அதனால் நன்மையும் இல்லை. நாம் ஆயிரம்தான் திமுக, அதிமுக வை குறை கூறினாலும். அவர்கள் மத்திய அரசை மிரட்டி மிரட்டி பலவற்றை சாதித்துள்ளனர் என்பதை மறுக்கவே முடியாது. இதுவே தமிழத்தில் காங் ஆட்சி இருந்திருந்தால், சோனியாவின் தாவணியில் அது ஓட்டிக்கொண்டிருக்கும்.
ஏன் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மனம் வைத்தால்தான் தில்லியில் ஒன்று நடக்கும் என்ற நிலை கூட இருந்துள்ளது.
இப்படி எல்லாவிதத்திலும் இந்தி எதிர்ப்பினால் தமிழகம் பெற்றது நன்மையைதான், தீமைகள் வெகு வெகு சிலவே

ஹிந்தி தெரியாதானு யாராவது கிண்டல் செய்தால் அதை அப்படியே கண்டுகாம விட்டுடுங்க அதுதான் நமக்கு நல்லது இல்லை என்றால் அது அவர்களுக்கு சாதகமாக முடிந்துவிடும ஹிந்தியை பாடதிட்டத்தில் சேர்த்திருதால்
மட்டும் நாம பொளந்து கட்டிருப்போம்,அப்பவும் நாம் பேசுற ஹிந்திய கலாய்க்கதான் செய்வானுங்க அப்ப எங்க போய் முட்டிப்பிங்க,அப்படியே எல்லாத்துக்கும் ஹிந்தி தெரிந்தால் மட்டும் பிரச்சனை ஓய்ந்திடுமா இல்லையே அதன் பின் நம்முடைய கலர்ரை, கலாசாரத்தை, பழக்கவழக்கங்களை எல்லாம் நக்கல் செய்வான் அதுக்கும் தி.மு.காவைதான் குறை சொல்விர்கள்
பரிட்சையை எழுதி விட்டு முதலில் தேர்வோமானு நி்னைக்க வேண்டியது, பாஸ் ஆனதுக்கு அப்பறம் 80து மார்க் வந்திருக்க கூடாதா, 90ரு மார்க் வந்திருக்க கூடாதானு ஒரு நப்பாசை வேற, இன்றைக்கு நாம் இவ்வுளவு தூரம் முன்னேறி இருக்கோம்னு சந்தோஷ படுறத விட்டுடு மாறாக குறை சொல்லி அலைகிறிர்கள்!
First of all stop criticizing our former and present leaders like Anna, Kamarajar, M.G.R, Kalingar
they had atleast done to this level,actually we have to appreciate them for making english instead of hindi
if they concentrated on hindi means surely you couldn't find tamilians in high profile jobs
like Engineers, Doctors, Lawyers etc Nor we will doing some sort of odd jobs like others
Also it's not as easy(for a average student) to learn and become expertise in both english and hindi in the mean while we have study Tamil too(if we are not ready to learn our language means
since nobody will learn/respect our language also they will not respect us also)
What the north indian politicians are doing, they will educate their sons/daughters in english medium
and forcing the common people to learn hindi alone eg Nehru family compare to north indian politicians our
tamil polticians are far better
Again back to square 1, why we need 2 align languages one for within india and other for other than india
Every north indians will say Hindi is our national language(This is not true)The truth behind is they trying to learn english but due to the poor education system they are
not able to improve their english, the percentage of english speaking people in tamil nadu
is much higher compare to north indians, they blame us we don't know hindi inorder to degrade us
there by making us dumb, never give room to this kind of incident, Be Bold, confident that will do
i am running out of time so i am hereby finishing by comments
All the best to all tamilians

Anonymous said...

எனக்குக்கூட "ஏக் காவ்மே.. ஏக் கிஸான் ரகு தாத்தா..." தான்...

That Reminds me.. .Pamaran's Padithathum Kizhithathum on Kumudam dated 27-02-08.
read it from

http://www.kumudam.com/magazine/Kumudam/2008-02-27/pg14.php

~Ravi, Bangalore

priyamudanprabu said...

///////////
இங்க துபாயிலயும் இதே பிரச்சினை எனக்கு :((

என்னவோ இந்த நாட்டுல இந்திதான் தேசிய மொழின்னு அறிவிச்ச மாதிரி இவனுங்க இந்தில பேசுவானுங்க.
என்கிட்டலாம் எவனாச்சும் இந்தில பேசினான்னா நான் தமிழ்ல பதில் சொல்லுவேன்.

ஹிந்தி தெரியாதான்னு கேட்டான்னு வைங்க?

ஏண்டா உனுக்கு தமிழ் தெரியாதான்னு நான் கேப்பேன்!

இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா அடங்கிடுவானுங்க!

ஏதொ உலகத்துலயே இந்தி மட்டும்தான் மொழின்னு நம்மள குத்தலா பாக்குறான் பாருங்க அவன வெரட்டி அடிக்கணும்.

/////////////////
சரியா சொன்னீங்க

இந்தியனாய் இருக்கனுமுனா இந்தி தெரிந்திருக்கனுமா????????? ஏன்??
இந்தி என்பதும் தமிழை போல ஒரு மொழி அவ்வளவே

Anonymous said...

Intha bloga padichu, Romba naal kalichu vaiyiru valikka sirichenunga... intha pathiva post pandunathukku romba danksunga....