Monday, April 11, 2011

பாட்டி வடை சுட்ட கதை!

நேத்து நைட்டு என் பொண்ணுக்கு கதை சொல்லலாம்னு நினைச்சு நம்ம ட்ரெடிசனல் ஸ்டோரி பாட்டி வடை சுட்ட கதைல இருந்து ஆரம்பிக்கலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன். இனி நடந்தது என்ன?? இதோ.. ஹி..ஹி..


‘செல்லக்குட்டி அம்மா உங்களுக்கு கதை சொல்லப் போறேன். சமத்தா கேக்கணும் சரியா’-னு நான் சொல்லவும் என் பொண்ணு பாவமா முழிச்சுக்கிட்டே என்னைப் பாத்தா. கதையக் கேக்காம எங்கேயும் ஓடிடக் கூடாதேனு மடில உக்கார வச்சு நல்லா பிடிச்சுக்கிட்டு கதை சொல்ல ஆரம்பிச்சேன்.

‘நம்ம J-பாட்டி(என் மாமியார்) இருக்காங்க இல்ல. நல்லா கமகமனு வாசமா மொருமொரு-னு டேஸ்ட்டா வடை சுட்டாங்களா’ -னு சொல்லிட்டிருந்த என் கண்ணுல பிரபு(என் கணவர்) பட்டார். உடனே கதைய இப்படி மாத்திட்டேன்.
‘அப்ப இந்த பிரபு காக்கா இருக்கு இல்ல தங்கம். அது வாசத்த மோப்பம் பிடிச்சு வேகமா பறந்து வந்து நம்ம பால்கனி கிரில் கேட்டுக்குள்ள நெம்பி நெம்பி உள்ள வந்துச்சாம். அப்போ பாத்து பப்புக் குட்டி ஏதோ சத்தம் போட உடனே J-பாட்டி பப்புக்கு என்னாச்சோனு உள்ள ஓடினாங்கலாம். அந்த சமயம் பாத்து இந்த பிரபு காக்கா சத்தம் போடாம ஒரு வடைய திருடிட்டு மறுபடியும் பால்கனி கிரில்-ல நெம்பி நெம்பி வெளில போய் நம்ம பக்கத்து வீட்டுல இருக்க மாமரத்து மேல உக்காந்துக்கிச்சாம். அப்போ அந்த பக்கமா J-அம்மா(நான் :)) வந்தாங்களாம். அவங்களுக்கு இந்த பிரபு காக்காவப் பாத்ததும் ஒரே கோபமா வந்துடுச்சாம். J-பாட்டிக்கு தெரியாம எப்படி இந்த வடைய திருடிட்டு வரலாம்-னு செம கோபமாம். அதனால அந்த காக்காட்ட இருந்து தந்திரமா வடைய வாங்கணும்னு நினைச்சு அதப் பாத்து பிரபு காக்கா பிரபு காக்கா! நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு பாட்டு பாடே-னு J-அம்மா சொன்னாங்களாம். உடனே பிரபு காக்காக்கு பயங்கர சந்தோசமாயிடுச்சாம். அடடா! இந்த உலகத்துல நம்மளப் பாத்து யாருமே அழகா இருக்கே-னு சொன்னதில்லையே-னு பயங்கர குஷியாகி கா கா-னு கத்துச்சாம். அப்ப அது வாய்ல இருந்த வடை கீழ விழுந்துடுச்சாம். அத J-அம்மா எடுத்துட்டு போயி டஸ்ட் பின்ல போட்டுட்டாங்களாம். இதுல மாரல் ஆஃப் த ஸ்டோரி என்னன்னா..’-னு நான் சொல்றதுக்குள்ள அது வரைக்கும் பொறுமையா கதையக் கேட்டுட்டு இருந்த பிரபு வேக வேகமா

‘உங்கம்மாக்கு யார் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காது. முக்கியமா உங்கப்பா சந்தோஷமா இருந்தா பிடிக்கவே பிடிக்காது’-ன்னாரேப் பாக்கலாம். அவர கிண்டல் பண்ண ட்ரை எனக்கு செம பல்பு.. ஹி.. ஹி.. நாம பாக்காத பல்பா?! கலர் கலரா வித விதமா எத்தனை பாத்திருப்போம்னு அப்படியே ஊதி தள்ளிட்டு என் கதைய கன்டினியூ பண்ண ஆரம்பிச்சேன் ;))))

Tuesday, March 15, 2011

நேஹா குட்டி கவிதைகள்!!

Mee Mee கருவறையில் பிறந்து
நாயுடு ஹாலின் நிழலில்
தவமாய் தவமிருந்த நான்
நேற்று என்னுள் இருந்து
தண்ணீரில் நீ தத்தி தத்தி
விளையாடிய பொழுதில் தான்
பிறவிப் பயனை அடைந்தேன்
                             இப்படிக்கு
         நேஹா பப்புவின் புதிய பாத்டப்

————–ooOoOOoOoo————–

கொடியில் காயும்
துணிகளின் நடுவே
என்னுடையதை மட்டும்
அடையாளம் கண்டு
அதைக் கூட கொஞ்சுகிறாய்!
உன்னைப் போல என்னைக்
கொஞ்ச இவ்வுலகில்
யாரால் தான் முடியும்?!

————–ooOoOOoOoo————–

Pappu version of ‘Baa baa black sheep’ Rhyme :)

Baa baa black sheep, have you any wool?
Yes sir, yes sir, three bags full!
One for the master, one for the dame,
And one for the little pappu who loves Mom
 

————–ooOoOOoOoo————–

உயிருள்ள கவிதை
உனக்கு முன்னால்
எனது எந்த கவிதை
அவ்வளவு அழகானதாகவோ
இல்லை சிறப்பானதாகவோ
இருந்து விடப் போகிறது?!

Thursday, February 24, 2011

முத்தம் சிந்தும் நேரம்!

அவசர அவசரமாய்
நீ பறக்க விட்டுச் செல்லும்
ஒற்றை முத்தத்திற்காக
இரு கன்னங்களும் சண்டையிட
வெற்றிப் பெருமிதத்தில்
புன்னகைக்கின்றன
திருட்டுத்தனமாய்
அபகரித்துக் கொண்ட இதழ்கள்!

:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x


அழகிய சங்கீதம் போல்
வண்டுகள் ரீங்காரமிடும்
ஒரு ரம்மியமான இரவில்
காமத்தின் நெடியினூடே
சுகந்தமாய் மணம்
பரப்பி செல்கிறது நீ
காதலுடன் நெற்றியில் தந்த
ஒற்றை முத்தம்!

:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x

முதல் முத்தம் பற்றிய பேச்சில்
உரிமைதான் என்றாலும்
ஏதோ தவறு செய்வது போல்
படபடத்த இதயம் தான்
நினைவில் உள்ளது என்று
முடிப்பதற்குள் முத்தமிட்டு
கிறங்கியிருக்கும் என்னை
தட்டி எழுப்பி சிரிக்கிறாய்
அந்த முதல் முத்ததின் தித்திப்பை
என் இதயக் கூட்டில்
பதுக்கி  வைத்திருப்பதை அறியாமல்...





Monday, February 21, 2011

அன்புள்ள அம்மா!


இந்த பதிவு ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சுட்டே இருந்தேன். இன்னைக்கு தான் டைம் கிடைச்சது.

நமக்கு வாழ்க்கைல கிடைக்கற ஒரு உன்னதமான விஷயம் தாய்மை. அத அனுபவிக்கறவங்களுக்கு மட்டும் தான் அதோட சந்தோஷம் புரியும். என்னோட ஆறாவது மாசத்துல இருந்து அவளோட மூவ்மென்ட்ஸ், உதைக்கறது, தொட்டு பாத்தா அவ கை, கால் தெரியறது இது மாதிரி விஷயங்கள ரொம்ப ரொம்ப அனுபவிச்சேன். என் வீட்டுக்காரர பாத்தா பாவமா இருக்கும். இந்த மாதிரி சந்தோஷங்கள் அவருக்கு கிடைக்க வாய்ப்பில்லையேனு. பொண்ணா பிறந்ததுக்காக நான் ரொம்ப பெருமைபட்ட தருணங்கள் அது.

இந்த சந்தோஷங்களோட நம்ம கடமை முடிஞ்சு போயிடறது இல்ல. பிரசவத்துக்குப் பின்னாடி இருக்க பொறுப்புகள்லயும் நமக்கு தான் முக்கிய பங்கு இருக்கு. இதுல ரொம்ப முக்கியமானது தாய்ப்பால். என் கணவரோட கஸின் ஒரு பீடியாட்ரிஷன். அவர் எனக்கு ரொம்ப கைடு பண்ணினார். அத உங்களோட ஷேர் பண்ணதான் இந்த பதிவு எழுதறேன். என்னடா இம்சை ரொம்ப பொறுப்பா மாறிடுச்சேனு வாயப் பொளக்காதீங்க. நான் எப்பவுமே ரொம்ப பொறுப்பான பொண்ணுதான்.. ஹி ஹி.. (நாமளா சொல்லிக்கிட்டாதான் ஆச்சு..)

1. குழந்தைக்கு தாய்ப்பால் மூலமாதான் எல்லா சத்தும் போகும். கால்சியம், இரும்பு சத்து இப்டி எல்லா சத்தும்.

2. நம்ம உடம்புல நோய்க்கு எதிர்ப்பு சக்தியா இருக்க ஆன்டிஜென், ஆன்டிபாடீஸ் எல்லாமும் தாய்ப்பால் மூலமா குழந்தைக்கு போகும். அதாவது சளிப் பிடிக்காம இருக்க ஆன்டிஜென், ஆன்டிபாடீஸ் கிடைக்கறதால குழந்தைக்கு அவ்ளோ ஈஸியா சளி பிடிக்காது. மனித நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி தாய்ப்பால்-ல மட்டும் தான் கிடைக்கும்.

3. மூளை வளர்ச்சிக்கான முக்கியமான சத்துக்கள் தாய்ப்பால்-ல மட்டும் தான் ஒரு குழந்தைக்கு கிடைக்கும். இது பசும்பால்லயோ இல்ல பவுடர் பால்-லயோ கிடைக்கவே கிடைக்காது. குழந்தையோட ஒரு வயசுக்குள்ளதான் மூளை வளர்ச்சி பெருமளவு இருக்குமாம். சோ உங்க குழந்தை ப்ரெய்னியா வரணும்னா ஒரு வருடம் கண்டிப்பா தாய்ப்பால் குடுக்கணும்.

4. தாய்ப்பாலினால் குழந்தைக்கு அபாயகரமான தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி. அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் இந்த தொற்று நோய்கள் எல்லாம் லிஸ்ட் பண்ணி இருக்காங்க.
  • bacterial meningitis
  • bacteremia
  • diarrhea
  • respiratory tract infection
  • necrotizing enterocolitis
  • otitis media
  • urinary tract infection
  • late-onset sepsis in preterm infants
5. Sudden Infant Death Syndrome(SIDS)-ம் ரொம்ப குறைஞ்சிருக்காம்.

6. அவங்க பண்ற ரிசர்ச்-ல இந்த வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் தாய்ப்பால் அதிகம் குடுத்து வளர்த்த குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட ரொம்ப ரொம்ப குறைவாம்
  • insulin-dependent (type 1) and non–insulin-dependent (type 2) diabetes mellitus
  • lymphoma
  • leukemia
  • Hodgkin disease
  • overweight and obesity
  • hypercholesterolemia
  • asthma
7. இதனால அம்மாவுக்கும் breast cancer, ovarian cancer, hip fractures, osteoporosis in the postmenopausal period இது மாதிரி பல வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் ரொம்ப குறைவுனு சொல்றாங்க.

8. குழந்தைக்கு ஆறு மாதங்கள் முடியற வரைக்கும் ஒன் அண்ட் ஒன்லி தாய்ப்பால் மட்டும் தான் குடுக்கணும். வெற எதுவும் தண்ணி கூட குடுக்க தேவை இல்ல.

9. தாய்ப்பால் மட்டும் குடிக்கற குழந்தைக்கு பத்து நாட்களுக்கு மோஷன் போகலைனா கூட பிரச்சினை இல்ல. அப்புறம் நிறைய நாள் மோஷன் போகலைனா வயிறு வலிக்கும் அது இதுனு சொல்லுவாங்க. அதை பத்தி கவலையேப் படாதீங்க.

10. ஜீரணம் ஆகறதுக்கு அதை குடு இதை குடுனு சொல்லுவாங்க. என் டாக்டர் இதான் சொன்னார். ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஜீரணம் ஆகலைனா உலகத்துல எந்த ஃபுட்டும் அதுக்கு ஜீரணமாகாதுனு. சோ எதுமே குடுக்க தேவை இல்ல.

11. breastmilk insufficient-ஆ இருந்தா மட்டும் டாக்டர்-கிட்ட கேட்டுட்டு வேற என்ன பண்ணனும்னு முடிவு பண்ணுங்க. ஆனா குறைஞ்சு போகுதுனா அது முழுக் காரணமும் நீங்கதான். ஒழுங்கா சாப்பிட்டா எந்த பிரச்சினையும் இருக்காது. தாய்ப்பால் அதிகம் இருக்க என்னென்ன சாப்பிடலாம்?

  • மட்டன்
  • மீன்
  • பிரெட்
  • மில்க் ரஸ்க்
  • பீட்ரூட்
  • வெந்தயம்
  • வெந்தயக் கீரை
  • பாலக் கீரை
  • கத்தரிக்காய்
  • கோஸ்
  • பரோட்டா
  • ஆல் மைதா மாவு அயிட்டம்ஸ்
  • பாசிப்பயறு
  • சுண்டல்
  • பருப்பு வகைகள்
  • நிறைய லிக்விட் அயிட்டெம்ஸ்
12. அப்புறம் நீங்க மட்டன் சாப்பிட்டா குழந்தைக்கு சரியா ஜீரணம் ஆகாது. வயிறு வலிக்கும். கிரைப் வாட்டர் குடுனு எல்லாம் சொல்லுவாங்க. அதெல்லாம் எதுமே தேவை இல்ல. எக்காரணத்தக் கொண்டும் டாக்டர்ட்ட கேக்காமலோ தேவை இல்லாமலோ கண்ட மருந்தையும் குடுக்காதீங்க.

13. For your reference,

http://aappolicy.aappublications.org/cgi/content/full/pediatrics;115/2/496

அம்மா ஆனவங்களுக்கும், ஆகப் போறவங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்! :))))

Monday, January 24, 2011

நேஹா குட்டி உருவாக்கும் அம்மாவின் உலகம்!

உனது முக்கிய தருணங்களை
புகைப்படம் எடுத்து வைக்கிறேன்
ஒவ்வொரு புதிய செயலையும்
ஏட்டில் குறித்து வைக்கிறேன்
நீ செய்யும் குறும்புகளை
வீடீயோ செய்து வைக்கிறேன்
ஆனால்..
உனது உள்ளங்கையின் மென்மையையும்
பாதத்தின் வாசனையையும்
அவற்றில் முத்தமிடும்போது
எனக்காய் மலரும் புன்சிரிப்பையும்
எதில் சேகரித்து வைப்பது??

—————ooOoo—————

அடுக்கி வைத்திருக்கும்
புத்தகங்களை கலைக்கிறாய்
கடிகாரத்தை இழுத்து
கீழே தள்ளி உடைக்கிறாய்
துடைத்த வீட்டில்
உடனே ச்சூ போகிறாய்
பாயின் கோரைகளை உருவி
வாயில் வைக்கிறாய்
வர வர உன் குறும்பு
அதிகமாய்தான் போய் விட்டது
வெளியே சலித்துக் கொண்டாலும்
மனம் என்னவோ சந்தோசமாய்
ரசிக்கத்தான் செய்கிறது..

—————ooOoo—————

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாய் போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’-களையும்
பாதுகாத்து வைக்கிறேன்
முதன் முதலாய்
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாய் அழைப்பதை
எப்படி பாதுகாப்பது??

—————ooOoo—————

பப்புக்குட்டிக்கு நேத்தோட 7 மாதங்கள் முடிஞ்சிடுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி எதாவது எடுக்கணும்னா அங்கபிரதட்சணம் பண்ணி போய்ட்டு இருந்தா. ரெண்டு வாரம் முன்னாடி அவளோட மாமா வாக்கர் வாங்கி தந்துட்டான். இப்ப வீட்டையே அலசி எடுக்கறா.எதையும் வைக்க முடியல. வண்டி நேரா கிச்சன்க்குதான் போகுது. தக்காளி கூடைல இருந்து எடுத்து கீழ போட்டுடறா. அத்தையோட கண்ணாடி, என் ஆபிஸ் பேக் எதையும் விட்டு வைக்கறதில்ல. தாத்தா, பாப்பா சொல்றா இப்ப. என் டைம் ஃபுல்லா அவள சுத்தியே நகருது. சீக்கிரம் பழைய மாதிரி எழுத ஆரம்பிக்கனும்னு நினைச்சுட்டு இருக்கேன். பாப்போம் :)))

Tuesday, January 18, 2011

ஹையா!அஞ்சு ரூபா மிச்சம் பண்ணிட்டேனே!!

எனக்கு சின்ன வயசுல இருந்து செடி வளத்தனும்னு ரொம்ப ஆசை. ஆனா நாங்க இருந்த வீட்டுல செடி வைக்கற மாதிரி இடமே இல்ல. தொட்டி வாங்கி வைக்கலாம்மா-னு சொன்னதுக்கு அடி விழாத குறை தான்.

நாய்குட்டி வளத்தலாமானு கேட்டதுக்கும் எங்கம்மா உன்னை வச்சு சாப்பாடு போடறதே பெரிய விஷயம். இன்னும் நாய்க்குட்டி வேறயானு தடா போட்டாங்க. அதெல்லாம் முடியாது எனக்கு வேணும்னு அடம் பண்ணினதுக்கு நாய் வளத்தினா அது டெய்லி மோஷன் போகும். அடிக்கடி யூரின் போகும். அதும் கண்ட இடத்துல போய் வைக்கும். நீதான் க்ளீன் பண்ணனும். பண்றியானு கேட்டாங்க. உடனே கண்ணு முன்னாடி நாய் பப்பி ஷேம் பண்ணி வச்ச மாதிரியும் அத நான் க்ளீன் பண்ற மாதிரியும் சீன் ஓடுச்சு. உவ்வே! Yuk!!(இந்த உவ்வே, Yuk எல்லாம் இப்ப பப்புக் குட்டி துணிய துவைக்கறப்ப வரதில்ல :))) அதுக்கப்புறம் அம்மாட்ட கேட்டதே இல்ல. கல்யாணத்துக்கப்புறம் ஒரு தடவை என் பழைய ஆபிஸ்(ஆபிஸ் மாறிட்டேனாக்கும்) புல்லெட்டின் போர்டுல 'Puppies for sale' அப்படினு ஒரு போஸ்ட பாத்ததும் சின்ன வயசு ஆசை மனசுல அப்படியே லைட்டா தூக்க அத அப்படியே என் வீட்டுக்காரருக்கு ஃபார்வார்ட் பண்ணினேன் இத வாங்கலாமான்ற request-டோட. உடனே ரிப்ளை. உனக்கு தான் நான் இருக்கேனே-னு. அப்படியே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. வீட்டுக்கு போனதும் பாவமா முகத்த வச்சுக்கிட்டு அத வாங்கலாமேங்கனு கேட்டேன். அவர் அப்போதான் நான் சீரியஸா கேக்கறேனு தெரிஞ்சு வாங்கறது பெருசில்லடா. நாம அடிக்கடி ஊருக்குப் போவோம். அப்போ அத எங்க விட்டுட்டு போறதுனு கேட்டதும்தான் அவர் சொன்னது புரிஞ்சது. கஷ்டம்தான். அதோட அந்த ஆசைக்கு சமாதி கட்டியாச்சு.

அட! செடி பத்தி எழுத ஆரம்பிச்சு கடைசில ட்ராக்கு மாறி எங்கேயோ போயிட்டேன். பேக் டு த பாயிண்ட். சென்னை வந்ததும் ரோஜா செடி தொட்டி வாங்கி வைக்கணும்னு ஆசைப்பட்டேன். நாய்குட்டிக்கு சொன்ன கதையவே என் வீட்டுக்கார் சொல்லி என்னை ஆஃப் பண்ணிட்டார். ஒவ்வொரு தடவையும் எங்கத்தை சென்னை கொத்தமல்லி வாங்கறப்பவும் உரம் போட்டுடறாங்க. அதான் வாசமே இல்லாம இவ்ளோ பெருசா வளருது-னு ஃபீல் பண்றப்போ எல்லாம் நாம ஏன் கொத்தமல்லி செடி வளத்த கூடாதுனு நினைப்பேன். அது அப்படியே மறந்து போயிடும். கிறிஸ்துமஸ் டைம்ல நானும் என் வீட்டுக்காரும் மார்க்கெட் போயிருந்தோம். கொத்தமல்லி ஒரு கத்தை 10 ரூபானு சொன்னதும் எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சு. அண்ணே! என்ன இவ்ளோ விலை சொல்றீங்கனு கேட்டதுக்கு கிறிஸ்துமஸ் வந்துடுச்சு இல்ல பாப்பா (நோட் திஸ் பாயிண்ட்.. அவராதான் சொன்னாரு). எல்லாம் பிரியாணி பண்ணுவாங்க. அதான் இவ்ளோ ரேட்டுனு சொன்னார். அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் உடனடியா ஒரு தொட்டி எடுத்து வந்து புதினா தண்ட எல்லாம் நட்டு வச்சு நடுல கொத்தமல்லி போட்டு புதைச்சு வச்சேன். ஒரு மூணு நாள் கழிச்சு புதினா தழைஞ்சது. ஆனா ரெண்டு நாள்ல அது காஞ்சு போயிடுச்சு :(( அப்றமா ஒரு வாரம் கழிச்சு கொத்தமல்லி தழைய ஆரம்பிச்சுடுச்சு. டெய்லியும் ரெண்டு நேரமும் மறக்காம தண்ணி ஊத்திட்டு இருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வீட்டுக்கார்ட்ட டெய்லி நாலு தடவையாவது அஞ்சு ரூபா உங்களுக்கு மிச்சம் பண்ணிட்டேன் பாருங்கனு சொல்லிட்டே இருக்கேன். சீக்கிரம் ரோஜா செடி வாங்கணும் :)))

கீழ இருக்க படம் என்னோட கொத்தமல்லி செடிங்கதான்... கி.பி. 2007ஆம் ஆண்டு ஓசை செல்லா அண்ணா லால்பாக்ல நடத்தின ஃபோட்டோக்ராபி செஷன்ல ஃபர்ஸ்ட் பெஞ்ச்ல உக்காந்து தூங்கிட்டதால ஃபோட்டோஸ் சுமாராதான் இருக்கும் ஹி ஹி...



அடுத்து வெந்தயக் கீரை போடலாம்னு இருக்கேன் :))))

Monday, September 6, 2010

கள்ளத்தனமாய் கண்கள் பேச...

என்னடா தலைப்பெல்லாம் பலமா இருக்கே.. எதாவது கதை கிதை திரும்பவும் ஆரம்பிச்சிடுச்சோனு நீங்க பயப்பட தேவை இல்ல. ஹி ஹி.. நல்லா யோசிச்சுப் பாருங்க. இந்த லைன்ஸ் எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல??

"கள்ளத்தனமாய் கண்கள் பேச
ஏதோ செய்து என்னை வீழ்த்த
காலைப் பனியின் கனவுக்குள்ளே
கலந்து நாமும் கரைந்து போவோமா"

ஒரு நாள் நான் கிச்சன்ல வேலையா இருந்தப்போ என் வீட்டுக்கார் ஜே! இங்க வாயேன் சீக்கிரம்-னு அவசரமா கூப்பிட்டார். நானும் என்னாச்சோ ஏதாச்சோனு வேகமா ஓடினேன். இந்த ad பாரேன். ரொம்ப சூப்பரா இருக்குனு காட்டினார். Limca ad ஓடிட்டிருந்தது. ஒரு பொண்ணு மாடில உக்காந்து புக் படிக்கற மாதிரி கீழ ரோடுல பைக் மேல சாஞ்சு Limca குடிக்கற பையன லுக் விடும். அவன் உடனே Limca குடிப்பான். அவளோட புக் அப்படியே burst ஆகி தண்ணியா கொட்டும். பொய் கோபத்தோட போய் டவல எடுப்பா. அவன் உடனே Limca குடிப்பான். டவல் burst ஆகி தண்ணியா கொட்டும். அப்புறம் கதவு. இந்த விளம்பரம் எல்லாரும் கண்டிப்பா பாத்திருப்பிங்க. பாட்டு செம சூப்பர் இல்ல. எனக்கு பாத்ததும் எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கறாங்களோனு ஒரே ஆச்சரியம்.



இப்போ எனக்கு டிவி பாக்க நிறைய டைம் இருக்கு. விளம்பரம் எல்லாம் இப்போ சூப்பர் சூப்பரா பண்றாங்க. Horlicks Lite-ஓட விளம்பரமும் நல்லா இருக்கு.

"உனக்கு ஜாக்கர்ஸ் பார்க்கின் பெஞ்சில் ஆசை
எனக்கு தெரியும்
என் பேட்ஸ்மேனுக்கு என்ன தேவை
எனக்கு தெரியும்
எதுவும் நீ சொல்லாமலே
எனக்கு தெரியும்"

ஒரு மனைவி அவளோட கணவர் எதுமே சொல்லாமலே எல்லாம் தெரிஞ்சுக்கறாங்கன்றது தீம். ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க.



அப்புறம் எல்லாரோட ஃபேவரிட் ஜுஜு விளம்பரம். வோடஃபோன் ஜோக்ஸ்-க்காக வர காட்டுவாசி விளம்பரம் அட்டகாசமா இருக்கும். அந்த மியூசிக் கேட்டாலே எனக்கே ஜாலியா ஆடனும் போல இருக்கும். ஹி ஹி.. பூமி தாங்காதுனு ஃப்ரீயா விட்டுவேன்.



ஆசிர்வாத் ஆட்டா விளம்பரத்துல வர குட்டிப் பொண்ணு பூர்வி செம க்யூட் இல்ல. அப்படி துரு துருனு இருக்கறத பாத்தா ஆசையா இருக்கும். அப்புறம் ஆரோக்யா மில்க் விளம்பரத்துல பாயாசம் சாப்பிடற குட்டி பொண்ணுகிட்ட அவ அப்பா கேட்க அவ தர மாட்டேனு சொன்னதும் ப்ளீஸ்னு கெஞ்சல்+கொஞ்சலா ஒரு எக்ஸ்பிரஸன் குடுப்பார் பாருங்க. செம க்யூட்.



க்ளோஸ் அப் பேஸ்ட், பெப்சோடண்ட் பேஸ்ட் ரெண்டும் செம மொக்கை விளம்பரம். விக்கோ-காரங்க இன்னும் அந்த பழைய காலத்து ஈஸ்ட்மென் கலர் விளம்பரத்த விட்டு வெளில வர மாட்டேன்றாங்க.

Scooty Pep-ஓட "திரும்பி திரும்பி பார்க்காதே" விளம்பரத்துல வர பாட்டும் மியூசிக்கும் சூப்பர் இல்ல.

Pampers, Huggies, Mamy Poko Pants ads-ல வர குட்டீஸ்க்காகவே அந்த விளம்பரங்கள திரும்ப திரும்ப பாக்கலாம். அவ்ளோ க்யூட்டா இருக்காங்க. நல்ல வேளை டயப்பர் கட்டற ப்ராப்ளம்ஸ் எனக்கு இருக்காது. அதான் பேண்ட் ஸ்டைல் டயப்பர்ஸ் வந்துடுச்சே! ;)))