Monday, September 6, 2010

கள்ளத்தனமாய் கண்கள் பேச...

என்னடா தலைப்பெல்லாம் பலமா இருக்கே.. எதாவது கதை கிதை திரும்பவும் ஆரம்பிச்சிடுச்சோனு நீங்க பயப்பட தேவை இல்ல. ஹி ஹி.. நல்லா யோசிச்சுப் பாருங்க. இந்த லைன்ஸ் எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல??

"கள்ளத்தனமாய் கண்கள் பேச
ஏதோ செய்து என்னை வீழ்த்த
காலைப் பனியின் கனவுக்குள்ளே
கலந்து நாமும் கரைந்து போவோமா"

ஒரு நாள் நான் கிச்சன்ல வேலையா இருந்தப்போ என் வீட்டுக்கார் ஜே! இங்க வாயேன் சீக்கிரம்-னு அவசரமா கூப்பிட்டார். நானும் என்னாச்சோ ஏதாச்சோனு வேகமா ஓடினேன். இந்த ad பாரேன். ரொம்ப சூப்பரா இருக்குனு காட்டினார். Limca ad ஓடிட்டிருந்தது. ஒரு பொண்ணு மாடில உக்காந்து புக் படிக்கற மாதிரி கீழ ரோடுல பைக் மேல சாஞ்சு Limca குடிக்கற பையன லுக் விடும். அவன் உடனே Limca குடிப்பான். அவளோட புக் அப்படியே burst ஆகி தண்ணியா கொட்டும். பொய் கோபத்தோட போய் டவல எடுப்பா. அவன் உடனே Limca குடிப்பான். டவல் burst ஆகி தண்ணியா கொட்டும். அப்புறம் கதவு. இந்த விளம்பரம் எல்லாரும் கண்டிப்பா பாத்திருப்பிங்க. பாட்டு செம சூப்பர் இல்ல. எனக்கு பாத்ததும் எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கறாங்களோனு ஒரே ஆச்சரியம்.இப்போ எனக்கு டிவி பாக்க நிறைய டைம் இருக்கு. விளம்பரம் எல்லாம் இப்போ சூப்பர் சூப்பரா பண்றாங்க. Horlicks Lite-ஓட விளம்பரமும் நல்லா இருக்கு.

"உனக்கு ஜாக்கர்ஸ் பார்க்கின் பெஞ்சில் ஆசை
எனக்கு தெரியும்
என் பேட்ஸ்மேனுக்கு என்ன தேவை
எனக்கு தெரியும்
எதுவும் நீ சொல்லாமலே
எனக்கு தெரியும்"

ஒரு மனைவி அவளோட கணவர் எதுமே சொல்லாமலே எல்லாம் தெரிஞ்சுக்கறாங்கன்றது தீம். ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க.அப்புறம் எல்லாரோட ஃபேவரிட் ஜுஜு விளம்பரம். வோடஃபோன் ஜோக்ஸ்-க்காக வர காட்டுவாசி விளம்பரம் அட்டகாசமா இருக்கும். அந்த மியூசிக் கேட்டாலே எனக்கே ஜாலியா ஆடனும் போல இருக்கும். ஹி ஹி.. பூமி தாங்காதுனு ஃப்ரீயா விட்டுவேன்.ஆசிர்வாத் ஆட்டா விளம்பரத்துல வர குட்டிப் பொண்ணு பூர்வி செம க்யூட் இல்ல. அப்படி துரு துருனு இருக்கறத பாத்தா ஆசையா இருக்கும். அப்புறம் ஆரோக்யா மில்க் விளம்பரத்துல பாயாசம் சாப்பிடற குட்டி பொண்ணுகிட்ட அவ அப்பா கேட்க அவ தர மாட்டேனு சொன்னதும் ப்ளீஸ்னு கெஞ்சல்+கொஞ்சலா ஒரு எக்ஸ்பிரஸன் குடுப்பார் பாருங்க. செம க்யூட்.க்ளோஸ் அப் பேஸ்ட், பெப்சோடண்ட் பேஸ்ட் ரெண்டும் செம மொக்கை விளம்பரம். விக்கோ-காரங்க இன்னும் அந்த பழைய காலத்து ஈஸ்ட்மென் கலர் விளம்பரத்த விட்டு வெளில வர மாட்டேன்றாங்க.

Scooty Pep-ஓட "திரும்பி திரும்பி பார்க்காதே" விளம்பரத்துல வர பாட்டும் மியூசிக்கும் சூப்பர் இல்ல.

Pampers, Huggies, Mamy Poko Pants ads-ல வர குட்டீஸ்க்காகவே அந்த விளம்பரங்கள திரும்ப திரும்ப பாக்கலாம். அவ்ளோ க்யூட்டா இருக்காங்க. நல்ல வேளை டயப்பர் கட்டற ப்ராப்ளம்ஸ் எனக்கு இருக்காது. அதான் பேண்ட் ஸ்டைல் டயப்பர்ஸ் வந்துடுச்சே! ;)))

11 comments:

Anonymous said...

இம்சை அரசி அவர்களுக்கு,

நான் மூன்று மாதங்களுக்கு முன் எதொசியாக உங்கள் ப்ளாக் ஸ்பாட் இ பார்த்தேன். முதல் இடுகைளுருந்து லேட்டஸ்ட் இடுகை வரை ஒரே மூச்சில் தொடர்ந்து 3 நாளில் படித்து விட்டேன் . எல்லா இடுகைகளும் சுவையாகவும்,சுவாரசியமாகவும் உள்ளது.நீண்ட இடைவெளிக்கு பிறகு இடுகை பதிவு செய்துள்ளது மிகவும் மகிழ்சி. தொடர்ந்து பதிவு செய்யவும் .

நன்றி,

by,
mcxmeega@gmail.com

ஜெய்லானி said...

மூனாவது படம் எங்கூர்ல தெரியலைங்கோ... !! (என்னா ரூலஸ் ரெகுலேஷனோ புரியல ))

கண்ணா.. said...

ரெண்டு அணில்குட்டி ஆடும் கிட்கேட் விளம்பரம் பாத்துருக்கீங்களா...அட்டகாசமா இருக்கும் :)

Anonymous said...

எனக்கு இப்போ பிடித்த விளம்பரம் (ad) (cnbc tv)இல் வருகிற Anchor paste Ad ஆகும்.

by,
mcxmeega@gmail.com

priya.r said...

நல்ல பகிர்வு ஜெயந்தி
ஆமாம்;சில சமயம் தொலைக்காட்சியில் பார்க்கும் திரைப்படம் ,
தொடர்களை விட
இடையில் வரும் விளம்பரங்கள் ரசிக்கும் படியாக இருக்கின்றன

அப்பாவி தங்கமணி said...

எனக்கு இதுல லிம்கா தான் ரெம்ப பிடிச்சது... ஹா ஹா ஹா... கடைசி ad வீடியோ அழகா இருக்கும்னு தோணுது நீங்க குடுத்த expressions பாத்து... பட் வீடியோ வொர்க் ஆகலை... (remove பண்ணிடாங்க போல)

அது சரி, நேஹா பாப்பா எப்படி இருக்கா? போட்டோ போடுங்க ப்ளீஸ்... டேக் கேர்

ரசிகன் said...

//இப்போ எனக்கு டிவி பாக்க நிறைய டைம் இருக்கு//

என்னப்பா இது?.இதை நீங்க சொல்லித்தான் தெரியனுமாக்கும்.விட்டுல சமையல் வேலையெல்லாம் யார் செய்யறாங்கனு நல்லாவே புரியுது:))

வாழ்த்துக்கள். விளம்பரங்களை நாங்களும் ரசித்தோம்:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரசனை.

எனக்கு ஜீவன்ஸாதி மாப்பிள்ளை பார்க்கும் விளம்பரம் பிடித்திருந்தது. அந்தப் பெண்ணின் எக்ஸ்ப்ரஷன் அழகு.

அன்னு said...

இப்ப மட்டுமல்ல இன்னும் பல வருசங்களுக்கு முன்னாடியிருந்தே படத்தை விட படம் நடுவில் வருகிற விளம்பரங்களுக்கு பிரியை நான். நல்ல தொகுப்பு. அப்புறம் பொண்ணு என்ன சொல்றாங்க?

R.பூபாலன் said...

ரொம்ப நாளாச்சு.. உங்க பதிவு வந்து ...

நேஹா குட்டிச் செல்லத்தோட புகைப்படத்தோட அடுத்த பதிவை எதிர் பார்க்கின்றோம்......

இப்பதான் உங்களோட எழுத்துகளை பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது...

interesting - ஆ இருக்குங்க்கா......

அன்னு said...

இம்சை அரசி, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html