Monday, April 11, 2011

பாட்டி வடை சுட்ட கதை!

நேத்து நைட்டு என் பொண்ணுக்கு கதை சொல்லலாம்னு நினைச்சு நம்ம ட்ரெடிசனல் ஸ்டோரி பாட்டி வடை சுட்ட கதைல இருந்து ஆரம்பிக்கலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன். இனி நடந்தது என்ன?? இதோ.. ஹி..ஹி..


‘செல்லக்குட்டி அம்மா உங்களுக்கு கதை சொல்லப் போறேன். சமத்தா கேக்கணும் சரியா’-னு நான் சொல்லவும் என் பொண்ணு பாவமா முழிச்சுக்கிட்டே என்னைப் பாத்தா. கதையக் கேக்காம எங்கேயும் ஓடிடக் கூடாதேனு மடில உக்கார வச்சு நல்லா பிடிச்சுக்கிட்டு கதை சொல்ல ஆரம்பிச்சேன்.

‘நம்ம J-பாட்டி(என் மாமியார்) இருக்காங்க இல்ல. நல்லா கமகமனு வாசமா மொருமொரு-னு டேஸ்ட்டா வடை சுட்டாங்களா’ -னு சொல்லிட்டிருந்த என் கண்ணுல பிரபு(என் கணவர்) பட்டார். உடனே கதைய இப்படி மாத்திட்டேன்.
‘அப்ப இந்த பிரபு காக்கா இருக்கு இல்ல தங்கம். அது வாசத்த மோப்பம் பிடிச்சு வேகமா பறந்து வந்து நம்ம பால்கனி கிரில் கேட்டுக்குள்ள நெம்பி நெம்பி உள்ள வந்துச்சாம். அப்போ பாத்து பப்புக் குட்டி ஏதோ சத்தம் போட உடனே J-பாட்டி பப்புக்கு என்னாச்சோனு உள்ள ஓடினாங்கலாம். அந்த சமயம் பாத்து இந்த பிரபு காக்கா சத்தம் போடாம ஒரு வடைய திருடிட்டு மறுபடியும் பால்கனி கிரில்-ல நெம்பி நெம்பி வெளில போய் நம்ம பக்கத்து வீட்டுல இருக்க மாமரத்து மேல உக்காந்துக்கிச்சாம். அப்போ அந்த பக்கமா J-அம்மா(நான் :)) வந்தாங்களாம். அவங்களுக்கு இந்த பிரபு காக்காவப் பாத்ததும் ஒரே கோபமா வந்துடுச்சாம். J-பாட்டிக்கு தெரியாம எப்படி இந்த வடைய திருடிட்டு வரலாம்-னு செம கோபமாம். அதனால அந்த காக்காட்ட இருந்து தந்திரமா வடைய வாங்கணும்னு நினைச்சு அதப் பாத்து பிரபு காக்கா பிரபு காக்கா! நீ ரொம்ப அழகா இருக்க.. ஒரு பாட்டு பாடே-னு J-அம்மா சொன்னாங்களாம். உடனே பிரபு காக்காக்கு பயங்கர சந்தோசமாயிடுச்சாம். அடடா! இந்த உலகத்துல நம்மளப் பாத்து யாருமே அழகா இருக்கே-னு சொன்னதில்லையே-னு பயங்கர குஷியாகி கா கா-னு கத்துச்சாம். அப்ப அது வாய்ல இருந்த வடை கீழ விழுந்துடுச்சாம். அத J-அம்மா எடுத்துட்டு போயி டஸ்ட் பின்ல போட்டுட்டாங்களாம். இதுல மாரல் ஆஃப் த ஸ்டோரி என்னன்னா..’-னு நான் சொல்றதுக்குள்ள அது வரைக்கும் பொறுமையா கதையக் கேட்டுட்டு இருந்த பிரபு வேக வேகமா

‘உங்கம்மாக்கு யார் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காது. முக்கியமா உங்கப்பா சந்தோஷமா இருந்தா பிடிக்கவே பிடிக்காது’-ன்னாரேப் பாக்கலாம். அவர கிண்டல் பண்ண ட்ரை எனக்கு செம பல்பு.. ஹி.. ஹி.. நாம பாக்காத பல்பா?! கலர் கலரா வித விதமா எத்தனை பாத்திருப்போம்னு அப்படியே ஊதி தள்ளிட்டு என் கதைய கன்டினியூ பண்ண ஆரம்பிச்சேன் ;))))

12 comments:

இராஜராஜேஸ்வரி said...

நாம பாக்காத பல்பா?! கலர் கலரா வித விதமா எத்தனை பாத்திருப்போம்னு அப்படியே ஊதி தள்ளி//
super story.

அமுதா கிருஷ்ணா said...

பாவம் பிரபு காக்கா..

ஆயில்யன் said...

//கதையக் கேக்காம எங்கேயும் ஓடிடக் கூடாதேனு மடில உக்கார வச்சு நல்லா பிடிச்சுக்கிட்டு//

அடப்பாவமே!!!!!!!!!!!

ராமலக்ஷ்மி said...

:))!

சி.பி.செந்தில்குமார் said...

>>கதையக் கேக்காம எங்கேயும் ஓடிடக் கூடாதேனு

haa haa குழந்தையை ரொம்பத்தான் மிரட்டி வெச்சிருக்கீங்க போல.. பாவம் பிரபு

கோபிநாத் said...

;))

Anisha Yunus said...

ஹெ ஹெ ... அதானே... அம்மாவின் ஜீன்ஸ் பேண்ட் பற்றிய பல்பில் ஆரம்பித்து.... கின்னஸ் ரெக்கார்டாக வாங்கிக் கொண்டேதான் இருக்கிறீர்கள்... (நாங்களும்தேன்..) ஹெ ஹெ... கண்டினியூ...

fowmy said...

இம்ச....
பரவா இல்லிங்க விட்டுடுங்க.... நீங்க வாங்காத பல்பா???? இல்ல பார்க்காத பல்பா???? மொத்தத்துல நீங்க பல்பு இளவரசி... இளவரசி... இளவரசி... இளவரசி...
ஆனாலும்; உங்கமேலே எனக்கு ரொம்ப பொறாமையா வருது.... அது எப்படிங்க உங்களால மட்டும் தொடர்ந்து பல்பு வாங்க முடியுது....

இலங்கை நண்பன்
பௌமி....

சதீஸ் கண்ணன் said...

// அத J-அம்மா எடுத்துட்டு போயி டஸ்ட் பின்ல போட்டுட்டாங்களாம்.//
என்ன ஒரு வில்லத்தனம்

தமிழினி..... said...

Akka Vanakkam...Naanum thirumba eludha vandhutten... :)))
Padhivu romba nalla irukku...

பித்தனின் வாக்கு said...

//கதையக் கேக்காம எங்கேயும் ஓடிடக் கூடாதேனு மடில உக்கார வச்சு நல்லா பிடிச்சுக்கிட்டு//

அடப்பாவமே!!!!!!!!!!!

ayyayo paavam.

me also posted this same story.
http://imsaiilavarasan.blogspot.com/2010/04/blog-post_14.html

Anu said...

நல்லா இருக்கு :)