Saturday, May 30, 2009

ஐயகோ! என்ன ஒரு அவமானம்!!

கோவிலுக்கு போறப்போ எல்லாம் அம்மா அம்மா-னு பின்னாடியே வர பிச்சைக்காரங்களப் பாத்தா உங்களுக்கு என்ன தோணும்? எனக்கு சில டைம் பாத்தா பாவமா இருக்கும். சில டைம் கோபமா வரும்(ஹிஹி... அது நம்ம மூட பொறுத்ததாக்கும்). எனக்கு சின்ன வயசுல எல்லாம் ஒரே டவுட்டா இருக்கும். ஏன் இவங்க எல்லாம் இப்படி காசு கேக்கறாங்க? இந்த அம்மா ஒரு நாலணா போட்டா என்னனு அம்மா மேல வேற தேவை இல்லாம கோபமா வரும். நம்ம கைல காசு இருந்தா எல்லாருக்கும் போடலாமெனு நினைப்பேன். பத்தாவது படிக்கற வரைக்கும் என் கைல காசே தர மாட்டாங்க. அதனால அவங்களுக்கு காசு போடற சான்ஸ் எனக்கு கிடைக்கவே இல்ல. ப்ளஸ் டூ-வும் கொண்டு போய் ஹாஸ்டல்-ல தள்ளிட்டாங்க :( அந்த ஸ்கூல்ல இருந்து லீவு கிடைச்சு ஊருக்கு போறதே ரொம்ப கஷ்டம். கிடைக்கற அந்த கொஞ்ச நாள்ல எங்க போய் பிச்சைக்காரங்களப் பத்தி நினைக்கறது??

ப்ளஸ் டூ-ல என் க்ளோஸ் ஃப்ரெண்ட் பிருந்தா. லீவுல அவ வீட்டுக்குப் போயிருந்தப்ப நாங்க ரெண்டு பேரும் சாயந்திரமா வெளில கிளம்பினோம். வழில நிறையப் பிச்சைக்காரங்க. ஆனா அவ யாருக்கும் ஒரு பைசா கூட போடல. எனக்கு கொஞ்சம் கடுப்பாயிடுச்சு. ஏன் இவ இப்படி கஞ்சத்தனமா இருக்கா. வீட்டுக்குப் போனதும் ரெண்டு டோஸ் குடுக்கலாம்னு நினைச்சேன். அப்போ திடீர்னு அவ இங்கயே நில்லு. நான் 2 mins-ல வந்துடறேனு சொல்லிட்டு ரோட க்ராஸ் பண்ணிப் போனா. எதுக்குப் போறானு நானும் அவளையே வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தேன். அவ அந்தப் பக்கம் போயி அங்க இருந்த ஒரு ரொம்ப வயசான தாத்தாவுக்கு 5 ரூபா போட்டுட்டு திரும்பி வந்தா. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. ஏண்டி இவ்ளோ பேர் வழில வந்தாங்க. அவங்களுக்கு எல்லாம் போடல-னு நான் ஆச்சர்யமா கேட்டதும் அவங்களுக்கெல்லாம் என்ன இல்ல சொல்லு. கால் கை எல்லாம் நல்லாதான இருக்கு. எதாச்சும் ஒரு சின்ன வேலையாச்சும் அட்லீஸ்ட் சாப்பாட்டுக்காகவாவது செஞ்சுக்கலாம் இல்ல. சோ அவங்களுக்கு எல்லாம் போட மாட்டேன். இந்த தாத்தா-வால நடக்க முடியாது. கண் பார்வை இல்ல. ரொம்ப வயசானவர். அவரால ஒண்ணும் பன்ண முடியாது. அதான் எப்ப இந்தப் பக்கம் வந்தாலும் அவருக்கு எதாவது செய்வேனு சொன்னா. எனக்கும் அவ சொன்னது ரொம்ப ரொம்ப சரினு பட்டது. அதுல இருந்து யாராவது பிச்சைக் கேட்டா நல்லா யோசிச்சு இவங்களுக்கு இத விட்டா வேற வழியே இல்லைனு தோணினாதான் காசு போடுவேன்.

பேங்களூர்ல இருந்தப்போ சில சமயம் ஆபிஸ்ல இருந்து ஓசூர் வந்து பஸ் பிடிச்சுப் போவேன். அங்க பஸ் ஸ்டாண்ட் அநியாயத்துக்கு மோசம். சின்ன சின்ன பொண்ணுங்க பசங்க எல்லாம் வந்து கையத் தொட்டு தொட்டு அக்கா அக்கா-னு கேக்கறப்ப எல்லாம் இழுத்து ஒரு அறை விடணும் போல தோணும். ஆனா பேசாம தள்ளி நின்னுக்குவேன். ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஃப்ரெண்ட்ஸோட பீச் போயிருந்தப்போ ஒரு வயசான அம்மா வந்து தொண தொணனு கேட்டுட்டே இருந்துச்சு. ஒருத்தர் சலிச்சுக்கிட்டே எடுத்து 1 ரூபா குடுத்தார். அட ஏன் இதுக்குப் போய் இவ்ளோ சலிச்சுக்கறிங்க. வயசான அம்மாதான-னு நான் அப்பாவியா(அட நெசமாத்தான்) கேட்டதுக்கு அவர் இது நேரா எங்க போகும் தெரியுமா. பிச்சை எடுத்து காசு சேத்து நைட் போய் தண்ணி அடிக்கும். இதுக்கு முன்னாடி நான் ஒரு அம்மாவ அப்டி நேராப் பாத்தேன் அப்டினு சொன்னார். என்னடா இது ஒவ்வொருத்தரும் ஒரொரு மாதிரி சொல்றாங்களேனு ஃப்ரீயா விட்டுட்டேன்.

பெங்களூர்ல என் நாத்தனார் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பிச்சைக்காரர் இருப்பார். யார்ட்டயும் போய் நச்சரிக்க மாட்டார். யாராச்சும் குடுத்தா மட்டும் வாங்கிப்பார். அவரால ரொம்ப எல்லாம் நல்லா நடக்க முடியாது. ஆனாலும் கஷ்டப்பட்டு அவர் ட்ரெஸ் எல்லாம் வாஷ் பண்ணி சுத்தமாதான் போட்டிருப்பார். எங்கத்தை அவரப் பத்தி ஒரு நாள் பேசிட்டு இருந்தப்போ வாழ்ந்துக் கெட்டவர் போல-னு சொல்லிட்டு இருந்தாங்க. ஹ்ம்ம்ம்... இப்படியும் சிலர்னு நினைச்சுக்கிட்டேன். நாங்க யார் அந்த வழியாப் போனாலும் அட்லீஸ்ட் ஒரு ரூபாயாச்சும் போடுவோம். எங்கண்ணா அவர ஃபேமிலிப் பிச்சைக்காரார்னு விளையாட்டா சொல்லுவார். எங்க மீராக் குட்டிப் போனா டாடா எல்லாம் சொல்லுவார் :) so cool na :))

பிச்சைக்காரங்க-ன்ற டாபிக் எடுத்தாலே என் லைஃப்ல நடந்த ஒரு முக்கியமான சம்பவம் ஞாபகத்துக்கு வரும். அந்த ஸீந்ல இருந்த என் ஃப்ரெண்ட்ஸ் இன்னமும் சொல்லி சொல்லி சிரிச்சு என் BP ஏற வைக்கற அளவுக்கு எனக்கு நடந்த அவமானம். நீங்க சொல்லி சொல்லி சிரிக்க மாட்டேனு ப்ராமிஸ் பண்ணினா உங்களுக்கு சொல்றேன்.

ப்ராமிஸ்???

ப்ராமிஸ் பண்ணிட்டிங்கனா தொடர்ந்துப் படிங்க. ப்ராமிஸ் பண்ணாம படிச்சா சாமி உங்க கண்ணக் குத்திடும். ஜாக்கிரதை....

காலேஜ் லீவுல திருச்சிப் போயிட்டு ஊருக்கு திரும்பறதுக்காக ஜங்ஷன்ல இருக்க பஸ் ஸ்டாண்ட் போயிருந்தோம். அப்போ என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் அப்படியே எங்களப் பாக்க வந்திருந்தார். அவர்ட்ட பேசிட்டு இருந்தப்போ ஒரு வயசான பாட்டி வந்து கைய நீட்டிக்கிட்டே இருந்துச்சு. யாரும் அத மதிக்கக் கூட இல்ல. நானும் போடலாமா வேணாமா-னு ரொம்ப யோசிச்சு சரி போனா போகுது கொஞ்சமா குடுத்துடலாம்னு நினைச்சு என் பர்ஸ எடுத்து துழவி துழவி ஒரு நாலணா-வ எடுத்து அது கையில போட்டுட்டு பெருமையாப் பாத்தேன். அந்தப் பாட்டி அது கையில இருந்த நாலணாவப் பாத்துது. என்னையப் பாத்துது. அப்படி ரெண்டு தடவைப் பாத்ததும்தான் எனக்கு ஒரு பயம் வந்து நான் என் ஃப்ரெண்டப் பாத்தேன். அவருக்கு ஒரே சிரிப்பு. உடனே அந்த பாட்டி ஏன் பாப்பா! எதுக்கு இதக் குடுத்த? இத வச்சு என்னால என்ன பண்ண முடியும்னு நினைச்சுக் குடுத்த? இத வச்சு என்னால ஒரு டீ குடுக்க முடியுமா?-னு அது பாட்டுக்கு காசு வச்சிருந்தக் கைய என் முன்னாடி நீட்டி நீட்டி சத்தம் போட்டு போட்டுக் கேக்குது. எனக்கா ஒரே பயம். எங்க அந்தம்மா என் கையப் பிடிச்சு என் கையில திரும்ப அந்த நாலணாவக் குடுத்துடுமோனு. அதுக்குள்ள என் ஃப்ரெண்ட் ஒரு அஞ்சு ரூபா காயின எடுத்துப் போட்டதும் அமைதியா போயிடுச்சு. கூட இருந்த டாக்ஸ்லாம் இன்னமும் இத சொல்லி சொல்லி சிரிக்குங்க. என்னே ஒரு வில்லத்தனம். நானாச்சும் நாலணாப் போட்டேன். அதுங்க எதுமே போடாம எப்படி என்னையப் பாத்து சிரிக்கலாம். நீங்களே நியாயத்த சொல்லுங்க மக்கா!!

40 comments:

அபி அப்பா said...

:-))

கண்ணா.. said...

ரசனையாக எழுதுகிறீர்கள். ஏன் நீண்ட இடைவெளி...நான் உங்கள் பழைய பதிவெல்லாம் படித்து உங்கள் பாலோவர் ஆகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது....


வழக்கம் போல் நகைசுவை கலந்த நடை.....

அடிக்கடி எழுதுங்கள்...

ஆயில்யன் said...

//கூட இருந்த டாக்ஸ்லாம் இன்னமும் இத சொல்லி சொல்லி சிரிக்குங்க. என்னே ஒரு வில்லத்தனம்///

படிச்சுட்டு முடிச்சும் கூட எனக்கு சிரிப்பே வர்லீயே !

ஆயில்யன் said...

//அபி அப்பா said...
:-))
//
ஹய்யோ அபி அப்பா

ஸ்மைலி போட்டுட்டீங்களா போச்சு போங்க டோட்டல் டேமேஜாகிட்டீங்க :(

ஆயில்யன் said...

//அக்கா அக்கா-னு கேக்கறப்ப எல்லாம் இழுத்து ஒரு அறை விடணும் போல தோணும்.///

எனக்கு இப்படித்தான் சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுக்கிறவங்களை பார்த்தபோது அவுங்க பெத்தவங்களை போட்டு கும்மி எடுக்கணும்ன்னு தோணுச்சு :(

பாவம் பசங்களுக்கு அந்த எண்ணத்தை திணிச்சது அவுங்கதானே...?! :((

ஆயில்யன் said...

//ப்ராமிஸ் பண்ணாம படிச்சா சாமி உங்க கண்ணக் குத்திடும்//

அய்யோம்மா!

அவ்ளோ டெரரான சாமி கூட எல்லாம் சகவாசம் வைச்சிருக்கீங்களா ! :)))

ஜியா said...

:))

எம்.எம்.அப்துல்லா said...

அம்மா...தாயி..உங்ககிட்ட பேசி ரொம்ப நாளாச்சு..ஒரு ஃபோன் பிச்சை போடுங்கம்மா!!!

கோபிநாத் said...

;-)))

*இயற்கை ராஜி* said...

சேம் பிள‌ட்...இதே அவ‌மான‌ம் என‌க்கும் ந‌ட‌ந்திருக்கு:-((((

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதுங்க எதுமே போடாம எப்படி என்னையப் பாத்து சிரிக்கலாம். நீங்களே நியாயத்த சொல்லுங்க மக்கா!!//

அதானே? எதுமே போடாம எப்படி சிரிக்கலாம்? எதுமே போடாம அபி அப்பா கூட சிரிச்சி இருக்காரே? :))))

ஸ்ரீ.... said...

நன்றாக எழுதும் நீங்கள் அரிதாக எழுதுவது வருத்தம். இனிமேல் தொடர்ந்து எழுதுவீர்களென எதிர்பார்க்கிறேன். மற்றொரு நல்ல, நகைச்சுவைப் பதிவு.

ஸ்ரீ....

நாகை சிவா said...

கொடுத்தா உருப்படியா கொடுக்கனும் இல்லனா பேசாமல் இருக்கனும் என்பது உங்க டாக்ஸ்க்கு தெரிஞ்சு இருக்கு போல ;)))

வெண்பூ said...

நீங்க ஆனாலும் ரொம்ப தாராளப் பிரபு (ச்சீ, தப்பா சொல்லிட்டனா, சரி) தாராள குஷ்பூ.. எப்படி நாலணா போடுற அளவுக்கு உங்களுக்கு மனசு வந்தது? ஹி..ஹி.. இப்பவெல்லாம் பிச்சைகாரங்களுக்கு எவ்ளோ போடுறீங்க?

இல்லைன்னா இன்னொன்னு பண்ணியிருக்கலாம் நீங்க, அந்த பிச்சைக்காரிகிட்ட நீங்களும் சண்டைக்கு போயிருக்கலாம், "ஏம்மா, நான் என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்ணுறேன், என் மேனேஜர்கிட்ட அப்ரைசல்ல நீ குடுக்குற சி ரேட்டிங்க வெச்சி என்ன கிழிக்க முடியும்னு என்னால சண்டையா போட முடியும்"னு அவங்ககிட்ட உண்மைய போட்டு உடைச்சி இருக்கலாம்.. :))))

கப்பியாம்புலியுரன் said...

நல்லா இருக்கு .,

இம்சையோட இம்சை

:))

மெனக்கெட்டு said...

கோடை விடுமுறை முடிந்து விட்டதா?

'இம்சை அரசி' திரும்ப வந்துட்டாங்கப்பா!

இனிமேல் அடிக்கடி பதிவுகள் எதிர்பார்க்கலாம்!

மேவி... said...

எனக்கும் இதே மாதிரியான அனுபவம் இருக்கு..... அனா அந்த பிச்சைக்காரன் நான் போட்ட ஐம்பது பைசாவை என்மேல் விசிவிட்டு எஸ் ஆகிட்டான்.

இரவு நேரம் என்பதால் யாரும் பார்க்கவில்லை

Thamira said...

ஒருமுறை ஹோட்டலில் சர்வருக்கு 50 காசுகள் டிப்ஸ் தர முறைத்துக்கொண்டே இதெல்லாம் ஒரு டிப்ஸா என்று சொல்லி திருப்பித்தந்துவிட்டார். போடாங்கன்னு நானும் வாங்கிக் கொண்டேன். இவ்வளவுக்கும் 10 வருஷம் முன்னாடி நடந்ததுங்க இது..

பொடிப்பையன் said...

hi இம்சை அரசி,
முடிந்தால் http://podipaiyan.blogspot.com/ சென்று படித்து பார்க்கவும்.

-பொடிப்பையன்

Thiru said...

Good humor sense.

Keep writing.

-Thiru

நேசமித்ரன் said...

ஸ்வாரஸ்யமா சொல்லி இருக்கறீங்க
ஒரு ரூபா தாள கிழிச்சு போட்டு போற ஆளுங்க எல்லாம் இருக்குங்க
அடிக்கடி பதிவு போடுங்க..

க.பாலாசி said...

ஓ.கே. இனிமே ரொம்ப நாள் கழிச்சு எழுதுனா, இதுமாதிரி உண்மையை எல்லாம் சொல்லனும்.

உண்மைத்தமிழன் said...

இதுல என்ன பெரிய அவமானம் இருக்கு..?

நானெல்லாம் எட்டணாவைப் பிச்சை போட்டுட்டு அவன் கைல இருந்தே நாலணாவை உருவுனவன்..

இதுக்கெல்லாம் போய் மானம், அவமானம் பார்த்துக்கிட்டு.. விடு்ம்மா..

(ஏம்மா இவ்ளோ பெரிய இடைவெளி..?)

Sanjai Gandhi said...

ஓ.. இம்சை ரிட்டர்ன்ஸ்.. :)

Anonymous said...

நல்ல கதை. கிட்டத்தட்ட இதே போல் என்னுடைய நண்பனுக்கு நடந்தது. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. பழைய நினைவுகளை ஏற்படுத்தியதற்கு நன்றி.

உங்கள் வலை பக்கம் நன்றாக இருக்கிறது. மேலும் தொடர வாழ்த்து

Thatchai kannan said...

உண்மையிலேயே அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்..அந்த இடத்தில பேசவும் முடியாது...மற்றவர்களுடன் சார்ந்து சிரிக்கவும் முடியாது..அனால் இரவில் அதை நினைத்து கண்டிப்பாக சிறிதது இருப்பிர்கள் என நினைக்கிறேன் ....நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள்....

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹி ஹி.. இப்போ அந்த பிருந்தா என்ன பண்றாங்க தோழி??

நாமக்கல் சிபி said...

:)

நல்லா ரசிச்சி சிரிச்சேன்!

நாமக்கல் சிபி said...

இப்பவெல்லாம் பின்னூட்டத்தோட சேர்த்து ஓட்டும் போட்டுடணும்! இல்லாட்டி சண்டைக்கு வராங்க!

நாமக்கல் சிபி said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இதுல என்ன பெரிய அவமானம் இருக்கு..?

நானெல்லாம் எட்டணாவைப் பிச்சை போட்டுட்டு அவன் கைல இருந்தே நாலணாவை உருவுனவன்..

இதுக்கெல்லாம் போய் மானம், அவமானம் பார்த்துக்கிட்டு.. விடு்ம்மா..

(ஏம்மா இவ்ளோ பெரிய இடைவெளி..?)//

//நானெல்லாம் எட்டணாவைப் பிச்சை போட்டுட்டு அவன் கைல இருந்தே
நாலணாவை உருவுனவன்..//

இதுல எதுவும் பிராஃபிட் இருக்குற மாதிரி தெரியலையே உண்மைத் தமிழன்!

தமிழன்-கறுப்பி... said...

:))

மங்களூர் சிவா said...

இருந்தாலும் அம்புட்டு காசு நீங்க போட்டிருக்கக்கூடாது :((

Chandru said...

Very funny. too good

Anonymous said...

//$anjaiGandh! said...

ஓ.. இம்சை ரிட்டர்ன்ஸ்.. :)நல்லா இருக்கு .,//


ரிப்பீட்டே!!


அன்புடன்,
அம்மு.

Anonymous said...

nallaarukku.

hahahaha

Sathyan said...

தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும்தான் செய்த காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே!
-ஆசான் ஒளவையார்-

கலாட்டா அம்மணி said...

நல்ல நகைச்சுவையான பதிவு..

இதுமாதிரியான அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது, இத்தனைக்கும் நான் ஒரு ரூபாய் கொடுத்தேன்...என்ன செய்ய...நாடு கெட்டுகிடக்கு..

gils said...

achuchoooo...epdinga unga bloga ithana naala naan miss panen..:D chaaancela..seri ravusa ezhuthareenga..kodumai usha blog mathiri iruku unga experiencessla :D cha..ithana naala miss paniten :) ini regulara gummiku coming :) romba naala aana thoosi thatala polarukay blogla :)

Anonymous said...

எனக்கு எவ்வளவு போடுவீங்க..?

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....