முட்டையோட வெள்ளைக்கரு எடுத்து தலைல தேய்ச்சு கொஞ்ச நேரம் ஊற வச்சு தலைக்குக் குளிச்சா முடி நல்லா இருக்கும். பொடுகு போயிடும்னு யாரோ எனக்கு சொன்னாங்க. அதை என் ஆருயிர் தோழிகள்கிட்ட சொன்னேன். இரண்டு பேர் செஞ்சுப் பார்க்கலாம்னு களத்தில இறங்கினாங்க.
ரெண்டு பேரும் முட்டையோட வெள்ளைக்கருவை எடுத்து தலைல தேய்ச்சாங்க. ஒருத்தி கொஞ்ச நேரத்துல தூக்கம் வருதுனு படுத்து தூங்கிட்டா. இன்னொருத்தி துணி துவைக்கப் போயிட்டா. கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பி வந்தவ என் தலையப் பாருடா-ன்னுட்டே சோகமா வந்தா. பார்த்துட்டு எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியலை. தலையெல்லாம் அங்கங்க வெள்ளை வெள்ளையா இருந்துச்சு. வெய்யில்லப் போய் துவைச்சதால முட்டை ஆம்லேட் ஆயிடுச்சுப் போல.
தூங்கிட்டு இருந்தவ அலறியடித்து எழுந்தா. முடி அப்படியே கம்பி கம்பியாய் நீட்டிட்டு இருந்துச்சு. அடிப் பாவி! ஐடியா கொடுத்தியே நீ-ன்னு என் மேல் பாய்ஞ்சாங்க. ஓய்! நான் என்ன ஏழு மணி நேரம் ஊற வை-னா சொன்னேன்?-ன்னு அப்படியே எஸ் ஆயிட்டேன். ஹி... ஹி... நாம யாரு :P
------------ooOoo---------------
எங்க கூட ஒரு தெலுங்குப் பொண்ணு இருக்கா. அவ தமிழ் பேசற அழகு இருக்கே... அழகோ அழகு. ஒரு நாள் சமையல் பண்ணீட்டு இருந்தப்போ ஜிஞ்சி எடு ஜிஞ்சி எடுனு சொன்னா. நான் முழிச்சேன். நான் முழிக்கற முழியப் பாத்துட்டு அவளே வேகமா வந்து இஞ்சிய எடுத்துக்கிட்டுப் போயிட்டா. அடிப்பாவி ஜிஞ்சரயும் இஞ்சியையும் சேர்த்து ஜிஞ்சி பண்ணிட்டாளேனு ஓட்டிட்டு இருந்தோம்.
இதே மாதிரி ஒரு நாள் ஆபிஸ்ல இருந்து வர வழியில ஒரே கரிஞ்ச வாசம்னு சொல்லிட்டு இருந்தா. சரி யாரவது தீய விட்டிருப்பாங்க. அதைதான் வாடை-னு சொல்ல தெரியாம இப்படி சொல்றானு நினைச்சு விட்டுட்டோம். இன்னொரு நாள் எல்லாரும் சேர்ந்து போனப்போ எங்க இருந்தோ கருவாடு செய்யற வாடை(ஹி... ஹி... எனக்கு புடிக்காதுல்ல... அதான் ;)) வந்துச்சு. உடனே ஏ! கரிஞ்ச வாசம் கரிஞ்ச வாசம்னாலே பாக்கலாம்....
------------ooOoo---------------
தக்காளி சாதம் செய்யறப்போ தக்காளி வதங்கினதும் கொஞ்சம் கொத்துமல்லி தழை, கொஞ்சம் புதினா தழை எடுத்து ரெண்டையும் ஒண்ணாப் போட்டு அரைச்சு வதங்கின தக்காளில ஊத்தி அப்புறம் வழக்கம்போல தக்காளி சாதம் செஞ்சு பாருங்க. வாசம் ஊரையேத் தூக்கும். டேஸ்ட்டும் அமர்க்களப்படுத்தும்.
------------ooOoo---------------
ஹ்ம்ம்ம்ம்... கொஞ்ச நாளா என்னன்னே தெரியலை போஸ்ட் போட மேட்டர் கிடைச்சுட்டே இருந்துச்சு. எழுத்தார்வமும் அப்படியே ஊற்றெடுத்துச்சு. இப்போ என்னன்னே தெரியலை. ஒண்ணுமே தோண மாட்டேன்றது.
இதை சொல்லி நான் ஃபீல் பண்ணினப்போ நிறைய நண்பர்கள்(?) அப்பாடா கொஞ்ச நாளைக்கு உன் இம்சை இல்லாம சந்தோஷமா இருக்கலாம்னு சொன்னாங்க :(((( சோ கொஞ்ச நாளைக்கு நம்ம ப்ளாக்குக்கு லீவு விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். பாவம் அதுக்கு மட்டும் சம்மர் ஹாலிடேஸ் வேணாமா??? அதுக்காக சுத்தமா மூடிடுவேனு யாரும் ரொம்ப சந்தோஷப்பட வேணாம். அப்பப்போ வருவேன். அதை எந்த ஒரு தீய சக்தியாலயும் தடுக்க முடியாது :P
இம்சைகள் தொடரும்...
Thursday, April 3, 2008
இதனால மக்களுக்கு அறிவிக்கறது என்னன்னா.....
Posted by இம்சை அரசி at 5:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
தக்காளி சாதம் டிப்ஸ் உண்மையானதா ? அல்லது அதுவும் அந்த பொடுகு டிப்ஸ் மாதிரி தானா ?
:))
//தக்காளி சாதம் செய்யறப்போ தக்காளி வதங்கினதும் கொஞ்சம் கொத்துமல்லி தழை, கொஞ்சம் புதினா தழை எடுத்து ரெண்டையும் ஒண்ணாப் போட்டு அரைச்சு வதங்கின தக்காளில ஊத்தி அப்புறம் வழக்கம்போல தக்காளி சாதம் செஞ்சு பாருங்க. வாசம் ஊரையேத் தூக்கும். டேஸ்ட்டும் அமர்க்களப்படுத்தும்.///
இது மட்டும் சரி டிரைப்பண்ணி பார்க்கலாமே என்று ”திங்க்”கவைச்சுது!
என்ன ஆனாலும் சரி ஜெஞ்சு பார்த்துட்றேன் :))
//
ஹ்ம்ம்ம்ம்... கொஞ்ச நாளா என்னன்னே தெரியலை போஸ்ட் போட மேட்டர் கிடைச்சுட்டே இருந்துச்சு. எழுத்தார்வமும் அப்படியே ஊற்றெடுத்துச்சு. இப்போ என்னன்னே தெரியலை. ஒண்ணுமே தோண மாட்டேன்றது.//
தோணாது.. எப்படி தோணும்... இதுக்கெல்லாம் விளாக்கமா வேணும்?
கொடுமைடா சாமி.. இதுக்கெல்லாம் குட்டிப்பாப்பா வந்து விளக்கம் சொல்றது.....
:(((( சோ கொஞ்ச நாளைக்கு நம்ம ப்ளாக்குக்கு லீவு விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.//
அதுவும் சரிதான்.....
எதற்குமே ஒரு Break வேணும்...
Senthil Kumar
Bangalore
;))))
எதுக்குங்க லீவு? அதையும் சொல்லிடுங்க ;)
பிளேடு பக்கிரி
//அதுக்காக சுத்தமா மூடிடுவேனு யாரும் ரொம்ப சந்தோஷப்பட வேணாம். அப்பப்போ வருவேன். அதை எந்த ஒரு தீய சக்தியாலயும் தடுக்க முடியாது//
அதுக்காக இப்படி தக்காளி சாதம் செய்றதுக்கு டிப்ஸ் எல்லாம் கொடுத்து ரெம்பவே இம்சை பண்ணக் கூடாது.
என்னவோ ஏதோன்னு வந்து பார்த்தா வழக்கம் போலத்தானா?
//சோ கொஞ்ச நாளைக்கு நம்ம ப்ளாக்குக்கு லீவு விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். //
appadiyaa??? aiyaa... :)))
enakkennamo vera etho reasonaa irukkumnu thonuthe....
kalya moodnu sollunga atha vittu elutha sarku illa appdigrathu ellam summa kananma
//தக்காளி சாதம் செய்யறப்போ தக்காளி வதங்கினதும் கொஞ்சம் கொத்துமல்லி தழை, கொஞ்சம் புதினா தழை எடுத்து ரெண்டையும் ஒண்ணாப் போட்டு அரைச்சு வதங்கின தக்காளில ஊத்தி அப்புறம் வழக்கம்போல தக்காளி சாதம் செஞ்சு பாருங்க. வாசம் ஊரையேத் தூக்கும். டேஸ்ட்டும் அமர்க்களப்படுத்தும்.//
நல்ல ஜடியா,நோட் பண்ணிக்கிறேன். அப்புறம் யுஸ் ஆகும். :)))
//முட்டையோட வெள்ளைக்கரு எடுத்து தலைல தேய்ச்சு கொஞ்ச நேரம் ஊற வச்சு தலைக்குக் குளிச்சா முடி நல்லா இருக்கும். பொடுகு போயிடும்னு யாரோ எனக்கு சொன்னாங்க. அதை என் ஆருயிர் தோழிகள்கிட்ட சொன்னேன்//
ஓஹோ....இம்சை அரசியோட தோழிகள் தான் பரிசோதனை எலியா யுஸ் ஆகறாங்களா? :)))))
//
ஹ்ம்ம்ம்ம்... கொஞ்ச நாளா என்னன்னே தெரியலை போஸ்ட் போட மேட்டர் கிடைச்சுட்டே இருந்துச்சு. எழுத்தார்வமும் அப்படியே ஊற்றெடுத்துச்சு. இப்போ என்னன்னே தெரியலை. ஒண்ணுமே தோண மாட்டேன்றது.//
எப்படி தோனும்? ,எப்பவும் கனவிலயே மிதந்துக்கிட்டிருந்தா :P:P:P
//நாளைக்கு நம்ம ப்ளாக்குக்கு லீவு விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். பாவம் அதுக்கு மட்டும் சம்மர் ஹாலிடேஸ் வேணாமா??? அதுக்காக சுத்தமா மூடிடுவேனு யாரும் ரொம்ப சந்தோஷப்பட வேணாம். அப்பப்போ வருவேன்.//
purryuthu ...puriyuthu,. ... waiting for your reentry& happy storys/kavithaikal
//ஹ்ம்ம்ம்ம்... கொஞ்ச நாளா என்னன்னே தெரியலை போஸ்ட் போட மேட்டர் கிடைச்சுட்டே இருந்துச்சு. எழுத்தார்வமும் அப்படியே ஊற்றெடுத்துச்சு. இப்போ என்னன்னே தெரியலை. ஒண்ணுமே தோண மாட்டேன்றது.//
அப்படியா ! ஆச்சரியமா கீது !
buddywishes
க்கு என்ன கிடைச்சிருக்குன்னு
நீங்க பார்க்க வேண்டாமா ?
http://arthamullavalaipathivugal.blogspot.சொம்
வளர்க! வாழ்க வளமுடன்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
//முடி அப்படியே கம்பி கம்பியாய் நீட்டிட்டு இருந்துச்சு.//
கொஞ்சம் 50 கிராம் நல்ல சீயக்காய் தூளையும் ஒரு பத்து செம்பருத்தி இலைகளையும்
நன்றாக கசக்கி தலையில் நன்றாகத் தேய்த்து ஒரு 23 நிமிஷம் 23 செகன்ட்
ஊரவிட்டுப் பிறகு மிதமான வென்னீரில் தலையை 3 நிமிஷம் 3 செகன்ட் அலச
சரியாகிவிடும். ( செம்பருத்தி குளிர்ச்சி ஆகையால் அதிக நேரம் ஊரவேண்டாம்,
அப்பறம் ஜலதோசம் பிடித்துவிடும்.)
மீனாட்சி பாட்டி
தஞ்சை.
Enna aachu thideernu leave vidureenga, Appappa vanthu thalaya kattunga, illenna enna mathiri imsai blog readers paavam ungala summa vudadu.. :-)
Enna aachu thideernu leave vidureenga, Appappa vanthu thalaya kattunga, illenna enna mathiri imsai blog readers paavam ungala summa vudadu.. :-)
வாழ்த்துக்கள் இம்சை அரசி :))
தலைப்ப பாத்து வந்து ஏமாந்துட்டேன் :(
சீக்கிரம் தலைப்புக்கு சம்பந்தமான பதிவு போடவும்
இல்லைனா இந்த தலைப்புல குட்டிஸ் கார்னரிலும் , கும்மி, வ.வா.சங்கத்திலும் பதிவு வரும் இது எச்ச்ச்ச்ச்சசசரிரிக்ககை
ச்ச.. தலைப்ப பாத்து ஏமாந்துடுட்டேன்... சீக்கிறம் தலைப்புக்கு ஏற்ற பதிவு வரும் என நம்பிகிறேன். :P
//தக்காளி சாதம் செய்யறப்போ தக்காளி வதங்கினதும் கொஞ்சம் கொத்துமல்லி தழை, கொஞ்சம் புதினா தழை எடுத்து ரெண்டையும் ஒண்ணாப் போட்டு அரைச்சு வதங்கின தக்காளில ஊத்தி அப்புறம் வழக்கம்போல தக்காளி சாதம் செஞ்சு பாருங்க. வாசம் ஊரையேத் தூக்கும். டேஸ்ட்டும் அமர்க்களப்படுத்தும்.
//
ஓகே.. ஓகே.. புரியுது.. புரியுது.. :P
//ஹ்ம்ம்ம்ம்... கொஞ்ச நாளா என்னன்னே தெரியலை போஸ்ட் போட மேட்டர் கிடைச்சுட்டே இருந்துச்சு. எழுத்தார்வமும் அப்படியே ஊற்றெடுத்துச்சு. இப்போ என்னன்னே தெரியலை. ஒண்ணுமே தோண மாட்டேன்றது.//
தப்பே இல்லை.. எதுனா எழுதனும்னு தோணுச்சினா தான் தப்பு.. என்ன நான் சொல்றது சிவா மாம்ஸ்? :P
//ஹ்ம்ம்ம்ம்... கொஞ்ச நாளா என்னன்னே தெரியலை போஸ்ட் போட மேட்டர் கிடைச்சுட்டே இருந்துச்சு. எழுத்தார்வமும் அப்படியே ஊற்றெடுத்துச்சு. இப்போ என்னன்னே தெரியலை. ஒண்ணுமே தோண மாட்டேன்றது.//
"நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்"னு அடிக்கடி பாடறதா உங்க ரூம் மேட் சொன்னாங்க :P
//இதை சொல்லி நான் ஃபீல் பண்ணினப்போ நிறைய நண்பர்கள்(?) அப்பாடா கொஞ்ச நாளைக்கு உன் இம்சை இல்லாம சந்தோஷமா இருக்கலாம்னு சொன்னாங்க :((((//
ஹிஹி....:))
//அதுக்காக சுத்தமா மூடிடுவேனு யாரும் ரொம்ப சந்தோஷப்பட வேணாம். அப்பப்போ வருவேன். அதை எந்த ஒரு தீய சக்தியாலயும் தடுக்க முடியாது :P//
மங்களூர் சிவாவை தீய சக்தி என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன். :)
//ஜி said...
//சோ கொஞ்ச நாளைக்கு நம்ம ப்ளாக்குக்கு லீவு விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். //
appadiyaa??? aiyaa... :)))
enakkennamo vera etho reasonaa irukkumnu thonuthe...//
எனக்கு கூட.. :)
//மங்களூர் சிவா said...
இல்லைனா இந்த தலைப்புல குட்டிஸ் கார்னரிலும் , கும்மி, வ.வா.சங்கத்திலும் பதிவு வரும் இது எச்ச்ச்ச்ச்சசசரிரிக்ககை
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்..
//தலையெல்லாம் அங்கங்க வெள்ளை வெள்ளையா இருந்துச்சு. வெய்யில்லப் போய் துவைச்சதால முட்டை ஆம்லேட் ஆயிடுச்சுப் போல.//
இது நல்லா இருக்கே.. கேஸ் செலவு மிச்சம்... :))
//தூங்கிட்டு இருந்தவ அலறியடித்து எழுந்தா. முடி அப்படியே கம்பி கம்பியாய் நீட்டிட்டு இருந்துச்சு.//
அந்த கம்பி எல்லாம் என்ன பண்ணிங்க... ஏன்னா இன்னைய தேதிக்கு கம்பி தான் ரொம்ப காஸ்ட்லி ஐட்டம். :P அந்த பொண்ண வச்சி ஒரு இரும்பு க்ம்பி கடை ஆரம்பிக்கலாம்... :))
Imsaiarasi,
I started reading your posts recently.I like all your feel good stories :).Especially andha athai magane athane story sooper.I read it almost everyday.Neenga oru novel kooda ezhuneengannu kelvi patten..congrats!Keep rocking!
/////SanJai said...
//அதுக்காக சுத்தமா மூடிடுவேனு யாரும் ரொம்ப சந்தோஷப்பட வேணாம். அப்பப்போ வருவேன். அதை எந்த ஒரு தீய சக்தியாலயும் தடுக்க முடியாது :P//
மங்களூர் சிவாவை தீய சக்தி என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்...
முதல் முறை வந்தவர்கள் பிறகு தினம் தினம் வருகின்றனர்! தினம் தினம் வருபவர்களோ இந்த பழக்கத்திற்கு அடிமையாகவே ஆகிவிட்டனர்! கனடாவின் கருத்துள்ள பக்கங்களை வாசிக்க தான் இவர்கள் தவமாய் தவமிருக்கின்றனர்! அப்படி என்ன விசேஷமாய் இருக்கிறது கனடாவின் பக்கங்களில்? வாசித்துப் பாருங்கள் "http://canadathatstamil.blogspot.com/"! வசித்தவர்கள் வாய்விட்டு சிரிப்பதால் மனசு லேசாகிறது! ரசிகர்கள் கனடாவின் blog'ல் செய்திகளை படித்து விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்! உண்மை முற்றிலும் உண்மை! விவரம் அறிய கனடாவின் blog' க்கு வாருங்கள்! "http://canadathatstamil.blogspot.com/"
கண்டிப்பா ஓய்வு அவசியம்
அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
உங்க வலைப்பூவுக்கு இது என் முதல் வருகை.
ஒரு எழெட்டு பதிவு படிச்சுட்டு சும்மா பேயடிச்சுப் போயி உக்காந்துருக்கேன்.
அக்கா வேப்பிலை உடைச்சாரப் போயிருக்காங்க.
"இனிமே இந்த மாதிரி,
பேய்க் கதையெல்லாம் படிக்காதடா ராஜான்னு"
அட்வைஸ் வேற பண்ணிட்டு போறாங்க.
"எப்பிடி இம்சை அரசி இது..?
எப்பிடி?"
"எழுதியே சாகடிக்க எந்த யுனிவர்சிட்டில டாக்டரேட் வாங்கினீங்க?"
"ப்பட்.
இனிமே இந்தப் பக்கம் வருவே?
ப்பட்.
இனிமே இந்தப் பக்கம் வருவே?
ப்பட். ப்பட். ப்பட்." (ஒண்ணுமில்லீங்க. என் கன்னத்துல நானே போட்டுக்கற சவுண்டுதேங்)
----------------------
உங்க ஸ்டைல்லயே உங்களைப் பாராட்டிட்டனா?
கதைகள், கவிதைகள் அனைத்தும் அருமை.
நல்ல சரளமான நடை.
கூடவே நகைச்சுவை கலந்து எழுதுவது நான் கண்ட வரை,
இவ்வளவு அற்புதமாக வாய்ப்பது மிக அபூர்வம்.
அதிலும் "என் சோக கதைய கேளு ப்ளாக் குலமே!!! " பதிவுல
//நீங்களே சொல்லுங்க. என் ஒருத்திக்கு தோசை சுடவே நான் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேன். நாளைக்கு எனக்கும் சேர்த்து அவர் செய்யணும்னா அவர் எவ்வளவு கஷ்டப்படு்வாரு? இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல.......//
வரிகளைப் படிச்சுட்டு என்னால சிரிப்பை அடக்கவே முடியலீங்க.
வாழ்த்துக்கள்.
இந்த தக்காளி சாதம் டிப்ஸை எங்கயோ படிச்சி, எங்க கிட்ட சொல்லி செக் செய்து பார்த்துட்டு அப்புறம் யாராச்சும் நல்லா இருக்குனு சொன்னா நீங்க பண்ணுற மாதிரி எதும் ப்ளானா??? :)
முட்டியோட வெள்ளைக் கருவைஇ உங்க Friends தலைல உடைச்ச மாதிரி, தக்காளி எங்க தலைக்கா அரசி??? :)
Post a Comment