Friday, January 6, 2017

இம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு! :-)

ஒரு ரெண்டு நாளுக்கு முன்னாடி யதேச்சையா என் ப்ளாக் பக்கம் எட்டிப் பாத்தப்ப தான் தெரிஞ்சது இம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சுனு. மூணு நாளா ஒரே சந்தோஷத்துல என் பதிவுகளெல்லாம் படிச்சுட்டு இருந்தேன். ஒண்ணொண்ணும் படிக்கும் போதும் நாமளா இப்படி எழுதினோம் நாமளா இப்படி கமெண்ட்ஸ் போட்டிருக்கோம்னு ஒரே ஆச்சரியம் :-) ஆனா லைஃப்ல மறந்து போன பல விஷயங்கள ஒரு டைரி மாதிரி ஞாபகப்படுத்திட்டு இருக்கு.

ஆரம்ப காலத்துல பெருசா என்ன எழுதறதுனு தெரியாம ஏதோ கிறுக்கிட்டு இருந்த என்னை உற்சாகப்படுத்தி தொடர்ந்து என் மொக்கையெல்லாம் தாங்கிக்கிட்ட நீங்க மட்டும் தான் என்னோட பலம். என் ப்ளாக் விகடன் வரவேற்பறைல வந்தது, அத்தை மகனே அத்தானே கதை சில ஃபோரம்ல ஷேர் ஆகியிருக்கு, அதே கதை சில ஆண்ட்ராய்ட் ஆப்-ல ஷேர் ஆகி இருக்கு. இந்த வெற்றிக்கு முழு காரணமும் நீங்க மட்டும் தான்.

என் மேல நிறைய பேருக்கு வருத்தம். அவங்க ப்ளாக்க்கு வர மாட்டென்றேன்.. கமெண்ட்ஸ் போடமாட்டேன்கிறேன்னு. நான் ப்ளாக் ஆரம்பிச்சது இன்போஸில் ஜாயின் பண்ணின புதுசுல. அப்போ இன்டர்நெட் சாயந்திரம் 5 - 7 மட்டும்தான். அதுல என் ப்ளாக் பாக்கறதுக்கும் பிரெண்ட்ஸோட  பேசறதுக்குமே சரியா போயிடும். அதனால வேற ஏதும் என்னால பாக்க முடிஞ்சதில்ல :-)

அப்புறம் நிறைய பேர் காதல் பத்தியே எழுதறேன்னும் ஒரே கம்ப்ளெயிண்ட். கல்யாணம் ஆகி சில வருஷங்கள் கழிச்சு இதே மாதிரி எழுதுவியான்னுலாம் கேள்வி. எதெது எந்த வயசுல பண்ண முடியுமோ அந்த வயசுல பண்ணனும். அந்த ஏஜ் காதல் கல்யாணம் பத்தின கற்பனைகளுக்கான ஏஜ். கல்யாணம் ஆகி சில வருஷங்கள் ஆகிட்டா பொறுப்பான குடும்பஸ்திரிக்கான ஏஜ். காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்க வேண்டியதுதான் :) டென்த் படிக்கறவன்ட்ட போயி நீ ஏன் டென்த் படிக்கற. ட்வெல்த் படிக்க வேண்டியதுதானான்னு கேட்டா என்ன பண்றது? :D

எல்லா கதைலயும் உங்க சொந்த கதையானு நிறைய பேர் கேட்டிருக்காங்க. எந்த கதையும் என் சொந்த கதை இல்ல. ஆனா சின்ன சின்ன விஷயங்கள் எனக்கு நடந்ததை சேர்த்திருப்பேன். உதாரணத்துக்கு கவிதையே தெரியுமா கதைல வந்த பஸ் ஸ்டான்ட் இன்சிடென்ட், ஸ்பைடர் தட்டி விடறது லாம் எனக்கு நடந்தது. ஆனா அவங்கலாம் யார்னு கூட எனக்கு தெரியாது. ஆனா கதைல நல்லாருக்கு இல்ல :)

உன்னோடு தான் என் ஜீவன் கதையை முடிக்காததுக்கு ரொம்ப சாரி. அதை எப்படி எழுதணும்னு பிளான் பண்ணி வச்சிருந்ததை சுத்தமா மறந்து போயிட்டேன். அதுல தான் என் சொந்த கதையை சேர்த்து எழுதணும்னு நினைச்சிருந்தேன் ;) கதை நியாபகம் இல்ல :(

என்னை அரசி அரசினு கமெண்ட் போடறப்போ எல்லாம் நிஜமா ஒரு கிரீடத்தை எடுத்து என் தலைல வச்ச மாதிரியே இருக்கும் :) அத ரொம்ப மிஸ் பண்றேன்னு அப்பப்போ கஸ்டமா இருக்கும். ஆனா அதை விட ஒரு பெரிய கிரீடம் இப்போ தலைல இருக்கு :) அம்மான்ற கிரீடம் :)) அட! உங்களுக்கு சொல்லவே மறந்துட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு குட்டி இளவரசன் வந்தாச்சு :)) அவர் பேர் தேவஹரி. வாழ்க்கையே இந்த ரெண்டு குட்டிங்கள சுத்தியே நகருது. சென்னைல இருந்து சிட்னி புலம் பெயர்ந்து மூணு வருஷம் ஆச்சு :)

ஏதாவது என்கிட்டே சொல்லணும்னு ஆசைப்பட்டிங்கனா jayanthijj@gmail.com ன்ற மெயில் ஐடிக்கு மெயில் பண்ணுங்க :)

Happy new year to you and your family :))