Monday, January 24, 2011

நேஹா குட்டி உருவாக்கும் அம்மாவின் உலகம்!

உனது முக்கிய தருணங்களை
புகைப்படம் எடுத்து வைக்கிறேன்
ஒவ்வொரு புதிய செயலையும்
ஏட்டில் குறித்து வைக்கிறேன்
நீ செய்யும் குறும்புகளை
வீடீயோ செய்து வைக்கிறேன்
ஆனால்..
உனது உள்ளங்கையின் மென்மையையும்
பாதத்தின் வாசனையையும்
அவற்றில் முத்தமிடும்போது
எனக்காய் மலரும் புன்சிரிப்பையும்
எதில் சேகரித்து வைப்பது??

—————ooOoo—————

அடுக்கி வைத்திருக்கும்
புத்தகங்களை கலைக்கிறாய்
கடிகாரத்தை இழுத்து
கீழே தள்ளி உடைக்கிறாய்
துடைத்த வீட்டில்
உடனே ச்சூ போகிறாய்
பாயின் கோரைகளை உருவி
வாயில் வைக்கிறாய்
வர வர உன் குறும்பு
அதிகமாய்தான் போய் விட்டது
வெளியே சலித்துக் கொண்டாலும்
மனம் என்னவோ சந்தோசமாய்
ரசிக்கத்தான் செய்கிறது..

—————ooOoo—————

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாய் போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’-களையும்
பாதுகாத்து வைக்கிறேன்
முதன் முதலாய்
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாய் அழைப்பதை
எப்படி பாதுகாப்பது??

—————ooOoo—————

பப்புக்குட்டிக்கு நேத்தோட 7 மாதங்கள் முடிஞ்சிடுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி எதாவது எடுக்கணும்னா அங்கபிரதட்சணம் பண்ணி போய்ட்டு இருந்தா. ரெண்டு வாரம் முன்னாடி அவளோட மாமா வாக்கர் வாங்கி தந்துட்டான். இப்ப வீட்டையே அலசி எடுக்கறா.எதையும் வைக்க முடியல. வண்டி நேரா கிச்சன்க்குதான் போகுது. தக்காளி கூடைல இருந்து எடுத்து கீழ போட்டுடறா. அத்தையோட கண்ணாடி, என் ஆபிஸ் பேக் எதையும் விட்டு வைக்கறதில்ல. தாத்தா, பாப்பா சொல்றா இப்ப. என் டைம் ஃபுல்லா அவள சுத்தியே நகருது. சீக்கிரம் பழைய மாதிரி எழுத ஆரம்பிக்கனும்னு நினைச்சுட்டு இருக்கேன். பாப்போம் :)))

Tuesday, January 18, 2011

ஹையா!அஞ்சு ரூபா மிச்சம் பண்ணிட்டேனே!!

எனக்கு சின்ன வயசுல இருந்து செடி வளத்தனும்னு ரொம்ப ஆசை. ஆனா நாங்க இருந்த வீட்டுல செடி வைக்கற மாதிரி இடமே இல்ல. தொட்டி வாங்கி வைக்கலாம்மா-னு சொன்னதுக்கு அடி விழாத குறை தான்.

நாய்குட்டி வளத்தலாமானு கேட்டதுக்கும் எங்கம்மா உன்னை வச்சு சாப்பாடு போடறதே பெரிய விஷயம். இன்னும் நாய்க்குட்டி வேறயானு தடா போட்டாங்க. அதெல்லாம் முடியாது எனக்கு வேணும்னு அடம் பண்ணினதுக்கு நாய் வளத்தினா அது டெய்லி மோஷன் போகும். அடிக்கடி யூரின் போகும். அதும் கண்ட இடத்துல போய் வைக்கும். நீதான் க்ளீன் பண்ணனும். பண்றியானு கேட்டாங்க. உடனே கண்ணு முன்னாடி நாய் பப்பி ஷேம் பண்ணி வச்ச மாதிரியும் அத நான் க்ளீன் பண்ற மாதிரியும் சீன் ஓடுச்சு. உவ்வே! Yuk!!(இந்த உவ்வே, Yuk எல்லாம் இப்ப பப்புக் குட்டி துணிய துவைக்கறப்ப வரதில்ல :))) அதுக்கப்புறம் அம்மாட்ட கேட்டதே இல்ல. கல்யாணத்துக்கப்புறம் ஒரு தடவை என் பழைய ஆபிஸ்(ஆபிஸ் மாறிட்டேனாக்கும்) புல்லெட்டின் போர்டுல 'Puppies for sale' அப்படினு ஒரு போஸ்ட பாத்ததும் சின்ன வயசு ஆசை மனசுல அப்படியே லைட்டா தூக்க அத அப்படியே என் வீட்டுக்காரருக்கு ஃபார்வார்ட் பண்ணினேன் இத வாங்கலாமான்ற request-டோட. உடனே ரிப்ளை. உனக்கு தான் நான் இருக்கேனே-னு. அப்படியே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. வீட்டுக்கு போனதும் பாவமா முகத்த வச்சுக்கிட்டு அத வாங்கலாமேங்கனு கேட்டேன். அவர் அப்போதான் நான் சீரியஸா கேக்கறேனு தெரிஞ்சு வாங்கறது பெருசில்லடா. நாம அடிக்கடி ஊருக்குப் போவோம். அப்போ அத எங்க விட்டுட்டு போறதுனு கேட்டதும்தான் அவர் சொன்னது புரிஞ்சது. கஷ்டம்தான். அதோட அந்த ஆசைக்கு சமாதி கட்டியாச்சு.

அட! செடி பத்தி எழுத ஆரம்பிச்சு கடைசில ட்ராக்கு மாறி எங்கேயோ போயிட்டேன். பேக் டு த பாயிண்ட். சென்னை வந்ததும் ரோஜா செடி தொட்டி வாங்கி வைக்கணும்னு ஆசைப்பட்டேன். நாய்குட்டிக்கு சொன்ன கதையவே என் வீட்டுக்கார் சொல்லி என்னை ஆஃப் பண்ணிட்டார். ஒவ்வொரு தடவையும் எங்கத்தை சென்னை கொத்தமல்லி வாங்கறப்பவும் உரம் போட்டுடறாங்க. அதான் வாசமே இல்லாம இவ்ளோ பெருசா வளருது-னு ஃபீல் பண்றப்போ எல்லாம் நாம ஏன் கொத்தமல்லி செடி வளத்த கூடாதுனு நினைப்பேன். அது அப்படியே மறந்து போயிடும். கிறிஸ்துமஸ் டைம்ல நானும் என் வீட்டுக்காரும் மார்க்கெட் போயிருந்தோம். கொத்தமல்லி ஒரு கத்தை 10 ரூபானு சொன்னதும் எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சு. அண்ணே! என்ன இவ்ளோ விலை சொல்றீங்கனு கேட்டதுக்கு கிறிஸ்துமஸ் வந்துடுச்சு இல்ல பாப்பா (நோட் திஸ் பாயிண்ட்.. அவராதான் சொன்னாரு). எல்லாம் பிரியாணி பண்ணுவாங்க. அதான் இவ்ளோ ரேட்டுனு சொன்னார். அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் உடனடியா ஒரு தொட்டி எடுத்து வந்து புதினா தண்ட எல்லாம் நட்டு வச்சு நடுல கொத்தமல்லி போட்டு புதைச்சு வச்சேன். ஒரு மூணு நாள் கழிச்சு புதினா தழைஞ்சது. ஆனா ரெண்டு நாள்ல அது காஞ்சு போயிடுச்சு :(( அப்றமா ஒரு வாரம் கழிச்சு கொத்தமல்லி தழைய ஆரம்பிச்சுடுச்சு. டெய்லியும் ரெண்டு நேரமும் மறக்காம தண்ணி ஊத்திட்டு இருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வீட்டுக்கார்ட்ட டெய்லி நாலு தடவையாவது அஞ்சு ரூபா உங்களுக்கு மிச்சம் பண்ணிட்டேன் பாருங்கனு சொல்லிட்டே இருக்கேன். சீக்கிரம் ரோஜா செடி வாங்கணும் :)))

கீழ இருக்க படம் என்னோட கொத்தமல்லி செடிங்கதான்... கி.பி. 2007ஆம் ஆண்டு ஓசை செல்லா அண்ணா லால்பாக்ல நடத்தின ஃபோட்டோக்ராபி செஷன்ல ஃபர்ஸ்ட் பெஞ்ச்ல உக்காந்து தூங்கிட்டதால ஃபோட்டோஸ் சுமாராதான் இருக்கும் ஹி ஹி...



அடுத்து வெந்தயக் கீரை போடலாம்னு இருக்கேன் :))))