எனக்கு வாழ்க்கைல கிடைச்ச மிகப் பெரிய ப்ரொமோஷன் மிஸ்.ஜெயராஜ்-ல இருந்து மிஸஸ்.மோகன் பிரபு-வா பதவி உயர்வு வாங்கினது. என் அன்பு கணவரோட பாசத்துக்கும் காதலுக்கும் நான் அவருக்கு எதாவது கிஃப்ட் குடுக்க வேணாமா? அதுக்காக பொத்தி பொத்தி பாதுகாத்து பத்து மாதம் எனக்குள்ளேயே வச்சிருந்து போன ஜுன் 23ஆம் தேதி நைட் 10:14க்கு அவருக்கு ஒரு குட்டி தேவதைய கிஃப்ட்டா குடுத்திருக்கேன். இந்த கிஃப்ட்டால எனக்கு மறுபடியும் இன்னொரு ப்ரொமோஷன். அம்மா-ன்ற பதவி. அந்த ஃபீலிங்ஸ் செமயா இருக்கு. அனுபவிக்க மட்டும்தான் முடியும். யாராலயும் வார்த்தைகள்ல விவரிக்க முடியாது.
பொண் குழந்தை பிறந்தா அஞ்சலி-னு பேர் வைக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனா விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரத்துல பிறந்த அவளுக்கு ந, நி, நு, நே-ல பேர் வைக்க சொன்னாங்க. நானும் பிரபுவும் நிலா-னு வைக்கலாமானு யோசிச்சோம். ஆனா எல்லாரும் வேணாம்னு சொல்லிட்டாங்க. பிரபுவோட கஸினோட பொண்ணு நிலா-னு சொன்னா எல்லாரும் moon-அ தான் பாப்பாங்க. baby-ய யாரும் பாக்க மாட்டாங்கனு சொல்லிட்டா. சரி நேஹா நல்லா இருக்குனு யோசிச்சோம். எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. இன்னும் பெஸ்ட்டா ட்ரை பண்ணலாம்னு இருந்தோம். கடைசில அது இது-னு யோசிச்சு 'நேஹா பிரபு'-னே வச்சுட்டோம்.
உடனே நீங்க எல்லாரும் ஆஹா! இம்சை இளவரசி-னு யோசிக்கறது எனக்கு நல்லாவே தெரியுது. அப்படி சொன்னிங்கனா எனக்கு கெட்ட கோபம் வரும். ஹி ஹி... இம்சை பேரரசி-னு சொல்லுங்க. அந்த அளவுக்கு மேடம் வேலை பண்ணிட்டு இருக்காங்க. நைட்டெல்லாம் தூங்கறதே இல்ல. சில நாட்கள்ல பகல்லயும் தூங்கறது இல்ல. நல்லா துரு துருனு வாலு குட்டியா வரும்னு எல்லாரும் சொல்றாங்க. எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். எவ்ளோ சுகவாசியா இருந்த. உன்ன நல்லா ட்ரில் வாங்கட்டும்னு. எங்கப்பா ஒருநாள் எங்கம்மாட்ட ஃபீல் பண்ணி சொன்னாராம். ஜெயந்தி இருந்த ஜாலிக்கு இப்போ ரொம்ப கஷ்டப்படுதுனு :((( சரி போகட்டும். என் பொண்ணுக்காகதானே.
இப்பல்லாம் நல்லா என்னையே பாக்கறா. க்யூட்டா சிரிக்கறா. இப்போ என் டைம் ஃபுல்லா அவள சுத்தியே நகருது. அவள பாத்தா எனக்கு பாட தோணற வரிகள்
"ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசைதான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம்தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான்குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் புது மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இன்ப வெள்ளி தாரகை" - (அஞ்சலி அஞ்சலி பாடலிலிருந்து)
ஓகே ஃப்ரெண்ட்ஸ். கூடிய சீக்கிரம் வேற ஒரு போஸ்ட்ல மீட் பண்ணுவோம். பை.
Sunday, August 29, 2010
வா வா என் தேவதையே!!
Posted by இம்சை அரசி at 12:53 PM 37 comments
Labels: அனுபவம், ஃபீலிங்க்ஸ்
Subscribe to:
Posts (Atom)