அட அட அட..... என்ன இது.... கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியா போனதால எட்டிப் பாக்காம இருந்துட்டேன். அதனால லேட்டஸ்ட் அப்டேட்ஸ் தெரியாம மாயவரத்துல கோழி திருடுன ஆளாட்டம் பேந்த பேந்த முழிச்சிட்டு உக்காந்திருந்ததால அமைதியான பொண்ணு, நல்ல பொண்ணுன்னு பேர் வாங்கிட்டேன். அப்பாடி........ (வாழ்க்கைல இதுவரைக்கும் வாங்காத பட்டம்:))))
நம்ம இம்சையில்லாம மக்கா அல்லாரும் நிம்மதியா இருக்காங்க போல. எப்டி விடலாம்னு திருப்பி களமிறங்கியாச்சு. ஹி.... ஹி....
"என்ன லைஃப் இது??? காலைல எழறோம். ஆபிஸ்க்கு போறோம். சாயந்திரம் வரோம். சமையல் செஞ்சு சாப்பிட்டுட்டு தூங்கறோம். ஒரே போர்" இப்படி பொலம்பிக்கிட்டு இருந்தது சாட்சாத் அடியேன்தான். ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா டிவி பாத்துட்டு இருந்த என் ஃப்ரெண்ட் அப்படியே திரும்பி என்னை ஒரு லுக் விட்டா.
"அதுக்குதான் கல்யாணம் பண்ணிக்கோனு சொல்றோம்"-ன்னு அப்படியே சீரியஸா சொன்னா.
"ப்ளீஸ்டா. கல்யாணத்துக்கு போயி எவ்ளோ நாளாச்சு தெரியுமா? பண்ணிக்கோயேன். நாங்க வந்து எஞ்சாய் பண்ணுவோமில்ல" ன்னாளே பாக்கலாம். அப்படியே எனக்கு பத்திக்கிட்டு வந்தது.
"அடிங்க நாயே! நீ எஞ்சாய் பண்ணனும்கறதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கனுமா?"-ன்னு கத்தினேன்.
"செல்லம் அப்படி சொல்லலைடா. நீதான் ரொம்ப போர்னு ஃபீல்னு பண்ணின. அதுக்குதான் ஐடியா குடுத்தேன். எப்படியோ ஒருத்தன உன் தலைல கட்டி அவன் போன ஜென்மத்துல பண்ணின பாவத்த எல்லாம் கழிக்க போறாங்க. அதை ஏன் நீ இப்பவே பண்ணி பாவ மோட்சம் அழிக்க கூடாதுன்னு கேட்டேன்" - என்ன ஒரு உள்குத்து??!!!
"அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கறது அவனுக்கு தண்டனையா???"ன்னு இன்னும் நான் எகிற
"சரி சரி ஃப்ரீயா விடு. உனக்கு எப்படி மாப்பிள்ளை பாக்கணும்னு சொல்லு"ன்னா.
அப்படியே என் முகத்துல ஒரு ப்ளாஷ் அடிச்சது. என் கனவுகளை எல்லாம் அள்ளி விட்டேன்.
"எனக்கு அப்படி ஒண்ணும் பெருசா எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்ல. ஆனா கொஞ்சம் கண்டிஷன்ஸ் இருக்கு"
"ம்ம்ம்.... சொல்லு சொல்லு பாத்துடுவோம்"
"அதாவது என்னை வேலை செய்ய சொல்லி கஷ்டப்படுத்தக் கூடாது. அதுக்குனு நான் வேலை எதும் செய்ய மாட்டேனு சொல்லலை. ஷேர் பண்ணி செய்யணும். நான் பாத்திரம் கழுவனும்னா அவன் பாத்திரம் வெளக்கனும். நான் வீடு கூட்டினா அவன் குப்பை அள்ளனும். நான் துணி துவைச்சா துணி அலசணும். நான் காயப் போட்டா எடுத்து மடிச்சு வைக்கனும். நான் கொழம்பு வக்கணும்னா காய் வெட்டி தரணும்...."
"நிறுத்து நிறுத்து.... விட்டா நீ சோறு சாப்பிட்டா அவன் ஏப்பம் விடனும்........ நீ தூங்கினா அவன் குறட்டை விடணும்......... உனக்கு காய்ச்சல் அடிச்சா அவன் போயி ஊசிப் போட்டுக்கணும்னு சொல்லுவ போல" - ன்னு என்னை மொறைச்சா.
"ஏய்! அவன கண் கலங்காம பாத்துக்குவேன் தெரியுமா"
"எப்படி எப்படி? உன் கண்ணு கலங்காம அவன் கண்ண கலங்க வச்சு பாத்துப்பதான?? செல்லம் உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காது போ"-ன்னா. grrrrrrrrr............. எவ்ளோ கொழுப்பு அவளுக்கு. நீங்களே சொல்லுங்க. நான் கேக்கறது எதவது தப்பா? கரெக்டாதான கேட்டேன்.
அப்போதான் இன்னொருத்தி ஸீனுக்குள்ள வந்தா.
"ஏ நம்ம உமாவுக்கு ஃபோன் பண்ணினேன். நகை வாங்க கடைக்கு போயிருந்தாளாம். இன்னைக்கு போயி எல்லா பர்ச்சேஸும் முடிச்சிட்டு வந்துட்டாங்களாம்" ன்னு சொன்னா.
"அவங்க அத்தை பையனையே கல்யாணம் பண்ணிக்கறதுக்கு அவ வீட்ல இருந்து எவ்ளோ தராங்க பாரு. XX பவுனும் XX பணமுமாம்"
"அநியாயம்டி. நம்மளையும் தான நம்ம வீட்ல கஷ்டப்பட்டு படிக்க வைக்கறாங்கன்னு ஏன் புரிஞ்சிக்க மாட்டென்றாங்க???"
"இவ்ளோ காசு குடுத்து நம்மளை வித்துடறாங்க இல்ல"-ன்னு கவலையோட சொன்னது நான்.
"அட லூஸு. காசு குடுக்கறது நாம. சோ நாமதான் வாங்கறோம். சரியா"-ன்னு ஒருத்தி விளக்கி சொன்னதும்தான் நம்ம மூளைல அப்டியே ஃப்ளாஷ் அடிச்சது.
"அட பாவிகளா இதை முன்னாடியே சொல்றதில்ல. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு எனக்கு வரவன் எப்படி இருக்கணும்னு யோசிச்சு வச்சேன். எல்லாமே ரிஜக்டட். நான் வாங்கின பையனுக்கு நான் எதுக்கு ஹெல்ப் பண்ணனும். சோ நோ பாத்திரம் கழுவிங், நோதுணி துவைச்சிங், நோ சமைச்சிங். அவன்தான் எல்லாமே செய்யணும் ;)" - ன்னு நான் சந்தோஷமா சொன்னதும் ஒரு எனிமி வேக வேகமா சொன்னா.
"முன்னாடியாவது கொஞ்சம் சான்ஸ் இருக்குனு நினைச்சேன். இப்போ ரொம்ப நல்லா தெரியுது. இந்த ஜென்மத்துல உன் கல்யாணத்துக்கு நோ சான்ஸ்"-ன்னு என்கிட்ட சொல்லிட்டு இன்னொருத்திக்கிட்ட ஓடினா
"செல்லம் நீ என்னடா எக்ஸ்பெக்ட் பண்ற"-ன்னு கேட்டுகிட்டு.
ஹ்ம்ம்ம்ம்.......... யாரை நம்பி நான் பிறந்தேன்.... போங்கடா போங்க............ ன்னு அவளப் பாத்து பாடிட்டு என் பொலம்பல் வேலைய மறுபடியும் பண்ண ஆரம்பிச்சேன்.
நீங்களே சொல்லுங்க. நான் கேக்கறது எதாவது தப்பா? கரெக்டாதான கேட்டேன்......... நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டென்றாங்க.......
Tuesday, June 26, 2007
கல்யாண கனவு
Posted by இம்சை அரசி at 5:37 PM 54 comments
Labels: சும்மா... லுலுலா...
Subscribe to:
Posts (Atom)