ரெண்டு நாளைக்கு முன்னாடிதாங்க இந்த படத்தை பார்க்கிற பொன்னான(?) வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படத்த பார்த்துட்டு எனக்கு விமர்சனம் எல்லாம் பண்ண தெரியாது. படம் பார்த்தப்ப எனக்கு தோணினத உங்ககிட்ட சொல்றேன்.திருவிளையாடல் உபயத்தால எனக்கு வந்த சில டவுட்ஸ்........
1. அது எப்படிங்க நம்ம ஹீரோயினால மட்டும் எந்த காரணமுமே இல்லாம லவ் பண்ண முடியுது?
2. அது ஏன் எப்பவும் ஹீரோயினுக்கு பாக்குற மாப்பிள்ளை ஒண்ணு டாக்டராவோ இல்ல சாப்ட்வேர் இஞ்சினியராவோ மட்டும் இருக்கறாங்க? (நம்மள என்ன இளிச்சவா பசங்கன்னு நெனக்கறாய்ங்களா?)
3. அது எப்படி ஹீரோ பண்ற பிசினஸ் மட்டும் எந்த அடியும் வாங்காம ஹீரோவால சிகரத்தின் உச்சிக்கு போக முடியுது?
4. ஆரம்பத்துல ஹீரோ எவ்வளவு நேரமா எடுத்து சொல்லியும் காதலை ஏத்துக்காத ஹீரோயினோட அண்ணன் கடைசி ஒரு நிமிசத்து டயலாக்குல மனசு மாறுனது எப்படி? (க்ளைமாக்ஸ்ன்றதாலயா???)
5. ஹீரோயினோட லவ் பத்தியும் ஏற்கனவே நடந்த கல்யாணத்த பத்தியும் சபைல எல்லார் முன்னாடியும் சண்டை நடந்த பிறகும் எப்படி அந்த டாக்டர் மாப்பிள்ளையால மணவறைல அப்படியே உக்காந்து மந்திரம் சொல்றதை கண்டியூ பண்ண முடியுது? (இதுதான் படத்தோட பெரிய ஜோக்கே!!!)
6. ரெண்டு பேரும் என்னை நினைச்சு பார்த்தீங்களான்னு ஹீரோயின் கேட்கறப்ப அட திருந்தீட்டாங்களாய்யான்னு நிமிர்ந்து உக்காந்தா அடுத்த நிமிசமே ஹீரோ கடல போடறத பாத்துட்டு எழுந்து ஓடியாந்தராங்களாம். ஏனுங்க ரோஷம் வேணாமா?
வர வர தமிழ்நாட்டுல காமெடி படம் எடுக்கறதே பொழப்பா வச்சிருக்காங்க...... ஹூம்ம்ம்ம்ம்....... எங்கன போயி சொல்லி அழுவறது?
35 comments:
அட..என்னங்க நீங்க..தமிழ் சினிமா பார்க்குறப்ப லவுட்ல்லாம் வரகூடாதுங்க..;-)!!
//நம்மள என்ன இளிச்சவா பசங்கன்னு //
ஏனுங்க, நீங்க நெசமாலுமே இம்சை அரசி தானுங்களா? ;)
இம்சை அரசி,
உங்களைப் போல எனக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஒரே நாளில் திரு.ஆ., சிவப்பதிகாரம் என்ற மாபெரும் கலைப்படங்கள் பார்த்த திருப்தி.
1. அது எப்படிங்க நம்ம ஹீரோயினால மட்டும் எந்த காரணமுமே இல்லாம லவ் பண்ண முடியுது?
அட, அது ஒன்னுதாங்க படத்துல அவங்க வேலையே , கழுத அதயாவது செய்யட்டுமே.
2. அது ஏன் எப்பவும் ஹீரோயினுக்கு பாக்குற மாப்பிள்ளை ஒண்ணு டாக்டராவோ இல்ல சாப்ட்வேர் இஞ்சினியராவோ மட்டும் இருக்கறாங்க? (நம்மள என்ன இளிச்சவா பசங்கன்னு நெனக்கறாய்ங்களா?)
ஆமால்ல, அப்ப நாங்கெல்லாம் என்ன கேணைங்களா, இல்ல கேப்பம்லப்பு, நியாயம்னு ஒன்னு இருக்கா இல்லையா...
3. அது எப்படி ஹீரோ பண்ற பிசினஸ் மட்டும் எந்த அடியும் வாங்காம ஹீரோவால சிகரத்தின் உச்சிக்கு போக முடியுது?
அதுவும் ஒரே பாட்டுல...பஞ்சப் பராரியா திரிவாய்ங்க அடுத்த சீன்லயே கோட், சூட் போட்டு...என்னாங்கடா இது.
4. ஆரம்பத்துல ஹீரோ எவ்வளவு நேரமா எடுத்து சொல்லியும் காதலை ஏத்துக்காத ஹீரோயினோட அண்ணன் கடைசி ஒரு நிமிசத்து டயலாக்குல மனசு மாறுனது எப்படி? (க்ளைமாக்ஸ்ன்றதாலயா???)
எவ்வளவுதான் அடி தூக்கிப்போட்டு மிதிச்சாலும் திரும்ப திரும்ப வரானே இவன் ரொம்ப நல்லவன்னு யாராவது சொல்லியிருப்பாய்ங்களோ.
5. ஹீரோயினோட லவ் பத்தியும் ஏற்கனவே நடந்த கல்யாணத்த பத்தியும் சபைல எல்லார் முன்னாடியும் சண்டை நடந்த பிறகும் எப்படி அந்த டாக்டர் மாப்பிள்ளையால மணவறைல அப்படியே உக்காந்து மந்திரம் சொல்றதை கண்டியூ பண்ண முடியுது? (இதுதான் படத்தோட பெரிய ஜோக்கே!!!)
வழக்கமா இந்த மாதிரி சீன்ல மாப்பிள்ளையோட அம்மாவோ அப்பாவோ வந்து "கிளம்புடா, இந்த எடம் நமக்கு சரிப்பட்டு வராது" அப்பிடிம்பாய்ங்க. இந்த மாப்ளைக்கு அப்பிடி யாரும் இல்ல போல இருக்கு.
6. ரெண்டு பேரும் என்னை நினைச்சு பார்த்தீங்களான்னு ஹீரோயின் கேட்கறப்ப அட திருந்தீட்டாங்களாய்யான்னு நிமிர்ந்து உக்காந்தா அடுத்த நிமிசமே ஹீரோ கடல போடறத பாத்துட்டு எழுந்து ஓடியாந்தராங்களாம். ஏனுங்க ரோஷம் வேணாமா?
இந்த சீன்லதாங்க என்னிய நெறய யோசிக்க வச்சது. தனுசயும், அண்ணணையும் பார்த்து "என்ன நீங்க யோசிச்சு பார்த்தீங்களா?"னு ஹீரோயின் கேட்டாச்சு. சப்போஸ் ஹீரோயின் தனுஷ கட்டிக்கிறேன்னு சொல்லியாச்சுனு வைங்க, இப்ப மாப்ள கேப்பான் "என்ன நீங்க யோசிச்சு பார்த்தீங்களா?"னு. சப்போஸ் கல்யாணமே நின்னு போச்சுனு வைங்க, இப்ப கல்யாணத்துக்கு வந்த மக்கள் எல்லாமே கேப்பாய்ங்க "எங்கள நீங்க யோசிச்சு பார்த்தீங்களா?"னு. இப்பிடியெல்லாம் நடந்ததுன்னா நம்ம டைரக்டர பார்த்து கேக்கனும் "எங்கள நீங்க யோசிச்சு பார்த்தீங்களா?"னு. என்ன சொல்றீங்க....
// சந்தனமுல்லை said...
அட..என்னங்க நீங்க..தமிழ் சினிமா பார்க்குறப்ப லவுட்ல்லாம் வரகூடாதுங்க..;-)!!
//
ஏங்க எத்தன நாள்தான் இப்படியே இருக்கறது? கொஞ்சம் பொங்கி எழலாம்னுதானுங்கோ...
// பொன்ஸ் said...
//நம்மள என்ன இளிச்சவா பசங்கன்னு //
ஏனுங்க, நீங்க நெசமாலுமே இம்சை அரசி தானுங்களா? ;)
//
ஹி... ஹி... ஹி...
நம்ம பசங்களுக்காக வாய்ஸ் கொடுக்கறேனுங்கக்கா... அம்புட்டுதான்... வேற ஒண்ணும் இல்ல...
இந்த படமெல்லாம் பார்த்தா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது...
////நம்மள என்ன இளிச்சவா பசங்கன்னு //
ஏனுங்க, நீங்க நெசமாலுமே இம்சை அரசி தானுங்களா? ;)//
ரிப்பீட்டே...
//நான் said...
இந்த சீன்லதாங்க என்னிய நெறய யோசிக்க வச்சது. தனுசயும், அண்ணணையும் பார்த்து "என்ன நீங்க யோசிச்சு பார்த்தீங்களா?"னு ஹீரோயின் கேட்டாச்சு. சப்போஸ் ஹீரோயின் தனுஷ கட்டிக்கிறேன்னு சொல்லியாச்சுனு வைங்க, இப்ப மாப்ள கேப்பான் "என்ன நீங்க யோசிச்சு பார்த்தீங்களா?"னு. சப்போஸ் கல்யாணமே நின்னு போச்சுனு வைங்க, இப்ப கல்யாணத்துக்கு வந்த மக்கள் எல்லாமே கேப்பாய்ங்க "எங்கள நீங்க யோசிச்சு பார்த்தீங்களா?"னு. இப்பிடியெல்லாம் நடந்ததுன்னா நம்ம டைரக்டர பார்த்து கேக்கனும் "எங்கள நீங்க யோசிச்சு பார்த்தீங்களா?"னு. என்ன சொல்றீங்க....
//
அடா அடா அடா... சும்மா பின்னு பின்னுன்னு பின்றீங்களே! அந்த படத்த பாத்துட்டு எவ்வளவு வேதனைல இருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது...
"எங்கள நீங்க யோசிச்சு பார்த்தீங்களா?"னு கேப்போம்னு நெனச்சுருந்தா இப்படியெல்லாம் படம் எடுத்துருப்பாய்ங்களா?!!
படம் பாக்கறேன்னு சொன்னவங்ககிட்ட எல்லாம் "வேணாம் வேணாம்... செல்லம் செல்லம்... அந்த படம் உன்ன... கொல்லும் கொல்லும்..."னு பாட்டா பாடிட்டு இருக்கேன். ஹ்ம்ம்ம்...
// வெட்டிப்பயல் said...
இந்த படமெல்லாம் பார்த்தா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது...
////நம்மள என்ன இளிச்சவா பசங்கன்னு //
ஏனுங்க, நீங்க நெசமாலுமே இம்சை அரசி தானுங்களா? ;)//
ரிப்பீட்டே...
//
கொல்ல போறேன் வெட்டீஈஈஈஈ......
உங்களுக்காக வாய்ஸ் குடுத்தா எனக்கு இது ரொம்ப தேவைதான்...
நாம தெலுங்கு படத்த கிழி கிழின்னு கிழிக்கறத எல்லாம் எந்த கணக்குல சேத்தறது???
ஆயிரம் .. கேள்வி என்னுள் எழுந்தது ... 'ஸ்ரெய்யா' வை கானும் வரை மட்டுமே ...
அப்புரம் ... 'ஸ்ரெய்யா' மட்டுமே ... பதிலாக ...
//இம்சை அரசி said...
// வெட்டிப்பயல் said...
இந்த படமெல்லாம் பார்த்தா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது...
////நம்மள என்ன இளிச்சவா பசங்கன்னு //
ஏனுங்க, நீங்க நெசமாலுமே இம்சை அரசி தானுங்களா? ;)//
ரிப்பீட்டே...
//
கொல்ல போறேன் வெட்டீஈஈஈஈ......
//
ஐயய்யோ வேணாமுங்க... வீட்டுக்கு ஒரு புள்ள...
// உங்களுக்காக வாய்ஸ் குடுத்தா எனக்கு இது ரொம்ப தேவைதான்...
//
சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்காக வாய்ஸ் கொடுக்கும் இம்சை வாழ்க...
// நாம தெலுங்கு படத்த கிழி கிழின்னு கிழிக்கறத எல்லாம் எந்த கணக்குல சேத்தறது???//
எல்லாம் அக்கவுண்ட்ல வைங்க...
\\ இந்த படத்தை பார்க்கிற பொன்னான(?) வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\\
புண்ணான வாய்ப்புன்னு சொல்லுங்க.
// சுந்தர் 덧글 내용...
ஆயிரம் .. கேள்வி என்னுள் எழுந்தது ... 'ஸ்ரெய்யா' வை கானும் வரை மட்டுமே ...
அப்புரம் ... 'ஸ்ரெய்யா' மட்டுமே ... பதிலாக ...
//
இதுக்கெல்லாம் என்னால ஒண்ணும் சொல்ல முடியாதுங்கண்ணோவ்....
// வெட்டிப்பயல் 덧글 내용...
//இம்சை அரசி said...
// வெட்டிப்பயல் said...
இந்த படமெல்லாம் பார்த்தா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது...
////நம்மள என்ன இளிச்சவா பசங்கன்னு //
ஏனுங்க, நீங்க நெசமாலுமே இம்சை அரசி தானுங்களா? ;)//
ரிப்பீட்டே...
//
கொல்ல போறேன் வெட்டீஈஈஈஈ......
//
ஐயய்யோ வேணாமுங்க... வீட்டுக்கு ஒரு புள்ள...
//
அந்த பயம் இருந்தா இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது......
// உங்களுக்காக வாய்ஸ் குடுத்தா எனக்கு இது ரொம்ப தேவைதான்...
//
சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்காக வாய்ஸ் கொடுக்கும் இம்சை வாழ்க...
//
நன்றி... நன்றி....
// நாம தெலுங்கு படத்த கிழி கிழின்னு கிழிக்கறத எல்லாம் எந்த கணக்குல சேத்தறது???//
எல்லாம் அக்கவுண்ட்ல வைங்க...
//
யாரு அக்கவுண்ட்ல???
// கோபிநாத் 덧글 내용...
\\ இந்த படத்தை பார்க்கிற பொன்னான(?) வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\\
புண்ணான வாய்ப்புன்னு சொல்லுங்க.
//
அய்யோ... அய்யோ... பின்றீங்களே...
கொஞ்ச நாளாவே தமிழ்ப் படங்களப் பாக்குற புண்ணான வாய்ப்புகள் நம்மளத் தேடித் தேடித் தொறத்துது. ஒங்களுக்குத் திருவிளையாடல் ஆரம்பம்னா எனக்குப் பொய்யும் சிவப்பதிகாரமும். :-(((((
// G.Ragavan 덧글 내용...
கொஞ்ச நாளாவே தமிழ்ப் படங்களப் பாக்குற புண்ணான வாய்ப்புகள் நம்மளத் தேடித் தேடித் தொறத்துது. ஒங்களுக்குத் திருவிளையாடல் ஆரம்பம்னா எனக்குப் பொய்யும் சிவப்பதிகாரமும். :-(((((
//
ஹையா ஜாலி... ஜாலி... நான் மட்டும் தான் கஷ்டப்பட்டுட்டேனோன்னு நினைச்சேன்...
inbam mattumE vazkkai illai... thirumanamum thamiz cinemakkalum undu.. jakrathai
// 익명 의 덧글 내용...
inbam mattumE vazkkai illai... thirumanamum thamiz cinemakkalum undu.. jakrathai
//
ஹைய்யோ... இப்பவே கண்ண கட்டுதே....
கேள்வி கேக்குறது சுலபம் :)).. //ஹி... ஹி... ஹி...
நம்ம பசங்களுக்காக வாய்ஸ் கொடுக்கறேனுங்கக்கா... அம்புட்டுதான்... வேற ஒண்ணும் இல்ல...//
நம்பிட்டோம்..
மேலும் சிவப்பதிகாரம், தர்மபுரி, வாத்தியார் போன்ற வெற்றி(!)ப்படங்களைப் பார்த்து மகிழவும்...
// சந்தோஷ் 덧글 내용...
கேள்வி கேக்குறது சுலபம் :))..
//
அடுத்தவங்க கேள்வி கேக்க முடியாத மாதிரி தான் பண்ணனும்...
//ஹி... ஹி... ஹி...
நம்ம பசங்களுக்காக வாய்ஸ் கொடுக்கறேனுங்கக்கா... அம்புட்டுதான்... வேற ஒண்ணும் இல்ல...//
நம்பிட்டோம்..
//
ஹி... ஹி...
அது உங்க இஷ்டம் சந்தோஷ்...
உங்க விஷயத்துல நான் தலையிட மாட்டேன்...
// யோகேஸ்வரன் 덧글 내용...
மேலும் சிவப்பதிகாரம், தர்மபுரி, வாத்தியார் போன்ற வெற்றி(!)ப்படங்களைப் பார்த்து மகிழவும்...
//
ஏங்க தெரியாமத்தான் கேக்கறேன்...
எத்தன நாளா என் மேல இவ்வளவு கொல வெறியோட இருக்கீங்க???
அப்புறம் நான் அழுதுடுவேன்.... ஆமா...
i also from kolywood...&also a actor..tell me which type of film did you like?....
அட.. இதெல்லாம் விடுங்கப்பா.. அடுத்து சபரி வருது... பார்த்துட்டு சொல்லுங்க..
// பொதிகை சாரல் 덧글 내용...
i also from kolywood...&also a actor..tell me which type of film did you like?....
//
like all Manirathnam films.....
// k@rthik 덧글 내용...
அட.. இதெல்லாம் விடுங்கப்பா.. அடுத்து சபரி வருது... பார்த்துட்டு சொல்லுங்க..
//
சொல்லிட்டா போச்சு....
அதுக்குதான நாம இருக்கோம் :)
oh!மணிரத்னம்g ....!நல்ல ரசனை உங்களுக்கு.வரவேற்கிறேன் தங்களைப் போன்ற ரசிகர்களை மட்டுமே..அப்படியே வெயிலைப் பற்றிய எனது பார்வையப் பார்க்கவும்..(பொதிகை சாரல்)
www.aaraamthinai.blogspot.com
// சண் ஷிவா said...
oh!மணிரத்னம்g ....!நல்ல ரசனை உங்களுக்கு.வரவேற்கிறேன் தங்களைப் போன்ற ரசிகர்களை மட்டுமே..அப்படியே வெயிலைப் பற்றிய எனது பார்வையப் பார்க்கவும்..(பொதிகை சாரல்)
www.aaraamthinai.blogspot.com
//
கண்டிப்பா பாத்துட்டு சொல்றேங்க....
அப்படியே உங்க படத்த பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க..... :)
Do you think Maniratnam's movie are good? reconsider and suggest else!!!!
யக்கோவ் தமிழ் படத்துக்கே இப்படினா..
நான் மொழிதெரியாமா இதவிட கேவலமான ஹிந்தி படங்கள பாக்கிறேனே எனக்கு எப்படி இருக்கும்.
:(((((((((((((((((((((((((((((
நல்ல வேளை போன வாரம் மலையாளத்தான் இந்த பட சிடிய கொடுத்து நல்ல படமுனு சொன்னான். டவுட்டுல வுட்டுட்டு வந்தேனந்தப்பிச்சேன்யா..
//1. அது எப்படிங்க நம்ம ஹீரோயினால மட்டும் எந்த காரணமுமே இல்லாம லவ் பண்ண முடியுது?//
கேள்விய மாத்துங்க அரசி! எல்லா படத்தையும் எப்படி காதலை வித்தியாசமா காமிக்கிறன்னு டைரக்டர் மொக்கசாமிகள் சொல்றாங்க?
கீரோ எப்படியிருந்தாலும் கீரோயின் மட்டும் பணக்காரவூட்டு பொண்ணாவே வராங்க! இதான் பிரியவே மாட்டிகீது.
//ஆயிரம் .. கேள்வி என்னுள் எழுந்தது ... 'ஸ்ரெய்யா' வை கானும் வரை மட்டுமே ...
அப்புரம் ... 'ஸ்ரெய்யா' மட்டுமே ... பதிலாக ... //
கவுத! கவுத!!
அதுகாண்டியும் இல்லன்னா படமே படுத்துவும்.
// Anonymous said...
Do you think Maniratnam's movie are good? reconsider and suggest else!!!!
//
yeah.... sure....
ஹீரோயின்க்கு முக்கியத்துவம் குடுக்கறதுல அவர அடிச்சுக்க யாராலயும் முடியாது :)
// தம்பி said...
//1. அது எப்படிங்க நம்ம ஹீரோயினால மட்டும் எந்த காரணமுமே இல்லாம லவ் பண்ண முடியுது?//
கேள்விய மாத்துங்க அரசி! எல்லா படத்தையும் எப்படி காதலை வித்தியாசமா காமிக்கிறன்னு டைரக்டர் மொக்கசாமிகள் சொல்றாங்க?
கீரோ எப்படியிருந்தாலும் கீரோயின் மட்டும் பணக்காரவூட்டு பொண்ணாவே வராங்க! இதான் பிரியவே மாட்டிகீது.
//
எனக்கும் இவிங்க logic-ஏ புரிய மாட்டெங்குதுங்க
ஒரு வேளை இதை புரிஞ்சிக்கற அளவுக்கு நமக்கு அறிவு வளரலையோன்னு அப்பப்ப doubt வேற வந்துடுது.... ம்ம்ம்ம்....
நம்ம நெலம இப்படி ஆயிப் போச்சு
// தம்பி said...
//ஆயிரம் .. கேள்வி என்னுள் எழுந்தது ... 'ஸ்ரெய்யா' வை கானும் வரை மட்டுமே ...
அப்புரம் ... 'ஸ்ரெய்யா' மட்டுமே ... பதிலாக ... //
கவுத! கவுத!!
அதுகாண்டியும் இல்லன்னா படமே படுத்துவும்.
//
ஹ்ம்ம்ம்ம்........
ஏன் இப்படியெல்லாம் படம் வருதுன்னு இப்பத்தான தெரியுது :)))
Post a Comment