Saturday, November 21, 2009

வச்சுட்டாங்கய்யா ஆப்பு!!

நான் பெங்களூர்ல இருந்தப்போ ஆசை ஆசையா ஒரு pepe jean வாங்கினேன். அதுல ரெண்டு இடத்துல கட் பண்ணி நூல் பிரிஞ்சு அதுல பின்க் கலர்ல ஜிக்ஜாக் அடிச்ச மாதிரி டிசைன் போட்டிருந்தாங்க. அத ரொம்ப ரசிச்சு வாங்கினேன். ஒரு தடவ ஊருக்கு போனப்ப அத துவைக்க எடுத்துட்டுப் போயிருந்தேன். நல்லா தூங்கிட்டு இருந்த என்னை எங்கம்மாவோட அதிர்ச்சியான குரல் எழுப்புச்சு. அவசரமா எழுந்து என்னங்கம்மா என்ன ஆச்சுனு பதறிப் போயிக் கேட்டா எங்கம்மா அந்த jean-அ கைல எடுத்துட்டு வந்தாங்க. கண்ணு உனக்கு விவரமே தெரிய மாட்டேங்குது. இப்படி ஏமாந்துப் போயி வந்திருக்கன்னாங்க. என்னடா இது புது குழப்பம்னு தெளிவா சொல்லுங்கனு சொன்னதும் அந்த jean-அ உள்பக்கமா திருப்பி காட்டினாங்க. பிரிச்சு விட்டிருந்த நூல் மேல மேல பிரியாம இருக்கறதுக்காக உள்பக்கமா துணி குடுத்து தச்சிருந்தாங்க. அதக் காட்டி பாரு இவ்ளோ விலைக் குடுத்து ஒட்டுப் போட்ட துணிய வாங்கிட்டு வந்திருக்கனு சொன்னாங்களே பாக்கலாம். எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்ல. அம்மா இல்லம்மா. இது டிசைன் அப்படி. அது இன்னும் பிரியாம இருக்கறதுக்காக அப்டி தச்சிருக்காங்கனு அவ்ளோ தூரம் எடுத்து சொல்றேன். அன்னைக்கு வீட்டுக்கு வந்த எங்கத்தைக்கிட்ட புலம்பறாங்க. பெங்களூர் போயி என்ன ஆச்சுனே தெரில. ஒட்டுப் போட்ட துணிய எல்லாம் அவ்ளோ விலைக் குடுத்து வாங்கிட்டு இருக்குனு. எப்படியோ எல்லார்ட்டயும் புலம்பி என் மானத்த வாங்கிட்டாங்க :(

------------ooOoo------------

சென்னை வந்த புதுசுல என் ஆருயிர் தோழி வீட்டுக்கு வந்தா. அவளுக்கு கொஞ்ச நாள்ல கல்யாணம். பர்ச்சேஸ் போகணும்னு சொன்னா. அவளுக்கு சலங்கை வச்ச மெட்டி மேல ரொம்ப ஆசை. அந்த மாதிரி எங்க ஊர்ல எல்லாம் கிடைக்காது. அதனால இங்க வாங்கணும்னு சொன்னா. ரெண்டு பேரும் கிளம்பி டி.நகர் GRT போனோம். அந்த கடைல எங்க ஆபிஸ் மக்கள்ஸ்க்கு 5% டிஸ்கவுண்ட் உண்டு(குறிப்பிட்ட சிலதுக்கு மட்டும். அதும் செய்கூலிலயோ என்னவோ). அதனாலதான் அங்க அவளக் கூட்டிட்டுப் போனேன். அங்க போயி சூப்பரா ஒரு மெட்டி செலக்ட் பண்ணிட்டோம். அந்த செக்ஷன்-ல இருந்தவரு பில் போட ஆரம்பிச்சார். நான் உடனே எங்க ஐடி கார்ட காட்டி எங்களுக்கு 5% டிஸ்கவுண்ட் இருக்குனு பெருமையா சொன்னேன். அவர் 125 ரூபாய்னு பில் போட்டு அதுல டிஸ்கவுண்ட் 25 ரூபா போட்டிருந்தார். போட்டவர் சும்மா இருக்காம இப்ப வெள்ளிக்கு செய்கூலி சேதாரம் எல்லாம் இல்லாம குடுக்கறோம். அதான் 25 ரூபா கம்மினு சொன்னாரு. எனக்கு வந்ததே கோபம். அப்போ எங்களுக்கு குடுக்க வேண்டிய 5% எங்கனு சண்டைப் போட்டேன். ஒரு 10 நிமிஷ சண்டைக்கு பிறகு 90 ரூபாய்க்கு குடுத்தார். எனக்கு ஒரே சந்தோஷம். அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் என் வீட்டுக்கார்ட்ட அன்னைக்கு என்னைப் பாத்து சிரிச்சீங்களே. இன்னைக்கு பாருங்க எப்படி பேரம் பேசினேனு சொல்லி நடந்ததை எல்லாம் சொல்லி பெருமையா அவர் முகத்த பாக்கறேன். அவர் விழுந்து விழுந்து சிரிக்கறார். எனக்கு சப்புனு போச்சு. ஏண்டி அவன் எல்லாம் தினமும் கோடிக் கணக்குல டர்ன் ஓவர் பண்றான். அவன்ட்ட போயி 125 ரூபாய்க்கு வாங்கிட்டு பத்து ரூபாய்க்கு பத்து நிமிஷமா சண்டைப் போட்டிருக்கனு சிரிக்கறாரு. எனக்கு ஒரே அவமானம். மறுபடியும் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டோமானு கம்முனு இருந்துக்கிட்டேன் :((

------------ooOoo------------

ஒரு நாள்ல வீட்டுல ஜாலியா உக்காந்து TV பாத்துட்டு இருந்தேன். திடிர்னு எங்கம்மாவும் பக்கத்து வீட்டக்காவும் பேசற சவுண்டு கேட்டுச்சு. சரி என்ன பேசறாங்கனு கொஞ்சம் காது குடுத்துக் கேட்டேன். பக்கத்து வீட்டக்கா பாருங்க இப்பல்லாம் வீட்டுல வேலை செய்ய வரவங்க எல்லாம் ஒழுங்காவே செய்ய மாட்டேங்கறாங்க. உங்க வீட்டுக்கு துவைக்க வர அம்மா கூட அப்டிதான் போல. பேண்ட்ட ஒழுங்கா உதறிக் கூட காயப் போடாம போயிருக்காங்க-னு என் பேண்ட்டைக் காட்டி சொல்லிட்டு இருந்தாங்க. உடனே வேகமா எங்கம்மா இல்லம்மா. அந்த பேண்டே அப்டிதான். பாவாடை மாதிரி ரொம்ப பெருசா இருக்குன்னாங்க. அவங்க ஆச்சரியமா அப்படியா என்ன பேண்ட் அதுனு கேக்கவும் எங்கம்மா அது ஏதோ பாட்டி பேண்ட்டாம்னு சொன்னாங்க. எனக்கு அப்டியே புஸுபுஸுனு வந்துச்சு. உடனே வேகமா எழுந்துப் போயி அய்யோ அம்மா அது பாட்டி பேண்ட்டும் இல்ல. பேத்தி பேண்ட்டும் இல்ல. பாட்டியாலா பேண்ட்டு-னு கத்தினேன். இன்னமும் எங்கம்மா அத பாட்டி பேண்ட்டுனேதான் சொல்லி சொல்லி என்னை வெறுப்பேத்தறாங்க :(((

------------ooOoo------------

போன செப்டம்பர்ல பெங்களூர் போயிருந்தோம். அவர் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தோம். போற அன்னைக்கே ஃபீவர் வந்துடுச்சு. மாத்திரை எல்லாம் போட்டு சரியாயிடுச்சுனு நினைச்சு தைரியமா போயிட்டேன்(அங்க போயி நிறைய ட்ரெஸ் எடுத்து தரேனு சொல்லி இருந்தார். அதான் ;)))) ஆனா ட்ரெயின்லயே நல்லா ஃபீவர் வந்துடுச்சு. அங்கப் போயி அடுத்த நாள் காலைல பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டல்க்கு 2 பேரும் கூட்டிட்டுப் போனாங்க. அங்க போனா 1 வாரமா ஃபீவர் இருக்கு. 2 பாட்டல் ட்ரிப்ஸ் இறக்கணும்னு குண்டத் தூக்கிப் போட்டாங்க. அடக் கடவுளே! 2 பாட்டலானு நான் ங-னு முழிச்சிட்டு இருந்தேன். என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு அவங்க டாக்டர் அத்தைக்கு ஃபோன போட்டாங்க. அவங்க அவ தண்ணியே ஒழுங்கா குடிச்சிருக்க மாட்டா. அதான் டெம்ப்ரேச்சர் ஜாஸ்தி ஆயிருக்கும்னு சொல்லி ஒரு மாத்திரை குடுத்து அடிக்கடி எலக்ட்ரால் குடுக்க சொன்னாங்க. அன்னைக்கு மாதிரி நான் வாழ்க்கைல தண்ணிக் குடிச்சதே இல்ல. அன்னைக்கு நல்லானேன்.அடுத்த நாள் திருப்பி ஃபீவர் வந்துடுச்சு. இப்படியே இருக்கேனு என் வீட்டுக்கார் என் பக்கத்துல உக்காந்து கவலையாப் பாத்துட்டு இருந்தார். பாக்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு. சரி நாம இது வரைக்கு ஆராய்ந்து அறிந்த அரிய உண்மைய சொல்லிடலாம்னு ஏங்க-னு ஆரம்பிச்சேன். எனக்கு ஏன் ஃபீவர் வந்துச்சுனு ரீஸன் கண்டுபிடிச்சிட்டேன்னு ஆர்வமா பாத்தேன். அவரும் ஆர்வமாயி ஏன்னு கேட்டார். போன தடவை ஊருக்குப் போயிட்டு வந்ததும் என்ன சொன்னேன்? அவரும் ரொம்ப யோசிச்சு தெரியலையேனு சொன்னார். போங்க நீங்க. உங்ககிட்ட எது சொன்னாலும் மறந்துடுவீங்கனு சலிச்சிக்கிட்டு போன தடவை ஊருக்கு போனப்போ ஜாதகம் பாக்கப் போனேன் இல்ல. அந்த ஜோசியர் என்ன சொன்னாருனு கேட்டதும் முறைக்க ஆரம்பிச்சார். எனக்கு அஷ்டம சனி முடியுது இல்ல. அதான் இப்படி பாடாபடுத்துது. வேற ஒண்ணும் இல்லனு சந்தோஷமா சொல்றேன். அவரு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. இதுல மடச்சினு எனக்கு பேரு வேற :(((( உண்மைய சொன்னா நம்பணும். சரி இதனால எல்லாருக்கும் நான் சொல்ல வரது என்னன்னா எல்லாரும் நல்லா தண்ணிய ஐ மீன் வாட்டர குடிங்க... குடிங்க... குடிச்சிட்டே இருங்க...
எனக்கு அப்டிதான் ஃபீவர் சரியாச்சு. இப்பல்லாம் நல்லா தண்ணி குடிக்க ஆரம்பிச்சிட்டேன் :)))

32 comments:

Antony said...

Keep Writing...

Romeoboy said...

பாட்டி பேன்ட் மேட்டர் தான் செம கலக்கல் ..

ஆயில்யன் said...

//டர்ன் ஓவர் பண்றான். அவன்ட்ட போயி 125 ரூபாய்க்கு வாங்கிட்டு பத்து ரூபாய்க்கு பத்து நிமிஷமா சண்டைப் போட்டிருக்கனு சிரிக்கறாரு. எனக்கு ஒரே அவமானம். மறுபடியும் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டோமானு கம்முனு இருந்துக்கிட்டேன் :((//

நீங்க கவலைப்படாதீங்க பாஸ் அந்த கடைக்காரன் டேர்ன் ஒவாரா பண்றான் நீங்க தட்டிக்கேட்டிருக்கீங்க குட்! :)

ஆயில்யன் said...

//ஜாலியா உக்காந்து TV பாத்துட்டு இருந்தேன்//

என்ன கொடுமை இம்சையக்கா ஜாலியா உக்கார்ந்து சோகத்தை வாட்ச் பண்ணியிருக்கீங்களா?:))

ஆயில்யன் said...

//இதுல மடச்சினு எனக்கு பேரு வேற :(((( உண்மைய சொன்னா நம்பணும்.///

உண்மையாவே நம்ப சொல்றீங்களா? சரி அரை மனசோட நம்புறேன்க்கா!

Anonymous said...

வாங்க வாங்க ரொம்ப நாள் கழிச்சி வந்துருக்கீங்க... பதிவு நல்ல காமெடி...

S.A. நவாஸுதீன் said...

கலகலப்பு

Anonymous said...

பாட்டி பேண்ட் படிச்சிட்டு சிரிச்சேன். :)

சிநேகிதன் அக்பர் said...

நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க. நல்லாருக்கு.

மங்களூர் சிவா said...

/
இதுல மடச்சினு எனக்கு பேரு வேற :(((( உண்மைய சொன்னா நம்பணும்.
/

எதோ கெஞ்சிகேக்கிறதால நானும் நம்புறேன் அக்கா!
:)))

pudugaithendral said...

அடிக்கடி பல்பு வாங்கும் கூட்டத்தில் இணைந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

அட ஆண்டவா என் தங்கச்சி தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டாடோய்:-)))

ஜெ! நியாயமா பார்த்தா உனக்கு ரத்தம் தான் ஏத்தனும்! (புரியுது சொல்ற ஆளை பாருடா வெள்ரு ன்னு நீ திட்டுவது இங்க வரை கேட்குது)

Anonymous said...

இன்னமும் எங்கம்மா அத பாட்டி பேண்ட்டுனேதான் சொல்லி சொல்லி என்னை வெறுப்பேத்தறாங்க :(((
*****
கவலைப்பபடாதீங்க..இந்த பெரியவங்களே இப்படித்தான்.

சுண்டெலி(காதல் கவி) said...

இன்னமும் எங்கம்மா அத பாட்டி பேண்ட்டுனேதான் சொல்லி சொல்லி என்னை வெறுப்பேத்தறாங்க :(((
*****
கவலைப்பபடாதீங்க..இந்த பெரியவங்களே இப்படித்தான்.

பித்தனின் வாக்கு said...

பத்து ரூபாய் என்ன பத்து பைசா என்றாலும் சொல்லிவிட்டு ஏமாற்றினால் கேக்க வேணும் அது நியாயம்.

//இதுல மடச்சினு எனக்கு பேரு வேற :(((( உண்மைய சொன்னா நம்பணும்.///


பரவாயில்லை உண்மையை ஒத்துக் கொள்ள ஒரு புத்திசாலித்தனம் வேண்டும், அது உங்களிடம் இருக்கின்றது.

நல்ல நகைச்சுவை பதிவு. நன்றி. யக்கா.

Thamira said...

:-))

sathishsangkavi.blogspot.com said...

ரொம்ப இயல்பா எழுதி இருக்கிறீங்க.......

நிறைய எழுதுங்க.............

ச.பிரேம்குமார் said...

//அவன்ட்ட போயி 125 ரூபாய்க்கு வாங்கிட்டு பத்து ரூபாய்க்கு பத்து நிமிஷமா சண்டைப் போட்டிருக்கனு சிரிக்கறாரு.//

கோடி கோடியா turnoverகிட்ட பேரம் பேசினா தப்பு, தின வருமானத்தை நம்பி இருப்பவர்களிடம் பேரம் பேசினால் சரி???

உங்க கணவர் லாஜிக் கொஞ்சம் உதைக்குதுங்க.....

இம்சை அரசி said...

// ச.பிரேம்குமார் said...

//அவன்ட்ட போயி 125 ரூபாய்க்கு வாங்கிட்டு பத்து ரூபாய்க்கு பத்து நிமிஷமா சண்டைப் போட்டிருக்கனு சிரிக்கறாரு.//

கோடி கோடியா turnoverகிட்ட பேரம் பேசினா தப்பு, தின வருமானத்தை நம்பி இருப்பவர்களிடம் பேரம் பேசினால் சரி???

உங்க கணவர் லாஜிக் கொஞ்சம் உதைக்குதுங்க.....

//

அவர் பேரம் பேசினத தப்புனு சொல்லல... நான் அங்க பேசினத வந்து ரொம்ப பெருமையா சொன்னதுக்கு என்னை கிண்டல் பண்ணினார் :)))

இம்சை அரசி said...

// பித்தனின் வாக்கு said...

பத்து ரூபாய் என்ன பத்து பைசா என்றாலும் சொல்லிவிட்டு ஏமாற்றினால் கேக்க வேணும் அது நியாயம்.

//இதுல மடச்சினு எனக்கு பேரு வேற :(((( உண்மைய சொன்னா நம்பணும்.///


பரவாயில்லை உண்மையை ஒத்துக் கொள்ள ஒரு புத்திசாலித்தனம் வேண்டும், அது உங்களிடம் இருக்கின்றது.

நல்ல நகைச்சுவை பதிவு. நன்றி. யக்கா.
//

அய்யோ அது உண்மை இல்ல. நான் ரிசர்ச் பண்ணி கண்டுபிடிச்ச உண்மைய சொன்னேன் :(((

இம்சை அரசி said...

Thanks a lot for ur comments Antony, Oils, anandham, Romeoboy, Anony, Akbar, Kadhal Kavi, Chinna Ammani, Siva annachi, Thols anna, pudhugai Thendral akka, Navasuthin, Sangkavi and Adhi :)))

கணேஷ் said...

:))

☀நான் ஆதவன்☀ said...

:))

அண்ணாமலையான் said...

ரொம்ப நாளா கானோம்?

Anonymous said...

:-))))))))))

Kalai said...

Hi Jayanthi,

Came to know about your blog through Deepa akka, I am ur husband's relative..
anyway..Blog rombha super..good writing style.I really enjoyed reading ur post..keep posting!

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க அருமை . வாழ்த்துக்கள் !

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

கப்பியாம்புலியூரன் said...

நல்லா இருக்கு.

உங்களோட அடுத்த பதிவு எப்போ ரிலீஸ் ??

வாழ்த்துகள்

கப்பியாம்புலியூரன்

Asiya Omar said...

அனுபவம் இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு இம்சையரசி.

kaliraj - Qatar said...

Wedding Day wishes to Mrs.Jayanthi & Mr.Mohan.

For me also same day same year.Yah exactly Today

gk said...

hi,
started reading ur blogs a few days back only, truely nice, sometimes could not control the tear, sometimes loud laugh,
truely nice,
is it possible to become friend with u??